Friday, October 29, 2010

சிரிப்புகள்

மனைவி: என்னங்க! இன்னைக்கு குழம்பு வைக்கட்டுமா, ரசம் வைக்கட்டுமா?

கணவர்: முதல்ல வை... அப்புறம் பேர் வைச்சுகலாம்...

TongueTongueTongue

ஒரு சர்தார்ஜி வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்குத் தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று.மு ன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.

அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு இன்னொரு சர்தார்ஜி வந்தார். விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார். "கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!"



தபால்காரர்- உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோமீட்டர் நடந்துவரேன்.

சர்தார்ஜி; ஏன் இவ்வளவு தூரம் நடந்து வறீங்க,பேசாம தபால்ல அனுப்பியிருக்கலாமே?


என்னது! துணி துவைக்க "தாஜ்மகாலுக்கு" போறியா?
ஏன்?
அங்கதானே நிறைய சலவைக்கல் இருக்கு!

Big smile Big smile Big smile

வெயிட்டே இல்லாத "ஹவுஸ்" எது?
"லைட் ஹவுஸ்"

Laughing out loud Laughing out loud Laughing out loud

அந்த பாம்புக்கு என்ன நோயாம்...?
வேற என்ன 'புற்று'நோய் தான்.

Tongue Tongue Tongue

நிருபர்: திருமணத்திற்க்கு பிறகு படங்களில் நடிப்பீர்களா

நடிகை : என்னுடைய கனவர் சம்மதித்தால் நடிப்பேன்

நிருபர் : சம்மதிக்கலனா?

நடிகை : டைவர்ஸ் பன்னிட்டு நடிப்பேன்


உமா : ஏழு வருஷமா லவ் பண்றோம். இன்னும் நீங்க கல்யாணப் பேச்சையே எடுக்கலையே?
பிராபகரன் : சரி உமா, இப்ப கேட்கறேன்.. எப்போ உன் கல்யாணம்?


இது மொக்கைனு திட்டுனாலும் சரி..பாராட்டுனாலும் சரி நா பொறுப்பில்ல..
--



--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment