Wednesday, June 22, 2011

பிட்டு - 48

ஒரு தபால் அலுவலகத்தில் ஒருத்தன் வேலை பார்த்துக்கிட்டிருந்தான். விலாசம் சரியா எழுதப்படாத மடல்களை ஆராய்ஞ்சு சரியான இடத்துக்கு அனுப்புறது தான் அவனோட வேலை.ஒரு நாள் கடவுளுக்கு என்று விலாசமிடப்பட்டு சீரில்லாத கையெழுத்தில் ஒரு மடல் வந்தது. அந்த மடலைத் திறந்து பாத்து உள்ளே என்ன தான் எழுதியிருக்குன்னு பார்க்கலாமேன்னு நினைச்சான்.அந்த கடிதத்தில் என்ன எழுதியிருந்ததுன்னா:நான் 83 வயதுள்ள வயசான விதவை. எனக்குக் கிடைக்கிற சொற்ப பென்ஷனில் தான் நால் காலத்தை ஓட்டுறேன். நேத்து என் பர்ஸை யாரோ திருடிட்டாங்க. அதில் 100 டாலர் இருந்தது. அந்தப் பணத்தை வச்சுத்தான் இனி அடுத்த பென்ஷன் வருகிற வரைக்கும் பொழுதை ஓட்டணும்.அடுத்த ஞாயிற்றுக்கிழமை கிரிஸ்த்மஸ். அதுக்கு என்னுடைய இரண்டு தோழிகளை டின்னருக்கு வரச் சொல்லியிருக்கேன். பணமே இல்லாம இப்போ நான் என்ன பண்ணுவேன். எப்படி போய் சாப்பாட்டுக்கு பொருள் வாங்குவேன். எனக்குன்னு யாருமே இல்லை. கடவுளே, நீ மட்டும் தான் எனக்கு இருக்கிற ஒரே நம்பிக்கை.எனக்கு எப்படியாவது உதவி செய்.இப்படிக்கு,உனது தீவிர பக்தைஎட்னாஇதைப் படிச்ச அந்த தபால் ஊழியருக்கு ரொம்ப இரக்கம் வந்திருச்சு. அந்த கடிதத்தை எல்லாருக்கும் வாசிச்சுக் காம்பிச்சாரு. அங்கே இருந்த எல்லாரும் தங்களது பர்ஸில் இருந்து கொஞ்சம் டாலர் எடுத்துக் குடுத்தாங்க. முழுசா ஒரு ரவுண்டு அடிச்சு வரும்போது, 96 டாலர் சேர்ந்துடுச்சு. அதை ஒரு கவர்ல வச்சு அந்த மூதாட்டிக்கே அனுப்பீட்டாங்க. ”இந்தப் பணம் எட்னா கையில் கிடைச்சா எப்படியும் கிரிஸ்த்மஸை நல்லாக் கொண்டாடிவாங்க” நினைச்சு, அன்னிக்கு முழு நாளும் அந்த ஊழியர்களுக்கு ரொம்ப திருப்தியா இருந்துச்சு.கிரிஸ்துமஸும் வந்தது. போனது.சில நாட்கள் கழிச்சு, அதே வயசான மூதாட்டி கிட்டே இருந்து இன்னொரு கடிதம் கடவுளுக்கு விலாசமிட்டு வந்துச்சு. அந்த கடிதத்தை நம்மாளு உடைக்கும் போது எல்லா ஊழியர்களும் அங்கே கூடிட்டாங்க.இப்போ அந்தக் கடித்ததில் என்ன எழுதியிருந்தாங்கன்னா:அன்புள்ள கடவுளுக்கு,நீ எனக்குச் செய்த இந்த உதவிக்கு நான் உனக்கு எப்படி நன்றி சொல்வேன்?உன்னுடைய அன்பான பரிசால் நான் என் தோழிகளுக்கு ஒரு பிரமாதமான டின்னர் கொடுத்தேன்.அன்றைய நாள் மிகவும் அருமையான நாளா இருந்துச்சு. நீ கொடுத்த பரிசைப் பற்றி நான் என் நண்பர்களுக்கெல்லாம் சொன்னேன்.இருந்தாலும் ஒரு சின்னப் பிரச்சினை.நான் 100 டாலர் கேட்டிருந்தேன். 96 தான் குடுத்தீங்க. இதில 4 டாலர் மிஸ்ஸிங்.இது அந்த போஸ்ட் ஆஃபீஸில் இருக்கிற அந்த வீணாப் போனவங்க தான் உருவியிருப்பாங்கன்னு நினைக்கேன்.=========================எனக்கு வந்த ஆங்கில மடலை கஷ்டப்பட்டு தமிழாக்கம் பண்ணி, தட்டச்சு செஞ்சு அனுப்பியிருக்கேன்.மரியாதையா சிரிச்சிருங்க.இல்லே. நடக்கிறதே வேற.ஆமா. சொல்லிப்புட்டேன்.==========================மூலம்:There was a man who worked for the Post OfficeWhose job was to process all the mail that had illegible addresses.One day, a letter came addressed in a shaky handwriting to God with no actual address.He thought he should open it to see what it was about.The letter read:Dear God,I am an 83 year old widow, living on a very small pension.Yesterday someone stole my purse.It had $100 in it, which was all the money I had until my next pension payment.Next Sunday is Christmas, and I had invited two of my friends over for dinner.Without that money, I have nothing to buy food with,Have no family to turn to,And you are my only hope.Can you please help me?Sincerely,EdnaThe postal worker was touched.He showed the letter to all the other workers.Each one dug into his or her wallet and came up with a few dollars.By the time he made the rounds, he had collected $96,Which they put into an envelope and sent to the woman.The rest of the day, all the workers felt a warm glowThinking of Edna and the dinner she would be able to share with her friends.Christmas came and went.A few days later, another letter came from the same old lady to God.All the workers gathered around while the letter was opened.It read:Dear God,How can I ever thank you enough for what you did for me?Because of your gift of love, I was able to fix a glorious dinner for my friends.We had a very nice day and I told my friends of your wonderful gift.By the way, there was $4 missing.I think it might have been those bastards at the post office.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

1 comment:

  1. கொஞ்சம் கொஞ்சமா பொடுங்க எல்லோரும் படிக்க வாய்ப்பு ஏற்ப்படும்.. ஒரே நாள் இவ்வளவு பதிவா...

    ReplyDelete