Saturday, November 6, 2010

அடிக்கடி தும்மலுக்கு அடிப்படை காரணம்?!

ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் இயற்கை சூழல் மாசு அதிகரித்து வருவதுதான். அதுமட்டுமின்றி, இயந்திரத்தனமான வாழ்க்கையும் ஒரு காரணம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.

சுகாதாரமற்ற சூழலுக்கு சுகாதாரத்துடன் விளங்கும் ஒரு பொருள் வெளிப்படுத்தும் எதிர் விளைவே ஒவ்வாமை. ஆற்றல் மிகுந்த ஒவ்வாத பொருள் உடலுக்குள் ழையும் நிலையில், அது குறித்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தி உடனடியாக உஷார் அடைகிறது. இதன் விளைவாக தொடர் தும்மல், மூக்கு மற்றும் கண்ணில் நீர் வடிதல், தோலில் தடிப்பு என ஒவ்வொருவரின் உடல் தன்மைக்கு தகுந்தாற்போல் அறிகுறிகள் வெளிப்படுகின்றன.

பரம்பரைத் தன்மை காரணமாக ஒருவருக்கு ஒவ்வாமை பிரச்சினை ஏற்படலாம். எனினும் பொதுவாக சுகாதாரமற்ற சுற்றுச்சூழல் தூண்டுதல் காரணமாகவே பெரும்பாலும் ஒவ்வாமை ஏற்படுகிறது. உதாரணமாக சிகரெட் புகை, வேதிப் பொருள்கள், குளிர் காற்று உள்பட தட்பவெப்ப நிலையில் திடீர் மாற்றம், கடுமையான துர்நாற்றம், மன அழுத்தம் என பல்வேறு காரணங்களால் `ரைனிட்டிஸ்' எனப்படும் மூக்குப் பாதை திரவ படலத்தில் வீக்கம் ஏற்பட்டு ஒவ்வாமை ஏற்படும்.



http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தீபாவளி அன்று ! மகாலட்சுமி பூஜை!

கங்கா நீராடல்!
இந்துக்களின் புனித நதி கங்கை. கங்கையில் குளிக்க, பாவம் போகும் என்பது ஐதீகம். ஆனால், எல்லாரும் கங்கையில் போய் நீராடுவது கடினம். எனவே, அந்த கங்கையே நம் வீட்டிற்கு வந்தாள். ஆம்... தீபாவளி அன்று மட்டும் வெந்நீரில் கங்கையும், நல்லெண்ணெயில் திருமகளும் இருப்பதாக ஐதீகம். மற்ற நாட்களில் தலை குளிப்பது என்றால் சூரிய உதயத்திற்கு பின் குளிக்க வேண்டும். ஆனால், தீபாவளி அன்று மட்டும் நடு இரவு தொடங்கி விடியும் முன்னரே தலை குளித்து விட வேண்டும். இவ்வாறு லட்சுமியை நினைத்து, எண்ணெய் தேய்த்து புனித கங்கையான வெந்நீரில் குளிக்க, நம் பாவங்கள் போய், செல்வம் வந்து சேரும். பெண்கள் இவ்வாறு மேற்கொள்ள, வீட்டில் செல்வம் பெருகும், துன்பம் பறந்து விடும். ***

தீபாவளி அன்று !
தமிழகத்தில் தீபாவளி அன்று சிறுவர்கள் பட்டாசு வெடிக்க விரும்புவர். ஆனால், குஜராத் மாநிலத்தில்,  தீபாவளி தினத்தன்று யாரும் பட்டாசைப் பற்றி நினைப்பது இல்லை.  சிறுவர் முதல் பெரியவர் வரை தீபாவளி அன்று விதவிதமான பட்டங்கள் செய்து, வானில் பறக்கவிட்டு, ஆனந்தமாகத் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.    ***

மகாலட்சுமி பூஜை!
லட்சுமி பூஜை மிகவும் முக்கியமான பூஜை. தீபாவளி அன்று கங்கை நீராடலுக்கு பின், லட்சுமியை வணங்க வேண்டும்.பிரகலாதனின் பேரன் பலி சக்கரவர்த்தி, தேவர்களையும், மகாலட்சுமியையும் சிறைவைத்து இருந்தான்.  வாமன அவதாரம் எடுத்து, பலி சக்கரவர்த்தியை பாதாள உலகத்தில் தள்ளி, தேவர்களையும், லட்சுமியையும் விடுதலை செய்தார் திருமால். இதனால், லட்சுமிக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.  இவ்விழா தீபாவளிக்கு மூன்றாம் நாள் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.வியாபாரிகள் இந்நாளில் வீட்டில் மனைவி கையால் புதுக் கணக்கு தொடங்க மங்களம் பெருகும். ***

அண்டை மாநிலத்தில் தீபாவளி!
தீபாவளியை இந்துக்கள் மட்டுமல்லாது ஜைனர்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள் ஆகியோரும் கொண்டாடுகின்றனர். தமிழ்நாட்டில் கார்த்திகை அன்று விளக்கேற்றி கொண்டாடுவதைப் போல, வடமாநிலத்தவர் தீபாவளிக்கும் விளக்கேற்றிக் கொண் டாடுவர். பொங்கலுக்கு நாம் மாடுகளைக் கழுவுவது போல, அவர்கள் தீபாவளியின் போதும் இப்படி செய்து மகிழ்கின்றனர். சிலர் தீபத்தை ஏற்றி ஆற்றில் மிதக்க விடுவர். அவை அணையாமலும், நீரில் மூழ்காமலும் இருந்தால் அந்த ஆண்டு நலம் விளையும் என இவர்கள் நம்புகின்றனர். ***

கனடாவில் தீபாவளி!
கனடா நாட்டு பார்லிமென்ட்டில் முதன் முதலாக 1998ம் ஆண்டு தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினம், பார்லிமென்ட் கட்டடம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, லட்சுமி பூஜை நடத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஒரு வெளிநாட்டு பார்லிமென்டில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது அதுதான் முதல்முறை.                                                                                ***

கோ - பூஜை!
மேற்கு வங்க மாநிலத்தில், தீபாவளிக்கு நான்காம் நாள் கோ-பூஜை செய்கின்றனர். நம் ஊர்களில் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது போல், தீபாவளிக்கு மாடுகளை அலங்கரித்து வணங்குவர். பசு - சகல தெய்வங்களையும், நதிகளையும் கொண்டது. பசு மகாலட்சுமியின் மறு வடிவம். மேலும், காமதேனுவாக எண்ணி மக்கள் கோ-பூஜை நடத்தி வழிபடுகின்றனர். அன்று, பசுவுக்கு தீப ஆராதனை காட்டி இனிப்புகள் வழங்கி சிறப்பு செய்கின்றனர். சுமங்கலிகள் இப்பூஜை மேற்கொள்ள வேண்டும். புது தம்பதிகள் இப்பூஜை செய்ய, குடும்ப வாழ்வு சிறக்கும்; புத்திர பாக்கியம் விரைவில் கிடைக்கும்.  ***



http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 



courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Wednesday, November 3, 2010

மாரடைப்பை கண்டறிவது எப்படி?

நெஞ்சுவலியின் தன்மை பற்றி முழுமையாக கேட்டு, மாரடைப்பு வருவதற்கான காரணம் உள்ளதா என அறிந்து சில மருத்துவ பரிசோதனை செய்யப்படுகின்றன. அதன் மூலம் ஒருவருக்கு மாரடைப்பு வந்துள்ளதா என கண்டறியப்படுகிறது.
இ.சி.ஜி., (எலக்ட்ரோ கார்டியோ கிராம்):
* இதயம், மெல்லிய இழைகளாலான மின்சார வலையால் இயற்கையாகவே பின்னப்பட்டுள்ளது. இம்மின்சார இழைகளில் தானாக உருவாகும் மின் அலைகளால்தான் இதயம் சீராக இயங்குகிறது.
* ஒவ்வொரு இதய துடிப்பின்போதும், இத்தகைய மின்அலைகள் இதயத்தின் மேல்பாகத்தில் இருந்து அடிப்பாகம் வரை சீராக, முறையாக பரவுகிறது.
* இவ்வாறு இதயத்தில் பலபாகங்களில் ஒவ்வொரு இதய துடிப்பின்போதும், உருவாகும் மின்அலைகளை ஒரு இயந்திரத்தின் உதவியால் ஒரு தாளில் பதிவு செய்வதே இ.சி.ஜி., எனப்படுகிறது.
* மாரடைப்பு வருவோருக்கு இத்தகைய மின்அலைகளின் பதிவில் மாற்றங்கள் ஏற்படும்.
* அத்தகைய மாற்றங்களை வைத்து ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா, எப்போது ஏற்பட்டது, இதயத்தின் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.
ரத்தப் பரிசோதனைகள்:
* மாரடைப்பு ஏற்படும்போது இருதய தசையின் எந்தப் பாகத்தில் ரத்த ஓட்டம் தடைபடுகிறதோ, அப்பகுதி சில மணி நேரங்களில் செயலிழக்கிறது.
* இவ்வாறு செயலிழந்த தசைப் பகுதியில் இருந்து புரதச் சத்து கலந்த பலவகை ரசாயன பொருட்கள் கசிந்து ரத்தத்தில் கலக்கின்றன.
* மாரடைப்பு ஏற்பட்டு, இரண்டு மணி நேரத்தில் இருந்து ஏறத்தாழ மூன்று நாட்கள் வரை வெவ்வேறு நேரங்களில், வெவ்வேறு விதமான ரசாயனப் பொருள் கசிந்து ரத்தத்தில் கலக்கிறது.
* ரத்தத்தில் இவ்வாறு கலக்கும் ரசாயன பொருட்களின் அளவை வைத்து மாரடைப்பு உறுதி செய்யப்படுகிறது.
* மேலும் மாரடைப்பு ஏற்பட்ட நேரம், மாரடைப்பின் அளவு, இத்தகைய மாரடைப்பால் பின்னாளில் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பவை பற்றியும் ஓரளவு துல்லியமாக கணிக்கலாம்.
* மாரடைப்பின்போது பொதுவாக ரத்தத்தில் பின்வரும் ரசாயனப் பொருட்கள் பரிசோதிக்கப்படுகின்றன.
1) Myoglobin, 2) Troponin.
கொரனரி ஆஞ்சியோகிராம்:
இதயத் தசைகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாயைப் பரிசோதிப்பதற்காகவும், இதய அறைகள் நல்ல முறையில் இயங்குகின்றனவா, இருதயத்தின் எந்த பாகம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவதற்காகவும் எடுக்கப்படும் ஒருவித சிறப்பு தன்மை வாய்ந்த "எக்ஸ் ரே' தான் கொரனரி ஆஞ்சியோகிராம். ரத்தப் பரிசோதனை மூலம், இதய தசைக்குச் செல்லும் மூன்று ரத்தக்குழாய்களில் எந்த குழாயில் அடைப்பு உள்ளது, எத்தனை அடைப்பு உள்ளது, அடைப்பின் தன்மைகள் என்ன, அடைப்புகள் எளிதாக பலூன் முறை மூலம் சரிப்படுத்துவதற்கு ஏதுவாக உள்ளதா என்பவற்றை கண்டறியலாம்.
ஆஞ்சியோகிராம் செய்யப்படுவது எப்படி?
*பொதுவாக இது எந்தச் சிக்கலோ, பக்கவிளைவோ இன்றி எளிதாக செய்யப்படும் பரிசோதனை.
* மெல்லிய, வளையும் தன்மை கொண்ட, நீளமான பிளாஸ்டிக் டியூப்கள் வலது கையின் மணிக்கட்டில் உள்ள ரத்தக்குழாய் மூலமாகவோ, வலது அல்லது இடது பக்கத் தொடைகளின் மேல்பகுதி இடுப்பில் உள்ள ரத்தக்குழாயின் வழியாகவோ செலுத்தப்பட்டு, பிளாஸ்டிக் குழாயின் நுனிப்பகுதி இதயத்தின் ரத்தக்குழாய்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
* இந்த பிளாஸ்டிக் குழாய்கள் வழியாக எக்ஸ்ரே மூலம் எளிதில் பார்க்கக் கூடிய ஒருவித சிறப்பு வேதியியல் பொருள் இருதயத்தின் ரத்தக்குழாய்க்குள் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் இருதய ரத்தக் குழாயின் தன்மைகளை முழுமையாக பரிசோதிக்கலாம்.
* இந்தப் பரிசோதனையை எந்த வலியில்லாமலும், மயக்க மருந்து கொடுக்காமலும் எளிதாக செய்யலாம். மருத்துவ மனையில் ஓரிரு நாட்கள் தங்கினால் போதும்.
எக்கோ கார்டியோ கிராம்:
* இதுவும் ஒரு எளிதான, வலி ஏதும் இல்லாத பரிசோதனையே. பொதுவாக இது மாரடைப்பை கண்டுபிடிக்கத் தேவையான கட்டாய பரிசோதனை அல்ல.
* ஆனால் சில சமயங்களில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்ற சந்தேகம் எழும்போது இ.சி.ஜி., பரிசோதனையில் எந்த மாற்றமும் தெரியாமல் இருக்கலாம்.
* குறிப்பாக மாரடைப்பு இதயத்தின் பின்பாகத்தில் ஏற்படும்போது, இ.சி.ஜி.,யில் எந்த மாற்றமும் தோன்றாமல் இருக்கலாம்.
* இத்தகைய சூழலில் எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
* இப்பரிசோதனையில் இடதுபுற மார்பு பகுதியில் இருந்து அல்ட்ரா சவுண்ட் முறைமூலம், இருதய தசையின் எல்லா பாகங்களின் செயல்பாடுகளையும் துல்லியமாக கண்டறியலாம்.
* மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பாகத்தின் செயல்பாடு குறைந்திருப்பதை இப்பரிசோதனையில் கண்டறிந்து, மாரடைப்பு ஏற்பட்டுள்ளதையும், அதன் அளவையும் உறுதி செய்யலாம்.

http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 



courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சிரிக்கலாம் வாங்க.!!!

இளமைத் துள்ளலுடன் ஜோக்ஸ் ::::::

தத்துவம்
ஏழு பரம்பரைக்கு உட்கார்ந்து சாப்பிடுற அளவுக்கு சொத்து இருந்தாலும் பாஸ்ட் புட்க்கு போனா நின்று தான் சாப்பிடணும்.
------------------------------------------------------------------------

தோழிகள் இருவர் பேசிக் கொள்கிறார்கள்
ராதா: நேத்து உன் லவ்வரை பார்க்க பீச்-க்கு போறதா சொன்னியே! என்ன ஆச்சு?

கீதா: அட! அத ஏண்டி கேக்குறா? வாத்தியாரை லவ் பண்ணது தப்பா போச்சு!

ராதா: ஏன்! என்ன ஆச்சு?

கீதா: கொஞ்ச நேரம் லேட்டா போனேன். அதுக்காக படகு மேல ஏறி நிற்க சொல்லிட்டாருடி!

ராதா: ஹா! ஹா! ஹா!
------------------------------------------------------------------------

முத்தம்
கணவன்: டார்லிங்! நான் இந்த மாச சம்பளத்துக்கு பதிலா 500 முத்தம் தரலாம்-னு நினைக்கிறேன். என்ன டிம தானே?

மனைவி: எனக்கொன்னும் பிரச்சினை இல்லை. நானும் அப்படியே கேபிள் காரனுக்கு 30 முத்தம், பால்காரனுக்கு 50 முத்தம், பேப்பர் காரனுக்கு 20 முத்தம், மளிகை கடைகாரனுக்கு 150 முத்தம். அவுஸ் ஓனருக்கு 250 முத்தம் கொடுத்துடுறேன் என்ன? ஓ.கே. தானே?

கணவன்: ???
------------------------------------------------------------------------

தொலைக்காட்சி விளம்பரம்
வரும் சனிக்கிழமை இரவு பத்து மணிக்கு...உங்கள் அபிமான தொலைக்காட்சியில்...அற்புதமான ஹாலிவுட் திரைப்படம்... தமிழில்

சிலந்தி அண்ணாச்சி (Spiderman)

உங்களின் விடுமுறை நாளை குதூகலமாக கொண்டாட ஞாயிற்றுகிழமை மதியம் 2 மணிக்கு

சூப்பர்ஹிட் ஹாலிவுட் திரைப்படம்

"அம்மாச்சி திரும்ப வந்தாச்சு" (Mummy Returns)

முற்றிலும் தமிழில்...

