அழகு என்ற சொல் தமிழுக்கு அழகு சேர்க்கும் சொல்லாகும். இயற்கை அழகு, மலை அழகு, உடல் அழகு என அழகை வர்ணித்துக்கொண்டே போகலாம். அதுபோல் மனிதர்களில் அழகு என்பது புற அழகை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. காரணம் உடலின் அகத்துள்ளே பூரிப்பு உண்டானால் அது புற அழகில் மெருகேறிவிடும். அதுபோல் அகத்துள் பாதிப்பு உண்டானால் அது முகத்தில் தெரிய வரும். இதைத்தான் நம் முன்னோர்கள் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். முக அழகையும், உடலையும் பேணி பாதுகாப்பது அவசியம். உடல்தான் மனித உயிரின் அஸ்திவாரம் ஆகும். ஒவ்வொருவரும் செயற்கை அழகை விட இயற்கை அழகை மேம்படுத்துவதே சாலச் சிறந்தது. செயற்கை அழகு சாதனப் பொருட்கள் உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடியவை, ஆனால் மூலிகை பொருட்களால் ஆன அழுகு சாதன பொருட்களே மேனியை மெருகூட்டும். வறண்ட சருமம் சிலருக்கு உடலில் ஒவ்வாமை காரணமாக சருமத்தில் பாதிப்பு உண்டாகி வறட்சி ஏற்படும். இதனால் புற அழகு குன்றி காணப்படுவார்கள். இந்த சரும வறட்சியை நீக்க பயிற்ற மாவு - 50 கிராம் மஞ்சள் தூள் - 5 கிராம் எலுமிச்சம் பழச்சாறு - 50 மிலி இவற்றை சேர்த்து நன்றாக கலக்கி சருமம் எங்கும் பூசி 10 நிமிடம் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில் குளித்து வரவேண்டும். இக்காலங்களில் குளியல் சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. மேற்கண்ட முறை வாரம் இருமுறையாவது செய்து வந்தால் வறட்சி நீங்கி சருமம் பளபளக்கும். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு வயிற்றில் விழும் கோடுகள் மறைய கருவுற்றிருக்கும்போது வயிறு பருக்கும். குழந்தை பிறந்த பின் வயிற்றில் சிலருக்கு வெள்ளையாக கோடுகள் விழும். இக்கோடுகள் மறைய கற்றாழை - 1 துண்டு சேர்த்து நன்றாக கலக்கி இரவு படுக்கைக்கு செல்லும் முன் வயிற்றில் பூசி வரவேண்டும். காலை எழுந்தவுடன் இளம் சூடான நீரில் குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் வயிற்றில் உண்டான கோடுகள் மறையும். வெயிலில் செல்லும்போது ஏற்படும் கருமை மாற வெயிலில் அலைந்து வேலை செய்யும் ஆண், பெண் இருபாலருக்கும் உடம்பில் வெயில் படும் இடங்களில் கருமை உண்டாகும். உடல் எண்ணெய் பசை போல் காணப்படும். இவர்கள் உருளைக்கிழங்கு சாறு - 1 ஸ்பூன் இவற்றை ஒன்றாக சேர்த்து குழைத்து கருமை உள்ள இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளித்து வந்தால் கருமை நீங்கும். இளநீரை முகத்தில் தடவி வந்தால் சின்னம்மையினால் உண்டான வடுக்கள் விரைவில் மறையும். முடி உதிர்தல், செம்பட்டை முடி மாற தேங்காய் எண்ணெய் - 1 லி இவற்றை கலந்து கொதிக்க வைத்து15 நாட்கள் வெயிலில் காயவைத்து தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்தல் மாறி, பொடுகு நீங்கும். கேசம் கருமையடையும். YOGANANDHAN GANESAN |
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment