Monday, January 4, 2010

ஒப்பீடு

காக்கையும் கருப்புதான்;குயிலும் கருப்பு தான்.இவற்றுக்குள் என்ன வித்தியாசம்?
வசந்த காலம் வந்து விட்டாலும்,காக்கை காக்கை தான்!குயிலும் குயில் தான்!
கருப்பாக இருப்பதால் காக்கையும் குயிலும் ஒன்று போல் தோன்றலாம்.
ஆனால் வசந்த காலத்தில்
பாடும் குயிலின் குரலோடு,கத்தும் காக்கையின் குரலை ஒப்பிட்டுப் பார்க்க நினைவும் தோன்றுமா?
அமரகோஷத் என்னும் சம்ஷ்க்ருத செய்யுளின் கருத்து.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

உற்சாகம்

மரத்தில் ஆங்காங்கே இலைகள் துளிர்க்கும் போது,"வசந்தம் எவ்வளவு அழகாக இருக்கிறது!"என்று சிலாகித்துக் கொள்ள வேண்டும்.
கிளைகளில் இலைகள் அடர்ந்து பொன்னிறக் கனிகள் ஊஞ்சலாடும் போது,
"மாரிக்காலம் எவ்வளவு நேர்த்தியானது!"என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.
கோடையில் இலைகள் எல்லாம் உதிர்ந்து மரம் மொட்டையாக இருக்கும் போது அதன் வழியே வானத்தைப் பார்த்து,"ஆகா,இந்த நட்சத்திரக் கூட்டங்கள் எவ்வளவு அற்புதமாகக் காட்சியளிக்கின்றன!"என்று ரசிக்க வேண்டும்.
எப்போதும் வாழ்வின் பிரகாசமான பகுதிகளைப் பார்த்து உற்சாகம் பெற வேண்டும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Monday, December 14, 2009

குதிரைக்காரன்

ஒரு குரு இருந்தார்.முற்றும் துறந்தவர்.எல்லாம் கற்றவர்.அவரை பிரசங்கம் செய்ய ஒரு ஊரில் கூப்பிட்டிருந்தார்கள்.கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள்.குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார்.அன்று நல்ல மழை.கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள்.குரு வந்த போது யாருமில்லை.பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால் அவருக்கு ஏமாற்றம்.அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும் தான்.என்ன செய்யலாம் என்று அவனையே கேட்டார்.
அவன் சொன்னான்,''ஐயா,நான் குதிரைக்காரன்.எனக்கு ஒன்றும் தெரியாது.அனால் ஒன்றே ஒன்று மட்டும் தெரியும்.நான் முப்பது குதிரை வளர்க்கிறேன்.புல்லு வைக்கப் போகும் போது ,எல்லாக் குதிரைகளும் வெளியே சென்றிருக்க ,ஒரே ஒரு குதிரை மட்டும் இருந்தாலும் ,நான் அந்தக் குதிரைக்குப் புல்லை வைத்து விட்டுத்தான் வருவேன்.''
படாரென்று அறைந்தது போல் இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக் காரனைப் பாராட்டி விட்டு,அவனுக்கு மட்டும் தன பிரசங்கத்தை ஆரம்பித்தார்.தத்துவம்,மந்திரம்,பாவம்,புண்ணியம்,சொர்க்கம்,நரகம் என்று சரமாரியாகப் பேசிப் பிரமாதப் படுத்தி விட்டார்.பிரசங்கம் முடிந்ததும்,எப்படி இருந்தது என்று அவனைப் பார்த்துப் பெருமையாகக் கேட்டார்.
''ஐயா,நான் குதிரைக்காரன்.எனக்கு ஒன்றும் தெரியாது.ஆனால் ஒன்று மட்டும் தெரியும்.நான் புல்லு வைக்கப் போன இடத்தில் ஒரே ஒரு குதிரை தான் இருந்தது என்றால்,அதற்கு மட்டும் தான் புல் வைப்பேன்.முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டி விட்டு வர மாட்டேன்,''என்றான் அவன்.
அவ்வளவு தான்!குரு அதிர்ந்து விட்டார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

குடும்ப வன்முறை

சமூகத்திலுள்ள வன்முறைகளுக்கு எந்த விதத்திலும் குறைவானதாயில்லை,குடும்பத்தில் உள்ள வன்முறைகள்.இரத்தம் சிந்தாத இந்த வன்முறைக்கு ஆயுதம் சொற்கள் தான்.கூர் தீட்டப்பட்ட கத்திகளைப் போல சொற்கள் நம் உடலில் ஆழமாகப் பாய்கின்றன.அதன் வலி மிக அந்தரங்கமானது.ஆறாத ரணமுடையது.
கதவுகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் குடும்ப யுத்தத்தின் கூப்பாடு நம் தெருக்கள்,நகரங்கள் முழுவதும் எதிரொலிக்கக் கூடும்.வீடுகளுக்குக் கதவுகளையும் ஜன்னல்களையும் கண்டு பிடித்தவன் ஒரு குடும்பஸ்தனாகத் தான் இருக்க வேண்டும்.நம் வீட்டுக் கதவுகள் வெளியிலிருந்து எதுவும் நுழையாமல் பார்த்துக் கொள்வதை விடவும் உள்ளிருந்து எதுவும் வெளியே செல்லாமல் இருக்கத்தான் அதிகம் உதவுகின்றன.
--கதா விலாசம் --எஸ்.இராமகிருஷ்ணன்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Friday, December 11, 2009

லஞ்சம்

ஒரு ஊரில் எலித்தொல்லை. அதைப் பார்த்த ராஜா,''ஒரு செத்த எலி கொண்டு வந்தால் பத்து ரூபாய் தரப்படும்,''என்று அறிவித்தார்.மக்களும் நிறைய எலிகளைக் கொன்று பையில் போட்டு அரண்மனையில் கொடுத்துப் பணம் பெற்றுச்சென்றனர்.அரண்மனை துர்நாற்றம் எடுக்க ஆரம்பித்தது.அரசன் உடனே செத்த எலியின் வாலைக் கொண்டு வந்தால் போதும் என்று அறிவித்தார்.வாலைக் கொண்டு வந்து பரிசு வாங்கும் மக்களின் எண்ணக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருந்தது.அனால் எலித்தொல்லை குறையவில்லை.இது பற்றி அரசன் தீவிரமாக விசாரித்ததில்தெரிய வந்தது;
பணம் கிடைக்குமே என்றுமக்களே வீட்டில் எலி வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள்!