Tuesday, November 16, 2010

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.

1. இந்த sales repலாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க...???

2. எல்லா டிவி சானல்லயும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்டுறுக்காங்க ? (பெரிய கொடுமை என்னனா... ஆபிசில எங்க bossஅ பர்த்தா எனக்கு ரோபோ சங்கர் நெனப்பு வந்து சிரிச்சிர்றேன்...)

3. டெலிபோன்ல நம்பர்கள் மேலிருந்து கீழ இருக்கு கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழிருந்து மேல இருக்கு???

4. மூக்கிலிருந்தும் வாயில்லிருந்தும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா?? (அத உடனே எல்லாரும் ஏன் செஞ்சு பார்க்குறாங்க?)

5. flightlaயோ இல்லை நம்ம ரேஞ்சுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிழைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா?? (நாம தான் ஊருக்கு போய்ச்சேரலையே?? )

6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்?

7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா???

8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே... பரிசுனாலே அது இலவசம் தானே.... இல்லயா??

9. Numberஐ ஏன் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம்?? Numberல Oங்கர எழுத்தே இல்லையே???

10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை?

11. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு போலீஸ் போகிறதே... அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?

12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??

13. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றாங்களே... நாய் என்னைக்கு வேலை செய்திருக்கு... ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்... இல்லையா???

14. கண்ணு பெருசா இருக்குறவங்களுக்கு கண்ணு சிரியதாக இருப்பவர்களை விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???



--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment