Wednesday, December 29, 2010

என்றும் உன் நினைவுகளோடு



 என்றும் உன் நினைவுகளோடு

 என் உயிரே ...!
உன் நினைவுகளோடு
உறைந்துகொள்கிறேன்
உனக்காக .........!

எரிந்துகொள்ளும் தீயில்
எரிவதாக ........
உணர்கிறேனடா
அந்நேரங்களில் ...!

கருகிப் போவதற்கு
சருகல்ல காதலனே....!
நம் காதல் ..!
இது .......
கலியுகத்திலும் வாழும்
காதல் காவியமடா..!

காலம் பிரித்ததாக....
கலங்காதே காதலா...!
பிரிவுகளில் தானடா...
உறவுகளின்
ஆழம் புரியும் ...!

ஆழக்கடல் கடந்த
நீள நினைவுகள் எல்லாம்....
கனவுக்குள் வந்து
மீளவும் உன்னோடு.....
பாலம் அமைக்குதடா..!

என் ஆசைக் காதலனே..!
உன் தலையணை
அருகே தானா................
என் நினைவுகளைப்
புதைத்து வைத்திருக்கிறாய் ...!

உன் நினைவுகளோடு
நிதமும் இருப்பதால் .......
நித்திரை கொள்வதில்
இல்லையடா......
எனக்கு நிம்மதி .!

உன் நினைவுவலி வந்து
என் நெஞ்சில்முள்ளாய்
தைக்கலாம்..கண்ணே ....!.
வலிகளிலும்........
ஒரு சுகம் இதுதானடா..!

உணவுகளில் விருப்பமற்று
கண்ணீரில் தினம் குளித்து
கண்ணே .....நீ
இருந்துவிடாதே ....!
உயிர்வாழ வேண்டுமடா ...
நம் காதல்...!

எந்நேரமும் .......
உன் மீது தானடா....
என் ஞாபக அலைகள் ....!
அது ...
தேசம் கடந்து வீசுமடா ..
தேனிலவு உனைப் பார்க்க ...!

உன் உயிர் சுமந்த
காற்று வந்து ...
என் உணர்வுகளில்
தீக்குளிக்க ......

மீண்டும் உன் முதல்பார்வை
ஆண்டு பல கழிந்து
அள்ளி முத்தமிட ....
அணைத்துக் கொள்கிறேன்
உன் நினைவுகளை....!! 



காதல், சொந்தம், நட்பு.

இருந்தால் வருவேன் என்றது காதல்
பணம் இருந்தல் வருவேன் என்றது சொந்தம்
எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன்
என்றது நட்பு  ...

............................................................

நீ இருக்கிறாய் 

காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!

............................................................ 

 காதலும் சுமையா? 

நினைவுகளில் நெஞ்சம் சுழல்கிறதே
ஒரு நொடியில்
விழிகளில் அடை மழையே.
முகம் பார்த்த கண்கள்,
உந்தன் முகம் தேடுதே..
முடியாமல் இதயமதிலே
கானல் வரி பாடுதே.
பிரிவேதுமில்லாமல் காதல்
உணர்வேது நெஞ்சமே..

பார்கின்ற பொழுதுகளில்
எந்தன் மனம் தான் தடுமாறவில்லை.
பழகிய நாட்களுமே..
உடன் கரை தான் சேரவில்லை..
மனம் கொண்ட வலிகள் அதிலே
சொல் இறகாகினாய்.
மனம் உலர்கின்ற வார்தைக்கும்
மொழி சூடி உறவானாய்
வலிகளை நினைத்தால் காதலும் சுமையா?

............................................................ 

  உன் மௌனத்தில் அடக்கி விடுகிறாய்..

வார்த்தைகளில்
அடக்க முடியாத
என் வாழ்க்கையினை
உன் மௌனத்தில்
அடக்கி விடுகிறாய் ......
............................................................

  தோல்வி

தோல்வி எனக்கு புதிதல்ல
அதனாலதான் அவனை
மறக்க வேண்டும்
என்று நினைக்கும் போது - கூட
என் மனதோடு போராடி தோற்று போகிறேன் 

............................................................

ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாய் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம் பெருமை
ஒத்தவரி சொல்லலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாயப்பத்தி
எழுதி என்ன லாபமின்னு
எழுதாமப் போனேனே!

                                
-வைரமுத்து



அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment