Wednesday, April 2, 2014

பொன்மொழிகள்-49

ஓடும்போது விழுந்து விடுவோம் என்று நினைப்பவனை விட.விழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என்று நினைப்பவன்தான் வெற்றி பெறுவான்.
******
வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட,தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார்.நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.
******
பணம் என்ற ஒன்று நுழையாத வரை
எல்லா உறவுகளும் மேன்மையாகத்தான் இருக்கின்றன.
******
மனிதனின் அத்தனை கோர முகங்களையும்
அறிந்த உயிரற்ற பொருள்-பணம்.
******
குழந்தை பிறந்த முதல் ஆண்டு,அது பேசவும்,நடக்கவும் கற்பிக்கிறோம்.
அடுத்த ஓர் ஆண்டு அது ஒரே இடத்தில் இருக்கவும்,வாயைப் பொத்தவும் கத்துகிறோம்.
******
நாம் யாராலோ நிராகரிக்கப் படும்போதுதான்,நம்மால் நிராகரிக்கப்பட்டவரின் வலியை உணர முடிகிறது.
******
அனுபவம் ஒரு ஜன்னல்;அதன் மூலம் தெருவைப் பார்க்கலாம்.ஜன்னலே தெருவாகி விடக்கூடாது.
******
பொதுக் காரியங்களில் நாம் சில சமயம் நம் அறிவை மட்டுமல்ல,பகுத்தறிவையும் இழக்கத்  தயாராகி விடுகிறோம்.
******
நம்பிக்கையின் கை உடையும்போது
சந்தேகம் காலூன்றத் தொடங்குகிறது.
******
இயல்பாய் ஏற்படும் மாற்றம்,சுகம்.
வலிய ஏற்படுத்திக் கொள்ளும்  மாற்றம்,சுமை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நான் இங்கே...

ஏழை பக்தன் ஒருவன் தனது வாழ்நாளில் ஒருமுறையேனும் திருப்பதி சென்று வர வேண்டும் என்று ஆசைப்பட்டான்.அதற்காக தனது வருவாயில் மிகச்சிறிய பகுதியை   சேமித்து வைத்தான்.ஓரளவுக்கு பணம் சேர்ந்ததும் திருப்பதி சென்றான்.கையில் குறைந்த அளவே பணம் இருந்ததால், பேருந்தில் மலைக்கு செல்லஇயலாது,நடந்து மலைமீது கோவிலை அடைந்தான். பசியினால் மிகுந்த களைப்புடன் இருந்தான்.இருந்தாலும் கடவுளை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் தர்ம தரிசனத்திற்கான வரிசையில் நின்றான். வரிசை மெதுவாக நகர்ந்தது.அதே சமயம் பணம் படைத்தவர்களும்,அதிகாரம் படைத்தவர்களும்,தனி வழியில் விரைவாக சென்று ஆண்டவனை மகிழ்ச்சியுடன் தரிசித்துக் கொண்டிருந்தனர்.தான் நின்று கொண்டிருந்த நீண்ட வரிசையைப் பார்த்து எப்போது ஆண்டவனை தரிசிக்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்குமோ என்ற கவலையுடன் இருந்தான்.நேரம் ஆகிக் கொண்டேயிருந்தது. அவனை அறியாமல் மிகுந்த களைப்பினால் வரிசையிலேயே படுத்து தூங்கி விட்டான்.அப்போது அவன் கனவில் கடவுள் வந்தார்.அவரைப் பார்த்ததும் பக்தனுக்கு கோபம் வந்து விட்டது. அவன், ''கடவுளே!எத்தனை நாளாக சிரமப்பட்டு உன்னை தரிசிக்க வந்திருக்கிறேன் .இங்கு வந்தால் உன்னை தரிசிக்க எவ்வளவு சிரமங்கள்?என்ன இருந்தாலும் நீயும் பணக்காரர்களைத் தானே ஆதரிக்கிறாய்!அதோ பார்,அவர்கள் எல்லாம் எவ்வளவு விரைவில் உன்னை மகிழ்ச்சியுடன் வணங்கி செல்கிறார்கள்? பசியுடன் காத்திருக்கும் என் நிலையைப் பார்'' என்றான்.கடவுள் சிரித்துக் கொண்டே சொன்னார்,'' அடே,பைத்தியக்காரா,அவர்கள் எல்லாம் கல்லை வணங்கிச் செல்கிறார்கள்.இதோ,நான் உன்னுடன் தானே பேசிக் கொண்டிருக்கிறேன்!''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Monday, January 6, 2014

ஒரு ஊருல ஒரு காதல் ஜோடி வாழ்ந்து வந்தாங்க..

ஒரு ஊருல ஒரு காதல் ஜோடி வாழ்ந்து வந்தாங்க..

ரொம்ப அன்பா இருப்பாங்க...ஒருத்தர் மேல ஒருத்தர் எப்பவுமே காதலா இருப்பாங்க...அதுல கணவனுக்கு மட்டும் high BP (blood pressure) இருந்துச்சி...டாக்டர் கணவனை உப்பு இல்லாத சாப்பாடு தான் சாப்பிடனும்னு கண்டிஷன் போட்டுட்டாரு.. 

அதனால மனைவி கணவனுக்கு உப்பு இல்லாம ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா பார்த்து சமைச்சி போட்டு அவன கண்ணும் கருத்துமா பல வருடங்கள் பார்த்துட்டு வந்தா... சமீபத்தில் திடீர்னு ஒருநாள் மனைவி காலைல தூங்கி எழுந்து வந்து பார்க்கும்போது கணவன் பாத்ரூமுல செத்து கிடந்தான்..

மனைவி அவ்ளோ கவனமா கண்ணும் கருத்துமா பார்த்துகிட்டு இருந்தாலும் கணவன் high BP வந்து திடீர்னு செத்ததற்கு என்ன காரணமா இருக்கும்...? யோசிச்சி பாருங்க... 

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Thursday, December 26, 2013

உடல் எடையைக் குறைக்க

உடல் எடையைக் குறைக்க

உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் இதை சாப்பிடுங்கோ !!!

தினமும் காலையோ அல்லது மதியமோ ஒரு கிண்ணம் தட்டைப் பயிறால் செய்த சுண்டலை சாப்பாட்டிற்கு முன்பாகச் சாப்பிடவும். இதில் உள்ள துத்தநாக உப்பு லெப்டின் என்ற இயக்குநீரை தாராளமாகச் சுரக்க வைக்கும். இந்த இயக்குநீர் இரத்தத்தில் நிறைய இருக்கும்போது மூளைக்கு `சாப்பிட்டது போதும்' என்ற சமிக்ஞையைத் தந்துவிடும். எனவே அதிகம் பசிக்காது. குறைவாகச் சாப்பிட்டாலும் நன்கு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். அதிகம் சாப்பிட மனமும் அறிவும் விரும்பாது.

காலையோ அல்லது மதியமோ சாப்பிடும் இந்த காராமணி (தட்டைப்பயிறு) சுண்டலே போதும். முடிந்தால் மதியம் சாதத்தில் பாசிப்பருப்புக் கூட்டும் சேர்த்துக் கொள்ளலாம். உணவைக் குறைத்து சக்தியையும் இழக்காமல் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் இந்த இரண்டு உணவுகளால் விரைந்து அதிக எடையைக் குறைத்துவிடலாம்.

சுண்டலும் பருப்பும் பசி எடுக்காதபடி தவிர்ப்பதால் ஏற்கெனவே சேமிப்பில் உள்ள கொழுப்பும் எரிந்துவிடும். அதிகம் சாப்பிட ஆசை இருந்தாலும் இந்த இரு உணவுகளும் சாப்பிட முடியாமல் தடுத்துவிடும்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிரண்டை

பிரண்டை...!

Photo: பிரண்டை...!

தமிழகம் முழுவதும் தானே விளைந்து பயன்படுத்துவோரின்றி வீணே போவது பிரண்டை.சதைப்பற்றான நாற்கோண வடிவ தண்டுகளுடைய ஏறு கொடி. பற்றுக்க்ம்பிகளும்,மடலான இலைகளும் கொண்டிருக்கும்.சாறு உடலில் நமைச்சல் ஏற்படுத்தும்,சிவப்பு நிற உருண்டையான சதைக்கனிகளை உடையது.வேர்,தண்டு ஆகியவை மருத்துவகுணம் உடையவை, இதன் இன்னொரு பெயர் வச்சிரவல்லி.

1.இதன் தண்டுகளில் நார் நீக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் செரியாமை நீக்கும்.

2.பிரண்டை சாற்றில் புளி,உப்பு,கலந்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றுப்போட சதை பிழற்சி,அடிபட்ட வீக்கம்,எலும்பு முறிவு,வீக்கம் தீரும்.

3.கடைகளில் கிடைக்கும் பிரண்டை உப்பு 2 அரிசி எடைஅளவு 3 வேளை பாலில் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி,சீதபேதி,நுரைத்த பச்சை பேதி தீரும்.

4.பிரண்டை உப்பினை 2அ3 அரிசி எடையளவு வெண்ணெய்யில் கலந்து சாப்பிட்டு வர வாய்ப்புண்,வாய்நாற்றம்,உதடு,நாக்கு வெடிப்பு தீரும்.

5.பிரண்டை உப்பினை 1 குண்டுமனி வீதம் வெண்ணெய்யுடன் சாப்பிட்டு வர சிறுகுடல்,பெருங்குடல்,இரைப்பை புண்கள்,தீராத நாட்பட்ட வயிற்றுவலி,மூலம்,மூல அரிப்பு,மலத்துடன் சீழ்,இரத்தம் வருதல் தீரும்.

6.சாதிக்காய் சூரணத்துடன் பிரண்டை உப்பினை சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி,பலவீனம்,தாது இழப்பு ஆகியவை தீரும்.

7.பிரண்டை வேரை உலர்த்தி பொடித்து 1 கிராம் அளவு காலை,மாலை கொடுத்துவர முறிந்த எலும்புகள் ஒன்று கூடும்.

இவ்வளவு குணநலங்கள் கொண்ட பிரண்டையின் பயன்பாடு மிகவும் குறைந்து போய் விட்டது வருத்தமான ஒன்று.