Friday, December 17, 2010

அழகோ! அழகு...

அழகு என்ற சொல் தமிழுக்கு அழகு சேர்க்கும் சொல்லாகும்.  இயற்கை அழகு, மலை அழகு, உடல் அழகு என அழகை வர்ணித்துக்கொண்டே போகலாம்.  அதுபோல் மனிதர்களில் அழகு என்பது புற அழகை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது.  காரணம் உடலின் அகத்துள்ளே பூரிப்பு உண்டானால் அது புற அழகில் மெருகேறிவிடும்.

அதுபோல் அகத்துள் பாதிப்பு உண்டானால் அது முகத்தில் தெரிய வரும்.  இதைத்தான் நம் முன்னோர்கள் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.

முக அழகையும், உடலையும் பேணி பாதுகாப்பது அவசியம்.  உடல்தான் மனித உயிரின் அஸ்திவாரம் ஆகும்.  ஒவ்வொருவரும் செயற்கை அழகை விட இயற்கை அழகை  மேம்படுத்துவதே சாலச் சிறந்தது.

செயற்கை அழகு சாதனப் பொருட்கள் உடலுக்கு ஒவ்வாமையை  ஏற்படுத்தக் கூடியவை,  ஆனால் மூலிகை பொருட்களால் ஆன அழுகு சாதன பொருட்களே மேனியை மெருகூட்டும்.

வறண்ட சருமம்

சிலருக்கு உடலில் ஒவ்வாமை  காரணமாக  சருமத்தில் பாதிப்பு உண்டாகி வறட்சி ஏற்படும்.  இதனால் புற  அழகு குன்றி காணப்படுவார்கள்.  இந்த சரும வறட்சியை நீக்க

பயிற்ற மாவு    - 50 கிராம்

மஞ்சள் தூள்    - 5 கிராம்

எலுமிச்சம் பழச்சாறு - 50 மிலி

இவற்றை சேர்த்து  நன்றாக கலக்கி சருமம் எங்கும் பூசி 10 நிமிடம் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில் குளித்து வரவேண்டும்.  இக்காலங்களில் குளியல் சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.  மேற்கண்ட முறை வாரம் இருமுறையாவது செய்து வந்தால் வறட்சி நீங்கி சருமம் பளபளக்கும்.

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு வயிற்றில் விழும் கோடுகள் மறைய

கருவுற்றிருக்கும்போது வயிறு பருக்கும்.  குழந்தை பிறந்த பின் வயிற்றில்  சிலருக்கு வெள்ளையாக கோடுகள் விழும்.  இக்கோடுகள் மறைய

கற்றாழை         - 1 துண்டு
பப்பாளி        - 1 துண்டு
சந்தன பவுடர்    - 1 ஸ்பூன்
பன்னீர்        - 1 ஸ்பூன்
பாதாம் எண்ணெய்     - 1 ஸ்பூன்
அல்லது தேங்காய் எண்ணெய் ,
பாலாடை         -  1 ஸ்பூன்

சேர்த்து நன்றாக கலக்கி இரவு படுக்கைக்கு செல்லும் முன்  வயிற்றில் பூசி வரவேண்டும்.  காலை எழுந்தவுடன் இளம் சூடான நீரில் குளிக்க வேண்டும்.  இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் வயிற்றில் உண்டான கோடுகள் மறையும்.

வெயிலில் செல்லும்போது ஏற்படும் கருமை மாற

வெயிலில் அலைந்து வேலை செய்யும் ஆண், பெண் இருபாலருக்கும் உடம்பில் வெயில் படும் இடங்களில் கருமை உண்டாகும்.  உடல் எண்ணெய் பசை போல் காணப்படும்.  இவர்கள்

உருளைக்கிழங்கு சாறு     - 1 ஸ்பூன்
சர்க்கரை            - 1 ஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு        - 1 ஸ்பூன்

இவற்றை ஒன்றாக சேர்த்து குழைத்து கருமை உள்ள இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளித்து வந்தால் கருமை நீங்கும்.

இளநீரை முகத்தில் தடவி வந்தால் சின்னம்மையினால் உண்டான வடுக்கள் விரைவில் மறையும்.

முடி உதிர்தல், செம்பட்டை முடி மாற

தேங்காய் எண்ணெய்        - 1 லி
நெல்லிக்காய் பொடி        - 10 கிராம்
தான்றிக்காய் பொடி        - 10 கிராம்
வெட்டிவேர்            - 10 கிராம்
ரோஜா இதழ் காய்ந்தது    - 10 கிராம்
மருதாணி பொடி        - 10 கிராம்
கறிவேப்பிலை பொடி        - 10 கிராம்
கரிசலாங்கண்ணி பொடி    - 10 கிராம்
செம்பருத்தி பொடி        - 10 கிராம்
புதினா பொடி        - 10 கிராம்
சந்தனப் பொடி        - 10 கிராம்

இவற்றை கலந்து கொதிக்க வைத்து15 நாட்கள் வெயிலில் காயவைத்து தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்தல் மாறி, பொடுகு நீங்கும்.  கேசம் கருமையடையும்.



http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் முதிர்ச்சி படிகள் (பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டியது)

ஒரு குழந்தை, எப்போது நடக்கும் , தவழும் , பேசும் , போன்ற எதிர்பார்ப்பு குழந்தை பிறக்கும் போதே பெற்றோருக்கும் பிறது விடும்.


உண்மையில் ஒரு குழந்தையின் வளர்ச்சியானது ஒரு படிமுறையாக கட்டமைக்கப் பட்டதாகும். குறிப்பிட்ட காலத்தில்தான் ( வயதில்) குறிப்பிட்ட செய்முறைகளை செய்வதற்குரிய ஆற்றல் அந்தக் குழந்தைக்கு உருவாகும்.

இவ்வாறு ஒவ்வொரு வயதிலும் ஒரு குழந்தை அடைய வேண்டிய ஆற்றல் அந்த வயதிற்குரிய வளர்ச்சி எல்லை (mile stone ) எனப்படுகிறது.

அதாவது ஒரு எட்டு மாதக் குழந்தையின் வளர்ச்சி எல்லையானது (mile stone) தாவழப் தொடங்குதல் .

இவ்வாறு மனிதனின் வளர்ச்சி எல்லை நான்கு முக்கிய பிரிவுகளில் நடைபெறுகிறது. 
  1. அசைவு சம்பந்தமான வளர்ச்சி (தவழுதல், நடத்தல், ஊடுதல்)(GROSS MOTOR)
  2. சமூகத்தோடு ஐக்கியமாகும் வளர்ச்சி( சிரித்தல், கையசைத்தல், )(SOCIAL)
  3. நுணுக்கவேலைகள் மற்றும் பார்வை(FINE MOTOR)
  4. பேச்சு மற்றும் செவிப்புல வளர்ச்சி(SPEECH AND HEARING )


இந்த இடுகையில் முதலாவது பிரிவில் ஏற்படுகின்ற வளர்ச்சிப் படிமுறைகளை பார்ப்போம்.

  1. தலைய நேராக வைத்திருத்தல் (head control ) ------- 4 மாதம்
  2. குழந்தை உடம்பை சுழற்றுதல்(குப்புறப் படுத்தல்) ------- 3 - 6 மாதம்
  3. துணையாக நாம் பிடித்துக் கொள்ளும்போது இருத்தல் -------5 மாதம்
  4. எந்தத் துணையும் இல்லாமல் இருத்தல் ------- 6மாதம்
  5. தவழுதல் -------- 8மாதம்
  6. எழுந்து நிற்றல் -------- 9மாதம்
  7. பிடித்துக் கொண்டு நடத்தல் ---------10மாதம்
  8. துணையின்றி நடத்தல் ---------12மாதம்
  9. ஓடுதல் -------- 15மாதம்
  10. ஒரு பந்தை உதைத்தல் -------- 24மாதம்
  11. மூன்று சக்கரங்களைக் கொண்ட வண்டியை மிதித்தல் --------36மாதம


மூன்று மாதம் வயதுடைய குழந்தை செய்ய வேண்டியவை..

அசைவு சம்பந்தமான செயற்பாடுகள்

  • தலையை நிமிர்த்தி வைத்திருக்கும் திறன் .
  • குப்புறப் படுத்திருக்கும் போது தலை மற்றும் நெஞ்சினை உயர்த்துதல
  • அசையும் பொருள் அல்லது நபர்களை தொடர்ச்சியாக பார்த்தல் 

உணர்ச்சி மற்றும் சிந்தனை சம்பந்தமானவை

  • ஒலி வரும் திசையை நோக்கி தலையைத் திருப்புதல் 
  • நீங்கள் ஒலி எழுப்பி விளையாட்டுக் காட்டுவதை உணர்ந்து ரசித்தல்
  • நீங்கள் சிரிக்கும் போது பதிலுக்குச் சிரித்தல்

ஆறு மாதக் குழந்தையின் திறன்கள்

அசைவு சம்பந்தமானவை

  • இருத்தி வைக்கும் போது தலையை நேராக வைத்திருத்தல் 
  • தூரத்தில் இருக்கும் விளையாட்டுப் பொருட்களை எட்டிப் பிடித்தல் 
  • சூப்பிப் போத்தலைப் பிடித்து பால் குடிக்க முயற்சித்தல்
  • விளையாட்டுப் பொருட்களை ஒரு கையில் இருந்து இன்னொரு கைக்கு மாற்றுதல் 
  • தானாக எழுந்து இருத்தல் உடம்பை உருட்டிக் கொண்டே அசைதல்

உணர்ச்சி மற்றும் எண்ணம் சம்பந்தமானவை

  • சாப்படைக் கொடு போகும் போது வாயைத் திறத்தல் 
  • மற்றவர்கள் செய்யும் சிறிய செயல்களை திருப்பிச் செய்ய முயற்சித்தல்

பேச்சு


  • நெருக்கமானவர்களின் முகங்களை அறிந்து கொள்ளுதல் 
  • தொந்ததரவுக்கு உள்ளாகும் போது அழுதல்
  • கண்ணாடியில் தன் முகத்தையே பார்த்து சிரித்தல்

ஒரு வயதுடைய குழந்தையின் திறன்கள்

அசைவு சம்பந்தப்பட்டது

  • சூப்பியில் இருந்து கோப்பையினால் குடிக்கப் பழகுதல்
  • சிறிய உணவுத்துண்டுகளை தானாகவே எடுத்து வாயில் வைத்துச் சாப்பிடுதல்
  • துணையின்றி சில அடிகள் நடத்தல்

உணர்ச்சி சம்பந்த பட்டவை

  • மற்றவர்கள் செய்யும் செயற்பாடுகளை தானும் செய்ய முயற்சித்தல் 
  • இசையை கேட்டு சிறிய உடல் அசைவுகளைக் காண்பித்தல்
  • தூரத்தில் உள்ள விளையாட்டுப் பொருட்களை தேடித் போய் விளையாட முயற்சித்தல்


பேச்சு

  • அம்மா அப்பா தவிர்ந்த வேறு ஒரு வார்த்தையை பேசத் தொடங்குதல்
  • வீட்டில் உள்ள மற்றவர்களின் பெயர்களை அறிந்து கொள்ளுதல்
  • மற்றவர்களோடு பேச முயற்சித்தல் 
  • வீட்டில் உள்ளவர்களோடு நெருக்கமாகப் பழகி வெளியாட்களோடு அன்னியத்தைக் காண்பித்தல் 
  • பெரியவர்கள் சொல்லும் சிறிய சிறிய கட்டளைகளை உணர்ந்து கொள்ளுதல்



அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கடி ஜோக்ஸ்


வருஷத்துல ஒரு நாள் ஆஞ்சநேயர் கடுப்பா இருப்பார். அது  என்னைக்கு?
'வாலன்டைன்ஸ்டே' அன்றைக்கு!

குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் காந்திஜிக்கும் என்ன வித்தியாசம்?
குன்னக்குடி-வயலினிஸ்ட்! காந்திஜி-non வயலினிஸ்ட்!!

தேள் திரவப்பொருளா? திடப்பொருளா?
தெரியவில்லையே
திரவப்பொருள்!'
அதெப்படி?
கொட்டுமே!

மயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது!
ஏன் அப்படி சொல்றே?
மயிலுக்கு தமிழ் தெரியாதே!

கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி
நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...!

என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு..
பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..?
ம்ஹூம்... ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!

என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க...?
நான் தான் சொன்னேன்ல... பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு!

எங்க தலைவர் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்துவாரு...
எங்க தலைவரு 'சிக்கனோட' பயன்படுத்துவாரு.

உங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்?
அது 'ஈஸி' சேராச்சே!

உங்க ஆபீஸ்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?
படுத்த படுக்கையாக...

தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா...?
தெரியலையே.... என்னது?
தலையிலே முடி இருக்கிறது தான்...!

இந்த ரோடு எங்கே போகிறது?
எங்கும் போகலை. நான் பிறந்ததிலிருந்து இன்று வரை இங்கு தான் இருக்கிறது.

எதுக்குடா மளிகைக் கணக்கு லாண்டரி கணக்கெல்லாம் உன் நோட்டுல எழுதிக்கிட்டு இருக்கே?
எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா....

என் கணவர் எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான் நடப்பாரு...
அட... நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன!


--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பாகப்பிரிவினை

விவசாயி ஒருவன் இறக்கும் தறுவாயில் தன மூன்று மகன்களையும் கூப்பிட்டு, தான் இறந்த பிறகு,தான் எழுதியுள்ள உயிலில் கண்டவாறு அவனுடைய உடைமைகளைப் பிரித்து எடுத்துக் கொள்ளச் சொன்னான்.சிறிது நேரத்தில் அவன் உயிர் பிரிந்தது.கடமைகளை முடித்தபின்,மூன்று மகன்களும் உயிலில் கண்டபடி சொத்துக்களைப் பிரித்துக் கொண்டு வந்தனர்.இறுதியாக பதினேழு பசு மாடுகள் இருந்தன.உயிலில்,பசுமாடுகளில் இரண்டில் ஒரு பங்கு மூத்த மகனுக்கும் மூன்றில் ஒரு பங்கு இரண்டாவது மகனுக்கும்,ஒன்பதில் ஒரு பங்கு கடைசி மகனுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.பதினேழு பசு மாடுகளை இந்த விகிதத்தில் எப்படிப் பிரிப்பது?ஒரே குழப்பம்.இது சம்பந்தமாக அவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டு,அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடலானர்கள்.அப்போது ஒரு பெரியவர் அந்தப் பக்கம் வந்தார்.பிரச்சினை என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்ட அவர் அதைத் தான் தீர்த்து வைப்பதாகக் கூறினார்.அவர்கள் சம்மதம் தரவே அவர் சொன்னார்,''உங்களிடம் பதினேழு பசுக்கள்உள்ளன.என்னிடம் உள்ள பசு ஒன்றையும் இவற்றோடு சேர்த்துக் கொள்கிறேன்.ஆகப் பதினெட்டு பசுக்கள் இருக்கின்றன.உயிலின் படி இரண்டில் ஒரு பங்கு,அதாவது ஒன்பது பசுக்கள் மூத்தவனுக்கு சொந்தம்.மூன்றில் ஒரு பங்கு,அதாவது,ஆறு பசுக்கள் இரண்டாமவனுக்கு சொந்தம்.ஒன்பதில் ஒரு பங்கு,அதாவது இரண்டு பசுக்கள் மூன்றாமவனுக்கு சொந்தம்.மூவருக்கும் பதினேழு பசுக்கள் கொடுத்தபின் ஒரு பசு மீதமிருக்கிறது.அது நான் கொண்டு வந்த பசு.அதை நான் எடுத்துக் கொள்கிறேன்.இப்போது உங்கள் பிரச்சினை தீர்ந்ததா?''மூவருக்கும் மிக்க மகிழ்ச்சி.ஆனால் கடைசி வரை இது எப்படி சாத்தியமாயிற்று  என்று அவர்களுக்குப் புரியவில்லை.உங்களுக்குப் புரிகிறதா?

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஹி!ஹி!

காதலி: என் தந்தை எனக்காக நிறைய சொத்து சேர்த்து வைத்திருப்பதால் தான் என்னை விரும்புகிறீர்களா?
காதலன்:சே!சே!உனக்காக யார் சொத்து சேர்த்து வைத்திருந்தாலும் உன்னைக் காதலித்திருப்பேன்.இது சத்தியம்.
**********
ஒரு சிலர் தனியாக இருந்து அதிசயங்களை நிகழ்த்துகிறார்கள்.
ஒரு சிலர் நண்பர்களுடன் சேர்ந்து அதிசயங்களை நிகழ்த்துகிறார்கள்.
ஒரு சிலர் திருமணம் செய்து கொண்டு,நிகழ்வதை அதிசயமாகப் பார்க்கிறார்கள்.
**********
ஒரு அழகான பெண் ஜவுளிக் கடைக்கு வந்தாள்.ஒரு துணியைத் தேர்வு செய்து அதன் விலையைக் கேட்டாள்.கடையின் உரிமையாளர் சொன்னான்,''ஒரு மீட்டருக்கு ஒரு முத்தம் விலை.''அந்தப் பெண்ணும் உடனே பத்து மீட்டர் துணி தரச் சொன்னாள்.அவனும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வேகமாக பத்து மீட்டர் துணியை அளந்து கொடுத்தான்.அதை வாங்கிக் கொண்டு அந்தப் பெண் சொன்னாள்,''இந்தத் துணிக்கான விலையை அதோ  என்னுடன் வந்திருக்கும் என் தாத்தா தருவார்.''
**********
ஆசிரியர்:1947 ல் என்ன நடந்தது?
மாணவன்:இந்தியா சுதந்திரம் அடைந்தது.
ஆசிரியர்:நன்று.1950 ல் என்ன நடந்தது?
மாணவன்:சுதந்திரம் அடைந்து மூன்று  ஆண்டு ஆகி இருந்தது.
**********

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net