கணவர்கள் விற்பனைக்குக் கிடைப்பதாகத் தகவல் அறிந்த ஒரு இளம்பெண் அந்தக்
கடைக்கு விரைந்தாள்.அது ஒரு ஐந்து தளக் கட்டிடம்.ஒவ்வொரு தளமாக மேலே
செல்லச்செல்ல கணவர்களின் விலை அதிகம் என்று கூறப்பட்டது.மேலும் மேலே
சென்றால் மறுபடியும் கீழ்த் தளத்துக்கு வர முடியாது என்றும்
கூறப்பட்டது.முதல் தளத்தில் நுழையும் இடத்தில் ஒரு பலகையில்,
''இங்குள்ளவர்கள் நல்ல வேலையில் இருக்கிறார்கள்.''என்று
எழுதப்பட்டிருந்தது.அந்தப் பெண் உள்ளே செல்லாது இரண்டாம் தளத்துக்கு
சென்றாள்.அங்கு,''இங்குள்ளவர்
கள் நல்ல வேளையில் இருப்பதோடு
குழந்தைகளின் மீது பாசமாக இருப்பவர்கள்.''என்று இருந்தது.இளம்பெண் அங்கு
உள்ளே செல்லாது அடுத்த தளத்துக்கு விரைந்தாள். அங்கு,
''இங்குள்ளவர்கள்,நல்ல வேலையில் இருக்கிறார்கள்..குழந்தைகளின் மீது அன்பு
காட்டுபவர்கள்.மேலும் பார்க்க மிக அழகாக இருப்பார்கள்.''என்று
எழுதப்பட்டிருந்தது.ஆர்வமுடன் அப்பெண் நான்காம் தளத்துக்கு
சென்றாள்.அங்கு,''இங்குள்ளவர் கள் நல்ல வேளையில் இருப்பவர்கள்.
குழந்தைகளிடம் அன்பு காட்டுபவர்கள். அழகானவர்கள். மனைவிக்கு வீட்டு
வேலைகளில் உதவி செய்பவர்கள்.''என்று இருந்தது.இங்கும் உள்ளே செல்லாது
அடுத்த தளத்திற்கு அப்பெண் சென்றாள்.அங்கு,'' வணக்கம்,இங்கு
யாருமில்லை.நீங்கள் இத்தளத்திற்கு வருகை தந்த 87,65,432,வது நபர்.பெண்கள்
எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள்,என்று உறுதிப்படுத்தியமைக்கு
நன்றி.நீங்கள் வெளியே செல்லலாம்.''என்றிருந்தது.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment