Tuesday, April 19, 2011

பொன்னாங்கண்ணி

தினமும் இந்த கீரையை தினந்தோறும் உண்டு வாழ்வோருக்கு உடல் பொன்போல பளபளப்பாகும் என்பர். புரதம், இரும்பு, சுண்ணாம்பு சத்துக்கள் வைட்டமின் சீயும் நிறைந்த இந்தக் கீரை குளிர்ச்சி தரக் கூடியது. பத்தியக் கீரை இது. உடல் உஷ்ணத்தைத் தணித்து உடலுக்கு பலம் தரவல்ல இந்தக் கீரை சொறி சிரங்குகளை போக்கி மேனியின் அழகைக் கூட்டும். கண்கள் சம்பந்தமான நோய்கள் அனைத்தையும் போக்கி நல்ல பார்வையைத் தரவல்லது இது, மூல நோய், மண்ணீரல் பாதிப்புகள் போக்கும் தன்மை இதற்கு உண்டு.

பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி என்றும், நாட்டுப் பொன்னாங்கண்ணி எனவும் இரு வகை உண்டு. வைட்டமின் ஏ செறிந்த இந்தக் கீரை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் நல்ல பளிச்சென்ற பார்வை கிடைக்கும்.

பொன்னாங்கண்ணிக் கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம்- போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சிப் பெறும். சத்து மிகுந்த நாட்டுப் பொன்னாங்கண்ணிதான் மருத்துவத்திற்குப் பயன்படுவது, பலன் பல கொடுத்து, பலவித நோய்களையும் தீர்க்கும் இந்த கீரையை பகலில் உண்பதுதான் நலன் தரும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment