Wednesday, November 24, 2010

முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!

ஒரு மனிதனின் ஆரோக்கியம், அவன் மூளையின் செயல்பாடுகளில் அடங்கியுள்ளது. மூளை சரிவர செயல்படாத அந்த ஒருவன் "முழுமையான மனிதன் இல்லை' என்பது புதுமொழி. மனித உடலில் தலைமை பொறுப்பில் உள்ள மூளை திடீரென செயலிழந்து விடும். இதற்கு "பக்கவாதம்' என்று பெயர். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அடைபடும்போது "பக்கவாதம்' ஏற்படுகிறது. பொதுவாக, 55 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு "பக்கவாதம்' ஏற்படும்.  காரணம், வயது அதிகரிக்கும்போது, உடலில் ரத்த உற்பத்தி குறைந்து போகும். இந்திய அளவில், ஆண்டுக்கு 10 லட்சம் பேர் (சென்னையில் மட்டும் 3000 பேர்) பக்கவாதத்தில் பாதிக்கப்படுகின்றனர்.
வாய் கோணுதல் அல்லது பேச முடியாதது; கை, கால் இழுத்துக்கொள்வது; ஒரு கண் பார்வை இல்லாதது மற்றும் தலையை அசைக்க முடியாமல் ஒரு பக்கமாக பார்த்து பேசுவது; தலை சுற்றி மயக்கம் வருதல் போன்றவை பக்கவாதத்தின் அறிகுறிகளாகும். மேற்கூறிய அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், அடுத்த மூன்று மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால், பாதிக்கப்பட்டவரின் மூளை செயலிழந்து விடும். முன்பெல்லாம், "பக்கவாதம்' வந்தவர்களுக்கு மாதக்கணக்கில் சிகிச்சை அளிக்கப்படும். இப்போது, "திசு பிளாஸ்மினோஜென் ஆக்டிவேட்டர்' (டி.பி.ஏ.,)நவீன சிகிச்சையில் பாதிக்கப்பட்டவரை இரண்டு நாளில் குணப்படுத்த முடியும். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், டி.பி.ஏ., சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பக்கவாதம் வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில், "அக்யூட் பிரெய்ன் அட்டாக் டீம்' என்ற நிபுணர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
பக்கவாதம் பாதிக்கப்பட்டவரை மூன்று மணி நேரத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தால், டி.பி.ஏ., சிகிச்சை கொடுத்து நோய் சரிசெய்யப்படும்; பாதிக்கப்பட்ட ஆறு மணி நேரத்திற்குள் கொண்டு வந்தால், அவர்களுக்கு, "ஆஸ்பிரின்' கொடுத்து, மாரடைப்பு ஏற்படாமல் தடுத்து மேற்கண்ட சிகிச்சை அளிக்கப்படும்.
டி.பி.ஏ., சிகிச்சையில், மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் சி.டி., ஸ்கேன் செய்யப்பட்டு, அடைப்பு இருந்தால் நீக்கப்படும். ரத்தக் கசிவு ஏதும் இருந்தால், "ஆஸ்பிரின்' மருந்து கொடுக்கப்படும்.
ஏற்கனவே இதயம் தொடர்பான அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கும், குடற்புண் மற்றும் ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கும்,   "ஆஸ்பிரின்' கொடுக்கக் கூடாது.
தொடர்ந்து,  "டிரான்ஸ்கிரனியல் டாப்ளர்' கருவியால், மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் சுருக்கம் ஏற்பட்டிருந்தாலும், அடைப்பு இருந்தாலும் கண்டுபிடிக்கப்படும். அதன் அடிப்படையில் மேற்படி சிகிச்சை அளிக்கப்படும்.



http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பாலகுமாரனின் சிந்தைனகள் பகுதி 4

மலர்ச்சியாக உலகத்தில் தெரிகின்ற பெண்ணுக்கு அடிவேர் ஆண்தான்.அந்த அடிவேர் உற்சாகமாக இருக்கவேண்டுமென்றால் பசுமையான செடி மிக முக்கியம்.மலர்கள் மிகமுக்கியம். இதுதான் வாழ்க்கை.
-உத்தமன்


ஆத்திரப்படுபவன் திறமை இருந்தாலும் அசிங்கப்படுவான்.
-உத்தமன்.


உண்மையான வீரன் என்பவன் தன்னை ஜெயித்தவன்.தன்னை ஜெயித்தவனை எவனும் ஜெயிக்க முடியாது. பரசுராமரிடம் ஜமதக்னி முனிவர்.
-உத்தமன்.


காமம் என்ற குதிரையைக் கடிவாளமிட்டு நெறிப்படுத்தியவன் வாழ்க்கையில் மலர்ந்திருப்பான்.
-காதல் ரேகை.


கட்டுப்பாடற்ற காமத்தையே உலகம் காதல் என்கிறது. காதல் என்பது விட்டுக்கொடுத்தல். உடனடியாக. எந்த எதிர்பார்ப்புமின்றி. இது வேத வாக்கியம்.
-காதல் ரேகை.


உண்மையான நேசம் மதுவைவிட போதையானது.
-காதல் ரேகை.


அருள் என்பது அன்பால் உண்டாவது. அன்பு உண்டாக கடவுள் அருள் வேண்டும். அருளும் அன்பும் உடையது காதல்.
-காதல் ரேகை.


இயற்கையோடு இணைந்து வாழ்பவர்களுக்கு மனம் என்பது இல்லை.
-கருணை மழை.


உன்னை அறியாதவரை உன் உணர்வுகளையும் அறிய முடியாது.
-திருப்பூந்துருத்தி.


தியாகம் தொண்டு என்கிற வார்த்தைகள் அகந்தை விசயம். இந்த அகந்தை இன்னும் அகந்தையை வளர்க்கும். தொண்டு செய்ய செய்ய கர்வம் வரும். தியாகம் செய்ய செய்ய திமிர் வரும். இவையிரண்டும் தவறான விஷயங்கள் இல்லை. செயல்பாட்டில் கவனம் வேண்டும். தியாகம் செய்கிறோம் என்று யோசிப்பு வந்துவிட்ட நேரம் அது விஷமாகிறது. தொண்டு செய்கிறேன் என்று ஒருவன் உணர்ந்து நடக்கும் பொது எதிர்பார்ப்பு வந்து விடுகிறது.
-சிநேகமுள்ள சிங்கம்


இயல்பாய் இருத்தலே ஞானம்.அதுவே அமைதி.
-குரு.


நீ எங்கோ திருடினால் உன் பொருள் எங்கோ திருட்டுப் போகிறது. இது அமைதியான ஒரு விதி. கண்களுக்குப் புலப்படாத ஒரு சட்டம்.
-குரு.


உண்மையாய் இருப்பதுதான் சுயபலம். ஞானத்தின் அடித்தளம். அப்போது பேச்சும் செயலும் மிக மிகச் சுதந்திரமாக இருக்கும். அந்தச் சுதந்திரம் எவரையும் காயப்படுத்தாது இருக்கும்.
-குரு.


சரணாகதி என்பது குருவைப் பூரணமாக நேசித்தல்.குருவைத் தன் உணர்வுகளோடும் கலக்கவிடுதல். சிலசமயம் உள்ளுக்குள் குருவாகவே மாறுதல்.
-குரு.


தன்னை ஆழ்ந்து பார்கிறவருக்கே, தன்னுள் யார் பார்க்கிறார்கள் என்கிற கேள்வி உள்ளவருக்கே குருவின் விலக்கலால் ஞானம் சித்திக்கும்.
-குரு.


நல்ல குரு அதிகம் பேசுவதில்லை. பிரசங்கிகளால், நல்ல குருவாக மாற முடிவதில்லை.
-குரு.


சக்தி மிகுந்த குரு இருக்கும் இடத்தில் அமைதி தளும்பி நிற்கும். அருகே போய் நிற்க மனமாற்றம் ஏற்படும்.
-குரு.


உணவு ருசி உடம்பை அடுத்த அகங்காரம். தன்னை உடம்பாகக் கொள்ளும்போது, உணவாட்டம் வெறியாய் போய்விடுகிறது.
-குரு.


"Life Is Relationship" பிறரோடு தொடர்பு கொள்ளுதலே வாழ்க்கை.பிறரோடு உள்ள தொடர்புகளில் ஏற்படும் சிக்கல்தான் மொழி, இன, மத சண்டைகளுக்கெல்லாம் காரணம்.
-குரு.


மனம் பற்றி யோசிக்கிறவனுக்குத்தான் ஆன்மா புலப்படும். தன் மனம் தெரியாதவனுக்கு பிறர் மனம், உணர்வு எதுவும் தெரியாது.
-குரு.


--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வைட்டமின் E உபயோகத்தால் உண்டாகும் நன்மைகள் !

மனித உடலுக்கு சக்தியைக் கொடுப்பது வைட்டமின்கள்தான். உணவின் மூலமே இந்தவைட்டமின்கள் அதிகளவு உடலுக்குக் கிடைக்கிறது. வைட்டமின்கள் மொத்தம்பதின்மூன்று உள்ளன. இவற்றில் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள், நீரில்கரையும் வைட்டமின்கள் என இரு வகைகள் உள்ளன.




கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் உடலின் தேவைக்கு ஏற்பஉபயோகப்படுத்தப்பட்டு, மீதமுள்ளவை கொழுப்பு பொருட்களாக கல்லீரலில்சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் நீரில் கரையும் வைட்டமின்கள் உடலின்தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளப்பட்டு மீதி கழிவுகள் மூலம் வெளியேற்றப் படுகிறது.


***


கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்


1. வைட்டமின் ஏ


2. வைட்டமின் டி


3. வைட்டமின் இ


4. வைட்டமின் கே


***


வைட்டமின் E உடலில் கலக்கும் முறை


வைட்டமின் E உள்ள உணவுப் பொருட்களை உண்ணும் போது, அவை சிறுகுடலில் உள்ளஉறிஞ்சிகள் மூலம் உறிஞ்சப்பட்டு அடிபோஸ் திசுக்களில் சேகரிக்கப்படுகிறது.பின் அவை தேவைக்கேற்ப உபயோகிக்கப்படுகிறது.

**


வைட்டமின் E அதிகமுள்ள உணவுப் பொருட்கள்


1· பருத்தி விதை எண்ணெய்


2· சோள எண்ணெய்


3· சூரியகாந்தி எண்ணெய்


4· சோயாபீன்ஸ்


5· முட்டைகோஸ்


6· சிறுகீரை


7· ஆப்பிள் விதைகள்


8· பட்டாணி கடலை


9· ஈஸ்ட்

*

10. பால் : ஜீரணமானவுடன் புரோட்டீன் எளிதில் கிடைத்துவிடும்.



11. சோயா : உடல் வளர்ச்சிக்கும் தசைச் செல்கள் பெருகவும் முழுமையான அளவு புரோட்டீன் இதில்தான் உள்ளது.



12. தானியங்கள் : எளிதில் கிடைக்கக் கூடிய உயர் ரக புரோட்டீன் இவற்றில் உள்ளன.



13. காளான் : அமினோ அமிலம் அதிகம் உள்ளது. உடலுக்கு மிக நல்ல புரோட்டீனைத் தரக் கூடியது. (அலர்ஜி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.)



14. நிலக்கடலை : நல்ல புரோட்டீன், உள்ளது. ஆனால் கொழுப்பு அதிகம் உள்ளது. அளவாகப் பயன்படுத்தல் வேண்டும்.



15. மீன், பருப்பு வகைகளைப் பொரித்து உண்பதை விட வேகவைத்து உண்பதே மிகச்சிறந்தது. வைட்டமின் 'ஈ' (E) சத்து இவற்றில் அதிகம் உள்ளது. சமைத்தவுடன் சாப்பிடுவது சாலச்சிறந்தது.

*

7. உடலில் அதிக தசைகளை பலமாக்க, மலட்டுத் தன்மையை நீக்க, அமினோ அமிலம் பெற கீரை உதவும்.


***


வைட்டமின் E-ன் உபயோகத்தால் விளையும் நன்மைகள்


1· இரவில் கண்டதசையில் எற்படும் தசைப்பிடிப்பு (Nocturnal Muscle cramps) - இது வைட்டமின் E சத்துள்ள உணவுகளை உட்கொள்வதால் குறையும்.


*

2· ரத்த நாளத்தில் கொழுப்பினால் ஏற்படும் அடைப்புகளை கரைக்கும் தன்மை (Atherosclerosis) வைட்டமின் E க்கு உண்டு.

*

3· மார்பகத்தில் ஏற்படும் நார்த்திசுக் கட்டிகளை (Fibrocystic breast disease) கரைக்கும் தன்மை வைட்டமின் E க்கு உண்டு.



***

வைட்டமின் E குறைவினால் உண்டாகும் நோய்கள்:


தசைவாதம் (Muscular dystrophy)


இன்றைய உலகில் பெரும்பாலான குழந்தைகள் தசைவாதம் என்னும் நோயால் அதிகம்பாதிக்கப்பட்டுள்ளனர். வைட்டமின் E சத்து குறைவதால் தசைகளில் உள்ளகொழுப்புச் சத்து குறைந்து போகிறது. இதனால் தசைவாதம் உண்டாகிறது. இந்நோய் தீருவது மிகவும் அரிதாகும்.


**


இரத்தச் சோகை (Haemolytic anaemia)


வைட்டமின் E சத்து குறைவதால் இரத்த சிவப்பணுக்கள் அழிந்துபோகின்றன. இதனால் இரத்தச் சோகை உருவாகிறது. இரத்தச் சோகையைப் போக்க வைட்டமின் E சத்து அதிகமுள்ள பொருட்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


**

கல்லீரல் தாபிதம் (Dietary Hepatic necrosis)


கல்லீரலில் உள்ள திசுக்கள் அழிவதால் இந்நோய் வரக்கூடும். எனவே இவ்வகைநோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள வைட்டமின் E கலந்த உணவை உட்கொள்ளவேண்டும்.


வைட்டமின் E சத்தானது மலட்டுத்தன்மையை குறைத்து மகப்பேறு ஏற்படச் செய்யும். இந்த சத்து குறையுமானால் மலட்டுத்தன்மை உண்டாகும்.


அண்மையில் அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் மூளையில் உண்டாகும் திடீர் அதிர்வை தடுக்கவும் நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கவும் வைட்டமின் E மிகவும் தேவையென கண்டறிந்துள்ளனர்.


--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .

திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

யார் காரணம்?

ஒரு மகானைத் தேடி ஒருவன் படபடப்போடும் கோபத்தோடும் வந்தான்.கால் செருப்பை கழட்டிகோபமாக ஒரு மூலையில் வீசி எறிந்தான்.கதவை வேகமாக அடித்துச் சாத்தினான்.அப்புறம் மகானுக்கு வணக்கம் தெரிவித்தான்.மகான் சொன்னார்,''அப்பா,உன் வணக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.முதலில் செருப்பிடமும் கதவிடமும் மன்னிப்புக் கேட்டு விட்டு வா.''
''உயிரற்ற அப் பொருள் களிடம் எப்படி மன்னிப்பு கேட்பது?''என வினவினான்.அவன்.
''அந்தச் செருப்புக்கும் கதவுக்கும் உயிர் இருப்பதாக நினைத்துத்தானே உன் கோபத்தைக் காட்டினாய்.மன்னிப்பு கேட்க மட்டும் அவை உயிரற்றவை ஆகி விடுமா?''எனக் கேட்டார் மகான்.
அவன் செருப்பிடமும் கதவிடமும் மன்னிப்புக் கேட்டான்.அவனது மூர்க்க குணம் அடங்கியது.
''நம் கோபத்துக்கு அடிப்படையான தவறுகளை நாம் தான் செய்கிறோம்.பிறருக்கு இதில் பங்கு இல்லை என்பதை உணர்ந்தாலே கோபம் அடங்கி விடும்.''என்றார் மகான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மலரின் அழகு

தெய்வத்தின் காலடியில் சமர்ப்பிக்கப் படுவதை விட,ஒரு பெண்ணின் கூந்தலில் இடம் பெறுவதை விட ,மேசையின் மீது பூக்கிண்ணத்தில் செருகப் படுவதை விட செடியிலே இருக்கும் போது தான் மலர் அழகாக இருக்கும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net