தனது ஆய்வின் முடிவில், பெண்கள் உண்மையிலேயே விரும்புபவை எவை? என்பதை ஒரு பட்டியலே வெளியிட்டார். அதில் இடம்பிடித்த முக்கிய விஷயங்கள் இங்கே உங்கள் பார்வைக்கும்... * `கீ' கொடுத்த பொம்மை மாதிரி எடுத்ததற்கெல்லாம் ஆட்டம் போடுபவளாக பெண்ணை பயன்படுத்தக்கூடாது. அதேபோல், அதிகம் பேசாதே... என்று கட்டுப்படுத்தவும் கூடாது. * தான் விரும்புகிறவன், சிறந்த ஆண் மகனாக, எல்லோராலும் பாராட்டப்படக் கூடியவனாக இருக்க வேண்டும் என்று எல்லாப் பெண்களுமே பேராசைப்படுகிறார்கள். அதிலும், தனித்திறன் பெற்ற ஆண்களை பெண்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். * காலையில் வேலைக்கு புறப்படும் ஆண், `அந்த பொருள் எங்கே? இது எங்கே?' என்றெல்லாம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. அதேநேரம், பொறுப்பாக கேள்விகள் கேட்டால், அதற்குரிய செயலை பொறுப்பாக செய்ய எல்லா பெண்களும் தயாராகவே இருக்கிறார்களாம். * விடுமுறை நாட்களில் தங்கள் விருப்பம்போல் ஓய்வெடுக்க வேண்டும் என்பது பெண்களின் பேராசை என்றுகூட சொல்லலாம். அன்றையதினம், `இன்று ஏதாவது விசேஷமாக செய்யலாமே...' என்று வற்புறுத்தக்கூடாது. * எந்தவொரு வேலையையும் நின்று நிதானமாக செய்யத்தான் எல்லாப் பெண் களுக்கும் பிடிக்கும். அவசரம் அவசர மாக அதைச் செய்வதில் அவர் களுக்கு உடன்பாடு இல்லை. * திடீரென்று குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், அதற்கு காரண மாக மனைவியை குற்றம் சொல்லக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு கணவன், மனைவி இருவருக் குமே உண்டு. * எந்தவொரு முடிவை கணவன் எடுத் தாலும், அதில் மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும். முடிவு எடுக்கும் விஷயத்தில் மனைவியை புறந் தள்ளக் கூடாது. * ஒரு குடும்பத்தில் கணவனிடம் மட்டுமே குடும்ப வருமானம் இருக்கக் கூடாது. மனைவியிடமும் கொஞ்சம் பணம் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தன்னை மதிப்பார்கள் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள். * படுக்கையறையில் போர் அடிக்கும் விதமாக கணவன் செயல்படக்கூடாது. எதைச் செய்தாலும், எதைச் சொன்னாலும் புதுமையாக, வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு. * அதிகம் பேசுவதில் பெண்களுக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. அதனால், செல்போனில் அவர்கள் நீண்ட நேரம் அரட்டை அடித்தாலும் கண்டு கொள்ளக்கூடாது. `அய்யோ... பில் அதிகமாகி விடும்' என்று சொன்னால் அவர்கள் எரிச்சல் ஆகிவிடுவார்கள். அதனால், அவர்களை மனம்போல் பேச விட்டுவிட வேண்டும். * வீட்டிலேயே அடைந்து கிடக்க எந்தவொரு பெண்ணும் ஆர்வம் காட்ட மாட்டாள். வாரத்திற்கு ஒரு முறை பக்கத்தில் உள்ள பார்க், பீச், ஓட்டல், தியேட்டருக்கோ, வருடத்திற்கு ஒருமுறையாவது வெளிர் சுற்றுலாவுக்கோ அழைத்துச் செல்ல வேண்டும். * கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாப் பெண்களிடமும் உள்ளது. அந்த வேலையை கணவன் தேடித் தந்தால் அவர்கள் மிகவும் மகிழ்வார்கள். * இப்போதெல்லாம் இடுப்பு சிறுத்த பெண்களைத்தான் ஆண்கள் விரும்புகிறார்கள். சிலநேரங்களில் எதிர்பாராதவிதமாக பெண்களது உடம்பு பெருத்துவிட்டால், அதற்காக அவர்களை இன்னும் வருத்தத்திற்குள்ளாக்கக் கூடாது. இடை குறைக்கும் முயற்சிக்கு கணவர் தரப்பில் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்கள். - இப்படி பெண்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றினாலே போதும். அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும் என்கிறார், ஆய்வாளர் பேகோ. YOGANANDHAN GANESAN |
உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Tuesday, November 30, 2010
பெண்கள் மனதிற்குள் இதைத்தான் பூட்டி வைத்திருக்கிறார்கள்...
ஜோக்ஸ்
ஜோக்ஸ்
===============================================
என்கிட்டே 12 கார், 6 வீடு, எஸ்டேட், தோட்டம், பலகோடி ரூபாய் பேங்க் பேலன்ஸ் இருக்கு. உங்ககிட்ட என்ன இருக்கு?
என் பையன் இருக்கான். பை த வே அவன் உங்க பொண்ணுக்கு பாய் பிரண்டா இருக்கான்.
எஸ். ஒரே நாளில் அம்பானி ஆக ஒரே வழி
===============================================
உலகில் பல ஆண்களை காயப்படுத்திய வாக்கியம்: உங்களை நான் பிரண்டாதான் நினைச்சேன்.
உலகில் பல ஆண்களை சமாதானப் படுத்திய வாக்கியம்: தீபா இல்லைன்னா திவ்யா.
===============================================
ரெண்டு பேரு மனைவிய தொலைசிட்டங்க:
உங்க மனைவி எப்படி இருப்பாங்க?
ஸ்லிம்மா சிவப்பா ரொம்ப அழகா. உங்க மனைவி
அவளை எதுக்கு தேடிகிட்டு. வாங்க உங்க மனைவிய தேடலாம்
===============================================
கண்டக்டர்: எங்க போகணும்?
டெரர்: அந்த பிங்க் கலர் சுடிதார்கிட்ட. கொஞ்சம் வழி விடுங்க.
===============================================
செல்வா: நண்பா எனக்கு சாப்பிட பிடிக்கலை, தூங்க பிடிக்கலை எனக்கு காதல் வந்திடுச்சோ
சௌந்தர்: சனியனே செமஸ்டர் எக்ஸாம் வந்திடுச்சு போய் படி
=============================
ஜில் தண்ணி: ஊர்ல பஸ் டிக்கெட், டிரைன் டிக்கட், சினிமா டிக்கெட் வச்சிருக்குறவன் எல்லாம் சந்தோசமா இருக்காங்க. ஒரே ஒரு ஹால் டிக்கெட்ட வச்சிக்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே. அய்யய்யையோ
===============================================
மரணம் என்பது ஒரு நொடியில் உயிர் போகும்.
ஆனால் study லீவ் என்பது ஒவ்வொரு நொடியும் உயிர் போகும். படிக்கவும் முடியாமா என்ஜாய் பண்ணவும் முடியாம ... அந்த அவஸ்தை அனுபவிச்சு பாத்தாதான் தெரியும்
===============================================
டெரர் அவர்களின் இதயத்தையும் உடைக்கவோ காயப்படுத்தவோ வேண்டாம். ஏன்னா அவருக்கு இதயம் ஒண்ணுதான. வேணும்னா அவரோட எலும்ப உடைங்க. அதுதான் 206 இருக்கே.
===============================================
சிறந்த லவ் பெயிலியர் கவிதை:
தப்பிச்சன்டா
சாமீ!!!
===============================================
பொண்ணு: எங்களுக்கெல்லாம் பசங்க எல்லாம் டவுன் பஸ் மாதிரி ஒண்ணு போனா இன்னொன்னு.
பையன்: எங்களுக்கெல்லாம் பொண்ணுங்க எல்லாம் ஆட்டோ மாதிரி ஒன்னை கூப்பிட்டா பத்து வரும். Boys Rocks...
--
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
Monday, November 29, 2010
பிட்டு - 31
பரீட்சை பேப்பர்ல கடைசியா நன்றி - மனோகர்னு எழுதித் தொலைச்சுட்டேன்.
==========
2. விநாடி வினா நிகழ்ச்சில அந்தப் பொண்ணை ஏன் கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்தீங்க ?
ஸாரிங்க, குவிஸ் புரோக்ராம்னு தெரியாது, கிஸ் புரோக்ராம்னு நினைச்சுட்டேன்.
==========
3. என்னடா ? போஸ்ட்மேன் வேலை கிடைச்சதுக்கு இவ்வளவு சந்தோஷப்படறே ?
பின்னே ? இனி எந்த ஃபிகரைப் பார்த்து லெட்டர் குடுத்தாலும் யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க.
==========
4. சார் பர்ஸை வீட்லயே வெச்சிட்டு ஆஃபீஸ் வந்துட்டேன். ஒரு நூறு ரூபா இருந்தா கொடுங்களேன்.
இந்தா ரெண்டு ரூபா! பஸ் புடிச்சு வீட்டுக்குப் போய், பர்ஸை எடுத்துட்டு வந்துடு.
==========
5. அந்த ஆட்டோவுல கல்யாணத்துக்கு வயது 31-ன்னு எழுதியிருக்கே, எப்படி ?
அந்த ஆட்டோக்காரரோட பேரு கல்யாணம். அவருக்க வயசு முப்பத்தி ஒண்ணு
==========
6. பதவிப் பிரமாணம் எடுக்க தலைவர் ரொம்ப கூச்சப்படுறாரே .. ஏன் ?
எதையும் யாருக்கும் தெரியாம எடுத்துதான் பழக்கமாம்
==========
7. மாப்பிள்ளை பையன் ஊமை பரவாயில்லையா ?
பரவாயில்லை .. .. எப்படியும் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் வாயைத் திறக்கப் போறதில்லையே
==========
இன்றைய மெகா ஜோக்:
8. கணவன்: சென்ஸார் அதிகாரிங்க வந்திருக்காங்க .. ..
மனைவி: எதுக்காம் .. .. ?
கண்வன்: நீயும் என் அம்மாவும் போடற சண்டையில் அளவுக்கு மீறி வன்முறை இருக்குனு அவங்களுக்குத் தகவல் போயிருக்குதாம்.
--
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
இரவில் தனிமையில் இருந்தால் திக்...திக்...
உருவம் உண்டு, உருவம் கிடையாது. இருட்டுக்குள் இருக்கும், மரத்தில் ஆடும். மனிதனைப் போல உருவமிருக்கும். அதன் வழியில் குறுக்கிட்டால் ஒரே அடியில் உயிரைக் குடித்துவிடும். இப்படி ஆளாளுக்கு சொல்லி வைக்க, தொற்றிக் கொண்ட பயம்தான் பேய் பயம். *** பட்டிக்காட்டான், பகுத்தறிவாளன், ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொருவரும் பேய் பற்றிய சிந்தனையில் வேறுபடுகிறார்கள். பேய் பற்றிய குறிப்புகள் ஆன்மிக நூல்களிலும் காணப்படுகிறது. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பேய் பற்றி பேசப்பட்டு வருகிறது. மனோதத்துவ விஞ்ஞானிகள் (1890-ல்) சொசைட்டி பார் சைஜிக்கல் ரிசர்ச் (எஸ்.பி.ஆர்.) என்ற அமைப்பை தொடங்கி ஆவிகளைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்து நேரடி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவி ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. *** ஆவி உலக ஆராய்ச்சியின் முன்னோடியாக கருதப்படும் ஜி.என்.எம்.டைரல் என்பவர் 4 வகை பேய்கள் உண்டு என்கிறார். 1.உயிரோடு இருப்பவர்களின் ஆவி. ஒருவர் உயிரோடு இருக்கும்போதே அவருடைய ஆவி வேறு எங்கோ வசிக்கும் ஒருவர் முன் தோன்றுவது. 2. ஆபத்து நேர ஆவிகள். நமக்கு நன்கு தெரிந்தவர், அவருக்கு ஆபத்தான தருணத்தில் (இறப்பு அல்லது விபத்தின்போது) நம் முன் தோன்றுவது. 3. இயல்பான ஆவிகள். இறந்த ஒருவருடைய ஆவி எப்போதாவது தோன்றுவது. 4. நீண்டகால ஆவிகள். பழைய கோட்டைகள், பாழடைந்த வீடுகளில் பல ஆண்டுகளாக வசிப்பவை இந்த வகை ஆவிகள். *** ஆவி உலகில் மீடியமாக செயல்படும் பெண்கள் ஏராளம். ஆவி ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் முக்கியமான பெண் ஆய்வாளர் பாய்ன். ஆவிகளில் நல்லவை, கெட்டவை, சாது, முரடானவை உண்டு என்கிறார் இவர். அவை மனிதர்களை தாக்கும், உதவும், கண்டுகொள்ளாமலும் செல்லும் என்பது இவருடைய கருத்து. பேய் அடித்து யாரும் சாவதில்லை. பேயைப் பார்த்த பயத்தில் செத்தவர்கள்தான் ஏராளம் என்கிறார் பாய்ன். பேயைப் பார்த்து பயப்படாமல், `ச்சீ போய்விடு' என்று அலட்சியப்படுத்தினால் அவை போய்விடும் என்று பேய் விரட்ட டிப்ஸ் தருகிறார் இவர். *** வீட்லிகேரிங்டன் ஆவி ஆராய்ச்சியில் புகழ் பெற்றவர். "உடலில் உள்ள செல்கள் போலவே மனதுக்கும் செல்கள் உண்டு. அவை சைகான்கள் எனப்படும். நாம் ஆழமாக ஒரு விஷயத்தை எண்ணும்போது சைகான்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் உருவமாகத் தோன்றும். அதுதான் ஆவி'' என்று இவர் விளக்கம் அளித்தார். இது ஒரு புதுமையான விளக்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், எல்லோரது எண்ணங்களும் அப்படி உருவத்தை ஏற்படுத்தும் என்பதை மெய்ப்பிக்க முடியாததால் அது ஒரு தியரியாக மட்டுமே இருந்து வருகிறது. *** ஆவி ஆய்வாளர் மையர்ஸ் இன்னொரு முறையில் விளக்கம் தருகிறார். டெலிபதி (தொலைவில் உணர்தல்) எண்ணங்கள்தான் ஆவிக்கு காரணம் என்கிறார் இவர். ஒருவர் ஆபத்தான நேரத்தில் யாரையாவது பார்க்கவோ, உதவி கோரவோ நினைத்தால் அவரது எண்ணங்கள் `டெலிபதி' முறையில் சம்பந்தப்பட்டவரை சென்றடையும். அப்போது அவர் முன்பு பாதிக்கப்பட்டவரின் உருவமும் தோன்றும். அதுதான் ஆவி என்கிறார் மையர்ஸ். இதற்கு அவர் சில உதாரணங்களைக் கூறி விளக்கினார். இந்தக் கருத்துக்களை விஞ்ஞானிகள் ஓரளவு ஏற்றுக்கொள்கிறார்கள். *** ஆவிகளுக்கு உடல் இல்லாமல் எப்படி உருவம் ஏற்படும்? தோன்றும் முன்பாக அவை எங்கே குடியிருக்கின்றன? என்பவை பேய் மறுப்பாளர்கள் எழுப்பும் முக்கிய கேள்விகள். இறந்தவரின் ஆன்மா ஆவியாக உருப்பெற்று அலைகிறது என்றால் இறப்பின் மர்மங்களை அவை மனிதனுக்கு விளக்க முடியுமே? ஒரு இடத்தில் இருக்கும் எந்த மனிதரையும் கவனிக்காமல் தான் பாட்டுக்கு கடந்து செல்கிறதே அவற்றுக்கு புத்திசாலித்தனம் கிடையாதா? உருவமற்ற அவை உடை அணிந்து தோன்றுமாமே? அவற்றுக்கு எதற்கு உடை? அவை எப்படி அணியும்? இவையும் அவர்களின் கேள்விகள். *** ஆவிகளை நம்பாத ஆய்வாளர்கள், எல்லா கூற்றுகளையுமே மறுக்கிறார்கள். எல்லாம் பிரமை என்கிறார்கள். வழிவழியாக கடத்தப்படும் கற்பனைகள் பிரமை உருவத்தை தோற்றுவிக்கக்கூடும் அல்லது தவறாக புரிந்துகொள்ளப்படும் என்பது அவர்களின் கருத்து. கேமரா கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஆவி ஆராய்ச்சி சூடுபிடித்தது. நவீன ஸ்கேனர்கள், கதிர்வீச்சுக் கேமரா, பேய்களுக்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட `ஸ்பைடர்' கருவி என அறிவியல் நவீனங்கள் கொண்டு ஆய்வாளர்கள் ஆவிகளைத் தேடுகிறார்கள். ஆனால் இதுவரை ஆவிகள் சிக்கவில்லை. அவை எழுப்பும் பீதியும் குறையவில்லை. YOGANANDHAN GANESAN |
Sunday, November 28, 2010
என் வாழ்க்கை இனிமையாய்..
அவள் வருகை சொர்கத்தின் வாசலாய்..
காதல் பூத்து குலுங்கியது..
இணை பிரியாமல்..
அவளின் அருகாமை சொர்க்கமாய்...
அவளின் பிரிவு...சொல்ல தெரியல... வார்த்தை கிடைக்காமல்....
மது என் தோழனாக..
வாழ பிடிக்காமல் ...
பாதை தடுமாறியது...
அவள் நினைவுகள் இடையிடையே வந்து செல்ல...
மாயம் நடந்தேறியது...
என் கவலையை கொன்ற நண்பர்கள் என்னோடு...
என் வாழ்கை பயணத்தில் தோள் கொடுக்க தோழி இருக்கிறாள்...
நான் தனியன் அல்ல நண்பர்களுடன்... சந்தோசமாய்..
சந்தோசமாய்..
யோகா :)
--
--
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
கடி ஜோக்.
1. பளிச்சு! பளிச்சு! தம்மாத்துண்டு இஸ்டாரே! ஆச்சர்யமாதான் கீது நா உன்ன பாக்க சொல்லொ யெம்மா ஒசரத்துல கீற, வானத்து மேல கீற, சொம்மா வைரமாறி மின்னிகினு பளிச்சு! பளிச்சு! தம்மாத்துண்டு இஸ்டாரே! புரியலையா? இது சென்னை செந்தமிழில் "Twinkle Twinkle Little Star!!!!" 2. ஒரு எறும்பு நினைச்சா, ஆயிரம் யானையை கடிக்கலாம். ஆனால், ஆயிரம் யானை நினைச்சாலும், ஒரு எறும்பை கடிக்க முடியாது!! 3. ராமு: என் மனைவி என்ன செய்தாலும் குத்திக் காட்டுறா... சோமு: இது எல்லார் வீட்டிலேயும் அன்றாடம் நடக்குற நிகழ்ச்சிதானே... இதுக்குப் போய் அலுத்துக்குறீங்க! ராமு:அட நீங்க வேற.. அவ குண்டூசியால குத்துறான்னுல்ல சொல்ல வந்தேன்... 4. ஜோ : என்னோட இ-மெயில் id : sarthaar123@yahoo.com, password: qweasd. நண் : எதுக்கு பாஸ்வோர்டையும் சொல்றே? ஜோ :அப்பத்தானே என்னோட லெட்டரை என்னுடைய இமெயிலில் நீ படிக்க முடியும். 5. டாக்டர் நீங்க சொன்னீங்கனுட்டு சிகரட்ட நிறுத்தி அதுக்கு பதிலா சூயிங்கம் பழக்கத்த ஏற்படுத்திக்கிட்டேன் ஆனா பிரச்சனை என்னன்னா... ஏன்? நல்ல விஷயம்தான? இதுல என்ன பிரச்சனை இருக்கு? எவ்வளவு தீக்குச்சிய வச்சி பத்த வச்சாலும் சூயிங்கம் பத்தவே மாட்டேங்குதே.. YOGANANDHAN GANESAN |
சிந்தனைகள்
· மனத்தை ஒருவன் வைத்திருக்கும் நிலையைப் பொறுத்தே அவன் அடையும் சந்தோஷம் இருக்கிறது.
· உண்மையான சந்தோஷம் என்பது நம்முள்ளே இருக்கும் ஒரு தன்மையால், வாழ்வைப் பற்றிய ஒரு சிந்தனையால் ஏற்படுகிறது. திருப்திக்கான வழிமுறைகள் நம்மிடையே இல்லாவிட்டால், பொருளாதார வெற்றிகள் முதல் எவ்வளவு வெற்றிகள் இருந்தாலும் அது நம்மை மகிழ்விக்காது.
· நல்லவைகள் எதையாவது செய்வது, நல்லவைகள் எதையாவது நேசிப்பது, நல்லவைகள் எதையாவது நம்புவது இவைதான் வாழ்வில் சந்தோஷத்திற்கான அடிப்படைத் தேவைகள்.
· எவ்வளவு முறை தோல்வி பெற்றாலும் நீங்கள் வெற்றி பெறப் பிறந்தவர்கள். ஒரு காரியத்தை நன்கு செய்ததே அதன் வெகுமதிதான்.
· சந்தோஷம் என்பது பெரும்பாலும் கடும் உழைப்பால் ஏற்படுகிறது. வெறும் சிந்தனை, உணர்வு அல்லது உணர்ச்சியை அப்படியே சந்தோஷமாக அனுபவித்துவிடலாம் என்று கற்பனை செய்வது சிலர் செய்யும் தவறாகும். அழகை அருந்தமுடியுமா! சந்தோஷத்தை போராடிப் பெற வேண்டும். அது, மனிதர் வேலை செய்வதை விரும்புகிறது.
· தன்னிடம் இல்லாததற்காக வருந்தாமல், தன்னிடம் இருப்பதற்காக சந்தோஷமாக இருப்பவனே புத்திசாலியான மனிதன்.
· ஒவ்வொரு தலைமுறையும் பழமை தனக்குத் தந்த புதையலை சந்தோஷமாக அனுபவிக்கிறது. பிறகு புதிய சொத்துக்களை அப்புதையலில் சேர்த்துப் பெரிதாக்கி எதிர்காலத் தலைமுறைக்கு வழங்குகிறது.
--
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
சந்தி சிரிக்கிறது...
அந்தோ பரிதாபம்
அங்கே........ பார்...
அனியாயமொன்றுண்டு
அழுகிறார்கள் கூடிநின்று
அவனும் துரத்தித்துரத்தி
காதல் வலை வீசினானாம்
அவளும் அதில் மயங்கி
ஓடிவிட்டாள் அவன்பின்னே
ஒப்பாரி வைக்கிறார்கள்
பெத்த மனம் கலங்கிறதாம்
எப்படியெல்லாம் வளர்த்த பிள்ளை
ஏனிப்படி ஓடிவிட்டாள்
ஊரில் உள்ளவரெல்லாம்
ஓடிவந்து விசாரிக்க
துக்கம் தொண்டையடைத்து
தாழாமல் அழுகிறாளே....
பரவிய செய்தி கேட்டு
ஊர் முழுதும் சம்பாசனை
தலைகுனிந்த தந்தைமனம்
தரம் கெட்டதாய் அழுகிறது
நகரம் கண்டிராத
கிராமத்தின் தலையெழுத்து
ஒட்ட வீரர்கள்
காலத்துக்குக் காலம் ஓடுகிறார்கள்
அம்மா ஓடினாள் என்று மகளும்
அக்கா ஓடினாள் என்று தங்கையும்
அண்ணன் ஓடினான் என்று தம்பியும்
ஒட்டப்போட்டி நடக்கிறது..
காதலை வெல்வதற்காய்..
ஓடிவிட்ட உங்களைப்பார்த்து
கைகொட்டிச்சிரிக்கிறதே உலகம்
ஏனதை மறந்து விட்டீர்கள்.
--
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
Saturday, November 27, 2010
பிட்டு - 30
இந்தப் பிரசினைக்கு ஏன் இங்கே வந்தீங்க ?
நான் வீட்ல இல்லாதப்ப தனியா அவர் பாட்டுக்கு எதிர்த்துப் பேசறார் டாக்டர்.
==========
2. இல்லத்தரசி : டாக்டர், என் மாமியாருக்கு நீங்க வைத்தியம் பண்றது இது மூணாவது தடவை.
டாக்டர்: அதுக்கு என்னங்க இப்போ?
இல்லத்தரசி: இந்த முறையும் அவங்க தேறிட்டாங்கன்னா, நான் டாக்டரை மாத்த வேண்டியிருக்கும்.
==========
3. தரகர்: மாடி போர்ஷன் எங்கே காட்டினாலும் வேண்டாம்னு சொல்லிட்டே இருக்கீங்களே ஏன் .. .. ?
வீடு பார்க்க வந்தவர்: என் மனைவி என்னை எடுத்தெறிஞ்சு பேசுவா அதான் பயமா இருக்கு
==========
4. தன் வீட்டருகே இருந்த பைனான்ஸ் கம்பெனி திடீரென்று மூடப்பட்டுவிட்டதாக தன் நண்பனிடம் வருத்தத்தோடு சொன்னார் சர்தார்ஜி.
"ஏன், நீ எதுவும் பணம் போட்டிருந்தியா?" என்று கேட்டார் நண்பர்.
"பத்தாயிரம் ரூபாயை இன்னிக்கு அங்கே டெபாசிட் பண்ணலாம்னு நினைச்சிருந்தேன் படுபாவி அதுக்குள்ளே ஒடிட்டானே" முன்பை விட வருத்தமாய் சொன்னார் சர்தார்ஜி
==========
5. சர்தார்ஜி ஒருவர் வேலை விஷயமாக ஒரு கம்பெனிக்குச் சென்றார். அங்கே, அவசரமாக பத்து ஒயிட் பேப்பர்கள் தேவைப்பட்டது அவருக்கு ஆனால், அவரிடமிருந்ததோ
ஒரே ஒரு பேப்பர் மட்டும். பக்கத்தில் இருந்த கடைகளில் பேப்பர் கிடைக்காததால் ஒரு ஐடியாவுடன் ஜெராக்ஸ் கடை ஒன்றிற்குள் நுழைந்து கையிலிருந்த ஒயிட் பேப்பரைக்
குடுத்து அவசரமா, பத்து காப்பி போட்டுக்குடுங்க என்றவர் சட்டென்று ஏதோ நினைவுக்கு வந்தவராய் பேக் அண்ட் ஃப்ரெண்ட் ரெண்டு சைடும் காப்பி போட்டுடுங்க - என்றார்.
==========
6. சர்தார்ஜிகள் முட்டாள்களாக ஜோக்குகளில் சித்திக்கப்படுவதை கடுமையாக எதிர்ப்பவர் சுக்பீர்சிங் இந்த உலகில் சர்தார்ஜிகள் மட்டும் தான் முட்டாள்களா ? எல்லோரும்
ஒரு வகையில் முட்டாள்கள்தான். இதை நிரூபித்துக் காட்டுவேன் என்று தன் நண்பர்களிடம் ஒரு நாள் சவால் விட்ட சுக்பீர் சிங், குதுப்மினாருக்கு போனார்.
குதுப்மினாரின் உச்சியில் நின்று கொண்டு கீழே எதையோ சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தார் "கீழே அப்படி என்ன சுவாரஸ்யமாக இருக்கிறது?" என்று அவர் காதருகில்
ஓரு குரல் கேட்டது. "பேசாமல் என் பின்னால் கியூவில் நில், நான் கொஞ்ச நேரம் பார்த்த பிறகு உனக்கு விஷயத்தை சொல்கிறேன்" என்றார் சுக்பீர் சிங்.
கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆன பின் சர்தார்ஜியின் பின்னால் நின்றவருக்கு கோபம் வந்தது. என்னய்யா இது நீ பார்த்து ரசிக்க குதுப்மினாரின் உச்சியில் இருந்து தரை
வரை நீண்ட கியூ நிற்கிறது. நீ என்ன பார்க்கிறாய் என்பதை இப்போதாவது சொல்லமாட்டாயா ? என்று சிங்கின் காதருகே சென்று கத்தினார்.
இதைக் கேட்டதும் சுக்பீர் சிங்குக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஒரு சர்தார்ஜியை நம்பி எத்தனை முட்டாள்கள் ஒன்றுமில்லாததைப் பார்க்க கியூவில் நிற்கிறhர்கள்
என்று நினைத்தவாறு திரும்பிப் பார்த்த சுக்பீர்கிங்கின் முகம் குறுகியது. குதுப்பினாரின் உச்சி முதல் தரை வரை கியூவில் நின்றிருந்தவர்கள் எல்லோருமே சர்தாஜிகள்
==========
7. டாக்டர் எனக்கு வாய் கூசாத மாதிரி மாத்திரை குடுங்க
ஏன் ? அடிக்கடி மாங்கா சாப்பிடுவீர்களா ?
நான் ஒரு வக்கீல் டாக்டர். கோர்ட்ல வாய் கூசமா நிறைய பொய் சொல்ல வேண்டி இருக்கு.
==========
இன்றைய மெகா ஜோக்:
8. என்னடி நீ, பஸ்ஸில் உன் பின்னால் நின்னவன் உன் ஜாக்கெட்டுக்குள்ள கையை விடறான் .. .. நீ பேசாம இருக்கியே ?
நான் மணிபர்சை ஜாக்கெட்டுக்குள்ள வைக்கலையே .. .. கையை விட்டு அவன் ஏமாறட்டுமேன்னுதான் சும்மா இருந்தேன்
--
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
காய்கள்- வெண்டைகாய்.
இந்த இதழில் அனைவருக்கும் பரிச்சயமான வெண்டைக் காயின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்து கொள்வோம். வெண்டையை ஏழைகளின் நண்பன் என்று கூட சொல்லலாம். சைவ உணவு உண்பவர்கள் அதிகம் சேர்க்கும் காயாகும். எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. வீட்டின் கொல்லைப் புறத்தில் வளர்க்கலாம். இது இந்தியாவின் வெப்பமான பாகங்களில் பயிராகும். சிறு செடியாக காணப்படும். இதன் காய் சமையலுக்கு பயன்படுகிறது. இலை, விதை, மருத்துவத்திற்கும் பயன்படுகிறது. பொருள் - இதன் காயால், நாள்பட்ட கழிச்சல், பெருங்கழிச்சல், குருதிக் கழிச்சல் போகும். நல்ல சுவையைக் கொடுக்கும். மனிதனுக்கு நினைவாற்றல் அவசியத் தேவையாகும். ஞாபக சக்தியை இழப்பது மனிதனுக்கு நோய் போன்றது. ஞாபக சக்தியை தூண்ட வெண்டைக்காயை சமையல் செய்து அடிக்கடி சாப்பிட வேண்டும். இது மூளை நரம்புகளைக் தூண்டி அங்கு சுரக்கும் நாளமில்லாச் சுரப்பியை நன்கு சுரக்கச் செய்யும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வெண்டைக் காயை எண்ணெயில் வதக்கி கொடுப்பது நல்லது. அவர்களின் வளர்ச்சியில் வெண்டைக் காய் முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்தத்தை சுத்தமடையச் செய்து அதனைச் சீராக செயல்படச் செய்கிறது. இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களைக் கரைக்கிறது. இரத்த அழுத்தத்தைப் போக்கி இதய அடைப்புகளைத் தடுக்கிறது. சிறுநீரக கோளாறுகளைப் போக்குகிறது. வயிற்றுக் கடுப்புடன் இரத்தம் வெளியேறுவதை தடுக்குகிறது.
வயிற்றில் உண்டான புண்கள் ஆற வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் வயிற்றுப் புண் எளிதில் குணமாகும். அசீரணக் கோளாறு நீங்கி நன்கு பசியைத் தூண்டும். புறச் சூழ்நிலைகளால் பாதிக்கப்படும் சருமத்திற்கு வெண்டைக்காய் சேர்த்துக் கொள்வதால் சருமத்திற்கு பளபளப்பைக் கொடுத்து பாதிப்புகளை நீக்குகிறது. தினமும் பிஞ்சு வெண்டைக் காயை நன்கு கழுவி குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கலாம். இது குழந்தைகளை அறிவு ஜீவியாக எதிர்காலத்தில் மாற்றும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். அதிக சர்க்கரை உடம்பில் கூடிவிட்டால் வெண்டைக் காயை மூன்று துண்டாக நறுக்கி அதை குறுக்காக நறுக்கி இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து காலையில் நன்கு கலக்கி காயை எடுத்துவிட்டு, வெறும் வயிற்றில் அந்த நீரை மட்டும் அப்படியே குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். தேவைப்படும்போது இதை பயன்படுத்தலாம். உடல் சோர்வு, மனச்சோர்வு இருந்தால் மனிதன் நிரந்தர நோயாளிதான். இதைப் போக்க வெண்டைக்காயை சமைத்து உண்டு வந்தால் உடல் வலுப்பெறும். வெண்டைக்காயை சிறிதாக நறுக்கி மோரில் கலந்து வெயிலில் காயவைத்து வத்தலாக செய்து அதை வறுத்து உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். நன்கு முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து அருந்தி வந்தால் உடல் வலு கிடைக்கும். மயக்கம் தலைசுற்றல் நீங்கும். சமைத்து உண்பதற்கு பிஞ்சு வெண்டைக்காய் சிறந்தது. சக்தி - 31 கலோரி கார்போஹைட்ரேட் - 7.03 கிராம் YOGANANDHAN GANESAN |
Thursday, November 25, 2010
மரம் - ஆலமரம்
ஆலமரம் விழுதுகள் விட்டு பல நூறு ஆண்டுகள் வாழும் தன்மை கொண்டது. மழை, வறட்சி இவைகளால் அதிகம் பாதிக்கப்படாதது. அதுபோல் குடும்ப உறவை விழுதுகள் போல் அனைவரும் தாங்கி வருவதற்காகவே ஆலமரத்தைச் சொல்கின்றனர். நீண்ட நெடிய பல விழுதுகளைக் கொண்டு பரந்து விரிந்து பசுமையாகக் காணப்படும் மரம்தான் ஆலமரம். மரத்தின் கிளைகளைத் தாங்கி நிற்கவே விழுதுகள் தோன்றி அவை மண்ணில் ஊன்றுகின்றன. இன்றும் கிராமங்களில் சாலைகளிலும், குளக்கரைகளிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் நிழல் தரும் மரமாகத் திகழ்கிறது. பண்டைய காலத்தில் மன்னர்கள் ஆலமரம், புங்கமரம் இவற்றை நட்டு வளர்த்தனர். அதன் பயனை பலநூறு ஆண்டுகளுக்குப் பின் நாம் இன்றும் அனுபவித்து வருகிறோம். ஆலமர நிழல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அரசமர நிழல் எவ்வாறு ஆரோக்கியத்தைத் தருகிறரோ அதேபோல் ஆலமர நிழலும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்தியாவின் தேசிய மரமாக ஆலமரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. இதனை இயக்கு ரோதம், காமரம், சோளி, தோல்மரம், பாமரம், பூதம், வடம், பானோக்கி என்ற பெயர்களில் அழைக்கின்றனர். இதன் இலை, பழம், பூ, விழுது, பால் அனைத்தும் மருத்துவக் குணம் வாய்ந்தவை. - தேரையன் வெண்பா பொருள் - நாள்பட்ட புண்கள், மேகம், வயிற்றுக் கடுப்பு, நீரிழிவு இவைகளைப் போக்கி உடலுக்கு வன்மையைக் கொடுக்கும். சொல்லுகின்ற மேகத்தைத் துட்ட அகக்குப்பைக் உடலில் உண்டான கட்டிகளுக்கு ஆல இலையை அரைத்து கட்டிகள் மீது தடவினால் கட்டி உடைந்து சீழ் வெளியேறும். அதுபோல், ஆலமரத்தின் பழுத்த இலைகளை சுட்டு சாம்பலாக்கி, நல்லெண்ணெயில் கலந்து, கரப்பனுக்கு பூசி வந்தால் கரப்பான் எளிதில் காணாமல் போகும். ஆலம்பட்டையை சிதைத்து காயவைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி அடிபட்ட புண்கள் மீது தடவலாம்.
வெள்ளை படுதல் பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். மேலும் அவர்கள் மெலிந்து காணப்படுவார்கள். இவர்கள் ஆலமரத்தின் சிறு வேர்ப்பட்டைகளை உரித்து நன்கு இடித்து நீரில் கொதிக்க வைத்து பிறப்புறுப்பின் மீது கழுவி வந்தால், வெள்ளை படுதல் குணமாகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஆறாத புண்கள் மீது ஆலம்பாலைத் தடவி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்.
எலும்பு முறிவு, சுளுக்கு, இரத்தக்கட்டு, போன்றவற்றிற்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று கட்டு மீதும், சுளுக்கு, இரத்தக்கட்டு மீதும் ஆலம் பாலைத் தடவி வந்தால் எலும்புகள் இணைவதுடன், இரத்தக்கட்டு, சுளுக்கும் நீங்கும். எலும்புகள் பலமாகும்.
ஆலம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி வாயில் ஊற்றி கொப்பளித்து வந்தால், வாய்ப்புண், வாய் நாற்றம், நாவெடிப்பு, ஈற்றுப்புண் இவைகள் நீங்கும். இரண புண்களுக்கு இந்த நீரைக் கொண்டு கழுவலாம்.
என்பது நம் முன்னோர்களின் பழமொழி. ஆலம் விழுதுகளைக் கொண்டு பல் துலக்கினால் பற்கள் நன்கு வலுவுடன் பளிச்சிடும். ஆலம் பால் ஆடும் பற்களை உறுதிப்படுத்தும். பல் ஈறுகளில் இரத்தம் வடிதலை நீக்கி ஈறுகளை பலப்படுத்தும். YOGANANDHAN GANESAN |
ஜோக்ஸ்
1. கண்டதும் காதலில் விழுந்தேன்; அவளோட அப்பா இன்ஸ்பெக்டர்னு தெரிஞ்சதும், 'பொத்' தென காலில் விழுந்தேன்!
2. "தலைவரே, ஆள் இல்லாத ரயில்வே கிராஸிங்ல அடிக்கடி ஆக்சிடென்ட் நடக்குதே... இது பத்தி என்ன நினைக்கறீங்க?"
"அதான் எனக்கும் புரியல. ஆளே இல்ல; எப்படி ஆக்சிடென்ட் நடக்குது?"
3. "தலைவலின்னு ஒரு நாள் லீவ் எடுத்தே... ஓ.கே! கால் வலிக்கு ஏன் ரெண்டு நாள் லீவ் கேக்கறே?"
"தலை ஒண்ணுதான் இருக்கு; ஆனா கால் ரெண்டு இருக்கே..."
"சரி சரி... பல் வலி வராம பார்த்துக்கோ!"
4. "இந்த ஒற்றன் வேலைக்குப் புதுசா...?"
"எப்படி மன்னா கண்டுபிடித்தீர்...?"
" 'போர் அபாயம்... ஓடுங்கள்' என்று குரல் தராமல், 'கிளம்புங்கள் போர்க்களத்திற்கு' என்று உளறுகிறானே..."
5. "போர்களத்தில் முள் குத்தியதால் மன்னர் துடிக்கிறார்!"
"யாரிடமாவது குண்டூசி வாங்கி முள்ளை எடுப்பதுதானே?"
"வேண்டாம். போர்க்களத்தில் பின்வாங்கினோம் என்ற அவப்பெயர் வந்துவிடும்!"
6. "மாறுவேடத்தில் மன்னர் நகர்வலம் வந்தது வேஸ்ட் ஆகிவிட்டதா?"
"ஆமாம! 'மன்னர் மாறுவேடத்தில் வருகிறார்... பராக்... பராக்...!' என்று ஒரு சேவகன் கத்தித் தொலைத்துவிட்டான்!"
7. "அமைச்சரே! நாட்டு மக்கள் என்னைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள்?"
"போர்க்களத்தில் மண்ணையும், அந்தப்புரத்தில் பெண்ணையும் அசராமல் கவ்வும் அசகாய சூரர் என்று பேசிக்கொள்கிறார்கள், மன்னா!"
8. "மன்னா! உடனடியாக உங்கள் எடையைக் குறையுங்கள்!"
"ஏன்?"
"180-ம் கிலோத்துங்க சோழன் என்று அழைக்கிறார்கள்!"
9. "அரண்மனைக்குள் இருப்பதற்கு நேர் எதிராக மன்னர் வெளியில் இருக்கும்போது நடந்துகொள்வார்."
"எப்படி?"
"அரண்மனையில் 'யாரங்கே' என்று அதிகாரமாக கேட்பார். நகர்வலம் போக வெளியே வந்தால் 'அங்கே யாரு' என்று பம்முவார்!"
10. "புறமுதுகிட்டு ஓடிவரும்போது மன்னர் தனியாக ஓடி வராமல் வீரர்களுடன் சேர்ந்தே ஓடி வருகிறாரே?"
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதைக் கடைபிடிக்கறாராம்!"
--
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
Wednesday, November 24, 2010
முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!
ஒரு மனிதனின் ஆரோக்கியம், அவன் மூளையின் செயல்பாடுகளில் அடங்கியுள்ளது. மூளை சரிவர செயல்படாத அந்த ஒருவன் "முழுமையான மனிதன் இல்லை' என்பது புதுமொழி. மனித உடலில் தலைமை பொறுப்பில் உள்ள மூளை திடீரென செயலிழந்து விடும். இதற்கு "பக்கவாதம்' என்று பெயர். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அடைபடும்போது "பக்கவாதம்' ஏற்படுகிறது. பொதுவாக, 55 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு "பக்கவாதம்' ஏற்படும். காரணம், வயது அதிகரிக்கும்போது, உடலில் ரத்த உற்பத்தி குறைந்து போகும். இந்திய அளவில், ஆண்டுக்கு 10 லட்சம் பேர் (சென்னையில் மட்டும் 3000 பேர்) பக்கவாதத்தில் பாதிக்கப்படுகின்றனர். YOGANANDHAN GANESAN |
பாலகுமாரனின் சிந்தைனகள் பகுதி 4
-உத்தமன்
ஆத்திரப்படுபவன் திறமை இருந்தாலும் அசிங்கப்படுவான்.
-உத்தமன்.
உண்மையான வீரன் என்பவன் தன்னை ஜெயித்தவன்.தன்னை ஜெயித்தவனை எவனும் ஜெயிக்க முடியாது. பரசுராமரிடம் ஜமதக்னி முனிவர்.
-உத்தமன்.
காமம் என்ற குதிரையைக் கடிவாளமிட்டு நெறிப்படுத்தியவன் வாழ்க்கையில் மலர்ந்திருப்பான்.
-காதல் ரேகை.
கட்டுப்பாடற்ற காமத்தையே உலகம் காதல் என்கிறது. காதல் என்பது விட்டுக்கொடுத்தல். உடனடியாக. எந்த எதிர்பார்ப்புமின்றி. இது வேத வாக்கியம்.
-காதல் ரேகை.
உண்மையான நேசம் மதுவைவிட போதையானது.
-காதல் ரேகை.
அருள் என்பது அன்பால் உண்டாவது. அன்பு உண்டாக கடவுள் அருள் வேண்டும். அருளும் அன்பும் உடையது காதல்.
-காதல் ரேகை.
இயற்கையோடு இணைந்து வாழ்பவர்களுக்கு மனம் என்பது இல்லை.
-கருணை மழை.
உன்னை அறியாதவரை உன் உணர்வுகளையும் அறிய முடியாது.
-திருப்பூந்துருத்தி.
தியாகம் தொண்டு என்கிற வார்த்தைகள் அகந்தை விசயம். இந்த அகந்தை இன்னும் அகந்தையை வளர்க்கும். தொண்டு செய்ய செய்ய கர்வம் வரும். தியாகம் செய்ய செய்ய திமிர் வரும். இவையிரண்டும் தவறான விஷயங்கள் இல்லை. செயல்பாட்டில் கவனம் வேண்டும். தியாகம் செய்கிறோம் என்று யோசிப்பு வந்துவிட்ட நேரம் அது விஷமாகிறது. தொண்டு செய்கிறேன் என்று ஒருவன் உணர்ந்து நடக்கும் பொது எதிர்பார்ப்பு வந்து விடுகிறது.
-சிநேகமுள்ள சிங்கம்
இயல்பாய் இருத்தலே ஞானம்.அதுவே அமைதி.
-குரு.
நீ எங்கோ திருடினால் உன் பொருள் எங்கோ திருட்டுப் போகிறது. இது அமைதியான ஒரு விதி. கண்களுக்குப் புலப்படாத ஒரு சட்டம்.
-குரு.
உண்மையாய் இருப்பதுதான் சுயபலம். ஞானத்தின் அடித்தளம். அப்போது பேச்சும் செயலும் மிக மிகச் சுதந்திரமாக இருக்கும். அந்தச் சுதந்திரம் எவரையும் காயப்படுத்தாது இருக்கும்.
-குரு.
சரணாகதி என்பது குருவைப் பூரணமாக நேசித்தல்.குருவைத் தன் உணர்வுகளோடும் கலக்கவிடுதல். சிலசமயம் உள்ளுக்குள் குருவாகவே மாறுதல்.
-குரு.
தன்னை ஆழ்ந்து பார்கிறவருக்கே, தன்னுள் யார் பார்க்கிறார்கள் என்கிற கேள்வி உள்ளவருக்கே குருவின் விலக்கலால் ஞானம் சித்திக்கும்.
-குரு.
நல்ல குரு அதிகம் பேசுவதில்லை. பிரசங்கிகளால், நல்ல குருவாக மாற முடிவதில்லை.
-குரு.
சக்தி மிகுந்த குரு இருக்கும் இடத்தில் அமைதி தளும்பி நிற்கும். அருகே போய் நிற்க மனமாற்றம் ஏற்படும்.
-குரு.
உணவு ருசி உடம்பை அடுத்த அகங்காரம். தன்னை உடம்பாகக் கொள்ளும்போது, உணவாட்டம் வெறியாய் போய்விடுகிறது.
-குரு.
"Life Is Relationship" பிறரோடு தொடர்பு கொள்ளுதலே வாழ்க்கை.பிறரோடு உள்ள தொடர்புகளில் ஏற்படும் சிக்கல்தான் மொழி, இன, மத சண்டைகளுக்கெல்லாம் காரணம்.
-குரு.
மனம் பற்றி யோசிக்கிறவனுக்குத்தான் ஆன்மா புலப்படும். தன் மனம் தெரியாதவனுக்கு பிறர் மனம், உணர்வு எதுவும் தெரியாது.
-குரு.
--
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
வைட்டமின் E உபயோகத்தால் உண்டாகும் நன்மைகள் !

கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் உடலின் தேவைக்கு ஏற்பஉபயோகப்படுத்தப்பட்டு, மீதமுள்ளவை கொழுப்பு பொருட்களாக கல்லீரலில்சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் நீரில் கரையும் வைட்டமின்கள் உடலின்தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளப்பட்டு மீதி கழிவுகள் மூலம் வெளியேற்றப் படுகிறது.
***
கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்
1. வைட்டமின் ஏ
2. வைட்டமின் டி
3. வைட்டமின் இ
4. வைட்டமின் கே
***
வைட்டமின் E உடலில் கலக்கும் முறை
வைட்டமின் E உள்ள உணவுப் பொருட்களை உண்ணும் போது, அவை சிறுகுடலில் உள்ளஉறிஞ்சிகள் மூலம் உறிஞ்சப்பட்டு அடிபோஸ் திசுக்களில் சேகரிக்கப்படுகிறது.பின் அவை தேவைக்கேற்ப உபயோகிக்கப்படுகிறது.
**
வைட்டமின் E அதிகமுள்ள உணவுப் பொருட்கள்
1· பருத்தி விதை எண்ணெய்
2· சோள எண்ணெய்
3· சூரியகாந்தி எண்ணெய்
4· சோயாபீன்ஸ்
5· முட்டைகோஸ்
6· சிறுகீரை
7· ஆப்பிள் விதைகள்
8· பட்டாணி கடலை
9· ஈஸ்ட்
*
10. பால் : ஜீரணமானவுடன் புரோட்டீன் எளிதில் கிடைத்துவிடும்.
11. சோயா : உடல் வளர்ச்சிக்கும் தசைச் செல்கள் பெருகவும் முழுமையான அளவு புரோட்டீன் இதில்தான் உள்ளது.
12. தானியங்கள் : எளிதில் கிடைக்கக் கூடிய உயர் ரக புரோட்டீன் இவற்றில் உள்ளன.
13. காளான் : அமினோ அமிலம் அதிகம் உள்ளது. உடலுக்கு மிக நல்ல புரோட்டீனைத் தரக் கூடியது. (அலர்ஜி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.)
14. நிலக்கடலை : நல்ல புரோட்டீன், உள்ளது. ஆனால் கொழுப்பு அதிகம் உள்ளது. அளவாகப் பயன்படுத்தல் வேண்டும்.
15. மீன், பருப்பு வகைகளைப் பொரித்து உண்பதை விட வேகவைத்து உண்பதே மிகச்சிறந்தது. வைட்டமின் 'ஈ' (E) சத்து இவற்றில் அதிகம் உள்ளது. சமைத்தவுடன் சாப்பிடுவது சாலச்சிறந்தது.
*
7. உடலில் அதிக தசைகளை பலமாக்க, மலட்டுத் தன்மையை நீக்க, அமினோ அமிலம் பெற கீரை உதவும்.
***
வைட்டமின் E-ன் உபயோகத்தால் விளையும் நன்மைகள்
1· இரவில் கண்டதசையில் எற்படும் தசைப்பிடிப்பு (Nocturnal Muscle cramps) - இது வைட்டமின் E சத்துள்ள உணவுகளை உட்கொள்வதால் குறையும்.
*
2· ரத்த நாளத்தில் கொழுப்பினால் ஏற்படும் அடைப்புகளை கரைக்கும் தன்மை (Atherosclerosis) வைட்டமின் E க்கு உண்டு.
*
3· மார்பகத்தில் ஏற்படும் நார்த்திசுக் கட்டிகளை (Fibrocystic breast disease) கரைக்கும் தன்மை வைட்டமின் E க்கு உண்டு.
***
வைட்டமின் E குறைவினால் உண்டாகும் நோய்கள்:
தசைவாதம் (Muscular dystrophy)
இன்றைய உலகில் பெரும்பாலான குழந்தைகள் தசைவாதம் என்னும் நோயால் அதிகம்பாதிக்கப்பட்டுள்ளனர். வைட்டமின் E சத்து குறைவதால் தசைகளில் உள்ளகொழுப்புச் சத்து குறைந்து போகிறது. இதனால் தசைவாதம் உண்டாகிறது. இந்நோய் தீருவது மிகவும் அரிதாகும்.
**
இரத்தச் சோகை (Haemolytic anaemia)
வைட்டமின் E சத்து குறைவதால் இரத்த சிவப்பணுக்கள் அழிந்துபோகின்றன. இதனால் இரத்தச் சோகை உருவாகிறது. இரத்தச் சோகையைப் போக்க வைட்டமின் E சத்து அதிகமுள்ள பொருட்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
**
கல்லீரல் தாபிதம் (Dietary Hepatic necrosis)
கல்லீரலில் உள்ள திசுக்கள் அழிவதால் இந்நோய் வரக்கூடும். எனவே இவ்வகைநோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள வைட்டமின் E கலந்த உணவை உட்கொள்ளவேண்டும்.
வைட்டமின் E சத்தானது மலட்டுத்தன்மையை குறைத்து மகப்பேறு ஏற்படச் செய்யும். இந்த சத்து குறையுமானால் மலட்டுத்தன்மை உண்டாகும்.
அண்மையில் அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் மூளையில் உண்டாகும் திடீர் அதிர்வை தடுக்கவும் நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கவும் வைட்டமின் E மிகவும் தேவையென கண்டறிந்துள்ளனர்.
--
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
யார் காரணம்?
''உயிரற்ற அப் பொருள் களிடம் எப்படி மன்னிப்பு கேட்பது?''என வினவினான்.அவன்.
''அந்தச் செருப்புக்கும் கதவுக்கும் உயிர் இருப்பதாக நினைத்துத்தானே உன் கோபத்தைக் காட்டினாய்.மன்னிப்பு கேட்க மட்டும் அவை உயிரற்றவை ஆகி விடுமா?''எனக் கேட்டார் மகான்.
அவன் செருப்பிடமும் கதவிடமும் மன்னிப்புக் கேட்டான்.அவனது மூர்க்க குணம் அடங்கியது.
''நம் கோபத்துக்கு அடிப்படையான தவறுகளை நாம் தான் செய்கிறோம்.பிறருக்கு இதில் பங்கு இல்லை என்பதை உணர்ந்தாலே கோபம் அடங்கி விடும்.''என்றார் மகான்.
மலரின் அழகு
பாவ புண்ணியம்
எல்லாம் ஒன்று
கிழவன் சொன்னான்,''அப்பனே,ரெண்டுக்கும் ரொம்ப வித்தியாசமில்லை.நீ காருக்குள் இருந்தபடி சுவர்களையும் ,வேலிகளையும்பார்த்துக் கொண்டு போகிறாய்.நான் இங்கே உட்கார்ந்து கொண்டு போகிற வருகிற கார்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்..எல்லாம் ஒன்று தான்.''
தெளிவு
கடவுள் நம்பிக்கை
குரல்: நீ என்னை நம்ப மாட்டாய் .
மனிதன்: கடவுளே ,என்னைக் கை விட்டு விடாதே.நிச்சயம் நம்புகிறேன்.
குரல்:எனக்கு நம்பிக்கை இல்லை.
மனிதன்:கடவுளே,நீ தான் காப்பாற்ற வேண்டும்.
குரல்:சரி,உன்னைக் காப்பாற்றுகிறேன்.முதலில் நீ பிடித்திருக்கும் வேரை
விட்டு விடு.
மனிதன்:வேரை விட்டு விட்டால் கீழே விழுந்து இறந்து விடுவேனே?
அதன் பின் வானத்தில் குரல் எதுவும் கேட்க வில்லை.
பைபிள்
''வெள்ளைக்காரர்கள் ஆப்பிரிக்காவுக்கு வந்த போதுஎங்கள் கையில் தேசம் இருந்தது.அவர்கள் கையில் பைபிள் இருந்தது.கண்களை மூடிக்கொண்டு ஜெபம் செய்ய எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.கற்றுக் கொண்டோம்.அப்புறம் கண்ணைத் திறந்து நாங்கள் பார்த்த போது எங்கள் கையில் பைபிள் இருந்தது.அவர்கள் கையில் தேசம் இருந்தது.''
இருக்கை
வளைந்து கொடுத்தல்
கிண்ணென்று நாண்ஏற்றி பாணங்களை அடுக்கி எடுத்துச் செல்ல வேண்டும்.மற்ற நேரங்களிலும் அதை இறுக்கமாகக் கட்டி நாணஏற்றி வைத்தால் ,அந்த இறுக்கம் தாளாது ஒடிந்து விடும்.மனிதர்களும் அப்படித்தான்.வளைந்து குழைந்துஇருக்க முடிந்தவர்களே நிமிர்ந்து நிற்கும் போது வலுவாகத் தாக்குப் பிடித்து நிற்பார்கள்.எப்போதும் வளையாமல் இருப்பவர்கள் எந்தக் கணத்திலும் உடைந்து போகிறவர்களாகவே இருப்பார்கள்.''
அவமானம்
----தந்தை பெரியார்
பசுவின் புகழ்
பசு கூறியது,''நீ கூறுவது உண்மையே.அதன் காரணம் நான் கொடுப்பவற்றை உயிருடன் இருக்கும் போதே கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.''
ஈடுபாடு
''அய்யா,என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?''என்று ஒருவனைக் கேட்டான்.
அவன் பதில் சொன்னான்,''நான் ஒரு சுவரை கட்டிக் கொண்டிருக்கின்றேன்.''
மன்னன் அதே கேள்வியை இன்னொருவரிடம் கேட்டான்.
அவன் சொன்னான்,''நான் ஒரு கோவிலின் மதில் சுவரைக் கட்டிக் கொண்டிருக்கின்றேன்.''
மூன்றாவது நபரிடம் அதே கேள்வியைக் கேட்டதற்கு அவன் சொன்னான்,''அய்யா,
வரலாற்றில் இடம் பிடிக்கப் போகும் ஒரு மாபெரும் கோவிலைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்.''இதைத்தான் நாம் ஈடுபாடு என்கிறோம்.
குதர்க்கம்
ஞானி; செக்கு மாட்டுக் கழுத்தில் ஏன்மணி கட்டியிருக்கிறாய்?
வியாபாரி; வேறு வேலை பார்க்க அப்பப்போ நான் பக்கத்தில் வீட்டிற்குப் போவேன்.மணி சப்தம் கேட்டால் மாடு சுற்றிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வேன்.
ஞானி; அந்த மாடு சுற்றாமல் ,நின்ற இடத்திலேயே தலையை மட்டும் ஆட்டி சப்தம் கொடுத்தால்........?
வியாபாரி;அய்யா,எங்க மாடு உங்க அளவுக்கு தர்க்கம் படிக்க வில்லை.அதனாலே அதற்கு குதர்க்கம் தெரியாது.
யோகியின் சம நிலை
ஒரு நாள் வீட்டையே துவம்சமாக்கிக் கொண்டிருந்த ஒரு பெரிய எலியை அது பிடித்துக் கொன்றது. ஆனந்தக் கூத்தாடினார் அவர்.
அடுத்த நாள் அதே பூனை அவர் ஆசையாய்வளர்த்த கிளியை கவ்விக் கொன்றது.
கழியை எடுத்துக் கொண்டு பூனையைத் துரத்தினார் அவர்.
மூன்றாம் நாள் பூனை எங்கிருந்தோ வந்த ஒரு குருவியைப் பிடித்துக் கொன்றது.
வேடிக்கை பார்த்தபடி இருந்தார் அவர்.ஆனந்தமும் இல்லை;ஆத்திரமும் இல்லை.
வேண்டாத எலியைக் கொன்ற போதுமகிழ்ச்சி.
வேண்டிய கிளியைக் கொன்ற போது ஆத்திரம்;துக்கம்.
வேண்டும்,வேண்டாம் என்ற எல்லைக் குள் வராத குருவியைக் கொன்ற போது மகிழ்ச்சியும் இல்லை;துக்கமும் இல்லை.
அது மட்டுமல்ல......
பசிக்கு,தனக்கு வாய்த்த இரை எதுவாயினும் அதைப் பிடித்து தின்பது பூனையின் இயல்பு என்ற ஞானம் வந்து விட்டது அவருக்கு.
இந்த மன நிலை தான் யோகியின் சமநிலை.
நான் எங்கே?
என்னை நீ எங்கே தேடி அலைகிறாய்?
நான் உன் அருகிலேயே இருக்கிறேன்.
நான் ஆலயத்திலும் இல்லை;மசூதியிலும் இல்லை.
என்னை உண்மையில் தேடினால்
ஒரு கணத்தில் என்னைக் கண்டு பிடித்து விடுவாய்.
நான் உன் நம்பிக்கையில் இருக்கிறேன் நண்பனே!
---கபீர்தாசர்
சிரமங்கள் எதற்காக?
அன்பு செலுத்துதல்
----ஜெயகாந்தன்
மனிதனின் நிலைமை
''குடிப்பாயா?''
'இல்லை,சார்,'
''சிகரெட் பிடிப்பாயா?''
'இல்லை,சார்.'
''ரேசுக்கு போவாயா?''
'இல்லை,சார்.'
''சூதாட்டம்?''
'கிடையாது,சார்.'
''பெண் சிநேகிதம்?''
'சத்தியமா இல்லை,சார்.'
''உனக்கு இருபது ரூபாய் தருகிறேன்.என் வீட்டுக்கு வா.என் மனைவியிடம் உன்னைக் காட்ட வேண்டும்.எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமையை பார்த்தாயா என்று காட்ட வேண்டும்.''
சொல்லும் விதம்
அன்று மாலை அடுத்த சீடன் சாவகாசமாகப் புகை பிடித்துக் கொண்டிருந்தான்.முதல் சீடன் அவனிடம் சென்று குரு அவனை மட்டும் புகை பிடிக்க எப்படி அனுமதித்தார் எனக் கேட்டான்.அதற்கு அவன் சொன்னான்.''நான் ,குருவிடம் ,புகைக்கும் போது தியானம் செய்யலாமா எனக் கேட்டேன்.ஆஹா,எவ்வளவு சிறந்த விஷயம் எனக் கூறி குரு அனுமதித்துவிட்டார்.''
பதவியின் மகிமை
ஒரு ஆபீசர் தன நாய்க்கு பிறந்த நாள் விழா ஒன்றிற்குத் தன வீட்டில் ஏற்பாடு செய்தார்.அலுவகத்தில் பணிபுரியும் அனைவரும் பரிசுகளுடன் வந்து விழாவை சிறப்பித்தார்கள்.ஒரே கோலாகலம்.கொண்டாட்டம்.
சில மாதங்களுக்குப் பின் அந்த ஆபீசர் பதவி ஒய்வு பெற்றார்.அதன் பின் ஒரு நாய் கூட அவர் வீட்டிற்கு வரவில்லை.
விசித்திரம்
தூதுவர்
அதற்கு அந்த இளைஞர் ,''அரசே,அறிவு என்பது தாடியில் இருப்பது என்பது எங்கள் மன்னருக்குத் தெரியாது.தெரிந்திருந்தால் எனக்குப் பதிலாக ஒரு வெள்ளாட்டையே அனுப்பியிருப்பார்.''எம்று பதிலடி கொடுத்தார்.
வர்ணனை
அதற்கு அவர் ,''எனக்கு முட்டையிடத் தெரியாது.ஆனாலும் எது நல்ல முட்டை ,எது கெட்டமுட்டைஎன்று தேர்ந்தெடுக்க நான் கோழியாக இருக்க வேண்டுமா?''என்று கேட்டார்.
மனநிலை
முட்டாள்
_செ மோன் வெல்
உண்மை நிலை
நிதர்சனம்
''நான் இன்றைக்கு சுயநலம் படைத்தவர்களையும் ,வெட்டித்தனமாகப்பேசுபவர்களையும் ,தற்பெருமை பேசுபவர்களையும்,நம்பிக்கை மோசடி செய்பவர்களையும் ,நன்றியில்லாத மக்களையுமே பெருமளவில் சந்திக்கப் போகிறேன்.அவர்களைப் பார்த்து நான் ஆச்சரியமோ,கலவரமோ அடையப் போவதில்லை.இம்மாதிரியான மனிதர்கள் இல்லாத உலகை என்னால் கற்பனை கூடப் பண்ணிப் பார்க்க முடிய வில்லை.''
இவ்வாறு, தான் எழுதி வைத்திருந்ததைத் தினமும் படித்து விட்டுத்தான் அரசவைக்குச் செல்வான்.எப்படிப்பட்ட மனிதனைச் சந்தித்தாலும் ,பொறுமையாக நிதானம் தவறாமல் இருந்து பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து தீர்த்து வைப்பான்.
சராசரி
முன் தீர்மானம்
அடுத்த வீட்டுக் காரன் திருடியதாக அவன் நினைத்தான்.
அவனை கூர்ந்து கவனித்தான்.
அவனது தோற்றம் ,நடவடிக்கைகள் ,அசைவுகள் எல்லாமே
அவனைத் திருடனாகவே அவனுக்குக் காட்டின.
அதன் பின் .........
அந்தப் பணம் தன வீட்டில் ஒரு மூங்கில் குழாயில் இருப்பதைக் கண்டான்.
அப்போது..........
அடுத்த வீட்டிக் காரனைக்கூர்ந்து கவனித்தான்.
அவன் அப்படியே காணப்பட்டான்.
அவனது எந்த நடவடிக்கையும் அவனைத் திருடனாகக் காட்ட வில்லை.
_சீனக் குட்டிக் கதை.
மாற்றம்
ஆந்தை: கீழ் திசை நோக்கி .
காடை: ஏன்?
ஆந்தை: எனது அலறல் சப்தத்தைக் கேட்டு மக்கள் வெறுப்படைகிறார்கள்.
காடை: நீ செய்ய வேண்டியது அலறல் சப்தத்தை மாற்றிக் கொள்வதே.அது உன்னால் முடியாத பட்சத்தில் நீ எங்கு சென்றாலும் வெறுக்கப் படுவாய்.
_சீனக் குட்டிக் கதை
மதிப்பீடு
நான்கு வயதில் :என் அப்பாவால் எதையும் செய்ய முடியும்.
எழு வயதில் ;என் அப்பாவுக்கு எல்லாம் தெரியும்.முழுக்கத்தெரியும்.
எட்டு வயதில் :என்னப்பாவுக்கு எல்லாமே முழுமையாக தெரிந்திருக்காது.
12 வயதில் :எல்லாவற்றையும் என் அப்பா தெரிந்திருக்க
அவசியமில்லை.
14 வயதில் ;அப்பாவா!அவர் பத்தாம் பசலி.
21 வயதில் :அந்த ஆள் இந்தக் காலத்துக்கு ஏற்றவர்அல்ல.அவரிடமிருந்த
என்ன எதிர் பார்க்க முடியும்?
25 வயதில் ;அவருக்கு ஏதோகொஞ்சம் தெரியும்.அதிகமாக ஒன்றுமில்லை.
30 வயத்ல் :அப்பா இது பற்றி என்ன நினைக்கிறார் என்று பார்க்க வேண்டும்
35 வயதில் :அப்பாவின் கருத்தை அறிய கொஞ்சம் பொறுமை காட்ட
வேண்டும்.
