Friday, December 24, 2010

பருக்கள் மறைய

இயற்கை அழகே அழகு.  சிலர் முகப் பொலிவு பெற வேண்டும் என்று ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை  பயன் படுத்துவதால் இயற்கையான அழகு மாறி பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இக்கால கட்டத்தில் இயற்கை மூலிகை களால் ஆன அழகு சாதனப் பொருட்களைப் பயன் படுத்தி முகப் பொலிவினைப் பெறலாம்.

சோற்றுக்கற்றாழைச் சாறு எடுத்து அதில் கார்போக அரிசி, வெந்தயம் இரண்டையும் சேர்த்து ஊறவைத்து, ஒருமணி நேரம் கழித்து நன்கு மைபோல் அரைத்து முகத்தில் பூசி அது காய்ந்த பின் சுத்தமான நீரினைக் கொண்டு முகம் கழுவி வந்தால், முகம் பொலிவு பெறும்.

பருக்கள் மறைய

பொதுவாக பருக்கள் எண்ணெய் பதார்த்தங்களை உண்பதால் ஏற்படுகிறது.  மேலும் உடலில் உள்ள கொழுப்புப் பொருட்களாலும், மன இறுக்கம், மலச்சிக்கல் இவற்றாலும் உண்டாகிறது.  உணவுமுறை மாறு பாட்டாலும் முகப்பரு தோன்றும்.

முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெற, முட்டையின் வெள்ளைக் கருவினை எடுத்து அதில் அரை ஸ்பூன்  பயிற்றமாவு கலந்து முகத்தில் தடவவும்.  அது காய்ந்தபின் முகத்தைப்  பால் கொண்டு கழுவி பின் நீரால் சுத்தம் செய்யவும்.  இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் பருக்கள் மறையும்.

செம்பருத்திப் பூ
ரோஜா மொட்டு
வெள்ளரிக்காய்  சாறு

இவற்றை எடுத்து ஒன்றாகச் சேர்த்து நீர்விடாமல் அரைத்து அதனுடன் பச்சை பயறு மாவு கலந்து குழைத்து முகத்திலும் கழுத்துப் பகுதியிலும் பூசி காய்ந்த பின் கழுவி வந்தால் கண்களைச் சுற்றிய கருவளையம், முகக்கருமை, முகப்பரு, கழுத்துப்பகுதி கருப்பு, முகத்தில் உண்டான தழும்புகள், மூக்கில் ஏற்படும் கருப்பு  போன்றவை நீங்கும்.

பேன் பொடுகு மாற

வேப்பிலை, மருதோன்றி இலை, இரண்டையும் எடுத்து அதனுடன் சிறு துண்டு வசம்பு சேர்த்து மை போல் அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால்,  பேன், பொடுகு  நீங்கும்.  முடி உதிர்வது குறையும்.  புழுவெட்டு நீங்கும்.

உடல் நாற்றம் நீங்க

வெட்டிவேர், காய்ந்த ரோஜா இதழ், எலுமிச்சைப் பழத்தோல் ஆகியவற்றை மெல்லிய துணியில் கட்டி தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடல் நறுமணம் உண்டாகும்.  நாற்றம் நீங்கும்.  உணவில் காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் சேர்த்துக்கொண்டால் உடல் நாற்றம் ஏற்படாது.

காய்ந்த எலுமிச்சம் பழத்தோலை பொடிசெய்து  அதனுடன் காய்ந்த ரோஜா இதழ் பொடி, வெட்டி வேர் (ராமிச்சம்) பொடி,  இவைகளை சம அளவு எடுத்து இவற்றுடன் சிறிது சந்தனத் தூள் சேர்த்து நீரில் குழைத்து முகம் மற்றும் உடலெங்கும் பூசி குளித்து வந்தால், பித்தம் தணிந்து, பித்தச்சூடு குறைந்து வியர்வை நாற்றம் நீங்கும்.



http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 



courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment