Monday, April 18, 2011

JOIN MY NEW YAHOO GROUP



courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Saturday, April 16, 2011

இருமலுக்கு மருந்து



தேவையானவை:

சுக்கு - 10 கிராம்
மிளகு - 10 கிராம்
திப்பிலி - 10 கிராம்
கடுக்காய்த் தோல் - 10 கிராம்
நெல்லி வற்றல் - 10 கிராம்
தான்றிக்காய்த் தோல் - 10 கிராம்
அக்கிரகாரம் - 10 கிராம்
சிற்றரத்தை - 10 கிராம்
அமுக்கிராவேர் - 10 கிராம்
கண்டங்கத்திரி வேர் - 10 கிராம்
குப்பைமேனி வேர் - 10 கிராம்
ஆடாதொடை வேர் - 10 கிராம்
தூதுவளை வேர் - 10 கிராம்
துளசி வேர் - 10 கிராம்
பசும்பால் - 100 மி.லி.


செய்முறை

சுக்கைத் தோல் நீக்கவும். மிளகை இளம் வறுவலாக வறுத்து எடுக்கவும். திப்பிலியையும் ஒன்றிரண்டாக உடைத்து இளம் வறுவலாக வறுத்து எடுக்கவும்.


கடுக்காய்த் தோலை வெய்யிலில் காய வைத்துக் கொள்ளவும். நெல்லி வற்றலில் உள்ள விதைகளை விலக்கவும். அதிமதுரத்தைத் தட்டி ஒரு மண் சட்டியில் போட்டு 100 மி.லி.



பசும்பாலை ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து எடுத்து உலர்த்திக் கொள்ளவும். சிற்றரத்தையைத் தட்டிக் கொள்ளவும். அமுக்கிரா வேரைத் தட்டிக் கொள்ளவும்.


கண்டங்கத்திரி வேர், குப்பைமேனி வேர், ஆடா தொடை வேர், தூதுவளை வேர், துளசி வேர், இவைகளை நன்கு உலர்த்திக் கொள்ளவும்.


எல்லாச் சரக்குகளையும் ஒன்றாகப் போட்டு இடித்துச் சலித்துக் கொள்ளவும். சலித்த தூளை ஒரு மண் பானையில் போட்டு மண் தட்டால் மூடி காற்றுப் புகாமல் துணியால் கட்டி 3 நாட்கள் வைத்திருக்கவும். பின்பு மருந்தை எடுத்துக் கண்ணாடிப் புட்டியில் பத்திரப் படுத்தவும்.

***

மருந்துண்ணும் முறை

காலை உணவுக்கு 1 மணி முன் 1 தேக்கரண்டித் தூளை 1 தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கலந்து உட்கொள்ளவும்.


மாலை 6 மணி அளவில் 1 தேக்கரண்டித் தூளுடன் 1 தேக்கரண்டி பனை வெல்லத்தைக் கலந்து 7 நாட்கள் சாப்பிடவும்.

***

கண்டிப்பாக நீக்க வேண்டியவை

உருளைக் கிழங்கு, கடலை வகைகள், புளிக் குழம்பு, தயிர், இளநீர், குளிர்ந்த பானங்கள், மாமிச உணவு. மது வகைகளையும் நீக்கவும்.


***


சிறப்பு உணவு


மிளகுப் பொங்கல், மோர், தேன், நெய், இளங்காய்கள், இடியாப்பம், இட்லி, புழுங்கலரிசிச் சாதம், வெந்நீர்.

***


குறிப்பு

குழந்தைகளுக்கு இருமல் ஏற்பட்டால் 1 தேக்கரண்டித் தூளை 4 பங்காக்கி 1 பங்கை 1 தேக்கரண்டி தேனில் குழைத்துக் கொடுக்க வேண்டும்.


***
thanks iNaiyam
***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தினமும் காலையில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.



அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்:

1. நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

*

2. இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.

*

3. வயிற்றுப் புண் குணமாகும்.

*

4. இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.

*

5. நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

*

6. சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.

*

7. நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.

*

8. மலச்சிக்கல் நீங்கும்.

*

9. புற்று நோய்க்கு நல்ல மருந்து.

*

10. உடல் இளைக்க உதவும்

*

11. இரவில் நல்ல தூக்கம் வரும்.

*

12. பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.

*

13. மூட்டு வலி நீங்கும்.


*

14. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

*

15. நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.

*

16. அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.

*

17. அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம். கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது.

*

18. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.

*

அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.


