Wednesday, February 23, 2011

மன்னிப்பு கேட்பாயா?

திரை அரங்கிற்கு தன நண்பர்களுடன் சென்ற ஒருவன் தன இருக்கையைக் கண்டுபிடித்து உள்ளே நுழையும்போது முன்னாள் அமர்ந்திருந்த ஒருவரின் காலை மிதித்து விட்டான்.மிதிபட்டவர் அவன் மன்னிப்பு கேட்பான் என்று எதிர் பார்த்தார்.அவன் தன நண்பர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான்.இடை வேளையின்போது வெளியே சென்று நண்பர்களுடன் திரும்பிய அவனுக்கு தன வரிசை எது என்று சரியாகத் தெரியவில்லை.முன்னால் அமர்ந்திருந்தவரிடம்,'சார்,படம் ஆரம்பிக்குமுன் நான் உள்ளே போகும்போது உங்கள் காலை மிதித்துவிட்டேனா?'என்று கேட்டான்.இப்போதாவது அவனுக்கு வருத்தம் தெரிவிக்கத் தோன்றியதே என்று எண்ணி அவர்,'ஆமாம்,'என்றார்.உடனே அவன் தன நண்பர்களிடம் சொன்னான்,''நாம் உட்கார்ந்திருந்தது இந்த வரிசை தான்.வாங்கடா!''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நடைபோடு

ஒரு நாள் மாலை.வீட்டின் முன் பகுதியில் முல்லா இங்கும் அங்கும் அமைதியின்றி  நடந்து கொண்டிருந்ததை அவர் மனைவி கவனித்து என்ன விஷயம் என்று கேட்டாள்.''பக்கத்து வீட்டுக்காரரிடம் வாங்கிய நூறு தினார் கடனை நாளைக்குத் திரும்பக் கொடுக்க வேண்டியுள்ளது.கையில் ஒரு தினார்கூட இல்லை.என்ன செய்வதென்றே புரியவில்லை.''என்றார் முல்லா.;அவரிடம் இந்த மாதம் தர முடியாது என்று சொல்லிவிட்டு வரவேண்டியதுதானே?' என்றார் அவர் மனைவி.மனைவியின்  அறிவுரையைக் கேட்டு பக்கத்து வீட்டுக்கு சென்றவர் திரும்ப  வரும்போது  உற்சாகமாக  இருந்தார் .மனைவி கேட்டார்,''நீங்கள் சொன்னதை அவர் ஏற்றுக் கொண்டாரா?''முல்லா சொன்னார்,''பாவம்,இப்போது அவன் அமைதியின்றி  வீட்டின் முன் பகுதியில் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருக்கிறான்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வரைபடம்

புத்த மத வேதங்களிலுள்ள கருத்துக்களைக் கொண்டு வரையப்பட்டஓவியம்  ஒன்றை ஒரு புத்த சந்நியாசி எரித்துக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்த ஒரு சீடர் அவரிடம் கேட்டார்,'குருவே,என்னே காரியம் செய்கிறீர்கள்?இந்த வேதன்களைத்தானே எப்போதும் எங்களுக்கு பாடமாகச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தீர்கள்.அவைதான் வாழ்வைப் பிரதிபலிப்பவை என்று  கூறினீர்கள்?இப்பொது மட்டும் ஏன் அதை எரிக்கிறீர்கள்?'குரு சிரித்துக்கொண்டே சொன்னார்,''நான் வீட்டை அடைந்துவிட்டேன்.இனி எனக்கு வரைபடம் தேவையில்லை.''ஞானம் அடைந்தவர்களுக்கு எந்த வேதமும் தேவையில்லை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

விற்பனையாளன்

இடம் வாங்கி விற்கும் நிறுவனம் ஒன்றில்,ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்த நிலம் நீண்ட நாட்களாக வாங்க ஆள் இல்லாமல் இருந்தது.அதன் உரிமையாளர் என்ன செய்வது என்று யோசிக்கையில் ஒரு விற்பனையாளன்,தான் அந்த இடத்தை விற்றுத் தருவதாகச் சொன்னான்.அவனும் எப்படியோ பேசி ஒருஆளிடம் நிலத்தை விற்றுவிட்டான்.உரிமையாளருக்கு அவன் மீது ஒரு நல்ல அபிப்பிராயம்  ஏற்பட்டது.
பத்து நாள் கழித்து கடும் மழை பொழிந்தது. அந்த நிலமோ சரியான பள்ளத்தில் இருந்ததால் முழுவதும் நீர் சூழ்ந்துவிட்டது.வாங்கியவருக்கு படுகோபம்.அவர் தான் ஏமாந்ததை எண்ணி,அந்த விற்பனையாளனிடம் வந்து கடுமையாகப்பேச ஆரம்பித்தார்.அவன் அமைதியாகச் சொன்னான்,''உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்கள் பணத்தை பத்து நாள் வட்டியுடன் வாங்கிக் கொள்ளுங்கள்.இந்த இடத்தை வாங்க நிறைய ஆட்கள் இருக்கிறார்கள்.''வாங்கியவருக்கோ ஒரே திகைப்பு.'என்ன விளையாடுகிறீர்களா?இந்தநிலையில் இந்த நிலத்தை வாங்க யாருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது?'என்று கேட்டார்.விற்பனையாளன் சொன்னான்,''இந்த இடத்தின் அருமை உங்களுக்குத் தெரியவில்லை.தண்ணீர் வடிந்ததும்இங்கு வீட்டைக் கட்ட வேண்டும். பின் அடுத்த முறைமழை பெய்யும்போது நீரை வெளியேறவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அப்போது உங்கள் வீடு இந்த நகரத்திலேயே ஏரியிலே  கட்டப்பட்ட முதல் வீடாக  இருக்கும்.யோசித்துப் பாருங்கள்.ஒரு ஏரி வீடு கட்டுவதென்பது எவ்வளவு கடினமானது .இங்கு இயற்கையாகவே ஒரு ஏரி வீடு கட்டப்போகிறீர்கள்.நன்றாக யோசித்து முடிவு செய்யுங்கள் இடம் கைமாறிப் போய்விட்டால் உங்களால் அழகிய  ஏரி வீடு கட்ட இயலாமல் போய்விடும்.''வாங்கியவர் அமைதியானார்.இந்த சந்தர்பத்தை உபயோகித்து,விற்பனையாளன்,''தற்போது உங்களுக்கு நான் ஒரு உதவி செய்ய முடியும்.எங்களிடம் இரண்டு சிறிய படகுகள் இருக்கின்றன உங்களுக்காக அவற்றைக் குறைந்த விலைக்குத் தருகிறோம்.அவற்றை நீங்கள் நீரில் செல்ல பயன் படுத்திக் கொள்ளலாம்.''இப்படிச் சொல்லி நீண்ட நாட்களாக பயனின்றி இருந்த இரண்டு படகுகளையும் விற்றுவிட்டான்.
நல்ல விற்பனையாளன் தேவைகளை உருவாக்கிவிடுவான்..

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எளிய அறிவுரை

நம் மீது யாராவது கோபம்கொண்டால்,நாம் நேரடியாக அவரைக் குற்றம் சொல்லாமல் 'நம் மீது அவன் கோபம் அடைய,நாம் அவனுக்கு என்ன செய்தோம்.அவன்  ஏன்  நம் மீது மட்டும் கோபப்படுகிறான்?மற்றவர்களிடம் நல்ல முறையில் தானே நடந்து கொள்கிறான்!'என்று எண்ணி அதற்கான காரணத்தை உங்களிடமே கண்டு பிடிக்க முயலுங்கள்.அடுத்து நீங்கள் அவனிடம் நேரடியாக,'நீ என் மீது கோபம் அடையக் காரணம் என்ன?உன் மனதைப் புண்படுத்தும்படி நான் என்ன செய்தேன்?நான் எந்தத் தீங்கும் உனக்கு செய்யவில்லை.உன் கோபத்திற்கு வேறு ஏதேனும் காரணம்இருக்க வேண்டும்.'என்று நட்பாகக் கேட்கவும்.உடனே அவன் கண்களில் நீர் மல்க உங்களிடம் மன்னிப்புக் கேட்கலாம்.
ஜார்ஜ் குருட்ஜிவ்  ஒன்பது வயது சிறுவனாக இருந்தபோது அவருடைய தந்தை ஒரு எளிய அறிவுரையைக் கூறினார்.''யாராவது உன் மேல் கோபம் கொண்டால்,அதற்கு பதிலாக உடனே எதுவும் செய்யாதே.உடனே பதிலுக்கு சண்டை போடாதே.அவன் சொல்வதைக் கவனமாகக் கேள். பிறகு அவனிடம்,'நான் நீங்கள் கூறியவற்றைப் பற்றி சிந்திக்க எனக்கு 24 மணி நேர அவகாசம் கொடுங்கள்.பிறகு தகுந்த பதிலை உங்களுக்கு  சொல்கிறேன்,'என்று கூறவும்.''குருட்ஜீவ் கூறுகிறார்,''இந்த அறிவுரைஎன்  முழு வாழ்க்கையையும் மாற்றி விட்டது.ஏனெனில் சில சமயம் பிறருடைய கோபம் என்னை ஒன்றும் செய்வதில்லைஎன்பதனை உணர்ந்தேன்.நான் அதற்கு உடனடியாக பதில் சொல்லத் தேவையில்லை.ஏனெனில் அது என்னைக் குறித்து சொல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை.நான் அவர் அருகில் இருப்பதே,அவர்  கோபம் என் மீது பாயக் காரணமாகி விட்டது என்று நினைக்கிறேன்.அப்படியே நான் செய்தது தவறு என்று மனப்பூர்வமாக  உணர்ந்தால்,அவரிடம் சென்று நேரடியாக,'என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்,'என்று கூறுகிறேன்.இது எனக்கு மன ஆறுதலாக இருக்கிறது. நான் சொன்னதுபோல 24 மணி நேரத்தில் மீண்டும் வரவில்லை என்றால் அது  என்னைக் குறித்த கோபம் அல்ல என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்று பொருள்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net