Wednesday, June 2, 2010

குழந்தை மேதையாக....

உங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டுமா?
சின்ன வயது முதல உங்கள் குழந்தையை அறிவுள்ளதாக வளர்க்க முடியும்.எவ்வளவுக்கு  எவ்வளவு சின்ன வயதிலேயே தொடங்க முடியுமோ,அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.
**படிப்பை ஒரு விளையாட்டாகச் சொல்லிக் கொடுங்கள்.
**தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரம்  குழந்தையுடன் இருப்பது என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்
**இரவுச் சாப்பாட்டின் போதுகுழந்தையின் வகுப்புப் பற்றியும்,பாடத்தைப் பற்றியும்,நண்பர்கள் பற்றியும் பேச்சுக் கொடுங்கள்.
**அகராதியில் தினசரி ஒரு வார்த்தை கற்றுக் கொள்ளப் பழக்குங்கள்.
**வெளியூருக்குப் போனால் அவ்வூர் இருக்கும் இடம், போகும் வழி பற்றி விளக்குங்கள்.
.**குழந்தையை மனப்பூர்வமாகப் பாராட்டுங்கள்.மிகச் சிறிய சுலபமான விஷயத்திற்குப் பாராட்டுவது தவறு.
**ஒரு புதிய விஷயத்தைக் குழந்தைக்குச் சொல்லித்தர வேண்டுமானால் ,அதற்குப் பழக்கமான வேறொன்றைக் காட்டி விளக்குங்கள்.
**எங்காவது செல்லும் போது,வழியில் காணப்படும் அறிவிப்புப் பலகைகளுக்கு விளக்கம் கொடுங்கள்.
**சாலை விதிகளைப் பற்றிச் சொல்லிக் கொடுங்கள்.
**குழந்தையிடம் அடிக்கடி சொல் விளையாட்டு விளையாடுங்கள்.
**ஓரிடத்துக்குப்போய் வந்த பின் அதைப்பற்றி வர்ணித்துப் பேசக் குழந்தையைக் கேளுங்கள்.
**குழந்தைகளை அடக்காமல் ,நிறையக் கேள்விகேட்க இடம் கொடுக்க வேண்டியது அவசியம்.புரிகிற மாதிரி முழுமையாகப் பதில் கொடுங்கள்.
**படிப்பது ஒரு சந்தோசமான விஷயம் என்பதை உங்கள் குழந்தை அறியும் வண்ணம் படியுங்கள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Sunday, May 30, 2010

தெரியுமா?

உலகம் சுழன்று கொண்டிருக்கிறது என்று நமக்குத் தெரியும்.பூமியில் கால் படாமல் வானில் ஆகாய விமானத்தில் அசையாமல் நின்று கொண்டிருந்தால் நம் கீழே உலகம் நம்மை விட்டுச் சுற்றுமா?
சுற்றாது.பூமிக்கு மேலே சில கிலோமீட்டர்  வரை  காற்றழுத்த மண்டலம் உண்டு.அந்த மண்டலமும் பூமியோடு சேர்ந்து சுற்றுகிறது.எனவே காற்றழுத்த மண்டலத்தில் இருப்பவர்களும் (பூமியில் கால் படாமல் இருந்தாலும)பூமியோடு சேர்ந்து சுற்றத் தான் செய்வர்.
**********
நம் முகத்தில் யாராவது பளாரென்று  அடித்தால் நாம் நட்சத்திரங்கள்  பறப்பதாக  உணருகிறோம் அல்லவா?சிலர் இதைப் பூச்சி பறப்பது போல்  இருப்பதாகச் சொல்கிறார்கள்.இது ஏன்?
கண் நரம்பு ,பொதுவாகக் கண்ணில் விழும்  ஒளிக் குறிகளைத் தான் மூளைக்கு எடுத்துச் செல்லும்.ஆனால் வலி போன்ற பாதிப்புகளை,அந்த நரம்பு மூளைக்கு உணர்த்தும் போதும்,மூளை,அதை ஒளிக் குறிப்பாகவே,பழக்கம் காரணமாக எடுத்துக் கொள்கிறது.அதனால் தான்  நம்  உடலில் வலியோ,சூடோ ஏற்படும் போது நாம் பூச்சிகள் அல்லது நட்சத்திரங்கள் பறப்பதாக உணர்கிறோம்.
**********
பனிக்  கட்டியைப் பார்த்தால் அதைச் சுற்றிப் புகை வருகிறதே?ஏன்?எப்படி?
அந்தப் புகை பனிக்  கட்டியிலிருந்து வருவதில்லை. பனிக்கட்டியைச் சுற்றி காற்றில் நீராவி இருக்கிறது.ஆனால் அது கண்ணுக்குத் தெரியாது.பனிக்கட்டியின் குளிர்ச்சி நீராவியைக் குளிர்வித்து மிக நுண்ணிய நீர்த் திவலையாக மாற்றுகிறது.அது தான் புகை மாதிரி தெரிகிறது.இன்னும் சொல்லப் போனால் அதுவும் ஒரு வகை மேகம் தான்.
**********
நெற்றிப் பொட்டில் அடித்தால் மரணம் சம்பவிப்பது ஏன்?
நெற்றிப்பொட்டுப் பகுதி மற்ற பகுதிகளை விட வலிமை குறைந்தது.அடியால் அது பாதிக்கப் படும் போது தலைக்குள் மண்டையோடு முழுவதும் வியாபித்திருக்கும் மூளை அதிர்கிறது.மரணம் அளவுக்கு அப்பதிப்பு போகிறது.
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

விளக்கம்

தீமையில் முடிவடைவது;--அகந்தை.
மகிழ்வைத் தருவது  ;--நட்பு
மரணத்தைக் காட்டிலும் கொடியது;--வஞ்சகம்.
விலை மதிப்பிட முடியாதது;--காலத்தே செய்த உதவி.
அலட்சியம் செய்யப் பட வேண்டியவை ;--தீயோர்,மாற்றானின் மனைவி,
                                                                                        பிறர் உடமை.
வாழ்கின்ற உயிர்களைக் கட்டுப் படுத்துபவர்கள் ;--
                         உண்மையே பேசுபவர்கள்.
                         இனிமையாகப் பேசுபவர்கள்.
                         அடக்கத்துடன்இருப்பவர்கள்.
இடம் அறிந்து பேசத் தெரியாதவன் ;--ஊமை
சத்தியமும் பொறுமையும் கொண்டவன் ;--உலகை வெல்பவன்.
கற்று அறிந்த பின்னும் தீமையிலேயே உழல்பவன்.;--குருடன்.
நல்லவற்றையே கேட்காதவன் ;--செவிடன்.
கேட்காமல் கொடுப்பது ;--கொடை
தீய செயல்களிலிருந்து நம்மைத் தடுப்பவன் ;--நண்பன்.
பேச்சுக்கு அழகு தருவது ;--சத்தியம்.
மகிழ்ச்சியில் திளைக்க வைப்பது ;--நல்ல நடத்தை.
மகிழ்ச்சியுடன் ஆற்ற வேண்டிய பணிகள் ;--
                               நலிந்தோர் பால் இரக்கம் கொள்வது.
                               நல்ல நடத்தையுள்ள நண்பர்களிடம் பழகுவது.
                                                            ---ஆதி சங்கரர்.
                                                      (ப்ரச்னோத்ர ரத்னா மாலிகா)

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கை

தமிழில் 'கை'என்ற வார்த்தை தான் எப்படியெல்லாம் பயன் படுத்தப் படுகிறது!

'கை'கொடுத்தான்.
'கை' கூடி வர வேண்டும்.
'கை' ரொம்ப தாராளம் அவனுக்கு.
கையைக் கடித்து விட்டது.
கையோடு கையாய்
உள்ளங்கை நெல்லிக்கனி.
கை சுத்தமில்லைஅவனுக்கு.
அவனைக் கை கழுவித் தொலை.
கையால் ஆகாதவன்.
கை விட்டு விட்டான்.
எச்சிற்கையால் காக்காய் கூட விரட்ட மாட்டான்.
கையாடல்செய்து விட்டான்.
கையும் ஓடவில்லை,காலும் ஓடவில்லை.
ஒரு கை குறையுது.
அடிக்கிற கை தான் அணைக்கும்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லை.
வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல்....
கை மேல் பலன்.
கை நாட்டுப் பேர்வழி.
கையை நனச்சிட்டு வந்தான்.
கையைப் பிடித்தான்.
கை வைக்காதே.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

துர்நாற்றம்

ஒரு பலசரக்கு வியாபாரி,ஒரு ஆசிரியர்,ஒரு அரசியல்வாதி மூவரும் ஒரு காட்டுக்குள் சென்ற போது வழிதவறிப் போயிற்று.மிகுந்த அலைச்சலுக்குப் பின் ஒரு விவசாயியின் வீட்டைக் கண்டு பிடித்தனர். விவசாயியிடம் ஒரு இரவு தங்குவதற்கு அனுமதி கேட்க,விவசாயி சொன்னார்,''உங்களில் இருவர் தங்க அறை கொடுக்க முடியும்.மூன்றாவது நபர் ஆடு,பசு,பன்றி இவை தாங்கும் கொட்டகையில் தான் தூங்க வேண்டும்,''ஆசிரியர் ,''நான் போய் அங்கு படுத்துக்  கொள்கிறேன்.''என்றார்.மற்ற இருவரும் அறையில் போய் படுத்துக் கொண்டனர்.
கொஞ்ச  நேரம்  ஆனவுடன்  கதவு  தட்டப்பட்டது.கதவைத் திறந்த போது அங்கு ஆசிரியர் நின்று கொண்டிருந்தார்.''என்னால் அந்த நாற்றத்தைத் தாங்க முடியவில்லை.''உடனே பலசரக்கு வியாபாரி,''சரி,சரி,நான் அங்கு போய் தூங்குகிறேன்,''என்று கூறி கொட்டகைக்குச் சென்றார்.
ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தால் வியாபாரி வாந்தி எடுத்துக் கொண்டே நிற்கிறார்.இறுதியாக அரசியல்வாதி ,தான் அங்கு போவதாகக் கூறிச் சென்றார்.
ஐந்து நிமிடத்தில் கதவு தட்டப்பட்டது.ஆசிரியரும்,வியாபாரியும் கதவைத் திறந்து பார்த்தனர்.இப்போது ஆடு,பசு,பன்றி இவையெல்லாம் நின்று கொண்டிருந்தன.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net