***
thanks இணையம்
***



"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அல்சர் - (குடல் புண் ) -- Dr.அம்புஜவல்லி

'அல்சர்' - சில உண்மைகள்


வயிற்றிலே ஒன்றும் இல்லை என்ற மாயத் தோற்றமும் பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்ச்சியும் தோன்றுகிறதா? மார்புப்ப பகுதியில் எரிவது போன்ற உணர்வு உள்ளதா? வயிற்றிலேருந்து புளிப்புச் சுவையான நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதா? இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்குகுடல் புண் இருக்கலாம்.

***

குடல் புண் என்றால் என்ன?


இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற்பகுதியில் ஏற்படும் புண் அல்லது காயத்தை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன.

*

இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டு. இதை அமில குடல் புண்நோய் என்றும் அழைக்கிறோம்.

***

புண் எதனால் ஏற்படுகிறது?


குடல் புண் தோன்றுவதற்கரிய காரணங்கள் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை இருப்பினும் புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.

*

சாலிசிலேட் மருந்துகள், ஆஸ்பரின் முதலான வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள், வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் போன்ற மருந்துகளின் காரணமாகவும் குடல் புண் வருகிறது.

*

செரிமான தொகுதியில் எங்கு புண் ஏற்படுள்ளது என்பதைப் பொருத்து குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1) வாய்வுக் கோளாறால் ஏற்படும் குடல் புண் .

2)சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.

இரண்டு வகைகள் இருப்பினும் இரண்டுக்கும் உரிய நோய்க் குறிகள் பெரும்பாலும் ஒரே மாதரியானவை.



குடற்புண் இருப்பதை அறிவது எப்படி?

காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாகக் கொள்ளலாம்.

*

இந்தப் பகுதியில் ஏற்படும் அசெளகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம். சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது.

*
அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். சட்டத்துக்கு உட்பட்டதுபோல் இவ்வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாகக் காணப்படுகிறது.

*

சில நேரங்களில் அமில நீரானது வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம், வலி அதிகம் ஏற்படுவதே இல்லை.

*
ஆனால் உடல் நலக்கேடு, அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும். இந்த மாதிரியான அசெளகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒருநபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார். என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும்.

*

சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.

*

சிலருக்கு இவ்வலி, குறிப்பிட்ட இடைவெளிவிட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாகக் கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம்.

*

குடல் புண்ணுக்க மருத்துவம் செய்யாவிட்டால்...
குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யாவிட்டல், ரத்தக் கசிவும் சமயத்தில் உதரப் போக்கும் ஏற்படும். ரத்தக் கசிவின் காரணமாக, அரைத்த காபிக் கொட்டை போன்று கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுப்பார், வலி நிவாரணியான ஆஸ்பரின் போன்றவற்றை சாப்பிட்டால் மிக மோசமான ரத்தப் போக்கு ஏற்படும். அதிகமான ரத்தப் போக்கோ அல்லது ரத்தக் கசிவோ மிகவும் அபாயகரமானதாகும்.

*

இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புக்கள் அனைத்தும் நனைந்து விடுகின்றன.

*

ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுகிறது. அதனால், வயிற்று அறை தோல்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதை உடனடி அறுவைச் சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும்.

*

சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது.
*
வயிற்றுத் தடையையும் அறுவைச் சிகிச்சையால்தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
*
மருத்துவர் குடல்புண் இருப்பதைக் கண்டறிந்தால், சில மருந்துகளை சிபரிசு செய்வார். அப்போது எதைச் செய்ய வேண்டும். எதைச் செய்யக் கூடாது என்பதையும் கூறுவார்.

அவைகள் பின்வருமாறு.

செய்யக்கூடாதவை

1. புகைபிடிக்கக் கூடாது.

2. மது, காபி பானங்களை குடிக்கக் கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது.

3. அதிகமாகச் சாப்பிடக்கூடாது. பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.

4. சாப்பிட வேண்டிய உணவுகளைத் தவிர்க்கக் கூடாது.

5. சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோ, வளைவதோ கூடாது. அப்படிச்செய்தால் சாப்பிட்ட உணவு தொண்டைக் குழிக்குள் வந்து சேரும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

6. இரவில் அதிக நேரம் விழித்திருக்கக் கூடாது.

7. மனநிலையை தடுமாற விடக் கூடாது.

8. அவசரப்படக் கூடாது.

9. கவலைப்படக் கூடாது.

10. மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்தக் கூடாது.

*

செய்ய வேண்டியவை

1. குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும்

2. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். அதிக வாழைப் பழங்களைச் சாப்பிட வேண்டும். தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையூட்டிய லஸ்ஸி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

3. மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.

4. இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இருக்கமாக உடை அணியக் கூடாது.

5. மருத்துவரின் ஆலோசனைப்படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்திதிக் கொள்ளலாம்.

6. யோகாசனம், தியானம் முதலியவற்றைப் பயில வேண்டும்.

7. எப்போதும் சந்தோஷமான பேச்சுக்களிலும் கேளிக்கைகளிலும் ஈடுபடவேண்டும்.

8. அலுவலக வேலைகளை அலுவலகத் தோடேயே விட்டுவிட வேண்டும்.

9. முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும்.
10. சுகாதார முறைகளைப் பின்பற்றி குடல் புண் வருவதைத் தவிர்க்க வேண்டும்.

***

குடல் புண்ணுக்கு மருத்துவம் என்ன?

அனேக மருத்துவர்கள் பூரண ஓய்வையும் அதிகமான தூக்கத்தையும் சிபரிசு செய்கிறார்கள். தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது. எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், கவலைகள் குடல் புண்ணை அதிகப்படுத்தும், புகை பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது முதலியவற்றை விட வேண்டும். அமிலத்தை நடுநிலையாக்கும் மருந்துகளை அடிக்கடி சாப்பிட வேண்டும்.


தூக்க மருந்துகளையும் தேவைப்பட்டால் மன அமைதி தரும் மருந்துகளையும் சாப்பிட வேண்டும். இவை தவிர, தற்காலத்தில் புரோபான்தளின், சிமிடிடின், ராணிடிடின், ·பாமாடிடின், சுரால்பேட், முதலியவும் பயன்படுகிறது, சிமிடிடின்தான் அதிகம் சிபரிசு செய்யப்படுகிறது. எந்த மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் சாப்பிட வேண்டும்.

***

குடல் புண் உள்ளவர்களுக்கு உ¡¢ய ஆகாரம் என்ன?

மென்மையான உணவு தேவை என்பது பற்றி சந்தேகம் எழுந்துள்ளது. பொரித்த அல்லது தாளிதம் செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. அனேக நோயாளிகள் இப்படிப்பட்ட உணவு வகைகளை எவ்விதப் பிரச்சினையும் இன்று ஏற்றுக் கொள்கிறார்கள்.

*
இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளைக் கீழே காணலாம்.

1. சத்தான சரிவிகித உணவு.

*

2. குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம்.

*

3. காபி, மது, காற்று அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும். டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. இருப்பினும் பால் கலக்காத டீயைச் சாப்பிடக் கூடாது. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்தக் கொள்ள வேண்டும்.

*

4. வயிற்றில் கோளாறை உண்டுபண்ணும் உணவு எனத் தெரிந்தால் அவற்றை வெறுத்து ஒதுக்கிவிட வேண்டும். இவ்வுணவானது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமானதாக இருக்கும். ஆகவே அவரவர் அனுபவத்தால் தீமை செய்பவை எவை எனத் தெரிந்து ஒதுக்கிவிட வேண்டும்.

*

5. சாப்பிடும் உணவின் சூடு கூட முக்கியமானதாகும். மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன மிகவும் நன்மை பயக்கும்.

*

6. பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன. ஆகவே அதிக அளவில் இவைகளைச் சாப்பிடலாம்.

*

7. பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசெளகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது. பால் சாப்பிடுவதை யாரும் சிபரிசு செய்வதில்லை.


***
by- Dr.அம்புஜவல்லி , தஞ்சாவூர்
thanks Dr
***




"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

உடலில் உள்ள வலிகளை அகற்றும் உணவு முறை

மூட்டு வலி நீங்க

(முழங்கை, முழங்கால், கணுக்கால்)

முடக்கத்தான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும். வலியிலிருந்து விடுபடுவது உறுதி.


சாப்பிடும் விதம்

முடக்கத்தான் கீரையில் உள்ள காய், இலைகளைப் பறித்து நன்கு சுத்தம் செய்து, கழுவி அரைத்து வைத்துக் கொள்ளலாம். பிரிஜ்ஜில் வைத்துக் கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி சாப்பிடலாம்.


சுத்தம் செய்தபின் தண்ணீர் வடியும் வரை நிழலில் விரித்து காய வைத்து, மிக்ஸியில் நைஸாக அடித்து சலித்துக் கொள்ளவும். இதை பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவும். தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குணமாகும்.
நன்றாக குணமான பிறகு, வாரம் 3 முறை முடக்கத்தான் கீரையை உட்கொண்டால் மீண்டும் வலி வராது.


தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்கள் முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள். நாமும் அதைக் கடைப்பிடித்தால் நமக்கு மூட்டு வலிகள் வராது.


***


குறுக்கு வலி நீங்க

நல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் குறுக்கு வலி குணமாகும்.

யோகாசனங்களில் தனுராசனம் என்ற ஆசனம் இருக்கிறது. இந்த தனுராசனம் செய்யும் பயிற்சியை பழகிக் கொள்ள வேண்டும். இது குறுக்கு வலியை குணப்படுத்தும்.

நல்லெண்ணெய்யை காய வைத்து, சூடேறியதும் இதில் 10 பல் பூண்டுகளைப் போட்டு, பூண்டுகள் சிவந்ததும் இறக்கி ஆற வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய்யை வலிக்கின்ற இடத்தில் நன்றாக தேய்த்துவிட வேண்டும். 3 மணி நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும். இவ்விதம் 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் குறுக்கு வலி குணமாகும்.

*


சாப்பிடும் விதம்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 பூண்டுகளை சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

எலுமிச்சைச் சாற்றில் சிறிது உப்பு போட்டு தினமும் குடித்து வந்தால் குணமாகும்.

பச்சை உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர வேண்டும். வலிக்கும் இடத்தில் பச்சை உருளைக் கிழங்கை அரைத்துப் பற்று போடவேண்டும்.

குறுக்கு வலி அதிகமாக இருக்கும் நேரத்தில் கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்த்து, பச்சைக் காய்கறிகள், சாலட் சாப்பிடலாம். எண்ணெய் சேர்க்காமல் வேக வைத்த காய்கறிகளையும் சாப்பிடலாம்.




முழங்கால் வலி நீங்க

நல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் முழங்கால் வலி குணமாகும்.

*

சாப்பிடும் விதம்

பச்சை உருளைக்கிழங்கை 4 விரல்கள் அளவு சாப்பிடலாம்.

ஒரு சிறிய உருளைக்கிழங்கை கழுவி மிக்ஸியில் போட்டு சாறு எடுத்துக் குடிக்கலாம்.

ஒரு உருளைக்கிழங்கை சாலட் செய்து சாப்பிடலாம்.

லச்சக்கொட்டைக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி, குறுக்கு வலி குணமாகும்.
இந்தக்கீரையை கழுவி, நறுக்கி, பருப்பு போட்டு பொரியல் செய்து சாப்பிடலாம். பொடியாக நறுக்கி கொத்துக்கறியுடன் போட்டு சமைத்துச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

மூட்டு வலிக்கு முட்டைக்கோஸ் சாற்றை அருந்தலாம். வலி ஏற்பட்டுள்ள மூட்டுக்களில் புதிய முட்டைக்கோஸ் இலைகளை அரைத்துப் பற்றுப் போடலாம்.


***


தலைவலி நீங்க

பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அரை தேக்கரண்டி விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சன் போட்டு, பெட்ஷீட்டால் மூடி ஆவி பிடித்தால் தலைவலி பறந்துவிடும்.

*

சாப்பிடும் விதம்

அரை டம்ளர் வெந்நீரில், அரை எலுமிச்சம்பழம் பிழிந்து 2 கல் உப்பு போட்டு குடித்தால் தலைவலி குணமாகும்.
காய்ச்சலும் தலைவலியும் சேர்த்து வந்தால் கடுகை அரைத்து உள்ளங்காலில் பற்றுப் போட்டால் தலைவலி, காய்ச்சல் நீங்கி விடும்.

நீண்ட நாட்களாக ஒற்றைத் தலைவலி தொல்லை இருந்தால் தினமும் 1 அவுன்ஸ் திராட்சை பழரசம் (50 மில்லி) குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.

நொச்சி இலையை வதக்கி அதில் சிறிதளவு உப்பைத் தூவி இளஞ்சூட்டில் நெற்றியில் பற்றுப் போட்டால் குணமாகும்.


***



காலில் வீக்கம் நீங்க

நல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் காலில் வீக்கம் குணமாகும்.

*

சாப்பிடும் விதம்

தூதுவளை இலைகளையும், நற்சுங்கள் இலைகளையும் எடுத்து, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து அரைத்த விழுதை எடுத்து சுண்டக்காய் அளவில் மாத்திரை போல் செய்து நிழலில் உலர்த்தி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும். 3 மாத்திரைகளை 1 டம்ளர் பசும்பாலில் கரைத்து, இத்துடன் கற்கண்டு சேர்த்து 1 வாரம் வரை 2 வேளைகள் குடிக்க வேண்டும். இவ்விதம் செய்தால் கால் வீக்கம் குணமாகும்.


***
thanks tamil.
***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net