Friday, October 15, 2010

படித்ததில் பிடித்தது - சுட்ட கவிதைகள்


மாயாவியின் கவிதைகள்

பெளர்ணமி கிறுக்கன்

நான் கண்ட பவுர்ணமிகள்
என் வாழ்வில் மொத்தம் இரண்டு 
வானத்து நிலவாய் போய்விட்டவளின் 
பூப்பெய்திய நாளில் அவளுடன்
சேர்ந்து குச்சிகட்டியநாளொன்று...
வாகனம் அடித்துப்போட்ட
அனாதை பிணமாய்
வானம் பார்த்து 
சாலையிலொருநாள்...

ஓவியன்

அழகான மலைகளுக்கு நடுவே
பறக்கும் பறவை பறக்காத மேகம்
விழுதுகளுடைய அகண்ட மரம் 
அதன் கிளைகளும் , இலைகளும்
அதனோடு இணைந்த புற்களுமாய்
ஒரு மரத்தின் இயற்கை வனப்பை
வரையத்தெரிந்த எனக்கு
அதனருகே ஓடும் நதியின்
மூலமும் முடிவும்
வரையத்தெரிந்திருக்கவில்லை...



ஈயடிச்சான் காப்பி...

நான் 
சொல்வதெல்லாம் இந்த 
பொம்மை கேட்கமாட்டேன்னுது
என்று சொல்லி கடை வீதியில் 
வாங்கித்தந்த பொம்மையின்
கன்னத்தில் பளாரென்று
அறைந்த மகனைச் 
சொல்லியும் குற்றமில்லை...

ஊடலிரவு...

இருள் வண்ணமாகிய
என்னுடன் இருளின்
போர்வை போர்த்தி
தூங்கியவளின் முகத்தில்
அதிகாலையில் 
பட்ட பகல் சூரியன்
போர்வை போர்த்தியது...

காரணி...

மெத்தையின் கீழ் ஒரு வாள்,
பிடிப்பான் கழட்டிவிடப்பட்டு
என் தலைக்கு மேல் சுற்றும் மின்விசிறி,
நடக்கும் பொழுது வழுக்கி விழுந்து 
பின் மண்டை பிடறித்தெறிக்கும் 
வண்ணம் தரையிலூற்றிய எண்ணெய்,
கடுக்காத கடுங்காப்பியில்
ஊற்றிய பூச்சி மருந்து
இவையெதுவும் பயனளிக்காத
நிலையில் கடைசியாய் 
உன் முத்தம்...

கனவுகள் சுமந்த நிஜம்..

ஆயிரம் கனவுகள் சுமந்து
உன் வீட்டிற்க்கு
மனைவியாய் வரும்
என் கனவுகள் கலைந்தாலும்
நிஜமொன்று கனவாகாத
நாட்களில்
கனவுகள் நிஜமாவது
எவ்வாறு சாத்தியமென்று கேட்கும்
உனக்கு நான் கணவனாய்
கனவுகள் சுமந்த நிஜமொன்று
தருகிறேன் வா...



--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment