ஒரு நாடோடி ஒரு கிராமத்தை நோக்கி செல்கையில் பசி எடுத்ததால் சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.அப்போது அந்த வழியே ஒரு சுல்தான் குதிரையில் வந்து கொண்டிருந்தான்.சுல்தான் இவனைப் பார்த்து,''இப்படி நாடோடியாகத் திரிகிறாயே?சாப்பாட்டுக்கு என்ன செய்வாய்?''என்று கேட்டார்.அதற்கு நாடோடி,''நான் நினைத்தால் எதையும் செய்வேன்,''என்றான்.சுல்தான்,'' என்னப்பா,ஒரு நாட்டிற்கே அதிபதியான எனக்கே நான் நினைத்ததைஎல்லாம் செய்ய முடியாது.ஒரு நாடோடியாகிய நீ எல்லாம் முடியும் என்கிறாயே?''என்று வியப்புடன் கேட்டார்.நாடோடி சொன்னான்,''உங்களால் முடியாது.ஆனால் என்னால் முடியும்.''உடனே சுல்தான் ,''எங்கே என்னைக் குதிரையிலிருந்து இறங்க வை பார்ப்போம்,''என்று சவால் விட்டார்.அதற்கு அவன்,''அய்யா,உங்களைப் போன்ற சுல்தானைக் குதிரையிலிருந்து இறங்க வைக்க முடியாது.ஆனால் நீங்கள் குதிரையிலிருந்து இறங்கினால்,அடுத்த நிமிடமே உங்களைக் குதிரையில் திரும்ப ஏற வைக்க முடியும்,''என்றான்.உடனே சுல்தானும் கீழே இறங்கினார்.உடனே நாடோடி,''இதோ,நான் சொன்ன உடனே இறங்கி விட்டர்கள்,பார்த்தீர்களா?''என்றான்.சுல்தானுக்கக் கோபம் வந்து விட்டது.''நீ சரியான் ஏமாற்றுப் பேர்வழி,''என்று கூறிக் கொண்டே மீண்டும் குதைரை மீது ஏறி கிளம்பினார்.அவன் சொன்னான்,''பார்த்தீர்களா?நான் சொன்னது போல நீங்கள் குதிரையிலிருந்து இறங்கிய உடனே திரும்பவும் ஏற வைத்து விட்டேன்.''என்றான்.சுல்தான்,அந்த நாடோடி தன்னை முட்டாளாக்கி விட்டான் என்பதை உணர்ந்தாலும் அவனுடைய சாமர்த்தயத்தை மெச்சி ஒரு தங்கக் காசினைக் கொடுத்துவிட்டு சென்றார்.நாடோடிக்கு இப்போதைக்கு சாப்பாட்டுப் பிரச்சினை தீர்ந்தது.
YOGANANDHAN GANESAN
|
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment