Sunday, June 19, 2011

பிட்டு - 15

மாமியார் - மருமகள்என்னதான் இன்டர்நெட் யுகம் வந்தாலும் மாமியார் - மருமகள் சண்டை ஓயப் போறதில்லை. இன்டர்நெட்லேயே ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கிறாங்க. இதுக்காகவே வெப்சைட் ஓபன் பண்ணி இருக்காங்களாம்.வீட்டிலே எல்லா வசதியும் இருந்தாலும் வெறும் ஈகோ ப்ராப்ளத்தாலே, இரண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க.ஒரு மருமகப் பொண்ணு எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்தாளாம். "என்ன விசேஷம்?" னு கேட்டப்போ "மாமியாருக்கு சுகர் 400க்கு மேலே ஏறிடுச்சாம்."மாமியார் சும்மா இருப்பாங்களா ? அதுக்கு உதாரணம் இந்த விஷயம்.ஒரு மாமியார் என்கிட்டே ரொம்ப வருத்தப்பட்டு சொல்லிச்சு. "தம்பி இந்த அநியாயத்தைப் பார்த்தீங்களா ? நான் எப்பவுமே காலையிலே 6 மணிக்கெல்லாம் படுக்கையை விட்டு எந்திரிச்சிருவேன். அன்னிக்கு உடம்பு ரொம்ப அசதியா இருக்குன்னு கூட ஒரு அரைமணி நேரம் படுக்கையிலே படுத்துட்டேன். அதுக்குள்ளே மருமகள் என்னோட தலை மாட்டிலே குத்துவிளக்கை ஏத்திவச்சி. ஊதுவத்தியைப் பொருத்தி வச்சி, கால் மாட்டிலே உட்கார்ந்து அத்தே போயிட்டீங்களேன்னு அழ ஆரம்பிச்சிட்டா."எங்க வீட்டுக்கு எதிர்த்த வீட்டிலே ஒரு அற்புதமான காட்சி. மாமியாரை நாற்காலியிலே உட்கார வச்சி மருமகள் பவ்யமா நகம் வெட்டிவிட்டுக் கொண்டிருந்தாள்.அன்னைக்கு சாயந்திரம் கடைத் தெருவிலே அந்தப் பொண்ணைப் பார்த்தப்போ "என்ன மாமியார் மேலே ரொம்ப அக்கறை வந்திடுச்சா ? நகமெல்லாம் வெட்டி விடறhப்பிலே இருக்கே" அப்படின்னேன்.அதுக்கு அந்தப் பொண்ணு, "போங்க சார் பிரியமாவது ஒண்ணாவது. நாளைக்கு சண்டை வந்தா பிறாண்டி விட்டிரும். அதுக்காகத்தான் வெட்டினேன்" என்றாள்.வீட்டுக்கு முன்னாடி மாமியாரோட உருவத்தை அச்சா பெரிய கோலமா ஒரு பொண்ணு போட்டுகிட்டிருந்தாள். போகிற வருகிறவங்களெல்லாம் இதைப் பார்த்து, "மாமியார் மேலே இவ்வளவு பிரியமா கோலமெல்லாம் போடுறியே" ன்னாங்க. அதுக்கு அந்தப் பொண்ணு, "ஆசையாவது, மண்ணாவது, போற வர்றவங்க எல்லாம் நல்லா மிதிச்சிட்டு போகட்டும்னுதான் போட்டேன்" என்றாள்.அன்னிக்கு ஒருநாள், ஒரு மருமகள் சாயந்திரம் டிபனுக்கு கடாமுடான்னு சீடை, முறுக்கா பண்ணி வச்சிருந்தாள். "என்னடி இன்னிக்கு சீடை, முறுக்கா பண்ணியிருக்கே"ன்னு புருஷன் காரன் கேட்டான். அதுக்கு அவள். "உங்களுக்கு விஷயம் தெரியாதா ? உங்க அம்மாவுக்கு மிச்சமிருந்த பல்லெல்லாம் விழுந்திருச்சி" ன்னாள்.மாமியாரும் விடலை. சீடை, முறுக்கை எடுத்து வெற்றிலை உரல்லே போட்டு இடிச்சி மென்னு காட்டிச்சு. இப்படி ஒரு மௌனப் போராட்டம் தேவையா ?ஒரு விநோதமான விஷயத்தை கேக்கலாமா ?"அதெப்படி மாமியாரையும், மருமகளையும் ஒரே சமயத்திலே தேள் கொட்டுச்சி ?""மாமியாரைத் தேள் கொட்டியதும் மருமகள் சபாஷ்னு சொல்லி தேளைத் தடவிக் கொடுத்தாளாம். அவளையும் பொட்டுன்னு போட்டிருச்சி.""பேய் வந்தா நாய்க்குத் தெரியுமாம். நம்ம வீட்டு நாய் குரைக்குது பார்த்தீங்களா"-ன்னு ஒருத்தி சொன்னப்போ, புருஷன் சொன்னான். "நம்ம வீட்டுக்கு ஏண்டி பேய் வரப் போவுது ?" அதுக்கு அவ விடலை. "கரெக்ட் அதோ உங்க அம்மாதான் வந்துக்கிட்டு இருக்காங்களே" என்றாள்.காலையிலே ஒரு வீட்டிலே புருஷன், "ஏண்டி நீண்ட நாட்கள் வாழ்வது எப்படின்னு ஒரு புத்தகம் வாங்கிட்டு வந்தேனே அதை எங்கே எடுத்து வச்சே" ன்னு கேட்டான். அதுக்கு அவன் மனைவி, "நாளைக்கு உங்க அம்மா ஊரிலே இருந்து வர்றhங்க. அவங்க எடுத்து படிச்சிடக் கூடாதேன்னு அடுப்பிலே போட்டு எரிச்சிட்டேங்க" என்று பதில் சொன்னாளாம்."என்னடி நான் பத்து தடவை மிதிச்சும் ஸ்டார்ட் ஆகாத வண்டி நீ ஒரே மிதி மிதிச்சதும் ஸ்டார்ட் ஆயிருச்சே எப்படி?" ன்னு புருஷன் கேட்டான். "அது ஒண்ணும் பெரிய வித்தை இல்லை. உங்க அம்மாவை நினைச்சுக்கிட்டு ஓங்கி மிதிச்சேன்."ஒரு அம்மா இன்னொரு பொண்ணுகிட்டே "உங்க மாமியாருக்கு சீரியஸ்னு ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணுனீங்களே, என்ன ஆச்சு?" ன்னாங்க. "ப்ச்சு, ஒண்ணும் ஆகலை" ன்னு சலிப்போட பதில் சொன்னாள்."மருமகப் பொண்ணே நீ கொடுத்த மர்ம நாவலை ஒரு தடவை படிச்சேன். பாதி உயிர் போயிருச்சுடி.""அப்படின்னா இன்னொரு தடவை படிச்சிருங்க அத்தை" - இது மருமகள்.ஒருத்தன் தன் மனைவிகிட்டே, " இறந்து போன எங்கம்மா நேத்து என் கனவிலே வந்தாங்க" அப்படின்னு கண்கலங்கச் சொன்னான். உடனே அவன் மனைவி, "அடடா என்னை எழுப்பியிருக்கக் கூடாது, நல்லா சண்டை போட்டிருப்பேனே" என்றாள்.நம்ம பெண்களுக்கு இங்கே மட்டுமில்லை, வெளிநாட்டுக்குப் போனாலும் இந்த மனோபாவம் மாறுவதில்லை.கொடுமைப்படுத்துற மாமியாரைப் பழிவாங்குறதுக்கு சந்தர்ப்பத்தை மருமகள் எதிர் பார்த்துக்கிட்டு இருந்தாள். அமெரிக்காவுக்கு வரவழைச்சு தன்னோட தமிழ்நாட்டு மாமியார் கிட்டே இங்கிலீஷ்லேயே பேசிக்கிட்டு இருந்தா. அது புரியாம அந்தம்மா அலங்க மலங்க விழிச்சிகிட்டு இருந்தது.ஒருநாள் எலி ஓடறதைப் பார்த்ததும் மாமியார்காரம்மா "ஐயய்யோ நம்ம வீட்டிலே எலி ரொம்ப இருக்கும் போலிருக்கே" அப்படின்னுது. உடனே மருமகள் "ரியலி!" அப்படின்னாள். "அந்த எலியெல்லாம் இல்லைம்மா. எல்லாம் சுண்டெலிதான்" என்றது மாமியார் அப்பாவியாக.மருமகளை மட்டம் தட்டறதுன்னா மாமியாருக்கு அல்வா சாப்பிடற மாதிரி. ஒரு நாள் மகன் கிட்டே, "ஒம் பொண்டாட்டிக்கு காது கேக்கிற மிஷின் வாங்கிக் கொடுடா. வர வர சரியா காது கேட்க மாட்டேங்குது. சண்டை போட்டா ரெஸ்பான்ஸே இல்லை" அப்படின்னுதாம்.இது கூட பரவாயில்லை. "சட்டு புட்டுன்னு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோடா. இவகிட்டே சண்டை போட்டு அலுத்துப் போச்சு" அப்படின்னுதாம்.ஒரு அம்மா இன்னொரு அம்மா கிட்டே, "அதோ போறா பாரு அந்தப் பொண்ணு இருக்கே அடங்காப்பிடாரி. ஆனா அவ மாமியார் தங்கமானவங்க" அப்படின்னாளாம்." அந்த மாமியார் யாரு?" கேட்டுதாம். "நான்தான்" னாங்க இந்தம்மா. இவங்களை நல்லவங்கன்னு இவங்களைத் தவிர யார் சொல்லப்போறா?மருமககூட எதுக்குத்தான் போட்டி போடறதுன்னு இல்லாமப் போச்சு. அவ ரெட்டை சடை போட்டிருக்காங்கறதினாலே இதுவும் இத்துனூண்டு முடியிலே ரெட்டை சடை போட்டுக்கிட்டு அலையுதாம்.தன் மகளை இன்னொரு இடத்திலே கட்டிக் கொடுத்திருக்கிற தாய் அவ கண் கலங்காம இருக்கணும்னு நினைக்கிறவ, தன்னை நம்பி வந்திருக்கிற மருமகளையும் அதைப் போலவே நடத்தலாமே. மருமகளும் தன் தாயைப் போலவே மாமியாரை நேசிக்கலாமே அப்போது இல்லறம் என்பது அமைதிப் பூங்காவாகத் திகழுமே.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment