படைவீரர்களின் காலை பெரேடுக்கு எட்டு பேர் சரியான நேரத்துக்கு வரவில்லை.பத்து நிமிட தாமதத்தில் ஒருவன் வந்தான்.தாமதத்திற்கான காரணத்தை அதிகாரி கேட்க அவன் சொன்னா,''என் தாயாருக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனதால் அவரைப் பார்த்து விட்டு வந்ததில் சிறிது தாமதமாயிற்று.பின்னர் நான் வந்த பேருந்து வழியில் ரிப்பேர் ஆகி விட்டது.எனவே ஒரு குதிரையை வாடகைக்கு பிடித்து வந்தேன்.வரும் வழியில் திடீரென குதிரை கீழே விழுந்து இறந்து விட்டது.எனவே எஞ்சிய பத்து கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே வந்தேன்.அதனால் சற்று தாமதமாகி விட்டது,''அதிகாரி அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டு அவனை அனுமதித்தார்.அடுத்து இரண்டாவது ஒருவன் வந்தான்.இவனும் முதலாமவன் சொன்னது போலவே சொன்னான்.அரைகுறை மனதோடு அவனும் அனுமதிக்கப் பட்டான்.பின்னர் வந்த ஐந்து பேர் அதே காரணத்தை சொல்ல அதிகாரி ஏற்றுக் கொள்ளாமல் அவர்களை நிறுத்தி வைத்தார்.அப்போது எட்டாவது ஆளும் வந்து,''சார், உடல் நலமில்லாத தாயாரைப் பார்க்கப் போயிருந்தேன்பெருந்து ரிப்பேர் ஆகி விட்டது.எனவே ஒரு டாக்சியை பிடித்து வந்தேன்.''என்று ஆரம்பித்தான்.உடனே அதிகாரி,''நிறுத்து.அடுத்து டாக்சி ரிப்பேர் ஆகி விட்டது என்று சொல்லப் போகிறாய்.அப்படித்தானே?''அந்த ஆள் சொன்னான்,''இல்லை சார்,டாக்சி ரிப்பேர் ஆகவில்லை.வரும் வழியில் ஏழு குதிரைகள் ஒரே இடத்தில் இறந்து கிடந்ததால் அதைத் தாண்டி வரமுடிய வில்லை.எனவே அங்கிருந்து நடந்தே வந்தேன்.'' YOGANANDHAN GANESAN |
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment