Tuesday, March 8, 2011

சிரிக்கலாம் வாங்க !



1. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

2. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.

3. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது

4. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.

5. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.

6. அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.

7. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.

8. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?

9. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.

10. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.

11. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.

12. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.

13. என்னதான் கராத்தேயிலே பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் தொரத்தினா ஓடித்தான் ஆகணும்.

 

***

 

வாடிக்கையாளர்: இந்தக் கடிதத்தை இன்னைக்குப் போஸ்ட் செய்தால் நாளை மறுநா சென்னை போய் சேர்ந்திருமா?

அஞ்லக ஊழியர்: போயிரும், போயிரும்!

வாடிக்கையாளர்: போகாது என்கிறேன் நான்

அஞ்சலக ஊழியர்: ஏன்?

வாடிக்கையாளர்: நான் மதுரை அட்ரஸ் இல்லை போட்டுருக்கேன்

 



--
Regards,
Yoganandhan Ganesan
09731314641


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பாகப்பிரிவினை

விவசாயி ஒருவன் இறக்கும் தறுவாயில் தன மூன்று மகன்களையும் கூப்பிட்டு, தான் இறந்த பிறகு,தான் எழுதியுள்ள உயிலில் கண்டவாறு அவனுடைய உடைமைகளைப் பிரித்து எடுத்துக் கொள்ளச் சொன்னான்.சிறிது நேரத்தில் அவன் உயிர் பிரிந்தது.கடமைகளை முடித்தபின்,மூன்று மகன்களும் உயிலில் கண்டபடி சொத்துக்களைப் பிரித்துக் கொண்டு வந்தனர்.இறுதியாக பதினேழு பசு மாடுகள் இருந்தன.உயிலில்,பசுமாடுகளில் இரண்டில் ஒரு பங்கு மூத்த மகனுக்கும் மூன்றில் ஒரு பங்கு இரண்டாவது மகனுக்கும்,ஒன்பதில் ஒரு பங்கு கடைசி மகனுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.பதினேழு பசு மாடுகளை இந்த விகிதத்தில் எப்படிப் பிரிப்பது?ஒரே குழப்பம்.இது சம்பந்தமாக அவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டு,அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடலானர்கள்.அப்போது ஒரு பெரியவர் அந்தப் பக்கம் வந்தார்.பிரச்சினை என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்ட அவர் அதைத் தான் தீர்த்து வைப்பதாகக் கூறினார்.அவர்கள் சம்மதம் தரவே அவர் சொன்னார்,''உங்களிடம் பதினேழு பசுக்கள்உள்ளன.என்னிடம் உள்ள பசு ஒன்றையும் இவற்றோடு சேர்த்துக் கொள்கிறேன்.ஆகப் பதினெட்டு பசுக்கள் இருக்கின்றன.உயிலின் படி இரண்டில் ஒரு பங்கு,அதாவது ஒன்பது பசுக்கள் மூத்தவனுக்கு சொந்தம்.மூன்றில் ஒரு பங்கு,அதாவது,ஆறு பசுக்கள் இரண்டாமவனுக்கு சொந்தம்.ஒன்பதில் ஒரு பங்கு,அதாவது இரண்டு பசுக்கள் மூன்றாமவனுக்கு சொந்தம்.மூவருக்கும் பதினேழு பசுக்கள் கொடுத்தபின் ஒரு பசு மீதமிருக்கிறது.அது நான் கொண்டு வந்த பசு.அதை நான் எடுத்துக் கொள்கிறேன்.இப்போது உங்கள் பிரச்சினை தீர்ந்ததா?''மூவருக்கும் மிக்க மகிழ்ச்சி.ஆனால் கடைசி வரை இது எப்படி சாத்தியமாயிற்று  என்று அவர்களுக்குப் புரியவில்லை.உங்களுக்குப் புரிகிறதா?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சிரிக்கத்தானே

''ஏன் சார்,நீங்க சாப்பிடும் முன் பிரார்த்தனை செய்வீங்களா?''
'அதெல்லாம் இல்லேங்க,என் மனைவி பரவாயில்லாமல் சமைப்பாள்.'
**********
''என் மனைவி தேவதைங்க!''
'நீங்க கொடுத்து வைத்தவர்.என் மனைவி உயிருடன் இருக்கிறாள்.'
**********
''என்னங்க,நேத்து இரவு  நீங்க முத்து மாலை வாங்கித் தருவதாகக்  கனவு கண்டேன்.அதற்கு என்ன அர்த்தம்?''
'இன்று இரவு வரை பொறுத்திரு.இரவில் உனக்கு விளக்கம் தருகிறேன்.'
இரவில் கணவன்ஒரு பார்சலுடன் வந்தார்.மனைவி அதை வாங்கி பரபரப்புடன் பிரித்துப் பார்த்தாள்.உள்ளே ஒரு புத்தகம் இருந்தது.அந்தப் புத்தகத்தின் தலைப்பு,'கனவுகளின் பலன்கள்'.
**********
கப்பல் கவிழ்ந்து கொண்டிருந்தது.கேப்டன் பயணிகளிடம் கேட்டார்,''உங்களில் யாருக்காவது பிரார்த்தனை செய்யத் தெரியுமா?''ஒருவர் உடனே சொன்னார்,'நான் நன்றாகப் பிரார்த்தனை செய்வேன்.'இப்போது கேப்டன் சொன்னார்,''இவர் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கட்டும்.மற்றவர்கள் எல்லோரும் மூழ்காமல் தப்பிப்பதற்கான லைப் ஜாக்கெட்டை அணிந்து கொள்ளுங்கள்.மொத்தத்தில் ஒரு ஜாக்கெட் குறைவாக உள்ளது.''
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஏலம்

பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தவர் மதன் மோகன் மாளவியா.பல்கலைக் கழகத்தை ஆரம்பிக்க அவர் பொருளாதார ரீதியில்  மிகவும் சிரமப்பட்டார். அவர் மனம் தளராது ஊர் ஊராகச் சென்று,செல்வந்தர்களையும்,பெரிய வணிகர்களையும் நேரில் சந்தித்துநிதி உதவி கோரினார்.இதற்காக அவர் ஹைதராபாத் நவாபையும் பார்த்து நிதி உதவி கோரினார்.நவாப் கோபத்துடன்,''என்ன தைரியம் இருந்தால்,என்னிடம் வந்து,ஒரு இந்துப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்க நிதி கேட்பாய்?''என்று கேட்டவாறே அவர் காலிலிருந்த செருப்பைக் கழட்டி மாளவியாவின் மீது எறிந்தார்.மாளவியா ஏதும் பேசாமல் அந்த செருப்பை எடுத்துக் கொண்டு கடை வீதிக்கு வந்து,''இது நவாப் அவர்களின் செருப்பு.இப்போது இதை நான் ஏலம் விடப் போகிறேன்,''என்று கூவி அழைத்தார்.தகவல் நவாபுக்கு எட்டியது தன செருப்பு குறைந்த விலையில் ஏலத்தில் சென்றால் தனது கௌரவத்திற்கு இழுக்கு  என்று எண்ணிய நவாப் உடனே தன ஆட்களிடம் ஒரு பெரிய தொகையைக் கொடுத்துவிட்டு செருப்பை ஏலத்தில் எடுக்கச் சொன்னார்.மாளவியாவும் தன காரியம் பலித்தது என அந்தத் தொகையை பல்கலைக் கழக நிதியில் சேர்த்துக் கொண்டார்.
ஒருவனை முன்னேற விடாமல் தடுப்பது,அவனது திறமையின்மையோ,தகுதிக் குறைவோ கூட அல்ல.இனி தனக்கு வாய்ப்பே இல்லை,விடிவு காலமே இல்லை என்று ஒரு முடிவுக்கு வருவதுதான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மாக்சிம் கார்க்கி--2

நீ தான் உலகிலேயேஉயர்ந்த ரகச் சரக்கு என்றும்,எனவே ஒவ்வொருவரும் உன்னைக் கடித்துத் தின்னவே பார்க்கிறார்கள் என்றும் உனக்குத் தோன்றும்.ஆனால் கொஞ்ச காலம் போனால் ,எல்லோருடைய இதயங்களும் உன் இதயத்தைப்போலத்தான் இருக்கின்றன என்ற உண்மையை உணர்ந்து கொள்வாய்.உணர்ந்த பின் உன் மனம் ஓரளவு சமாதானம் அடையும்.கூப்பிடு தூரத்துக்குக்கூட ஒலிக்காத உனது சின்னஞ்சிறு மணியைக் கோபுரத்தின் உச்சியில்கொண்டு கட்டி ஊரெல்லாம் ஒலிக்கச் செய்ய விரும்பிய உனது அறியாமையைக் கண்டு நீயே நாணம் அடைவாய்.உனது மணியைப் போன்ற பல்வேறு சிறு மணிகளின் கூட்டுறவோடுதான் உனது மணியிசையும் ஒன்று பட்டு ஒலிக்க முடியும் என்பதை நீ  உணர்வாய்.
**********
ஒரு மனிதன் நாற்பது வயதைத் தாண்டிய பிறகு,அத்தனை காலமும் தன இதயத்துக்குள்ளே வேண்டாத விஷயங்களோடு முண்டி முண்டிப் போராடிக் கொண்டிருந்த பிறகு,அவனை சீர்திருத்தி வழிக்குக் கொண்டு வருவது என்ன,லேசுப்பட்ட காரியமா?
**********
நாம் உணவுக்காகக் கால் நடைகளைக் கொல்கிறோம்.அதுவே மோசம்.காட்டு மிருகங்களால் ஆபத்து வருமென்று தெரிந்தால் அவற்றையும் நாம் கொன்று தீர்க்கிறோம்.அது சரிதான்.ஒரு மனிதன் சக மனிதர்கள் மீது காட்டு மிருகத்தைப்போல பாய்ந்து கடித்துத் தின்ன முனைந்தால்,அவனை நான் மிருகத்தைக் கொல்வதுபோல கொன்று தீர்க்கத்தான் செய்வேன்.
**********
வாழ்க்கை அமைப்பிலுள்ள குறைபாட்டினால்தான் மக்கள் குற்றவாளி ஆகிறார்கள்.
**********
நல்ல காலத்தை எதிர் பார்த்துத்தான் மக்கள் வாழ்கிறார்கள்.எந்த வித நம்பிக்கையும் இல்லாவிட்டால்,அது எந்த வாழ்வோடு சேர்த்தி?நல்லவர்கள் என்றும் அதிக நாட்கள் தனியாக வாழ்வதில்லை..நல்லவர்களோடு மற்றவர்கள் வந்து எப்போதும் ஒட்டிக் கொள்வார்கள்.
**********
இங்கு கைதிகளும் இல்லை, நீதிபதிகளும் இல்லை.பிடிபட்டவர்களும்,பிடித்தவர்களும்தான் இருக்கிறார்கள்.
**********
                          --'தாய்'என்ற  நூலிலிருந்து .

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net