Monday, April 25, 2011

வலிப்பு நோய் பற்றி தெரிந்துக் கொள்ளுவோம் !

வலிப்பு நோய் என்றால் என்ன?




மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம் நரம்பு செல்கள் தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணு தன்மையை வெளியிடும் போது ஏற்படும் விளைவே வலிப்பு நோய் ஆகும். இதனை காக்காய், ஜன்னி, பிட்ஸ் (fits) மற்றும் எபிலெப்ஸி (epilepsy) என்றும் அழைக்கலாம்.


*


வலிப்பு நோய் யாரை பாதிக்கும்?

யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். மொத்த மக்கள் தொகையில் 100க்கு 3 முதல் 5 பேர் வரை இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

*

இந்த நோய் அறிகுறிகள் யாவை?


இது ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது.

கை, கால் இழுத்தல்

வாயில் நுரை தள்ளுதல்

சுய நினைவு மாறுதல்

உடலில் உள்ள பாகம் துடித்தல் (வெட்டுதல்)

கண் மேலே சொருகுதல்

சில சமயம் சுய நினைவின்றி சிறுநீர் கழித்தல்

திடிரென மயாக்கமடைந்து விழுதல்

கண் சிமிட்டல்

நினைவின்றி சப்பு கொட்டுதல் (வாய் அசைத்தல்)

மற்றும் சில நிமிடங்கள் தன் சுய நினைவின்றி பேசுதல் போன்றவை வலிப்பு நோய்ன் அறிகுறிகள்.

*

வலிப்பு நோய் எதனால் வருகிறது?

மூளையில் பூச்சிக்கட்டி (Neurocysticercosis)

மூளையில் காச நோய் (Tuberculoma)

தலைக் காயம் (Head Injury)

குழந்தைகளுக்கு சுரம் ஏற்படும் போது (Febrile Convulsions)

மூளை காய்ச்சல் (Brain Fever)

மூளையில் இரத்த ஓட்டம் பாதிக்கும் போது

மூளையில் புற்று நோய் (Brain Tumer)

உறக்கமின்னை

போதைப் பொருள் உபயோகித்தல்

மற்றும் சிலருக்கு எக்காரணமும் இன்றி வரலாம்

*

இது பரம்பரை வியாதியா?

பெரும்பாலும் 100க்கு 90 பேருக்கு இது பரம்பரை வியாதி இல்லை. மிக குறைந்த பேருக்கே இது பரம்பரையின் பாதிப்பாகும்.



*

இந்த நோய் எந்த வயதில் வரும்?

இந்த நோய்க்கு வயது வரம்பு கிடையது. குழந்தை முதல் முதியோர் வரை எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம்.

*

இந்த நோய் உள்ளவர்களுக்கு செய்யப்படும் சோதனைகள் யாவை?

முதலில் மருத்துவர் நோய்க்கான அறிகுறிகளை கேட்டறிந்து அதன்பின் வலிப்பு நோயினை வகைப்படுத்துகிறார். பின்னர் வியாதிக்கு ஏற்ப,

EEG: மூளையின் மின் அதிர்வைப் வரைபடமாக்குதல்.

CT Scan: மூளையின் பாகங்களை கம்ப்யூட்டர் மூலம் ஸ்கேன் செய்தல்.

MRI Scan: தேவைப்படின் காந்த அதிர்வு மூலம் மிகத்துல்லியமாக மூலையின் பாகங்களை படம் எடுத்தல் ஆகிய பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.




இந்த நோய் உள்ளவர்கள் எனன செய்ய வேண்டும்?

அருகாமையில் உள்ள மூளை நரம்பியல் மருத்துவ நிபுணரை சந்தித்து நோயின் வகை, நோய்க்கான காரணம் ஆகியவற்றை பரிசோதனைகள் மூலம் அறிந்து மருத்துவரின் அறிவுரைப்படி தொடர்ந்து மருந்து உட்கொள்ள வேண்டும்.

*

எவ்வளவு காலம் மருந்து உட்கொள்ள வேண்டும்?

இது வியாதியின் வகை மற்றும் காரணத்தை பொருத்து மறுபடுகிறது பெரும்பாலும் 3 முதல் 5 வருடம் வரை உட்கொள்ள வேண்டி இருக்கும். பின்னர் தேவையான பா¢சோதனைகளுக்கு பிறகு மருந்துகளை மெல்லக் குறைத்து அதன் பின் நிறுத்த வேண்டும்.

*

இந்த நோய் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

தாராளமாக செய்து கொள்ளலாம். திருமணத்திற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்து அவா¢ன் அலோசனைப்படி மருத்தினை தொடர்ந்து உட்கொள்ளவும்.

*

இந்த நோய் உள்ளவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?

தாராளமாக, வலிப்பு நோய் தாய் மற்றும் சேய் இருவரையும் பாதிக்கும். ஆனால் முறையான வலிப்பு நோய் மாத்திரையும் ·போலிக் ஆசிட் (Folic Acid) என்ற சத்து மாத்திரையும் சாப்பிடும் போது சுகப்பிரசவம் காணலாம். கருத்தா¢க்கும் முன் உங்கள் மருத்துவரை அவசியம் சந்திக்கவும்.

*

இந்த நோய் உள்ளவர்கள் வாகனங்களை ஓட்டலாமா?

வலிப்பு இல்லாமல் குறைந்தது 6 மாதங்கள் ஆன பிறகு வாகனங்கள் ஓட்டலாம்.



**

வலிப்பு நோய் உள்ளவர்கள் செய்ய வேண்டியவை:

தவறாமல் மருந்து சாப்பிட்டால் வலிப்பு இல்லாமல் இருக்கலாம்.

பள்ளி, கல்லு¡¢ மற்றும் அலுவலகங்களுக்கு செல்லலாம்.

விளையாடலாம், உடற்பயிற்சி, தியானம் மற்றும் பயணம் செய்யலாம்.

திருமணம் செய்து கொள்ளலாம், உடலுறவு கொள்ளலாம், சாதாரணமாக குழந்தைகளைப் பெறலாம்

உங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கலாம்.

நல்ல உணவு, உடற்பயிற்சி, தியானம் மற்றும் சிந்தனை உங்களை நல்வழிப்படுத்தும்.

நீங்கள் மற்றவர்களைப் போல் நன்கு வாழலாம்.

**

வலிப்பு நோய் உள்ளவர்கள் செய்யக் கூடாதவை:

உங்கள் மருத்துவரை கலந்து அலோசிக்காமல் மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவோ அல்லது வேறு மருந்துக்கு மாறவோ கூடாது.

நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும்.

நீர்நிலைகளில் நீராடுவது. இவ்வகையினருக்கு இது ஆபத்தான ஒன்று.

தேவையற்ற மன உளைச்சல் கூடாது.

மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள் வலிப்பு வருவதை தூண்டலாம்.

நகரும், அசையும் உயிருக்கு ஆபத்தான இயந்திரங்கள் கொண்டு வேலை செய்யக் கூடாது.

அதிக நேரம் தொலைக்காட்சி (TV) பார்க்கக் கூடாது.

*

முறையான சிகிச்சை செய்ய வில்லை என்றால்?

ஒவ்வொரு முறை வலிப்பு வரும் போதும் மூளையில் உள்ள நரம்பு செல்கள் பாதிப்பு அடைகின்றன. இது நாளடைவில் மூளை வளர்ச்சியை பாதிக்கும், எனவே முறையான மருந்துகள் சாப்பிட்டு வலிப்பு நோயைக் கட்டுப்படுத்துவது அவசியம்.


*
ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை
3/60 மெய்யனுர் சாலை
சேலம் - 636 004

***
thanks ஆத்தூர்.
***



"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

குழ்ந்தை வளர்ப்பில் பல பரிணாமம் !

உங்கள் குழந்தையின் உணர்வைப் புரிந்து கொள்ளுங்கள்!




குழந்தைகளுக்கு வகை வகையான உணவுகளை ஆக்கித் தருகிறீர்கள். விதவிதமான உடைகளை வாங்கித் தருகிறீர்கள். இது போதுமா? நிச்சயம் போதாது. குழந்தையின் மன உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நாம் நடந்து கொள்ளவேண்டும். ஆனால் நாம் என்ன நினைக்கிறோம்?

*

நம்முடைய இயல்புகளைப் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தபடி இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம். இது தவறானது. குழந்தைகள் பெற்றோர்களிடம் பாதுகாப்பை மட்டுமல்ல, பரிவையும் எதிர்பார்க்கிறார்கள். அன்புடன் அக்கறையையும் தங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மையையும் எதிர்பார்க்கிறார்கள்.


**

உங்கள் குழந்தைகளை நீங்களே புரிந்து கொள்ளாவிட்டால் பின்பு யார் புரிந்து கொள்ளப் போகிறார்கள்?

அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்கும் தன்மை மனிதர்களிடம் காணப்படுகிற ஒரு விசேஷப் பண்பு. உங்கள் குழந்தை உங்கள் சக மனிதர்தான். அடிமைகளைப் போல அவர்களை நடத்தாமல் நண்பர்களிடம் நடந்து கொள்வதைப் போல நடந்து பாருங்கள். உங்கள் குழந்தை வளர்வதை உணர்வீர்கள்.

உங்கள் குழந்தையும் பிறர் உணர்வும் எந்தக் குழந்தையின் உணர்வுகளை அதன் பெற்றோர்கள் அக்கறையோடு புரிந்து பரிவு காட்டுகிறார்களோ, அந்தக் குழந்தைதான் பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறது என்று டாக்டர் பார்னெட் தெரிவிக்கிறார்.


**

பிறரின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் தன்மை குழந்தைகளிடம் எப்படி இருக்கிறது?

இது பற்றி ஆராய்ச்சியாளர்கள் விரிவான ஆய்வு செய்து தங்கள் முடிவுகளை வெளியிட்டுள்ளார்கள்.

குழந்தைகள் வளர்ந்து வரும் சூழல்கள் அவர்களது குணத்தில் ஏற்படுத்துகிற மாற்றத்தை அந்த ஆராய்ச்சிகள் துல்லியமாகக் கண்டறிந்துள்ளன. இரக்ககுணம், அலட்சிய மனோபாவம், விரோத மனப்பான்மை போன்றவற்றைக் குழந்தைகள் சூழ்நிலைக்குத் தக்கவாறு பெற்று வளர்வதாகத் தெரிந்தது.


“பாதுகாப்பற்ற சூழலில் வளரும் குழந்தைக்குப் பிறரின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும்” என்று டாக்டர் பார்னெட் கூறுகிறார்.


தன்னுடைய இயல்புகளை உணர்ந்து கொள்ளும் விலங்குகளால்தான் பிற விலங்குகளின் உணர்வைப் புரிந்து கொள்ள முடியும் என்று விலங்கியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதைப்போல மற்ற விஷயங்களில் ஈடுபடுவதற்கு முன் தன்னுடைய தனித்துவம் மீது கட்டுப்பாடு இருப்பதை ஒரு குழந்தை உணர்ந்து கொள்ள வேண்டும். பிறரின் உணர்வு களைப் புரிந்து கொள்ளும் உணர்வு குழந்தைகளிடம் நான்கு கட்டங்களில் உருவாகிறது என்கிறார்கள் மனவியல் வல்லுநர்கள்.


**

முதல் கட்டம்:


தனக்கும் மற்றவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தெரியாத நிலையில் ஒரு குழந்தை இருக்கிறது. பிறரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும்தன்மை அவ்வளவாக இருக்காது. மற்ற குழந்தைகள் துன்பப்படுவதை அது பார்த்தால் பொதுவான ஒரு உணர்வைத்தான் வெளிப்படுத்தும்.


உதாரணமாக,

ஒரு குழந்தை தரையில் விழுந்து அதனால் சிராய்ப்பு ஏற்படுவதைப் பார்க்கும் இன்னொரு குழந்தை உடனே தன் முகத்தைத் தாயின் மடியில் புதைத்துக் கொள்ளும். இதுதான் ஏறத்தாழ 9 மாதத்தில் ஒரு குழந்தையின் வெளிப்பாடாக இருக்கும்.

**

இரண்டாவது கட்டம்:


குழந்தைகளின் வயது 14 மாத காலமாகும் போது அவை தனித்தன்மையைப் பெறத் துவங்கிவிடுகின்றன. அப்போது மற்ற குழந்தைகள் காயப்படுவதைப் பார்த்தால், இந்த குழந்தை காயம்பட்ட குழந்தையைச் சமாதானப்படுத்த முயற்சி செய்யலாம்.



அல்லது வேறு ஏதேனும் அரைகுறை முயற்சிகளை மேற்கொள்ளலாம். அடிபட்ட குழந்தையைத் தன் தாயிடம் அழைத்துச் செல்கிற நிலைமை வரையில்தான் இந்த அரைகுறை முயற்சிகள் தொடரும்.

**


மூன்றாவது கட்டம்:


இரண்டாவது வயது நிரம்பும்போது குழந்தை மூன்றாவது கட்டத்தை அடைகிறது. இப்போது தனக்கும் பிறருக்கும் உள்ள வேறு பாட்டை அறிந்து கொள்ளும் தன்மை அதனிடத்தில் ஏற்பட்டு விடுகிறது. இதனால் பிறரின் உணர்வுகளை உணரும் தன்மையும் உருவாகிறது.


***

நான்காவது கட்டம்:


குழந்தைப் பருவத்தின் இறுதி நிலையில்தான் பிறரின் உணர்வுகளை முழுமையாகப் புரிந்து கொள்ளும் அறிவாற்றலை குழந்தைகள் பெறுகின்றன. இப்போது மற்ற குழந்தை அனுபவிக்கும் உணர்வை இந்த குழந்தை அப்படியே உணராது. மற்ற குழந்தைகளின் சூழல்களுடன் உணர்வையும் பொருத்திப் பார்த்து உணர்ந்து கொள்ளும்.

உதாரணமாக


புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை சிரித்து விளையாடினால் அந்த குழந்தையின் மகிழ்ச்சியை இது அனுபவிக்காது.


***

குழந்தையை மதியுங்கள்:


பிறரின் உணர்வுகளை நம் குழந்தைகள் உணர்ந்து கொள்வதன் அடிப்படை நம் குழந்தை களின் உணர்வுகளை நாம் மதிப்பதுதான். கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகள் பிற குழந்தைகள் துன்பப்படும்போது இரக்கம் காட்டுவதில்லை.

*

துன்பத்துக்குள்ளான குழந்தையை இது வெறுமனே பார்த்துக் கொண்டு நிற்கும். அல்லது அதன்அருகில் சென்று கூக்குரலிட்டு விட்டு அதனைத் தள்ளிவிடும் என்கிறார் டாக்டர் பார்னெட்.


*

எனவே, ‘பிள்ளை நல்லவராவதும் தீய வராவதும் அன்னை வளர்ப்பினிலே’ என்பதைப் பெற்றோர் புரிந்து கொண்டால் பிரச்சினை இல்லை. நம் பிள்ளையை நாம் மதித்தால் ஊரார் பிள்ளையை அது தானாய் மதிக்கும்.


***



குழந்தைகளின் குணமறிந்து செய்வோம் ஹோமியோ!



குழந்தைகளும் தெய்வமும் ஒன்று என்று பெரியவர்கள் கூறுகின்றார்கள். ஒவ்வொரு குழந்தையும் தனித்தனித் தன்மைகள் உள்ளன. ஹோமியோவில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு மருந்துகள் உண்டு.

AETHUSA BABY :

இக்குழந்தைகளுக்கு பால் ஒத்துக்கொள்ளாது.

பால் எந்த வடிவில் கொடுத்தாலும் பெரிய தயிர் கட்டிகளாக வாந்தியெடுக்கும்.

குழந்தை நிற்க முடியாமை.

தலை தொங்குதல்.

தலையை நேராக நிறுத்த முடியாமை.

மந்த நிலையில், குழம்பிய குழந்தை.

பல் முளைக்கும் காலத்தில் வரும் வயிறு உபாதை.

***

ANACARDIUM CHILD :

ஞாபக மறதி உள்ள சிறுவர்கள்.

திடீரென்று ஞாபக சக்தியை இழந்துவிடுவார்கள்.

தன்தோளில் ராட்சதன், தேவதை உட்கார்ந்திருப்பது போல் எண்ணம்.

குழந்தைகள் வயதானவர்கள் போல் தோற்றமளிக்கும்.

கால்கள் மெலிந்து காணப்படும்.

இச்சிறுவர்கள் சர்க்கரையை விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.

எல்லாம் வியாதியும் சக்கரை அல்லது இனிப்பு தின்ற பின்புதான் ஏற்படும்.

மூத்திரம் தன்னையறியாமல் வெளியாகும்.


***


BARYTA CARB BABY :

புத்தி வளராத குழந்தை.

இக்குழந்தை பேசவும், நடக்கவும், தாமதமாகக் கற்றுக்கொள்ளுதல்.

புத்தியின்மை, ஞாபகமின்மை குழந்தைகள்.

புதிய மனிதர்கள் யாராவது வீட்டுக்கு வந்தால் குழந்தை கைகளால் முகத்தை மூடிக்கொள்ளுதல்.

நாற்காலி மேசைக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளும் விளையாட விருப்பமில்லாது.

***

BELLADONNA BABY:

குழந்தையின் முகம்சிவந்து காணப்படும்.

சிறுவர்கள் பேய் பிசாசுகளை பார்ப்பதாகச் சொல்லுவார்கள்.

கருவிழி அகன்று இருக்கும்.

***

BOBAX-CHILD

குழந்தையைத் தூக்கி வைத்திருந்துவிட்டு கீழே இறக்கும் போது அலறும்.

கீழ் நோக்கும் எந்த அசைவும் பயத்தை கொடுக்கும்.

குழந்தையின் வாயில் புண் காணப்படும்.

எது சாப்பிட்டாலும் வாயில் இருந்து இரத்தம் வரும்.

குழந்தை மூத்திரம் போய்க்கொண்டே இருக்கும்.

***

CALCAREA CARB - BABY :

எலும்புகளில் பலமில்லாததால் சீக்கிரமாக நடக்காது.

குழந்தை மந்தமாய் உட்கார்ந்து கொண்டிருக்கும்.

புத்தியிருக்காது, சுறுசுறுப்பிருக்காது.

மிகப்பெரிய தலை மற்றும் உப்பிய வயிறு.

குழந்தையின் எலும்பு சரிவராமல் வளராது.

தலையில் எலும்பு சரிவராமல் வளராது.

தலையில் வியர்வை வரும்.

பல் முளைக்க கால தாமதம்.

குழந்தை செரிக்காத உணவை விரும்பி திங்கும்.

***

ALUMINA-BABY


குழந்தைகள் சாம்பல், கரி, கிராம்பு, மாவு, காபி, டீ, கொட்டை,போன்ற செரிக்காத உணவை விரும்பி சாப்பிடும்.

புட்டிப்பால் சாப்பிடும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும்.

***

AMBRA GRISEA - BABY:

குழந்தைகள் யாராவது இருந்தால் மூத்திரம் போகாது.

***

CHAMOMILLA - BABY

குழந்தைக்கு பல் முளைக்கும் காலத்தில் ஏற்படும் வயிற்றுப்போக்கு.

குழந்தைகள் வலி பொருக்காது.

குழந்தைகளை தூக்கி வைத்துக்கொண்டால் சமாதானடையும்.

குழந்தைகளை கீழே போட்டால் அழும்.

தன்னை பிறர் பார்ப்பதற்கோ அல்லது தொடுவதற்கோ விரும்பாது.

தூங்குவது போன்று நடிக்கும். ஆனால் தூங்காது.


***


CINA-BABY

நாக்குப்பூச்சி அதிகம் உள்ள குழந்தை.

மூக்கையும், ஆசனத்தையும் விரல்களால் நோண்டும்.

தூக்கத்தில் பற்களை நறநறவென்று கடிக்கும்.

கொடுக்கும் பொருட்களை தூக்கி எறியும்.

குழந்தை அழும்போது தூக்கி வைத்துக் கொண்டால் சமாதானம் அடையாது.

***

SULPHUR - BABY

குழந்தை கை, கால், கழுவ மற்றும் குளிக்க விரும்பாமை

குழந்தை அழுக்கடைந்து காணப்படும்.

உடல் மெலிந்து, வயிறு உப்பி காணப்படும்.

தண்ணீரைக் கண்டால் பயம்.

இரவு நேரங்களில் துணிகளை அவிழ்த்துப் போட்டுவிடும்.

(மேலே குறிப்பிட்டது போல் தங்கள் குழந்தையிருந்தால் அம்மருந்தை தக்க வீரியத்தில் கொடுக்கலாம்.)

**

குழந்தைகளின் குணநலன்களை மேம்படுத்தும் மலர் மருத்துகள்

“எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான்

மண்ணில் பிறக்கையிலே பின்

நல்லவராவதும் தீயவராவதும்

அன்னை வளர்ப்பதிலே”


இன்றைய குழந்தையே நாளைய மனிதன். குழந்தைகள் வளரும்போது மனங்களில் மாசுபடிந்தால், அறிவுரைகளும், ஆலோசனைகளும் கூறி அவற்றை நீக்க முடியாவிட்டால் டாக்டர் பாச் மலர் மருந்துகள் மூலம் சிறந்த பலன்பெற முடியும்.

குழந்தையிடம் காணப்படும் இயற்கைக்குப் புறம்பான, எதிர்மறையான உணர்வுகளை, தீயபழக்கங்களை... ஆரம்ப நிலையிலேயே மலர் மருந்துகள் சிகிச்சை மூலம் எளிதில் திருத்த முடியும்.



ஒவ்வொரு குழந்தையும் சமுதாயத்திற்குப் பயனுள்ள பிரஜையாக மலர்ச்சி அடைய, சிறந்த ஆளுமைத் திறன்களைப் பெற கீழ்க்கண்ட மலர்மருந்துகள் பயன்படும்.

***


மலர்மருந்துகள்:


1. குழந்தை தூங்கி எழும் போது கோபத்துடன் எழுதல், தலையணை போர்வை மற்றவற்றை உதைத்தல், அழுதல் -செர்ரிப்ளம்

2. காலையில் நீண்ட நேரம் கழித்து விழிக்கும் குழந்தை - ஸ்கிளரான்தஸ்

3. எப்பொழுதும் தூங்கிக் கொண்டு இருத்தல். அதிக தூக்கம் - கிளமெடிஸ்

4. தூங்காமல் புரண்டு புரண்டு படுததல், அமைதியின்மையுடன் இருத்தல் - வொயிட்செஸ்ட்நட் + ரெஸ்கியூரெமடி

5. இரவு தூக்கத்தில் எழுந்து பயந்து வீறிட்டு அலறுதல் - Rock Rose, Aspen

6. தனியாக இருக்க தனியாக எங்கும் செல்ல பயம், பள்ளி செல்ல பயம் - மிமுலஸ்

7. பள்ளி செல்வதற்கு முன் வயிறு வலி, தலைவலி என ஏதோ ஒரு (பொய்) காரணம் சொல்லி பள்ளி செல்ல மறுக்கும் குழந்தை - செஸ்ட்நட்பட்

8. எல்லா நேரமும் விளையாட்டு விளையாட்டு என பொழுதை கழிக்கும் குழந்தைகள் ஓரிடத்தில் சிறிது நேரம் கூட அமைதி யாக உட்கார இயலாத குழந்தைகள் (Hyeractive children)) - வெர்வைன்

9. பேசுவதில், எழுதுவதில், சாப்பிடுவதில், நடப்பதில் எந்த விஷயத்தில் ஈடுபட்டாலும், அதிவேகம், நிதானமின்மை - இம்பேஷன்ஸ்

10. எந்த விஷயத்திலும் ஈடுபடாமல் எங்கோ வெறித்தபடி மந்தமாக இருத்தல். படிப்பிலோ, வேலையிலோ ஈடுபடாமல் கனவுகளில், கற்பனைகளில் மிதத்தல் (Hypoactive) - கிளமேடிஸ்

11. எல்லாரின் அக்கரையும் கவனமும் தன்மேல் செலுத்த விருப்பம் சுயநலமுள்ள குழந்தை - சிக்கரி

12. எந்தவித காரணமுமில்லாமல் வெறுப்புணர்வு ஏற்படுதல்; எல்லாவற்றிக்கும் வெறுப்பு ஏற்படுதல் - வில்லோ

13. சாப்பிட வெறுப்பு - ஹால்லி

14. அதிக பசி, எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காமை - செர்ரிப்ளம்

15. குச்சி, சாக்பீஸ், மண் தின்னும் பழக்கம் - செர்ரிப்ளம், வால்நட்

16. பிறந்த குழந்தையின் மலச்சிக்கல் - வால்நட்

17. மலம் போன திருப்தியில்லாமல் திரும்ப மலங்கழிக்கும் உணர்வு (neffectual Urgin for stool) - ஸ்கிளரான்தஸ்

18. கடுமையான இருமல், கக்குவான் இருமல் (Whooping Cough) - வொயிட்செஸ்ட்நட் + ரெஸ்கியூரெமடி

19. அடிக்கடி சளி பிடித்தல் மற்றும் குழந்தை, அடிக்கடி காய்ச்சல் ஏற்படுதல் - வொயிட்செஸ்ட்நட்

20. தட்ப வெப்ப மாற்றங்களினால் ஏற்படும் சளி தொந்தரவுகள் அல்லது தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் - வால்நட்

21. அழுகை வந்தாலும் அடக்குதல். அழுகையை வெளிக்காட்டாமை மனதுக்குள் அழுதல் - அக்ரிமோனி

22. அதிக வலி காரணமாக அழுதல், வலி தாங்காமல் கதறுதல் -செர்ரிப்ளம்

23. அடுத்தவர்கள் அனுதாபப்படுமளவு அழுதல் - சிக்கரி

24. எந்த விஷயத்தையும் நினைவுக்கு கொண்டு வதுவதில் தாமதல் - ஸ்கிளரான்தஸ்

25. வேடிக்கை பார்த்துக் கொண்டு எதையோ வெறித்தபடி கவனமில்லாமல் உட்கார்ந்திருக்கும் குழந்தை - கிளமெடிஸ்

26. வகுப்பறையில் ஒரு இடத்தில் அமராமல், இங்கும் அங்கும் விளையாடிக் கொண்டு இருத்தல் - இம்பேஷன்ஸ்

27. தேர்வு நேரத்தில் பதட்டம் தணிய -ரெஸ்கியூரெமடி

28. தேர்வுக்கு தன்னை தயார் செய்யும் மாணவர்களின் கடுமையான உடல் சோர்வு நீங்க - ஆலிவ்

29. தேர்வு நேரத்தில் ஏற்படும் மனச்சோர்விலிருந்து விடுபட்டு புத்துணர்வு பெற - ஹார்ன்பீம்

30. எந்த ஒன்றையும் செய்ய தொடங்கும் முன் தன்னால் இயலாது என தயங்குதல் (தன்னம்பிக்கையின்மை)- லார்ச்

by-மாற்று மருத்துவம்

***


குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில:




குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதது என்னென்ன?


*

1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.


*

2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.


*

3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


*

4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.


*

5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.


*

6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.


*

7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.


*

8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.


*

9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.


*

10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.


*

11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.



***
thanks மாற்று மருத்துவம் ஏப்ரல் 2010
thanks கீற்று
****



"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

குழந்தை வளர்ப்பதில் சில தவறான பழக்க வழக்கங்கள் !

1. குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும். வேறு எந்தப் பொருளும் என்ன காரணம் கொண்டும் ஊட்டக்கூடாது.



2. பிறந்த சில குழந்தைகளுக்கு மார்பகத்தில் பால் கட்டி தடித்து இருக்கும். இதை குழந்தை வீறிட்டு அழுவதையும் பொருட்படுத்தாது நசுக்கி விட்டு பாலை வெளியே எடுக்கும் பழக்கம் உள்ளது. இது நல்லது அல்ல. மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.

*

3. பச்சிளங்குழந்தை அழுவதற்கு காரணம் ‘உரம் விழுந்து இருக்கிறது’ என்று எண்ணி ‘உரம் எடுத்தல்’ என்று செய்கிறார்கள். இது தவறான பழக்கம். இப்படியொரு ‘நோய் நிலை’ இல்லை.

*

4. அடிக்கடி பேதியாகும் குழந்தைகளுக்கும் தொக்கம் எடுக்கிறார்கள். அப்படி ஒன்று கிடையாது. பேதியின் காரணம் என்ன என்று அறிந்து அதற்கான வைத்தியம் செய்ய வேண்டுமே தவிர தொக்கம் எடுப்பது தவறு - சில சமயம் விபரீதம் ஏற்படக் கூடும்.


பேதியை உடனே நிறுத்தும் மாத்திரையை கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது. வயிற்றில் ஏதோ ஒரு பொருள் ஒதுங்கி உள்ளது என்று ‘தொக்கம் எடுத்தல்’ என்று சொல்கிறார்கள். இது இல்லாத ஒன்று. அது போல் குடல் ஏற்றம் என்று ‘குடல் தட்டல்’ என்று செய்கிறார்கள். இது தவிர்க்கப்படவேண்டும்.

*

5. சில குழந்தைகளுக்கு பிறந்து சில மாதங்களுக்கு தொப்புள் சிறிது வெளியே தள்ளிக் கொண்டு இருக்கும். அதை அமுக்கி காசு வைத்து கட்டும் பழக்கம் கூடாது. மாறாக தொப்புளைச் சுற்றி உள்ள பகுதியில் விரலை வைத்து சிறிது சிறிது அமுக்கி அமுக்கி விடலாம்.

*

6. சாம்பிராணி, கொமஞ்சான் புகை போடுவதால் சில குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படும் வாய்ப்பு உண்டு. அவை அவசியமில்லை; பயனுமில்லை.

*

7. சில பெரியவர்கள் மூக்கில் ஊதி சளியை எடுக்க முயல்கிறார்கள். இது தவறான பழக்கம். இதனால் இவர்களின் வாயில் உள்ள நுண்கிருமிகள் எளிதில் குழந்தைகளுக்குப் பரவும்.

*

8. தலைக்கு குளிக்க வைக்கும் முன் தலையில் எண்ணெய் தடவும் பழக்கம் உள்ளது. இதனால் எண்ணை தண்ணீருடன் முகத்தில் இறங்கி மூக்கு துவாரம் அருகே வரும்போது மூக்கு அனிச்சை செயலாக அதை உறிஞ்சி உள்ளே இழுத்து அதனால் சளி, நிமோனியா போன்ற நோய் வர வாய்ப்பு உள்ளது.

*

9. தோலில் சிலசமயம் நுண்கிருமிகளின் பாதிப்பால் சிறுசிறு சீழ் வைத்த பரு போன்று கூட்டாக ஏற்படுவதை ‘அக்கி’ என்று சொல்லி அதற்கு அக்கி எழுதுவதாக சிலர் நம்புகிறார்கள். மருந்தை உட்கொண்டாலே ஒழிய வெறும் அக்கி எழுதுவதால் போய் விடாது.


***

thanks மாற்று மருத்துவம்
ஜூலை 2010ல்
***




"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மாதவிடாயையும் வெல்லலாம் ... !

மெனோபாஸ். நடுத்தர வயதை எட்டிக் கொண்டிருப்பவர்களை மிரட்டும் மெனஸ் இது.



நடுத்தர வயதை எட்டிப்பிடித்தவர்கள் இளம் வயதுப் பெண்களுடன் அழகுக்கு இணையாக தங்களையும் பராமரித்துக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுவார்கள். எல்லாம் மெனோபாஸ் மிரட்டல்தான் காரணம்.

*

தங்களை விட இளம் வயதுப் பெண்கள் உடல் ரீதியாக ஆண்களை கட்டி இழுத்து விடுவார்களே என்ற பயத்தாலும், மேக்கப், முகப் பொலிவு, உடற்கட்டு குறித்து அதிகம் கவலைப்படுவார்கள்.

*

குடும்பப் பொறுப்புகள், பிள்ளைகளை கவனிக்க வேண்டிய கடமை. அவர்களுக்கு அதிக நேரத்தை செலவிட வேண்டிய கட்டாயம், நேரமின்மை என பல காரணங்களால், நடுத்தர வயதினருக்கு பெரும் மனக் கவலைகள், மனச் சுமைகள்.

*

ஆனால் மெனோபாஸ் காலத்தில் இருப்பவர்களுக்கு உடலுறவு மட்டுமே சந்தோஷம் தரும் விஷயமல்ல. அதையும் தாண்டி பல விஷயங்கள் சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பது நிறைய பேருக்கு மறந்து விடுகிறது.

*

உடல் ரீதியான சந்தோஷத்திற்கு உடலுறவு மட்டும்தான் ஒரே வழி என்றில்லை. அதற்குப் பிறகும் நிறைய மேட்டர்கள் உள்ளன.

*

மெனோபாஸ் காலத்தில்தான் உண்மையிலேயே சுதந்திரமாகவும், மன இறுக்கம் இன்றியும், எந்தவித பயமின்றியும் உடல் ரீதியிலான சந்தோஷத்தை அனுபவிக்க முடியும்.

*

இந்த காலகட்டத்தில்தான் கணவர்களுடன், இளம் வயதில் இருந்ததை விட சுதந்திரமாகவும், பயமின்றியும் உடல் ரீதியான உறவைக் கொள்ள முடிகிறது என பல பெண்கள் கூறுகிறார்கள்.

*

கர்ப்பமாகி விடுவோமோ என்ற பயம் இல்லை. நினைத்தபோது சந்தோஷமாக இருக்கலாம் என்பதே இதற்குக் காரணம்.

*

இருப்பினும், இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. மெனோபாஸ் வந்து விட்ட பெண்களுக்கு இரவு நேரத்தில் அதிகம் வியர்வை சுரக்கும். பெண்ணுறுப்பில் ஒரு வறட்சித்தன்மை இருக்கும். மன நிலை ஒரே மாதிரியாக இருக்காது.

*

மன அழுத்தமும் கூடவே வந்து முழுமையான இன்பத்தை அனுபவிக்க தடையாக இருக்கின்றன.

*

ஆனால் மெனோபாஸ் பயத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி. மெனோபாஸ், இனியும் அவர்களுக்கு வறண்ட பாலைவனமாக இருக்கப் போவதில்லை.

*

பாலைவனத்திற்கு அழகூட்டும் ஓயாசிஸ் போல, அவர்களுக்கும் ஒரு பரிகாரம் வந்து விட்டது.

