Monday, December 7, 2009

என்ன வேண்டும்?

ஒரு பஞ்சப் பரதேசி.துறவி.சொத்து சுகம் ஏதுமற்ற ஞானி.குளிர் காலத்தில் வெயில் காய்வதற்காக ஆற்று மணலில் துண்டை விரித்துப் படுத்திருந்தார்.
உலகையே வெல்லப் புறப்பட்ட மகா அலெக்சாண்டர் அவர் அருகிலே வந்தார்.ஞானி அவரைக் கவனிக்க வில்லை.கால் மேல் கால் போட்டபடி சூரிய வெப்பத்தில் குளித்துக் கொண்டிருந்தார்.
''நான் அலெக்சாண்டர் வந்திருக்கிறேன்,''என்றார் அவர்.
அப்படியாவென சாதாரணமாகக் கேட்டார் ஞானி.
''ஏ ஞானியே!உனக்கு என்ன வேண்டும்?கேள்;நான் தருகிறேன்.''என்றார் அலெக்சாண்டர்.
''எனக்கு ஒரே ஒரு உதவி வேண்டும்,''என்றார் ஞானி.
''என்ன வேண்டும்?பொன் வேண்டுமா,பொருள் வேண்டுமா,மாளிகை வேண்டுமா?''என்று கேட்டார் அலெக்சாண்டர்.
''அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்.நீகொஞ்சம் தள்ளி விலகி நிற்க வேண்டும்.உன் நிழல் வெயிலை மறைக்கிறது.''என்றார் ஞானி.
அலெக்சாண்டரின் ஆணவத்தை ஞானியின் ஆணவம் தோற்கடித்தது.காரணம்,ஞானிக்குத் தேவை என்று எதுவும் இல்லை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment