Tuesday, July 12, 2011

பொன்மொழிகள்-19

வயது செல்லச்செல்ல தோல் சுருங்கி விடுகிறது.-ஆனால்
மகிழ்ச்சியை விட்டுவிட்டால் வாழ்வே சுருங்கிவிடும்.
**********
சதா தள்ளாடுவதைவிட ஒருமுறை விழுந்து எழுவது சிலாக்கியம்.
**********
நாள் என்பது இரவையும் சேர்த்துத்தான்.
பூ என்பது காயையும் சேர்த்துத்தான்.
கடல் என்பது நுரைகளையும் சேர்த்துத்தான்.
வாழ்க்கை என்பது ரணங்களையும் சேர்த்துத்தான்.
**********
மீனுக்குக்கூடத் தொல்லை வராது-அதுதன்
வாயை மூடிக் கொண்டிருந்தால்.
**********
சின்னக் கவலைகள் என்பது கொசு போல:
ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தால் அது பறந்து ஓடிவிடும்.
**********
மனிதர்களில் இரண்டு வகையினர் மட்டுமே உண்டு.
ஒன்று திறமையானவர்கள்.
இரண்டு,திறமையைப் பயன்படுத்தாதவர்கள்.
**********
முகத்தை அழகாக வைத்துக்கொள்ள
செலவில்லாத ஒப்பனை புன்னகை.
**********
ஆசைப்படுவது மனம்.
ஆசைப்பட வைப்பது புத்தி.
அவதிப்படுவதோ உடல்.
**********
உன் கௌரவம் உன் நாக்கின் நுனியில் உள்ளது.
**********
இவ்வளவு நீண்ட வாழ்வில் ஒரே ஒரு முறைதான் சாகிறோம்.
**********
கோபத்தில் ஆரம்பமாவது எல்லாம்
இறுதியில் வெட்கப்படும்படி முடியும்.
**********
ஆபத்து பயத்தையும்,பயம் அதைவிடப் பெரிய ஆபத்தையும் தருகிறது.
**********
வயதானவர்கள் கவலைப்படுவதெல்லாம்,தங்களுக்கு வயதாகி விட்டதே என்பதல்ல:மற்றவர்கள் இளமையாக இருக்கிறார்களே என்றுதான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Wednesday, June 22, 2011

பிட்டு - 80

1. உங்க நாய்க்கு ஏன் மூக்கு கண்ணாடி போட்டு விட்டிருக்கீங்க ?பார்வை மங்கிட்டதாலே ஒரு வாட்டி என்னையே கடிச்சிருச்சு.==========2. ஏன் நிச்சயதார்த்தத்தை பாத்ரூம்ல வைச்சிக்கலாம்னு சொல்றீங்க .. .. ?பொண்ணைப் பாடச் சொல்வீங்க .. .. பொண்ணுக்கு பாத்ரூம்ல தான் பாட வரும் அதுதான்.==========3. உன் பையனுக்கு ஏன் ரொம்ப குண்டா பெண் பார்க்கறே ?அவளைத் தலையில தூக்கி வெச்சுக்கிட்டு ஆட முடியாது பாரு.==========4. ஏன் ... உன் வீட்டுக்காரர் புடவையெல்லாம் போட்டுட்டுப் பாத்திரம் வாங்கிக்கோனு சொல்றாரு .. ..?புடவையைத் தோய்க்கறதைவிட, பாத்திரம் தேய்க்கறது அவருக்கு ரொம்ப சுலபமா இருக்காம்.==========5. டாக்டர் கல்யாணமாகி எட்டு வருஷமாகியும் என் மனைவி வயத்துல ஒரு புழு பூச்சிகூட இல்லை.வெரிகுட். நல்ல ஆரோக்கியமான உடம்புனு சொல்லுங்க.==========6. உங்க அம்மா முடியாம இருந்தாங்களே என்ன பண்ணினே ?ரப்பர் பேண்டு வாங்கிக் கொடுத்தேன்.==========7. மூணு யானை கர்ப்பமா இருக்குது, அதுல ஒண்ணுக்கு பன்னிரண்டு மாசம். இன்னொண்ணுக்கு பதினாறு மாசம். கடைசி யானை இருபது மாசம். இதுல எந்த யானை முதல - குட்டி போடும்.கடைசி யானைதான்தப்பு. எதுவுமே முதலைக் குட்டி போடாது. எல்லாமே யானைக் குட்டிதான் போடும்.==========இன்றைய பிட்டு ஜோக்:8. மாப்பிள்ளை இவ்வளவு ஸ்பீடா இருப்பார்னு எதிர்பார்க்;கவே இல்லை.ஏன் .. .. ?முதலிரவு முடிஞ்சதும் உடனே நைட் 12-30 மணிக்கு மாமியார் வீட்டுக்கு பிரசவத்தக்கு பஸ் ஏத்தி விட்டுட்டாரே

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 48

ஒரு தபால் அலுவலகத்தில் ஒருத்தன் வேலை பார்த்துக்கிட்டிருந்தான். விலாசம் சரியா எழுதப்படாத மடல்களை ஆராய்ஞ்சு சரியான இடத்துக்கு அனுப்புறது தான் அவனோட வேலை.ஒரு நாள் கடவுளுக்கு என்று விலாசமிடப்பட்டு சீரில்லாத கையெழுத்தில் ஒரு மடல் வந்தது. அந்த மடலைத் திறந்து பாத்து உள்ளே என்ன தான் எழுதியிருக்குன்னு பார்க்கலாமேன்னு நினைச்சான்.அந்த கடிதத்தில் என்ன எழுதியிருந்ததுன்னா:நான் 83 வயதுள்ள வயசான விதவை. எனக்குக் கிடைக்கிற சொற்ப பென்ஷனில் தான் நால் காலத்தை ஓட்டுறேன். நேத்து என் பர்ஸை யாரோ திருடிட்டாங்க. அதில் 100 டாலர் இருந்தது. அந்தப் பணத்தை வச்சுத்தான் இனி அடுத்த பென்ஷன் வருகிற வரைக்கும் பொழுதை ஓட்டணும்.அடுத்த ஞாயிற்றுக்கிழமை கிரிஸ்த்மஸ். அதுக்கு என்னுடைய இரண்டு தோழிகளை டின்னருக்கு வரச் சொல்லியிருக்கேன். பணமே இல்லாம இப்போ நான் என்ன பண்ணுவேன். எப்படி போய் சாப்பாட்டுக்கு பொருள் வாங்குவேன். எனக்குன்னு யாருமே இல்லை. கடவுளே, நீ மட்டும் தான் எனக்கு இருக்கிற ஒரே நம்பிக்கை.எனக்கு எப்படியாவது உதவி செய்.இப்படிக்கு,உனது தீவிர பக்தைஎட்னாஇதைப் படிச்ச அந்த தபால் ஊழியருக்கு ரொம்ப இரக்கம் வந்திருச்சு. அந்த கடிதத்தை எல்லாருக்கும் வாசிச்சுக் காம்பிச்சாரு. அங்கே இருந்த எல்லாரும் தங்களது பர்ஸில் இருந்து கொஞ்சம் டாலர் எடுத்துக் குடுத்தாங்க. முழுசா ஒரு ரவுண்டு அடிச்சு வரும்போது, 96 டாலர் சேர்ந்துடுச்சு. அதை ஒரு கவர்ல வச்சு அந்த மூதாட்டிக்கே அனுப்பீட்டாங்க. ”இந்தப் பணம் எட்னா கையில் கிடைச்சா எப்படியும் கிரிஸ்த்மஸை நல்லாக் கொண்டாடிவாங்க” நினைச்சு, அன்னிக்கு முழு நாளும் அந்த ஊழியர்களுக்கு ரொம்ப திருப்தியா இருந்துச்சு.கிரிஸ்துமஸும் வந்தது. போனது.சில நாட்கள் கழிச்சு, அதே வயசான மூதாட்டி கிட்டே இருந்து இன்னொரு கடிதம் கடவுளுக்கு விலாசமிட்டு வந்துச்சு. அந்த கடிதத்தை நம்மாளு உடைக்கும் போது எல்லா ஊழியர்களும் அங்கே கூடிட்டாங்க.இப்போ அந்தக் கடித்ததில் என்ன எழுதியிருந்தாங்கன்னா:அன்புள்ள கடவுளுக்கு,நீ எனக்குச் செய்த இந்த உதவிக்கு நான் உனக்கு எப்படி நன்றி சொல்வேன்?உன்னுடைய அன்பான பரிசால் நான் என் தோழிகளுக்கு ஒரு பிரமாதமான டின்னர் கொடுத்தேன்.அன்றைய நாள் மிகவும் அருமையான நாளா இருந்துச்சு. நீ கொடுத்த பரிசைப் பற்றி நான் என் நண்பர்களுக்கெல்லாம் சொன்னேன்.இருந்தாலும் ஒரு சின்னப் பிரச்சினை.நான் 100 டாலர் கேட்டிருந்தேன். 96 தான் குடுத்தீங்க. இதில 4 டாலர் மிஸ்ஸிங்.இது அந்த போஸ்ட் ஆஃபீஸில் இருக்கிற அந்த வீணாப் போனவங்க தான் உருவியிருப்பாங்கன்னு நினைக்கேன்.=========================எனக்கு வந்த ஆங்கில மடலை கஷ்டப்பட்டு தமிழாக்கம் பண்ணி, தட்டச்சு செஞ்சு அனுப்பியிருக்கேன்.மரியாதையா சிரிச்சிருங்க.இல்லே. நடக்கிறதே வேற.ஆமா. சொல்லிப்புட்டேன்.==========================மூலம்:There was a man who worked for the Post OfficeWhose job was to process all the mail that had illegible addresses.One day, a letter came addressed in a shaky handwriting to God with no actual address.He thought he should open it to see what it was about.The letter read:Dear God,I am an 83 year old widow, living on a very small pension.Yesterday someone stole my purse.It had $100 in it, which was all the money I had until my next pension payment.Next Sunday is Christmas, and I had invited two of my friends over for dinner.Without that money, I have nothing to buy food with,Have no family to turn to,And you are my only hope.Can you please help me?Sincerely,EdnaThe postal worker was touched.He showed the letter to all the other workers.Each one dug into his or her wallet and came up with a few dollars.By the time he made the rounds, he had collected $96,Which they put into an envelope and sent to the woman.The rest of the day, all the workers felt a warm glowThinking of Edna and the dinner she would be able to share with her friends.Christmas came and went.A few days later, another letter came from the same old lady to God.All the workers gathered around while the letter was opened.It read:Dear God,How can I ever thank you enough for what you did for me?Because of your gift of love, I was able to fix a glorious dinner for my friends.We had a very nice day and I told my friends of your wonderful gift.By the way, there was $4 missing.I think it might have been those bastards at the post office.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 47

1. கடவுள் எங்க இருக்கார் ?-னு டீச்சர் ஒரு பையனைக் கேக்கறாங்க. அதுக்குப் பையன், எங்க வீட்டு பாத்ரூம்ல என்கிறான். அதிர்ச்சி யோடு எப்படி என்கிறார் டீச்சர்.அதுக்குப் பையன், எங்க அப்பா, அம்மாவை வீடு பூரா தேடிட்டுக் கடைசியில் பாத்ரூமில் கண்டுபிடித்து, அடக்கடவுளே... நீ இங்கதான் இருக்கியா ? என்றார்==========2. அந்தப் பெண்ணுக்கு எழுதிய லவ் லெட்டரை சுக்குநூறாக் கிழிச்சு அவகிட்ட கொடுக்கறியே... ஏன் ?அவ மட்டும் என்ன செய்யப்போறா ? கிழிச்சுதானே போடப்போறா!==========3. ச்சே... எப்போ பார்த்தாலும் மாமியாரைத் திட்டிக்கிட்டே இருக்கியே.நான் உங்க மாமியாரையா திட்டறேன்... என் மாமியாரைத்தானே திட்டறேன்.==========4. நம்ம தலைவர் ஆனாலும் எதிர்க்கட்சித் தலைவர் மேல இவ்வளவு கோபமா இருக்கக்கூடாது.ஏன்...?அவரை அடுத்த ஜென்மத்துலேயும் ஜெயில்ல போடுவேன்னு சொல்றாரே.==========5. சுரேஷ்... கண்பார்வை யாருக்கு அதிகம் ? விலங்குகளுக்கா... மனிதர்களுக்கா.. ?விலங்குகளுக்குத்தான் டீச்சர்.விலங்குகள் எதுவும் கண்ணாடி போடறதில்லையே டீச்சர்.==========6. நீங்களே கஷ்டத்துல இருக்கீங்க. எதுக்கு கல்யாணம் வேற பண்ணிக்கிறீங்க...?கஷ்டத்தோட கஷ்டமா இருக்கட்டுமேன்னுதான்.==========7. ரெண்டு அம்பயருக்கும் இடையில என்ன சண்டை ?ஆளுக்கு அஞ்சு அவுட் கொடுக்கணும்னு ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டாங்களாம், ஆனா, இவரு ஆறு அவுட் கொடுத்துட்டாராம்.==========இன்றைய மெகா ஜோக்:நான் சிகரெட் குடிச்சிட்டு இருந்ததை எங்கப்பா பார்த்துட்டாரு ?ஐயையோ, அப்புறம் ?தண்ணி போட்டுட்டு வந்து அடி பின்னிட்டாரு.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 46

1. டாக்டர்.. . என் கணவருக்கு தினமும் ஸ்கூட்டர் ஓட்டற மாதிரி கனவு வருது.. .இதுக்குப் போய் வருத்தப்படுவாங்களா ?ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்றேன்னு தினமும் ராத்திரி என்னை இல்லே உதைக்கிறாரு.==========2. டாக்டர் .. . என் கணவர் தனக்குத்தானே பேசிக்கிறாரு.. .அதுக்குக்கூட அவருக்கு உரிமை கிடையாதா மேடம்.. .?==========3. இவ்வளவு அழகா எனக்கு லெட்டர் எழுதியிருக்கானே ஒருத்தன், இவனைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க ?படிச்சவன்னு தோணுது.தப்பு. படிச்சவன் நான்தான். இவன் எழுதினவன்.==========4. ஹலோ டாக்டர், என் மாமியார் மூச்சு விட முடியாம ரொம்பக் கஷ்டப்படறாங்கஉடனே இங்கே கூட்டிண்டு வாங்க.இதோ, மேக்கப் போட்டுண்டு ஒரு மணி நேரத்துக்குள்ளே வரேன்!==========5. வர வர எனக்கு வர்ற கனவு கூட டி.வி. நிகழ்ச்சி மாதிரி ஆயிடுத்து.ஏன்...?கனவு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஏகப்பட்ட விளம்பரம் வருது.==========6. இளவரசே வீரமுடன் வேட்டைக்கு புறப்பட்ட நீங்கள் ஏன் தலை தெறிக்க, ஓடி வருகிறீர்கள் ?போய்யா, போற வழியில் ஒரு சொறிநாய் துரத்திட்டு வருது.==========7. தலைவர் ஏன் இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்காரு ?அவரோட சின்ன வீடு யார் கூடவோ ஒடிட்டாங்களாம்.==========இன்றைய சின்ன பிட்டு ஜோக்கு:8. வேகப் பந்து வீச்சாளரைக் கட்டிக்கிட்டது தப்பாப் போச்சா... எப்படி ?பாஸ்ட் நைட் கொண்டாடிட்டார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net