Saturday, April 9, 2011

மொபைல் போன்: சில ஆலோசனைகள்


மொபைல் போன் தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிர்களால் நம் மூளை பாதிக்கப்படும் எனவும் அதெல்லாம் இல்லை எனவும் எதிர்மறையான விவாதங்களும் அது குறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இருப்பினும் மொபைல் இயங்கும் போது கதிர்வீச்சு இருப்பது என்னவோ உண்மைதான். எனவே அது பாதிப்பினை ஏற்படுத்துகிறதா என்ற விவாதத்திற்குள்ளே போகாமல், சற்று பாதுகாப்பாகப் பயன்படுத்தலாமே.
இயலுமானால் உங்கள் உடம்பி லிருந்து மொபைல் போனைச் சற்று தூரத்திலேயே வைத்துப் பயன்படுத்தவும். இதனால் கதிர் வீச்சு உங்கள் உடம்பை அடைவது குறையும். இதற்கு ஹேண்ட்ஸ் பிரீ செட்கள் கிடைக்கின்றன. போனைத் தள்ளி வைத்து அதனை வயருடன் இணைந்த அல்லது வயர் இல்லாமல் இணைப்பு ஏற்படுத்திப் பேசலாம், அழைக்கலாம்.
மொபைல் போனை அதிகம் மூடி வைக்க வேண்டாம். இதனால் சிக்னல்கள் வந்தடைவது சற்று தடுக்கப்படும். சிக்னல்களை எப்படியும் அடையவேண்டும் என்ற முயற்சியில் போனில் கதிர்வீச்சு அதிகமாகும்.
பேசும்போது கைகளால் போனை அதிகம் மூடுவதும் இதே விளைவினை ஏற்படுத்தும். எனவே போனைக் கீழாக அதனை அதிகம் மூடாமல் பிடித்துப் பேசவும்.
போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும் போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்.
உங்களிடம் லேண்ட் லைன் அருகிலேயே உள்ளதா? அனைத்து தொடர்புகளுக்கும் அதனையே பயன்படுத்தவும். கதிர்வீச்சு முற்றிலுமாக இருக்காது. மொபைல் போனில் குறைவான காலம் பேசவும். அதிகம் பேச வேண்டும் என்றால் தரைவழி இணைப்பைப் பயன்படுத்தவும்.
கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுகையில், ஏன் சைக்கிள் ஓட்டுகையிலும் மொபைல் போனைப் பயன்படுத்தவே, பயன்படுத்தவே கூடாது. நம் கவனம் நிச்சயமாய் திசை திருப்பப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. கட்டாயம் பேச வேண்டும் என்றால் வாகனத்தினை ஓரமாக நிறுத்திப் பேசவும்.
பல இளைஞர்கள் மொபைல் பேசுவதற்கு இடையூறாக இருக்கிறது என்று ஹெல்மட் போடாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். பாருங்கள், மொபைல் போன் இயங்காமலேயே எவ்வளவு ஆபத்தினைத் தருகிறது.
அதிகமாக எலக்ட்ரிக்கல் அல்லது டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும் இடங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். உங்களுக்கு சிக்னல் கிடைப்பது சிக்கலாவதுடன் அந்த சாதனங்கள் இயக்கமும் தடைபடலாம். மருத்துவ மனைகளில் இத்தகைய சாதனங்கள் உள்ள இடங்களில் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவும். அந்த சாதனங்கள் சரியாகச் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். கம்ப்யூட்டர் மானிட்டர் அருகே இருக்கும் மொபைல் போனுக்கு அழைப்பு வருகையில் என்ன மாதிரி அலை வீச்சு உள்ளது என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அது போல மருத்துவ மனை சாதனங்களில் ஏற்பட்டால் அது சரியான முடிவுகளை மருத்துவருக்குத் தராதே.
விமானத்தின் உள்ளேயும் மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு வந்தால் மட்டுமே பயன்படுத்தவும். மற்ற நேரங்களில் ஸ்விட்ச் ஆப் செய்து வைப்பது நல்லது.
சிறுவர்கள் அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதனை அனுமதிக்காதீர்கள். அவர்களை ஏன் கதிர்வீச்சுக்கு உள்ளாக்குகிறீர்கள்.
கர்ப்பிணிப் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்க வேண்டும் என செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. வயிற்றில் வளரும் குழந்தையை கதிர்வீச்சு பாதிக்கும் என்பதாலேயே இந்த ஆலோசனை.
மொபைல் போனில் பேசுகையில் உங்கள் அருகே இருக்கும் நண்பர்கள் குறித்து சிறிது சிந்திக்கவும். அவர்களுக்கு நீங்கள் பேசுவதில் நிச்சயம் அக்கறை இருக்காது. எனவே சற்று தள்ளிச் சென்று அவர்களின் வேலை கெட்டுப் போகாத வகையில் பேசவும்.


http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN



courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இயற்கை பழச்சாறுகளின் மகத்துவம்..

தர்பூசணிப்பழச் சாறு:
கோடையின் கொடுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இப்பழத்தை உண்பது இயல்பு. ஆனால் சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும்.
நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்.
அத்திப்பழச்சாறு:
அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை என்று பழமொழி இருந்தாலும் கூட அத்திப்பழத்தை உபயோகிக்கலாம். அத்திப்பழத்தை சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய் பாலும் தேனும் கலந்து அருந்தலாம்.
இச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலனை தரும்.
அத்திப்பழமும் தேனும் கலந்து கல்உப்புடன் சேர்த்து உண்ண ஆரம்பகாலச் சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்..
ஆப்பிள் பழச்சாறு:
ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம் ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகை குணமாகும்.
மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.
திராட்சைச் சாறு:
திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்), காமாலை, வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும்.
திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.
ஆரஞ்சுச் சாறு:
தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம்.
இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாகும். ஆரஞ்சுச் சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.
சிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுக்க குடல் பலம் பெருகும். இச்சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்தும் அருந்தலாம்.

எலுமிச்சைச் சாறு:
பாத்திரங்களில் உள்ள அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சை பயன்படுவதில்லை. நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும் பயன்படுகிறது. எலுமிச்சைச் சாறு அத்துடன் தேன் கலந்து அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும்.
தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை அருந்தும்போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.
இளநீருடன் கலந்து அருந்துவதால் டைபாய்டு நோய் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய் குணமாகும். வெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து அருந்த எலுமிச்சைச் சாறுடன் அருந்துவதால் காலரா குணமாகும்.
உடல் களைப்புகள், கை, கால் கனுக்களில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சைச்சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம்.
பழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சைச் சாறும் தேனும் கலுந்து குழைத்து உண்ண மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராது தடுக்கலாம்.
தக்காளிச் சாறு:
தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்கள் குணமாகும்.
மேலும் தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைப்படுவதற்கு ஏற்ப பல விதமான நோய்களை குணமாக்கும் ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகான சத்துடன் விலை மலிவாக கிடைக்கும்.


http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Tuesday, April 5, 2011

கிராம்புவின் ( இலவங்கம் ) மருத்துவ குணங்கள்

அன்றாட உணவில் நாம்சேர்க்கும் பொருட்கள் அனைத்தும் மருத்துவக் குணங்களைக் கொண்டவை. நோய் வரும்முன் காத்து நீண்ட ஆயுளுடன் வாழ இவையும் பக்கபலமாக உதவிவருகின்றன.



ஒவ்வொரு வீட்டின் சமையல் கூடங்களிலும் சீரகம், சோம்பு, கடுகு, வெந்தயம், கருவாப்பட்டை, கிராம்பு ஏலம் என ஒரு மருத்துவக் களஞ்சியமே அடங்கியிருக்கும்.

*

இவற்றை அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடும் நாம் அதன் மருத்துவ பயன்களைப் பற்றி ஏனோ தெரிந்துகொள்ளவில்லை. ஆனால் நம் முன்னோர்கள் இவற்றைப் பற்றி நன்றாக தெரிந்திருந்ததால்தான் அவற்றை தினமும் உபயோகப்படுத்தவே இவற்றை சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் வைத்தார்கள்.

*

கிராம்பு இந்தோனேசியாவில் 80 சதவிகிதம் உற்பத்தி செய்யப்பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

*

இந்தியாவில் கேரளம், தமிழ்நாடு, வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் விளைகிறது.

*

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. இதிலிருக்கும் சுறுசுறு தன்மையானது வாய்க்கு புத்துணர்வைக் கொடுக்கிறது.

*

இந்திய சமையலில் கிராம்பு அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. பிரியாணி உணவில் அதிகம் சேர்க்கிறார்கள். சீன வகை உணவிலும் அதிகம் சேர்க்கப்படுகிறது.

***

கிராம்பில் உள்ள சத்துக்கள்:


கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.

*

கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது.

*

இதிலிருக்கும் சுறுசுறு தன்மையானது வாய்க்கு புத்துணர்வைக் கொடுக்கிறது. இதற்கு அஞ்சுகம், உற்கடம், கருவாய்க்கிராம்பு, சோசம், திரளி, வராங்கம் என்ற பல பெயர்களும் உண்டு.

***

மருத்துவ குணங்கள்:



1. பல் வலி, தேள்கடி, விசக்கடி, கோழை, வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றைக் குணமாக்கப் பயன்படுகிறது.


2. வயிற்றில் சுரக்கும் சீரண (Hcl) அமிலத்தைச் சீராக்கும். ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை ஊக்குவிக்கும். இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.


3. உணவில் ஏற்படும் அஃபலாக்சின்(en:Aflatoxin Aflatoxin) என்ற நஞ்சை, கிராம்பிலுள்ள யூகினால் (en:Eugenol Eugenol) அழிக்கும்.

4. antioxident,இரத்தத்தை நீர்த்துப் போகச்செய்யும், இரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைக்கும்.


5. வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க உதவும்.


6. உடலைப் பருமனடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கும், சூட்டைச் சமப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் உதவும்.


7. கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.


8. நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.


9. சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.


10. கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.


11. முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.


12. கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.


13. 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.


14. தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.


15. கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.


16. கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.


17. சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம்.


18. வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.


19. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.


20. உடலைப் பருமனடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.


21. ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.


22. கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.


23. கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

***

மேலும் சில துளிகள்:




1. பசியைத் தூண்ட

சிலருக்கு குறைந்த அளவே உணவை சாப்பிட்டாலும் செரிமானமாகாமல் இருப்பதுபோல் தோன்றும். இவர்களுக்கு பசியே இருக்காது. இவர்கள் தினமும் உணவில் கிராம்பு சேர்த்துவந்தால் செரிமான சக்தி அதிகரித்து நன்கு பசியெடுக்கும்.

*

2. பித்தம் குறைய

வாதம், பித்தம், கபம் என்ற முக்குற்றத்தால் தான் மனித உடலின் செயல்பாடுகள் அனைத்தும் அமைந்துள்ளன. இதில் எதன் நிலை மாறினாலும் உடலில் பாதிப்புகள் ஏற்படும். இவற்றில் அதிகம் நிலைமாறுவது பித்த நீர்தான். பித்த அதிகரிப்பு ஏற்பட்டு உடலில் பல நோய்கள் உண்டாகும். இந்நிலை மாற கிராம்பு சிறந்த மருந்தாகும்.

பித்தம் அதிகம் உள்ளவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்று சாறு இறக்கினால் பித்தம் குறையும்.


*

3. வாந்தி நிற்க

பேருந்துகளில் பயணம் செய்பவர்களக்கு சில சமயங்களில் வாந்தி ஏற்படும். மலை ஏறுபவர்கள் சிலக்கு வாந்தி உண்டாகும். இவர்கள் கிராம்பை வாயில் போட்டு இலேசாக மென்று சாறை உள்ளே இறக்கினால் வாந்தி நிற்கும்.

*

4. வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாக

வயிற்றில் புண் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும். இவர்கள் கிராம்பை அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

*

5. வறட்டு இருமல் நீங்க

வறட்டு இருமல் உள்ளவர்கள் கிராம்பு பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி அருந்தி வந்தால் வறட்டு இருமல் நீங்கும்.v சீன மருத்துவத்தில் கிராம்பின் பங்கு அதிகம். சிறுநீரகம், மண்ணீரல், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கிரம்பையே அதிகம் பயன் படுத்துகின்றனர்.

*


6. தலைபாரம் நீங்க

கிராம்பை நீர்விட்டு அரைத்து நெற்றியிலும் மூக்குத் தண்டின் மீதும் பற்று போட்டு வந்தால் தலையில் கட்டிய நீர் இறங்கி தலைபாரம் குறையும்

*

7. தொண்டைப்புண் ஆற

கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைத்து சாறு இறக்கினால் தொண்டைப்புண் ஆறும். பற்களின் ஈறு கெட்டிப்படும்.


கிராம்பு, நிலவேம்பு இவற்றை சம அளவாக எடுத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் உடல் அசதி நீங்கும். சுரத்திற்குப் பின் உண்டாகும் களைப்பைப் போக்கும்.

கிராம்பு, சுக்கு வகைக்கு 5 கிராம் எடுத்து அதனுடன் ஓமம், இந்துப்பு வகைக்கு 6 கிராம் எடுத்து சூரணம் செய்து தேனுடன் கலந்து கொடுத்தால் உணவு நன்றாக செரிமானமாகும்.

*

8. தோலில் உண்டாகும் படைகளுக்கு

கிராம்பை நீர்விட்டு அரைத்து படைகள் உள்ள இடத்தில் பற்றுப் போட்டால் தோலில் உண்டான படைகள் மறைந்துபோகும்.

**

9. கிராம்புத் தைலம்

கிராம்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயே கிராம்பு தைலம் என்று அழைக்கப்படுகிறது. இது நல்ல மணமுள்ளதாக இருக்கும். நாவில் பட்டால் உடனே சிவக்கும். இந்த கிராம்பு தைலத்தை பஞ்சில் நனைத்து பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் பல்வலி குறையும்.

*

10. ஆஸ்துமாவை நீக்கும் கிராம்பு:

* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.


* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.


* சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.


11. பல்வலி நீங்க

பல் வலியால் அவதிப்படுபவர்கள் வலி நிவாரண மாத்திரைகளை உபயோகப்படுத்துவார்கள். இது தொடர்ந்தால் பல பக்க விளைவுகள் உண்டாகும். சொத்தைப்பல் மற்றும் பல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கிராம்பே உடனடி நிவாரணி.

கிராம்பை நசுக்கி பல் வலியுள்ள இடத்தில் வைத்தால் பல்வலி உடனே குணமாகும். ஆனால் இது நிரந்தர தீர்வல்ல. உடனே மருத்துவரை அணுகி தகுந்த மருத்துவம் செய்துகொள்வது நல்லது.


பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும்.

***
நன்றி விக்கிபீடியா
நன்றி நக்கீரன்
***



"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நமக்கு எப்போது வயது முதுர்ச்சி துவங்குகிறது ?

மனித வாழ்வில் வயது நிலையானது இல்லை. மனித உடலின் அடிப்படை அலகு செல் ஆகும். பல ஆயிரம் செல்களின் தொகுப்பே திசுக்களாகும். ஒரேவகையான செல்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து குறிப்பிட்ட உறுப்புகளை தோற்றுவிக்கும்.



திசுகள் குறிப்பிட்ட காலத்தில் அழிவதும் தோன்றுவதும் இயற்கையாக நடக்கும் நிகழ்வாகும். வயது முதிர்ச்சி வரவர புதிய திசுக்கள் தோன்றுவது குறைவாக நடைபெறுகிறது.

*

உடல் திறன், நல் உணவு, உழைப்பு,சுற்றுச்சூழலின் தாக்கம் இந்நடவடிகையில் பெறும் பங்குவகிக்கிறது.

*

வயது முதிர்ச்சி தவிர்க்க முடியாதபடி படிப்படியாக நடைபெறுகிறது. மொத்த உடல் செயலியக்கத்தில் 30வயதுக்கு மேலிறுந்தே மெல்லமெல்லமாக,கீழிறங்குமுகமாக செயல்பாடுகள் நடைப்பெற்று வருகிறது.

***

தசைகள் (30வயதிலிருந்து முதிர்ச்சி துவங்குகிறது )


1. தசை செல்களின் வலிமை கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது.

2. இதை தசைத்தன்மை இழப்பு(Sarcopenia) தன்மை 30 வயதிலிருந்தே துவங்குகிறது.

3. வளர்சிதை மாற்ற விகிதம் (Metabolic Rate) குறைந்து கொண்டே வருகிறது.

4. விளைவு உடல் சக்தி,கலோரியின் தேவை குறைவாகிறது. உடலில் எரிகப்படாத கொழுப்பு சக்தியின் அளவு கூடுகிறது.

5. இந்த உடல் இயக்க போக்கைத்தடுக்க/குறைக்க தொடர்சியான உடல்பயிற்சி நல்ல கைக்கொடுக்கும்.


***

மூளை (30 வயதிலிருந்து)


1. மூளைச்செல்லின் அடிப்படை அலகு நியுரான் ஆகும். மூளைச்சுறுக்கமே அதனை சுருங்கச்செய்து சிறியதாக்குகிறது.

2. குறிப்பிட்ட பகுதிகளில் நியுரான் செல்கள் குறைந்து அல்லது இரத்த ஓட்டம் மூளைக்கு செல்வது குறைய ஆரம்பிகிறது. பெரும்பாலானோர் அவர்களுடைய மதிநுட்பத்திறனில் சில மாற்றங்கள் ஏற்படுவதை உணர்வார்கள்.

3. நீண்ட நேரம் யோசிப்பது, கணக்கு போடும் திறனில் காலம் அதிகமாகுவது.

4. ஆனால் பெண்களுக்கு ஆண்களைவிட மூளைச்செயல் பாட்டில் காலம் கடந்தே ஆரம்பிகிறது.

5. காரணம் அவர்களுக்குள்ளே சுறக்கும் ஈஸ்ட்ரோஜன் ஆர்மோன் காரணமாகிறது.


***

கண்கள் (40 வயதிலிருந்து)


1. கண்ணிலுள்ள லென்சின் தன்மையில் மீள்நீட்சித்தன்மை குறைந்து தடிமனாகிறது. அதனால் பார்வையின் குவியும் தன்மை மாறுபடுகிறது.

2. குறைந்த வெளிச்சம் மற்றும் மஞ்சல் நிற ஒளியில் பார்க்கும் தன்மை கடினமாகிறது.

3. இதனால் கண்மணியின் ஒளியின் தன்மைக் கேற்ப மாறும் தன்மை மெதுவாகவே செயல்படுகிறது.

4. நரம்பு செல்களின் குறைவால் உற்று கவனிக்ககூடிய தோற்றம் பலவீனமடைகிறது.

5. கண்களில் லென்ஸ் திரவம், ஈரம் உலர்ந்து விடுவதால் கண்களில் வரட்சி பார்வையில் ஏற்படுகிறது.


***


காது (50 வயதுக்கிடையில்)


காது கேட்புத்திறனில் குறைகிறது. குழந்தை மற்றும் பெண்களின் குரல்களை கேட்புத்திறன் குறைவதை உணரலாம்.


***

இருதயம் (40 வயது முதல்)


1. பெருந்தமனித் தடிப்பு (Atherosclerosis) , இந்நிலை இருதயம் மற்றும் தமணி சுறுங்கி விரியும் தன்மை மெல்ல மெல்ல இழக்கிறது.

2. இதனால் இருதயம் இரத்தத்தை தள்ளும் செயலை கடினமாக செய்கிறது.

3. உறுப்புகளுக்கு இரத்தம் செல்லும் நிலை மெதுவாகவே நடைபெறுகிறது.

***


முடி (30வயது முதல்)


1. முடி வளைர்நிலை மெல்ல குறைகிறது. முடியின் மெல்லிய தன்மையாகி சுருங்கி ஒவ்வொரு முடியும் மாறுகிறது .

2. முடி உதிர்ந்து வழுக்கையாகிறது.

3. முடியில் உள்ள நிறமிகள் தன் நிறமியின் தன்மையை இழந்து வெள்ளை மற்றும் பழுப்பு நிறமாகிறது.


***


தோல் (25வயது முதல்)

1. வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கிறது.

2. நெகிழ்வு தன்மை, சுருங்கு தன்மை மெல்ல இழந்து சுருக்கம் தோன்றுகிறது.

3. சூரிய ஒளிபட தன் நிறத்தை மெல்ல இழகிறது.

4. இந்நிலையை குறைக்க நார்சத்து உள்ள உணவு சாப்பிடுதல், பிரனாயமா யோகா செய்வதின் மூலம் தடுக்கலாம்.


5. ( இதை படித்துவிட்டு நான் இளமையாகத்தான் இருகிறேன் என்றால் நான் பொறுப்பள்ள. உங்கள் நம்பிக்கைக்கு நான் குறுக்கே நிற்கப்போவதில்லை )

**

இக்கட்டுரை அடிப்படை ஆதாரம் சென்னை, டிகான் கிரானிகல் 08.03.2009 நாளிட்ட ஆங்கில நாளிதழில் டாக்டர் வி. ரவிந்தர நாத் ரெட்டி, அமெரிக அக்கடாமியின் வயது மூப்பு மருத்தவப் பிரிவு அவர்கள் எழுதியது )

***

நன்றி தோழமை

***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நொறுக்கு தீனி நமது உடலுக்கு நல்லதா? அல்லது... நமக்கு கேடா?

பொதுவாகவே எம்மிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. அதாவது தினமும் முறையே ஆரோக்கியமாக சாப்பிட வேண்டிய காலை,மதிய,இரவு உணவை உண்பதை தவிர்ப்பது அல்லது நேரம் தவறி சாப்பிடுவது.




ஆனால் நொறுக்கு தீனி என்றால் குளிர்சாதனப்பெட்டியில் அது இருந்த சுவடே இல்லாமல் ஆகும் வரை தொடர்ந்து சாப்பிடுவது.

*

இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் இவை உடலுக்கு நல்லதல்ல என்பது எமக்கு தெரிந்தும் உண்பது தான்.

*

அப்படி எம்மை மயக்கிய சில தீனிகளில் பின்வருவன அடங்கும்:

சொக்கிளட்
குளிர்களி (ஐஸ்கிரீம்)
பொரித்தவை (சிப்ஸ்)
மைக்ரோவேவில் வைத்த சோளம் (பொப் கோர்ன்)
டோனட்ஸ்
பேஸ்ற்றீஸ்
பிஸ்கட்ஸ்
இனிப்புகள்
நெய்யில் செய்த பண்டங்கள்


இவை அனைத்தும் நிச்சயம் தவிர்க்க/குறைக்க பட வேண்டியவை.

*

ஆனால் இவை இல்லாமல் வாழ்வதென்பது இலகுவான செயல் இல்லவே இல்லை. ஆனால் இதற்கு மாற்றீடாக சில பண்டங்களை நாம் உண்ணலம்.

*

ருசிக்கு ருசியும் ஆச்சு, நம்ம ஆரோக்கியத்தை கெடுக்காமல் இருந்த போலும் ஆச்சு.

***

நாம் பயப்படாமல் உண்ணக்கூடிய சில உணவுகள்:



உப்பு சேர்க்காத நட்ஸ்
கொழுப்பு குறைந்த யோகர்ட்
கரட்/கியூகும்பர்/செலரி போன்றவை hummus dip உடன்
வீட்டில் செய்த கொழுப்பு குறைந்த muffins
பழங்கள்
கொழுப்பு குறைந்த சீஸ் + அரிசி பிஸ்கட்

*

இதெல்லாம் வேண்டாம்..நான் முதல் லிஸ்டில் உள்ளவற்றை தான் உண்பேன் என அடம்பிடிப்பவரா நீங்கள்??

*
May God Bless You...


***
by ♥ தூயா
நன்றி தூயாவின்ட சமையல் கட்டு
***


"வாழ்க வளமுடன்"




courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net