Wednesday, October 20, 2010

பகுத்தறிவு

ஒரு மகாராஜாவின் மகன் மிகவும் மக்காக இருந்தான். அதிகாரம் உள்ள பல குடும்பங்களில் இந்த "மக்கு மகன்" பிரச்சனை எப்போதும் உண்டு. அவனுக்கு ஆட்சியை கொடுக்க மக்கள் விரும்பவில்லை. மூத்தவர் சபை எதிர்த்தது. "என்ன செய்யலாம்" என்று அரசர் கவலைப்பட்டார். வெளிநாட்டில் திறமையான கலாசாலையில்  மகனைச் சேர்த்துவிட்டால் அவர்கள் எப்படியும் அறிவாளி ஆக்கிவிடுவார்கள் என்று மகாராஜா முடிவு செய்தார். அங்கு பலதுறைகள் இருந்தன. உயர்தரமான அந்தக் கலாசாலையில் ஐந்து ஆண்டுகள் தங்கிப் படித்துவிட்டு இளவரசன் திரும்பி வந்தான்.

அவனது உடை, நடை, பாவனைகள் என எல்லாம் மாறியிருந்தன. பளிச்சென்று உடையணியப் பழகியிருந்தான். அழகாக நடப்பது, கைகுலுக்குவது, மரியாதையாய்ப் பேசுவது என்று நிறைய மாற்றங்கள். மகாராஜாவுக்கு ஆனந்தம் தாங்கவில்வைல. முதியோர் சபையில் மகனை நிறுத்தி அவர்கள் அனுமதியுடன் அறியாவளியாக்கப்பட்ட மகனை அரசனாக்க நினைத்தார். பலரும் அவனை அறிவாளி என்றே ஒப்புக் கொண்டனர். பல்கலைக் கழகத்தின் சாதனையைய் பாராட்டினர்.

ஒரு வயதானவர் மட்டும் இளவரசனைச் சோதிக்க நினைத்தார். "என்ன படித்தாய்?" என்றார். "நிறைய, நிறைய… சோதிடம் கூட முறையாக கற்றுத் தந்தார்கள். நீங்கள் சோதிடத்தில் கேள்வி கேட்டால் கூடச்  சொல்வேன்" என்றான். வயதானவர் தமது மோதிரத்தை உள்ளங்கையில் வைத்து மூடிக் கொண்டு, "இது என்ன?" என்றார். இளவரசன் யோசித்தான். ஒரு காகிதத்தை எடுத்து கணக்குப் போட்டான். "உங்கள் கையில் உள்ளது வட்டமானது. நடுவில் ஓட்டையானது. ஒளியுடையது" என்று விடை சொன்னான். வயதானவருக்கு உள்ளூர சந்தோஷம். இருந்தாலும், "அடையாளங்களைச் சொல்கிறாயே ஒழிய அது இன்னதென்று சொல்லக்கூடாதா?" என்றார். "அது எங்கள் பாடத்திட்டத்தில் இல்லை" என்றார் இளவரசன். "யூகித்துச் சொல்" என்றார் வயதானவர். உடனே இளவரசன் "பாடத் திட்டத்தில் இல்லையென்றாலும் என் பொது அறிவை வைத்துச் சொல்லி விடுவேன்.. அது ஒரு வண்டிச் சக்கரம்" என்றான்.

முட்டாள். சர்வகலாசாலை சொல்லிக் கொடுத்ததைச் சரியாகச் சொல்லிவிட்டான். ஆனால் வண்டிச்சக்கரத்தை எவரும் உள்ளங்கையில் ஒளித்து வைக்க முடியாது என்ற சின்ன விஷயம்கூட அந்த மடையனுக்குத் தெரிந்திருக்கவில்லை. 

முட்டாளையும் படிப்பாளியாக்க முடியும். ஆனால் அறிவாளியாக்க முடியாது.

"You can educate fools; but you cannot make them wise".

 

நம்மூர் பழமொழி – ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

திருக்குறள் கூறுவது:

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர்

குறள்விளக்கம்: அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்க கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராகக் கருதப்படுவார்கள்.

 எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவ மென்ப திழுக்கு

குறள்விளக்கம்: நன்றாக சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு



--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சோதனை

உலகையே சிரிக்க வைத்தவர் சார்லி சாப்ளின்! ஆனால் அவரது வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததே இல்லை. பிறந்ததில் இருந்தே துன்பங்கள், அவமானங்கள், தோல்விகள்! 1889-ல்…லண்டன் நகரில் சாப்ளின் பிறந்து ஓரிரு வருடங்களிலேயே பெற்றோரிடையே சண்டை வந்து விவாகரத்து அகிவிடவே, பேசத் தொடங்கும் முன்பே, தாயுடன் சேர்ந்து மேடையில் பாட வேண்டிய நிர்பந்தம். ஐந்து வயதுச் சிறுவனின் பாட்டுக்குக் கிடைத்த அமோக வரவேற்பு, ஏழு வயதிலேயே பறிபோனது. காரணம், அவரது தாயாரின் மனநிலை பாதிக்கப்பட்டதுதான்.

குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக முடிதிருத்தும் நிலையம், கண்ணாடித் தொழிற்சாலை, மருத்துவமனை என எங்கெங்கோ வேலைபார்த்தவர் சில காலம் தந்தையுடன் சேர்ந்து மேடை நாடகங்களிலும் நடித்தார். ஆனால் தந்தை திடீரென இறந்துவிடவே, மீண்டும் தொய்வு! 1910ல்…நாடகக் குழுவினருடன் அமெரிக்கா சென்றவருக்கு குறும்படங்கலில் நல்ல பெயர் கிடைத்தது. அவரது முத்திரை நடிப்பான 'டிராம்ப்' (பேகி பேண்ட், தொப்பி, கைத்தடி, வளைந்த கால்கள்) பிரபலமானது. 'தி கிட்' படத்தில் தொடங்கிய வரவேற்பு 'தி கிரேட் டிக்டேட்டர்' வரை நீடித்தது. ஆனால், இந்த காலகட்டங்களில் குடும்ப வாழ்வு அவரை பாடாய்ப் படுத்தியது.

1918-ல் நடந்த முதல் திருமணம் இரண்டு வருடம் மட்டுமே நீடித்தது. அதற்கு பின் நடந்த இரண்டு திருமணங்களும் கூட சாப்ளினுக்கு சோகத்தை மட்டுமே கொடுத்தன. 1920-ல் நான்காவது மனைவியாக ஓ ரெய்ல் அமைந்தபின் இல்லறத் தொல்லைகள் நின்றன. 1945-ம் ஆண்டு சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் தீவிரவாதி என அமெரிக்க அரசு குற்றம் சாட்டியது. இரண்டாவது மனைவி ஜோன் பெர்ரியும் சாப்ளின் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருந்தார். அவர் தரப்பு நியாயங்களை அமெரிக்க அரசு கேட்காததால், வேறு வழியின்றி, 1952-ல் கனத்த இதயத்துடன் சுவிட்சர்லாந்தில் அடைக்கலமானார் சாப்ளின்.

1972-ல்… காலச் சக்கரம் சுழல, அதே அமெரிக்க அரசு, 'உலகின் தலைச்சிறந்த நகைச்சுவை நடிகர்' விருதுபெற சாப்ளினை அழைத்தது. பரிசினை ஏற்றுக் கொண்டாலும், அமெரிக்காவில் தங்க விருப்பமின்றி, மீண்டும் சுவிட்சர்லாந்து திரும்பினார். விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து நின்று, "வாழ்நாள் முழுவதும் போர்களமாக இருந்தாலும் எப்படி ஜெயித்தீர்கள்? அது என்ன ரகசியம்?" எனக் கேட்டார்கள்.

சாப்ளின் சிரித்தார், "இந்த நிலை மாறிவிடும்" என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி… மாறிவிடும்! இதோ இந்த கணத்திலும் கூட! வறுமையில் பிறந்து, வாழ்வெல்லாம் போராடி, உலகையே தன் பெயரை உச்சரிக்க வைத்த அந்த நடிகனிற்கு, கலைஞனுக்கு ஏற்பட்ட சோதனை நம் வெற்றிக்கு நல்லசாவி.

"இந்த நிலை மாறிவிடும்"



--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Tuesday, October 19, 2010

கோபத்தை கையாள எளிய வழிகள்

1. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும்.
2. தண்ணீர் குடித்திட கோபம் தணியும்.
3. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்
4. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.
5. கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.
6. கோபத்திற்கு காரணமாக சொல், செயல், எண்ணத்தில் இருந்து வேறு செயல் செய்தல்.
7. கோபத்தின் போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடி மூலம் உணர்ந்து குறைத்தல்.
8. கோபத்திற்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியல் இட்டு எழுத கோபம் குறையும்.
9. தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.
10. வயிறு ஈரத்துணிப் பட்டி, கண் பட்டி, நெற்றிப்பட்டி போடலாம்.
11. நீர்வீழ்ச்சி, ஷவர் பாத், தொட்டிக் குளியல் செய்ய கோபம் குறையும்.
12. தொடர்ந்து இயற்கை உணவுகளை, இயன்ற வரை சாப்பிட்டுப் பழக கோபம் படிப்படியாகக் குறையும்.
13. பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடித்து கோபத்தை குறைக்கலாம்.


http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நகைச்சுவை சரவெடி

'குரைக்கிற நாய் கடிக்காது' னு சொல்றியே எதை வெச்சு அப்படி சொல்றே?

என் வீட்டுகக்காரர் கோபம் வந்தா, சத்தம் போட்டுக்கிட்டு
அடிக்க வருவார்….கையையும் ஓங்கிடுவார்…ஆனா
அடிச்சதில்லை…அதான்!
===========================================================

ஆசிரியர்: What is the full form of maths?
மாணவன்: Mentally affected teachers harassing students..

ஆசிரியர்:காந்திஜீயின் கடின உழைப்பால் ஆகஸ்டு 15 நமக்கெல்லாம் என்ன கிடைத்தது?
மாணவன்:ஒரு நாள் லீவு கிடைத்தது..

ஆசிரியர்:சரி..எனக்கு இப்ப யாராவது இரண்டு நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடப்பதற்கு ஒர் உதாரணம் சொல்லுங்கள் பார்ப்போம்???
மாணவன்:சார்..என் அப்பாவும்,அம்மாவும் ஒரே நாளில்,ஒரே நேரத்தில் தான் கல்யாணம் கட்டினார்கள்..

ஆசிரியர்:உன்னோட அப்பாட வயசென்ன???
மாணவன்:என்னோட வயசுதான் சார்..
ஆசிரியர்:எப்டீடா???
மாணவன்: நான் பிறந்தாப்பிறகு தானே அவர் அப்பா ஆகினாரு..அதான்..

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கூடாதா ?

உன் விரல் படும் காகிதமாக
பிறந்திருக்க கூடாதா ?

நின் மணிக்கைகளை உரசிக் கொண்டே
உயிர் வாழும் வளையலாக நானிருந்திருக்க கூடாதா?


நீ... உன் முகம் பார்த்து ஒப்பனை செய்யும்
கண்ணாடியாக உருவெடுத்திருக்க கூடாதா ?

அதிகாலை பொழுதில் வாசலில்
அலங்கரிக்கும் கோலத்தின் புள்ளியாக மாறியிருக்க கூடாதா?

நின் பனிகட்டி தேகத்தில் உருண்டு
விளையாடும் வியர்வைத்துளியாக அவதரித்திக்க கூடாதா ?

உன் செவிகளில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும்
கம்மலுக்கு திருகாணியாக ஒலிந்திருக்க கூடாதா ?

நின் விழிகளை சுற்றி தீட்டியிக்கும்
கண் மை யாக கரைந்திருக்க கூடாதா ?

மேக நெற்றியில் மெலிந்து மிதந்து கொண்டிருக்கும்
நிலவு பொட்டாக உருமாறியிருக்க கூடாதா ?

உன் கழுத்து வளைவுகளை கட்டிக் கொண்டிருக்கும்
பாசி மணியாக மாறியிருக்க கூடாதா ?

நீ எட்டு வைத்து நடக்கும் போதெல்லாம்
வாசம் வீசும் கொழுசு மணி மொட்டாக இருந்திருக்க கூடாதா ?


உன் உடல் தொட்டு தன்னை அழகுபடுத்தி கொள்ளும்
புடவையின் நூலாக புகுந்திருக்க கூடாதா ?

நின் இருதய அறையில் தங்கி செல்லும்
மூச்சுக் காற்றாக சில நிமிடம் மறைந்திருக்க கூடாதா ?

பாதைகள் எல்லாம் காத்திருக்கும்
உன் பாதங்களுக்கு நகமாக வளர்ந்திருக்க கூடாதா ?

என்ன செய்ய நான் மனிதனாக பிறந்து விட்டேன் என்பதற்காக
என்னை !
நீ...
ஒரு பொம்மையாக கூட வைத்திருக்க கூடாத ?

http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net