Saturday, November 20, 2010

எஸ்.எம்.எஸ்.கலாட்டா

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.

1) ஆசிரியர்: டேய்! போய் வெளியில நில்லு... அப்பத்தான் உனக்கு அறிவு வரும்!
மாணவன்: அப்ப உங்க வகுப்புல உட்கார்ந்தா அறிவு வராதுன்னு சொல்லுங்க....
ஆசிரியர்: ?!?....
2) நீங்க 95% பியுட்டி
நீங்க 96% ஸ்வீட்
நீங்க 97% நைஸ்
நீங்க 98% யூத்
நீங்க 99% ஸ்மார்ட்
ஐ....... சிரிப்பைப் பாரு....
நான் சொன்னது
100% காமெடி.

3) என்னையும், ஒன்னையும்
சேர்த்து வச்சுப் பார்க்கணும்னு ஆசையா?
கீழே வாங்க....
?
?
?
?
?
?
?
"N"  "1"
பார்த்தாச்சா? இப்ப சந்தோசமா?
இப்படித்தான் புதுசா யோசிக்கணும்.....

4) அப்பா: ஏன்டா அழற?
மகன்: அம்மா அடிச்சுட்டாங்க...
அப்பா: இதுக்கா அழற...சீ..அழாத...
மகன்: யோவ்..போய்யா... உன்னை மாதிரில்லாம்  என்னால் அடி தாங்க முடியாது.....
அப்பா: ?!?...

5) உனக்கு பேசுவதற்கும், சிரிப்பதற்கும் நேரம் இல்லை என்றால்,
நீ உன் வாழ்கையில் முன்னேறிக் கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம்....
---- அலெக்ஸ்சாண்டர்.

6) நாம் எப்பவுமே நம்ம வாழ்க்கையை விட "மத்தவங்க" வாழ்க்கை நல்லாருக்குன்னு நினைக்குறோம்...
ஆனா ஒன்றை மறந்து விடுகிறோம்.... நாமும் பலருக்கு "மற்றவர்" என்பதை....
 
7) உங்கள் அருகிலுள்ள "பயம்" என்பதின் கதவை மூடிப் பாருங்கள்...
எவ்வளவு சீக்கிரமாக வெற்றியின் கதவு திறக்கிறது என்பதை.....
8) மனைவி: பாருங்க உங்க அம்மா என்னை "அரை" லூசுன்னு சொல்றாங்க...
கணவன்: சரி விடு...எப்பவுமே எங்க அம்மா உன்னை குறைச்சுத்தான் மதிப்பிடுறாங்க...

9)  மனைவி: ஏங்க இன்னைக்கு குழம்பு வைக்கட்டுமா இல்ல ரசம் வைக்கட்டுமா?
கணவன்:  முதல்ல எதாவது ஒன்னு வை... அப்பறமா அதுக்கு பேரு வச்சுக்கலாம்!....
10)        என்னங்க இந்த TV'ல கோடு கோடா தெரியுது...

                நீங்க வாங்கும் போதே அன்ரூல்டு  TV ன்னு கேட்டு வாங்கி இருக்கணும்!

11) மனைவி: ஏங்க பக்கத்துக்கு வீட்டு பெண் கட்டி இருக்குற சேலை ரொம்ப நல்லா இருக்குங்க!
கணவன்:  அப்பாடி! கல்யாணம் ஆகி இந்த 5 வருஷத்துல இப்பதான் என்னோட செலெக்க்ஷன நீ பாராட்டி இருக்க!

/
/கலக்கல் தொடரும்.
/

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment