Wednesday, April 2, 2014

புத்தியின் வகைகள்.

1.மண் புத்தி:(மிருத்து புத்தி)
மண் சுவரில் ஆணி அடித்தால் உடனே எடுத்து விடலாம்.அது போல கேட்ட விசயங்களை உடனே விட்டு விடுவான்.
2.மரபுத்தி:(தாருபுத்தி)
ஆனி சுலபமாக இறங்கும்.ஆனால் சுலபமாக எடுக்க முடியாது.அதுபோல கேட்ட நல்ல விசயங்களை வெளியே விடாத புத்தி.
3.கல்புத்தி:(சிலாபுத்தி)
வரிசையாகத் துளையிட்டு முதல் துளையில் உளியால் அடித்தால் கல்  பிளக்கும்.அதுபோல சொன்னால்  முழுமையாகப் புரிந்து கொள்ளக்கூடிய புத்தி.
4.மூங்கில் புத்தி:(வேணு புத்தி)
மூங்கில் கணுவின் ஒரு பக்கம் அடித்தால் மறு பக்கம் பிளந்து விடும். அது போல ஒரு விசயத்தைக் கேட்டவுடன் பின் விளைவுகளைப் புரியும்புத்தி.
5.எண்ணெய் புத்தி:(தைலபுத்தி)
தண்ணீரில் ஒருதுளி எண்ணெய் விட்டால் அது எல்லா இடத்திலும் பரவி விடும். ஒரு விஷயத்தை லேசாகச் சொன்னாலும் விபரமாகப் புரிந்து கொள்ளும்  புத்தி.
******
உலகில் ஏழு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்.
1.பயந்த குணம் உள்ளவர்கள்.
2.சஞ்சலப் படுபவர்கள்.
3.சதா கற்பனையில் மிதந்து எதார்த்தத்தைக் கோட்டை விடுபவர்கள்.
4.தனிமை உணர்வு மிக்கவர்கள்.
5.மற்றவர்களின் செல்வாக்குக்கோ,சொல்லுக்கோ உடன் படமறுப்பவர்கள்.
6.எதிலும் பற்றற்றவர்கள்.
7.மற்றவர்களின் கவலைகளைத் தம் கவலைகளாக எடுத்தப் போட்டுக் கொண்டு செயல் ஆற்றுபவர்கள்.
******

http://jeyarajanm.blogspot.com/2014/04/blog-post.html

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

4 comments:

  1. நல்லது. எளிதில் படிக்கும் படி டெம்ப்ளேட் மாற்றவும் அல்லது எழுத்துரு கலரை மாற்றவும்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. Sorry sir, nan kavanikala post pannum pothu. ipo parunga. Thanks for notification :)

      Delete
  2. //திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது//
    நீங்க சொல்லியிருக்கும் அஞ்சு புத்தியில் எது கீழே இது வருது ?

    சீக்கிரம் சொல்லுங்க.என் மர மண்டை வெடிச்சுடும் போல கீது.

    பொதுவா நான் வகுப்பிலே சொல்வேன்.

    மண் மூளை கொண்டவன் கவனிச்சான் அப்படின்னா சொல்வது உள்ளே போயிடும்.

    மர மண்டைக்கு வாத்தி கொஞ்சம் கஷ்டப்பட்டுத் தான் புரியவைக்கணும்.

    ஆனால், சிலது இரும்பு மூளை, என்னதான் கத்தினாலும் அடிச்சாலும்,
    அத்தனை அடியையும் வாங்கிக்குமே தவிர ஒன்னும் உள்ளே போகாது.

    நான் மரம்.
    அப்ப நீங்க ?

    அதெல்லாம் இருக்கட்டும்.
    சூப்பர் பதிவுங்க. திருடினா ஒன்னும் தப்பே இல்லீங்க.
    உலகத்திலே அஞ்சு விஷயங்கள் தாங்க ;அடிப்படையிலே இருக்குது.

    அதையே கலக்கி கலக்கி போடறோம்.
    இதை யாரு முன்னாடி போட்டால் என்ன ? பின்னாடி போட்டால் என்ன ?

    தொடர்ந்து திருடுங்க.

    வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  3. This is real. Thanks for this easy way.

    ReplyDelete