*

இதையெல்லாம் ஒரே ஒரு தெரபி மூலம் சரி செய்து விடலாம். அதுதான் ஹார்மோன் மாற்று தெரப்பி.

*

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் மற்றும் மன நிலை மாற்றங்களை சரி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட தெரபிதான் இந்த ஹார்மோன் மாற்று தெரபி.

***

அது என்ன ஹார்மோன் மாற்று தெரபி ..?

மெனோபாஸ் காலத்தில் பெண்களிடம் இருந்து மறையும் ஹார்மோன்களுக்குப் பதிலாக இயற்கை அல்லது செயற்கை செக்ஸ் ஹார்மோன்களை செலுத்துவதுதான் இந்த தெரபியின் முக்கிய அம்சம்.

*

மாத்திரைகள், பேட்ச்சுகள் மற்றும் ஜெல் வடிவில் இதை உட் கொள்ளலாம். இதில், மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் குறைக்கும் எஸ்ட்ரோஜன் ஹார்மோன் இருக்கும். இது பெண்களுக்கு பெரும் வரமாக அமைந்துள்ளது.

*

மன கட்டுப்பாட்டை இந்த தெரபி அதிகரிக்கிறது, எலும்பின் பலத்தையும் கூட்டுகிறது, இயல்பான நிலையில் நமது உணர்வுகளும், உடலும் இருக்க உதவுகிறது.

*

மகப்பேறு மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின் பேரில்தான் இந்த தெரபியை எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது 6 மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை இந்த தெரபியை எடுத்துக் கொள்ளலாம்.

*

இந்த தெரபியை எடுத்துக் கொள்வதை விட மிக முக்கியமானது நமது மன நிலையை இயற்கையாகவே நமது சூழ்நிலைக்கேற்ப மாற்றிக் கொள்வதுதான்.

*

உடலுறவு மட்டுமே சந்தோஷம் தரும் விஷயம் என்ற முடிவுக்கு வந்து விடாமல், உடல் ஸ்பரிசங்கள், தித்திக்கும் முத்தம், நெருக்கமான அன்பு உள்ளிட்ட விஷயங்களும் நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் என்று எண்ண வேண்டும்.

*

காதலையும், அன்பையும் வெளிப்படுத்த உடலுறவு மட்டுமே வடிகால் என்ற எண்ணத்தை விட வேண்டும். பரஸ்பரம் நம்பிக்கை, மாறாத அன்பு, உணர்வுகளுக்கு தரும் மதிப்பு ஆகியவையும் கூட கணவன், மனைவியரிடையே அன்பையும், காதலையும் இறுக்கமாக வைத்திருக்க உதவும்.



***
நன்றி தற்ஸ் தமிழ்
***




"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நாம் என்றும் நலமாக வாழ.....

சாதாரண வாழ்க்கை முறையில் நாம் செய்துகொள்ளும் எளிய மாற்றங்களும் நம்மை நோயின்றி நீண்ட காலம் வாழவைக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.



நல வாழ்வு குறித்து சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்று, உப்பைக் குறைத்தால் பல வியாதிகள் குறையும் என்கிறது.


*

1. உடல் நலமுள்ள ஒருவர் தினமும் 6 கிராமிற்கு குறையாமல் உப்பு சேர்க்கிறாராம். இந்த அளவை 3 கிராமாக குறைத்துக் கொண்டால்இரத்த அழுத்த வியாதி வராது.

*

2. பக்க வாத நோயை 13 சதவீத அளவில் கட்டுப்படுத்தும். இதய வியாதியை 10 சதவீதம் குறைக்குமாம்.

*

3. ஒரு கோப்பை காபி அல்லது டீக்கு 2 தேக்கரண்டி அளவு சர்க்கரை சேர்க்கிறோம். இதை ஒரு கரண்டியாக குறைத்துக் கொண்டால் தினமும்30 கிராம் சர்க்கரை மிச்சம் பெறும்.

*

4. ஆண்டுக்கு 32 ஆயிரம் கலோரிகள் உடல் எடையில் குறையும். இதனால் உடல் பருமன் மற்றும் பலவியாதிகளை தடுக்கலாம்.

*

5. கொழுப்புடன் ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட குறைந்தவிலை பிஸ்கட், கேக், மாவுப்பண்டங்களை தவிர்க்க வேண்டும். இதனால் இதய வியாதிகள் வராமல் தடுக்கலாம்.

*

6. அசைவம் சாப்பிடும் முன்பு சிறிது காய்கறி சாப்பிட்டால் அதிகப்படியான கலோரிகள் கட்டுப்படுத்தப்படும்.

*

7. தொடர்ந்து காய்கறிகள் சேர்த்து வந்தால் மார்பகப் புற்றுநோய் 21 சதவீத அளவு மட்டுப்படும்.

*

8. நாம் நலமான வாழ்வுக்கு சின்னச்சின்ன மாற்றங்களைச் செய்து கொள்ளலாமே!


***
நன்றி - தினத்தந்தி.
***



"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net