காணத்தவறாதீர்கள்!!!
------------------------------------------------------------------------

வீட்டுக்கு வந்த விருந்தாளியிடம்
பெண்: இலையை மடிக்க வேண்டாம்.

விருந்தினர்: ஏன் மடிக்க வேண்டான்னு சொல்றீங்க

பெண்: அடுத்து வர்றவங்க சாப்பிடத் தான்.

விருந்தினர்: ஐய்யோ! அவங்க கோவிச்சுக்க மாட்டாங்களா?

பெண்: இப்போ நீங்க கோவிச்சுக்கிட்டீங்களா! என்ன?

விருந்தினர்: ???
------------------------------------------------------------------------

எதிர்பதம்
Subramaniyan "Saw"my-யின் எதிர்பதம் என்ன?

Subramaniyan "did not" see me
------------------------------------------------------------------------

"இத்தனை நாளா கண்ட பசங்களோட சுத்திட்டு இருந்த நம்ம பொண்ணு இப்ப பரவாயில்லீங்க"
"எப்படி சொல்ற?"

"பாருங்க! குழந்தைங்க டிரஸ் தைச்சிட்டுருக்கா பார்த்தீங்களா?"

"நாசமா போச்சு, அவள முதல்ல லேடி டாக்டர்கிட்ட கூட்டிப்போ


--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Monday, November 1, 2010

ராக்ஃபெல்லர் – II

தான் சம்பாதித்து வைத்திருந்த அத்தனை பணத்தையும் ஒன்று சேர்த்து, கச்சா எண்ணெய் சுத்திகரித்து விற்கும் வியாபாரத்தில் இறங்கினார் ராக்ஃபெல்லர். நீராவியில் ஓடிய ரயில் மட்டுமே அப்போது பெரிய போக்குவரத்துச் சக்தியாக விளங்கியது என்பதால், பெட்ரோலின் மகத்துவம் எவருக்கும் புரியவில்லை.

ஏற்கனவே இந்தத் தொழில் இருந்தவர்களைவிட பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும்; அதே நேரம், அதிக பணம் சம்பாதிப்பதிலும் வெற்றி பெற வேண்டும் என விரும்பினார் ராக்ஃபெல்லர். உற்பத்தி இடத்திலிருந்து விற்பனை இடங்களுக்கு அனுப்புவதற்கான ரயில் கட்டணம் மிக அதிகமாக இருந்தது. ரயில்வே நிர்வாகத்திடம் பேசி, தினமும் குறிப்பிட்ட பேரல்கள் அனுப்புவதாகவம், அதற்காக கட்டணச் சலுகை தரவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் வைக்க நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. போக்குவரத்துச் செலவு கணிசமாகக் குறையவே விலையை குறைத்து விற்பனை செய்தார். வியாபாரம் சூடுபிடித்ததும் போட்டியில் இருந்த சில கம்பெனிகளை அதிகவிலை கொடுத்து வாங்கினார். விற்பனைக்கு மறுத்தவர்களைக் கூட்டாளியாக்கிக் கொண்டார்.

கார்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விற்பனை உச்சத்தைத் தொட்ட 1872ம் வருடம் அமெரிக்க முழுவதும் ஆயில் வியபாரம் செய்யும் ஒரே நிறுவனமாக இருந்தது ராக்ஃபெல்லரின் ''ஸ்டாண்டர்டு ஆயில் கம்பெனிதான்". போட்டி நிறுவனம் இல்லை என்பதால், பணம் கொட்டோ கொட்டென்று கொட்ட, உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆகிவிட்டார். 

"கோடிக் கோடியாகப் பணம் குவித்து விட்டீர்கள் இப்போது சந்தோஷம்தானா?" என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, "சந்தோசம் என்பது பணத்தில் இல்லை;  வெற்றியில்தான் இருக்கிறது!" என்றார்.



--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net