Tuesday, May 28, 2013

ஆண்மையை அதிகரிக்க வைக்கும் வெங்காயம் !!!

ஆண்மையை அதிகரிக்க வைக்கும் வெங்காயம் !!!

sex-will-increase-the-onions


வெங்காயம் இன்றி இந்திய சமையலே கிடையாது அந்த அளவுக்கு எல்லா சமையலிலும் அது முக்கிய இடம் பிடிக்கிறது. தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும். இவர்கள் ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்று விடும். வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள் அப்படியே பச்சையாக வெங்காயத்தை சாப்பிடலாம் சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும். வெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் கட்டிகள் தோன்றும். இதற்கு வெங்காயத்தை நசுக்கி சாறுபிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் வெகு விரைவில் நிவாரணம் கிடைக்கும். வெங்காயத்தை துண்டுகளாக்கி நெய்யில் வதக்கி சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

முருங்கைக் காயைத்தான் காய்கறிகளின் வயாகரா என்று சொல்லக் கேட்டு இருப்பீர்கள் அதைவிட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம் இதில் அப்ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் உள்ளன. மிகச் சிறிய குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் உயிருக்கு ஆபத்தாகக் கூட முடிந்துவிடுவது உண்டு. தேனீ போன்றவை கொட்டிவிட்டால் இளம் வயதினர் துடித்துப் போவார்கள் ஆனால் வயதானவர்கள், தேனீ கொட்டி விட்டதா? வெங்காயத்தை எடுத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். வெங்காயத்தில் உள்ள ஒரு என்சைம் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண் டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

ஒரு நாளைக்கு ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை வீட்டுக்குள் அனுமதிக்கத் தேவையில்லை என்பார்கள். அதைப்போல வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். வெங்காயத்தை பச்சையாக, சமைத்து, சூப் அல்லது சாலாடாக்கிச் சாப்பிடலாம்.

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள் இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க உதவி செய்கிறது. பைப்ரினோலிசின் என்ற பொருளை சுரந்து கொழுப்பு உணவுகள் மூலமாக ரத்த நாளங்களுக்குள் நுழைந்த கொழுப்பு களைக் கரைத்துவிடுகிறது.

பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைப்பார்கள். இவ்வாறு அடக்கிவைப்பதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும் வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து அழற்சியைக் குறைத்து எல்லாவற்றையும் வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியும். இத் தொல்லை இருந்தால் நிறைய வெங் காயம் சாப்பிடுங்கள், கற்கள் கரைந்து ஓடும். முதுமையில் வரும் மூட்டழற்சியை வெங்காயம் கட்டுப்படுத்தி விடுகிறது. வெங்காயத்தையும், கடுகு எண்ணெயை யும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைந்துவிடும். எதற்கெடுத்தாலும் அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கு செலனியச் சத்து குறைவாக இருக்கும். இச்சத்து குறைவாக இருப்பவர்களுக் குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும்.

இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயம், பூண்டு போன்ற காய்கறிகளைச் சாப்பிட்டால் செலனியம் சத்து கிடைக்கும். மன நிலையில் சமநிலை உண்டாகும்.

சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி சளிப்பிடிக்கும். இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் இருக்கும். இதைத் தவிர்க்க சுலபமான வழி, வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவது தான். உடல் எடை அதிகமாக இருந்தாலும்கூட அதை வெங்காயம் குறைத்து விடும்.

புற்றுநோயைத் தடுக்கும் அற்புத மருந்துப்பொருள் வெங்காயம். புகைத்தல், காற்று மாசு, மன இறுக்கம் போன்றவைகளால் ஏற்படும் செல் இறப்புகளை, செல் சிதைவுகளை இது சீர்படுத்திவிடுகிறது. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றையும் நீக்குகிறது. முகச்சுருக்கம், சருமம் தொங்குதல் போன்றவற்றை வெங்காயத்திலுள்ள புரோட்டீன்கள் தவிர்க்கின்றன.

பெரியவெங்காயம், சின்ன வெங்காயம் என இரண்டு வகை இருந்தாலும் இரண்டுமே ஏறக்குறைய ஒரே பலன் தருபவைதான். ஆனால் வைத்தியத்தில் சின்ன வெங்காயத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதற்கு மெடிசின் வெங்காயம் என்றே பெயர். வெங்காயத்தை சாப்பிடுவோம் நோய் இல்லாமல் வாழ்வோம்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Monday, May 27, 2013

சீதாப்பழத்தில் இத்தனை மருத்துவ குணமா..?!

 சீதாப்பழத்தில் இத்தனை மருத்துவ குணமா..?!



 சீதாப்பழத்தில் இத்தனை மருத்துவ குணமா..?!

சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது.

இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது

பழத்தில் உள்ள சத்துக்கள்:

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்:

சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

முகப் பருக்கள் குணமடையும்:

சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.

மேனி பளபளப்பாகும்:

விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.

சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.

சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.

மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது. விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்

எலும்பு பலமடையும்:

சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்:

சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

சீதாப்பழம் பற்றிய சில பொதுவான தகவல்கள்:

சீதா (Annona squamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.

இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.

பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.

பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.

சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.

காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.

சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Sunday, February 10, 2013

தொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு





ந்த வாரம் எனக்குக் கொள்ளு வாரம்.என்னவோ எங்கள் வேலை இடத்தில் உள்ள நம்மவர்கள் கொள்ளு பற்றியே கதைக்கிறார்கள்.காரணம் அவர்கள் குண்டாய்-ஒல்லியாய் இருப்பதே.எங்கேயோ றேடியோவில கொள்ளுத் தின்றால் ஒல்லியாகலாமாம் எண்டு சொன்னார்களாம்.சரி வேலை இடம் முழுக்கவுமே கொள்ளு தான்.சரியென்று நானும் கொள்ளு என்ன சொல்லுது எண்டு பாத்தேன்.சரியாத்தான் சொல்லியிருக்கினம்போல.பின்ன உங்களுக்கும் கொள்ளுத் தின்றால் கொளுப்புக் கரையும் எண்டு சொல்ல எண்டுதான் இந்தப் பதிவு.

25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப்பார்க்கும்...அப்போதைக்கு அதை பற்றி பீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும்.இது அத்திரி சொன்னது. சரி கொள்ளு இனி என்ன சொல்லுது என்று பார்ப்போமே...

இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு - களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.

உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.

இந்தப் பழமொழிக்கு மற்றொரு அர்த்தமும் கற்பிக்கப்படுகிறது.அதாவது,
மழை சரியாகப் பெய்தால் மட்டுமே எள்ளு விதைக்க முடியும்.மழை தவறினால் எள்ளு உற்பத்தி அடியோடு சரியும்.ஆனால் கொள்ளு விதைத்தால் ஓரிரு மழை தவறினால் கூட அது தாக்குப்பிடித்து நல்ல உற்பத்தியை அளிக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர்.

மருத்துவ குணம்: கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு,வயிற்றுப்பொருமல்,கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும்.கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

எலும்புக்கும்,நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே.ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள்.கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.

வனதேவதைகளுக்குக் காணிக்கையாகக் கொள்ளுப் பருப்பை இறைத்து விடுவார்கள்.மேலும் கொள்ளுப் பருப்பை வேகவைக்கும் போது அதில் இருந்து வெளியேறும் ஒருவித வாசனை வனதேவதைகளையும் ஈர்க்கக் கூடியது என்றும் அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.இந்தப் பொடியில் சாதம் கலந்து கேதுவுக்கு வேண்டுதல் செய்வார்கள்.இதற்கு கானாப் பொடி என்றும் பெயர்.

குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள்.
சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள்.அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு.உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும் அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம்.சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.

கொள்ளை ஆட்டி பால் எடுத்து(தண்ணீர்க்குப் பதில்)அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம்.(நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும்)இ‌ப்படி செ‌ய்ய முடியாதவ‌ர்க‌ள் கொ‌ள்ளு ரச‌ம்,கொ‌ள்ளு துவைய‌ல்,கொ‌ள்ளு குழ‌ம்பு ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வ‌ப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.


கொள்ளு சூப்
தேவையான பொருள்கள்:
கொள்ளு – 4 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
தக்காளி - 2
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1ஃ2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது

தாளிக்கநல்லெண்ணெய் - சிறிது
கடுகு - சிறிது
வரமிளகாய் - 2

செய்முறை
மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.(ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்) அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

கொள்ளு சூப் 2
தேவையான பொருட்கள் :
கொள்ளு 1 கப்
தக்காளி 1 / 2
சின்ன கத்தரிக்காய் 1
பச்சை மிளகாய் 4
தனியா 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை சிறிது
புளி சிறிது
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
எண்ணெய் 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு


செய்முறை
முதலில் குக்கரை எடுத்து அதில் கொள்ளு,கத்தரிக்காய்,தக்காளி,உப்பு,மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக விடவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் வெங்காயம் (சிறிதாக வெட்டியது),பச்சைமிளகாய்,மல்லி,
சீரகம்,கறிவேப்பில்லை போட்டு எண்ணெய் விட்டு நன்கு வதக்கி வேக வைத்த கொள்ளை சேர்த்து ஒரு கொதி விடவும்.பின்னர் அத்துடன் புளி சேர்த்து அரைக்கவும்.சூடான சாதத்துடன் நெய் விட்டு சாப்பிடவும்.


கொள்ளு ரசம்
கொள்ளு - 1 கப்
வரமிளகாய் - 3
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1ஃ2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1ஃ2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் - 1ஃ2 அல்லது சின்ன வெங்காயம் - 8 நறுக்கியது
பூண்டு - 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு

செய்முறை
கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும் வேக வைத்த கொள்ளு,வரமிளகாய்,மல்லி, சீரகம்,மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

கொள்ளு மசியல்
கொள்ளு - 200 கிராம்
சீரகம் - 1 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு - 5 பல்
சிறிய வெங்காயம் - 10
புளி - நெல்லிக்காய் அளவில் பாதி
கறிவேப்பிலை - 10 இலைகள்
கொத்தமல்லி இலை - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை
மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.(ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்) அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

கொள்ளு குழம்பு
கொள்ளு - 1 கப்
வரமிளகாய் - 3
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் - 1/2 அல்லது சின்ன வெங்காயம் - 8 நறுக்கியது
பூண்டு - 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு

செய்முறை
கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும் வேக வைத்த கொள்ளு,வரமிளகாய்,மல்லி,சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

பொடியாக்கி வைத்துக்கொள்ள.
துவரம் பருப்பு,கொள்ளு இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.காய்ந்த மிளகாய்,மிளகு,சீரகம்,நசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் பெருங்காயம்,உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து,காற்றுப் புகாத பாத்திரத்துள் எடுத்துவைக்கவும்.
(பெருங்காயம் கட்டிக் காயமாக இருந்தால் முதலிலேயே சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.)

ஜொள்ளு ன்னு நினைக்காமல் தொப்பை வச்ச எல்லோருமே கொள்ளு பற்றிக் கொஞ்சம் யோசிப்போமா ! (உதவி - இணையம்)

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Monday, January 28, 2013

சுரைக்காயின் மருத்துவ குணங்கள்..!






சுரைக்காயின் மருத்துவ குணங்கள்..!

மனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை.

நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்துகொள்வோம்.

சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். அது வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும்.

சுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

உடல் சூடு நீங்க

இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால்தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது.

சிறுநீர் பெருக

மனித உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்து.

பித்தத்தைக் குறைக்க

உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது.

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.

· சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

· உடலை வலுப்படுத்தும்.

· பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும்.

· இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

· குடல் புண்ணை ஆற்றும்.

· மலச்சிக்கலைப் போக்கும்

· மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.

சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.

சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.

சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலாம்.

ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Monday, January 7, 2013

பொன்மொழிகள்-29


எப்படி வேண்டுமானாலும் சமையல் செய்யுங்கள்.
ஆனால் அன்புடன் பரிமாறுங்கள்.
**********
நம் சிரிப்பு அடுத்தவனுக்கு கண்ணீரை வரவழைக்கிறது என்றால்
நாமே நம் பற்களைத் தட்டிக் கொள்ள வேண்டும்.
**********
பெரிய பாறை மீது யாரும் மோதிக் கொள்வதில்லை
சிறிய கற்கள் தான் இடற வைக்கின்றன.
**********
வீடுகளைக் கட்டுபவர்கள் ஆண்கள்.-அதை
வீடாக வைத்திருப்பவர்கள் பெண்கள்.
**********
நம் வாழ்நாள் மிகவும் குறைவு என்று வருந்துகிறோம்.ஆனால் நம் வாழ்விற்கு முடிவே இல்லாததுபோலக் காரியங்களை செய்து கொண்டே இருக்கிறோம்.
**********
கவலைப்பட நேரமின்றி உழை
கண்ணீர்விட நேரமின்றி உறங்கு.
நீயே அதிர்ஷ்டக்காரன்.
**********
மகிழ்ச்சி என்பது நம் வீட்டில் விளைவது.
மற்றவர் தோட்டத்தில் அதை தேட வேண்டியதில்லை.
**********
நீ தொலைத்தது நாட்களைத்தான்.
நம்பிக்கையை அல்ல.
**********
தவறான வழிதான் எப்போதும் பொருத்தமான வழியைப் போன்ற தோற்றம் அளிக்கிறது.
**********
நம்முடைய சந்தேகங்கள் நமக்கு துரோகிகள்.
நாம் வெற்றி பெற முடியாதபடி நம்மை பயமுறுத்தி தடுத்து விடுகின்றன.
**********
ஒரு புத்திசாலியால் சாதிக்க முடியாததை
ஒரு பொறுமைசாலி சாதித்து விடுவான்.
********** 

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net