50 வயதில் :அப்பா இது பற்றி என்ன எண்ணியிருப்பார்?
60 வயத்ல் :உண்மையிலே அப்பாவுக்கு எல்லாம் தெரிந்திருந்தது.
65 வயதில் :அப்பா இப்போது இருந்தால் அவரிடம் இது பற்றி ஒரு
. யோசனை கேட்கலாம்.
மதிக்க முடியாத பொருள்
_ஷா அதி
சிறந்த பிரார்த்தனை
துறவி சொன்னார்,''உங்களைப் பொறுத்தவரை உறக்கம் தான் ,''
அரசன் விழித்தான்.துறவி சொன்னார்,''நீங்கள் உறங்கும் போதாவது ஜனங்கள் துன்புறுத்தப் படாமல் இருக்கிறார்கள் அல்லவா,அதனால் தான்.''
_ஷா அதி
துன்பம்
---ஷா அதி
மரியாதை
ஒரு முறை அவர் எழுதிக் கொண்டு இருக்கும் போது அவர் மனைவி சந்தடி செய்யாது தன அறைக்குச் சென்றவள் அதிர்ச்சி அடைந்து ,கணவரிடம் ஓடி வந்து ;;நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் போது ஓசைப் படாமல் யாரோ என் நகைகளைத் திருடிக் கொண்டு போய் விட்டார்களே !''என்று அலறினாள்.
''ஒரு திருடன் என் வேலைக்குக் காட்டும் மரியாதையைக் கூட உனக்குக் காட்டத் தெரியவில்லையே''என்று பதிலுக்குக் கத்தினார்,மேட்டர்லிக்.
நண்பர்கள்
உயர்ந்த மனிதர்
ஹாத்தீம் தாய் சொன்னார்,''உண்டு.ஒரு நாள் நாற்பது ஒட்டகங்களை அடித்து விருந்து வைத்தேன்.அன்று பாலை வனத்தில் ஒருவன் விற்குச் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அவனிடம் விருந்துக்கு வராத காரணம் கேட்டேன்.அவன் சொன்னான்,'எவன் தன சொந்தக் கைகளினால் உழைத்து உண்கிறானோ ,அவன் பிறர் தரும் விருந்தை எதிர் நோக்கிக் கொண்டிருக்கமாட்டான்.,'அந்த ஏழை தான் என்னைக் காட்டிலும் உயர்ந்தவன்.''
_இஸ்லாமிய ஞானி ஷா அதி
மதிப்புக்குக்காரணம்
திரைச் சீலை அடக்கமாகச் சொன்னது,''என் தலை எப்போதும் தரையைத் தொட்டுக்கொண்டிருக்கிறது.உன் தலையோ அகந்தையுடன் ஆகாயத்தைப் பார்த்தபடி இருக்கிறது.காரணம் இது தான்.''
_ஷா அதி
பழிப்பு
''என் தந்தை சொன்னார்,''என் அன்பு மகனே,நீயும் உறங்கப்போ.மற்றவர்களைப் பழித்துப் பேசுவதிலும் அது சிறந்தது.''
_ஷா அதி
வேதனை
_ஷா அதி
பொறுப்பாளிகள்
_ஷா அதி
ஏழாவதுசுவை
--குறிஞ்சி மலர் நாவலில் நா.பார்த்த சாரதி.
நெஞ்சில் வலி
நல்ல பழக்கம்
பேரன் முகத்தை மிக சோகமாக வைத்துக் கொண்டு ''இப்போது அதற்கு அவசியம் இல்லை,''என்றான்.ஏனெனக் கேட்க அவன் சொன்னான்''நீங்கள் சாப்பிடும் போதுஉங்கள் சாப்பாட்டில் ஒரு பூச்சி இருந்தது.அதைத்தான் நான் சொல்ல வந்தேன்.''
சிரிப்பு வருது: ஜோக்ஸ் - வயிறு குலுங்க சிரிக்க நகைச்சுவை தர்பார்
புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது...)
"நர்ஸ், ஒரு மொபைல் இருந்தா கொடுங்க."
"எதுக்குடா செல்லம்?"
"நான் சேஃப்டியா லேண்ட் ஆயிட்டேனு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டு கால் கொடுக்கணும்!!"
விவசாயம் பண்ணறது தப்பா சார்?"
"தப்பில்லை. ஏன் கேட்கிறே?"
"நாங்க கடலை போட்டா மட்டும் திட்டுறீங்களே!"
ஏண்டா.. கோயில்ல சிலையைத் திருடினே?"
"திருடல ஐயா.. கோயில்ல கூட்டமா இருக்கேன்னு வீட்டுக்கு கொண்டு போனேன்.. இது தப்பா?"
எல்லா ஒட்டப்பந்தயதுல நீங்க ஜெயிச்சிடுகிறிகளே, எப்படி?
என்னை கடன்காரங்க துரத்துறதாநெனைச்சுபேன், அப்புறம் வெற்றிதான்.
ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?
சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய கேஸ் கம்பெனிகாரன்
சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்
சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?
சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார். நான் '
மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.
மன்னர்: கச்சேரிக்கு போனவர்கள் யாரும் திரும்பி வரவில்லை ஏன்?
அமைச்சர் :இசையெனும் இன்ப வெள்ளத்தில் எல்லோரும் மூழ்கி விட்டார்களாம்
மன்னா அண்டை நாட்டு மன்னன் காக்கா மூலம் தூது அனுப்பியதன் மூலம் ஒரு விஷயம் புரிகிறது.
என்ன?
இதற்கு முன் தூதுவாக வந்த புறாக்களை யெல்லாம் நீங்கள் ரோ ஸ்ட் செய்து சாப்பிட்டது அவனுக்குத் தெரிந்து விட்டது.
--
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
எளிமை – II
எல்லா வசதிகளும், அனுபவிக்க வாய்ப்புகளும் ஆண்டவன் வழங்கியிருந்தபோதும், ஒன்றும் இல்லாதவனைப் போல் வாழ்வதே எளிமை. பகட்டிலும் ஆடம்பரத்திலும்தான் சமூக கெளரவம் இருப்பதாக, நாம் மாயச் சிந்தனையில் மயங்கிக் கிடக்கிறோம். உண்மையில், நாம் ஒவ்வொரு நாளும் நமக்காக வாழ்வதே இல்லை. ஏதோவொரு வகையில் நம்மை ஊர் மெச்ச வேண்டும் என்றே விரும்புகிறோம். இதுவே அநாவசியத் தேவைகளில் நம்மை அலைக்கழிக்கிறது. தேவைகளின் பெருக்கத்தில் நிம்மதி பறிபோகிறது.
நான்கு சுவருக்குள் இருக்கும்போது நாற்பது ரூபாய் நூல் புடவையில் நிறைவு காணும் பெண் மனம், உறவுகள் சங்கமிக்கும் திருமண விழாவில் பத்தாயிரம் ரூபாய் பட்டுப் புடவையில்தான் பரவசம் கொள்கிறது. பிறர் பார்ப்பதற்காகத்தான் நம் அனைவருக்கும் ஆடம்பரம் அவசியப்படுகிறது. இந்த உதாரணம் எந்த ஒரு பெண்ணையும் குற்றம் அல்லது குறை கூறுவதற்காக கூறப்படவில்லை. எளிமையின் இலக்கணத்திற்காக கூறப்பட்டது.
- எளிமைக்கு சமூக கெளரவம் சாத்தியம் இல்லையெனில், அரை நிர்வாண காந்தியை அகிலமே தொழுததே… அது எப்படி?
- குவித்து வைக்கும் செல்வத்தால்தான் சிறப்பு வந்து சேரும் என்றால், கூரையைத் தவிர வேறெந்த சொத்தும் இல்லாத தோழர் ஜீவாவை இன்றும் சமூகம் போற்றுகிறதே…அதன் இரகசியம் என்ன?
- காமராஜர் கண்மூடினார். அவர் வாழ்ந்த வீட்டை அதன் உரிமையாளர் எடுத்துக் கொண்டார். அவர் பயன்படுத்திய காரைக் கட்சி எடுத்துக் கொண்டது. அவருடைய உடலை நெருப்பு எடுத்துக் கொண்டது. அவரது பெயரை வரலாறு எடுத்துக் கொண்டது.
- காந்தியடிகள் வலியுறுத்திய மதுவிலக்கு, தீண்டாமை என்ற காரணத்திற்காக, மதுவை ஒழிக்க சேலம் தாதம்பட்டியில் தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை ஒரே நாளில் வெட்டினார் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார். கதர் மூட்டையைத் தலையிலும் இராட்டையைத் தோளிலும் சுமந்து ஊர்தோறும் சென்று கதரைப் பரப்பினார்.
- எளிமையின் சின்னமாக விளங்கியவர் நேரு. ஒரு முறை காங்கிரஸ் செயற்குழு கூடியபோது இடைவெளியில் நிஜலிங்கப்பா, 'உங்களைப் போன்ற செல்வச்சீமான்களா நாங்கள்?' என்று சொன்னதும், 'என் சட்டையைப் பாருங்கள். கிழிந்த இடத்தில் தையல் போட்டிருக்கேன். செல்வச் சீமானின் சட்டை இப்படியா இருக்கும்? பிரதமர் சம்பளத்தில் செலவு போக மிஞ்சுவது மாதம்தோறும் ஒன்பது ரூபாய்தான்' என்று எளிமையின் இலக்கணமாக கூறினார்.
--
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....