Sunday, November 28, 2010

சந்தி சிரிக்கிறது...



அந்தோ பரிதாபம்
அங்கே........ பார்...
அனியாயமொன்றுண்டு
அழுகிறார்கள் கூடிநின்று

அவனும் துரத்தித்துரத்தி
காதல் வலை வீசினானாம்
அவளும் அதில் மயங்கி
ஓடிவிட்டாள் அவன்பின்னே

ஒப்பாரி வைக்கிறார்கள்
பெத்த மனம் கலங்கிறதாம்
எப்படியெல்லாம் வளர்த்த பிள்ளை
ஏனிப்படி ஓடிவிட்டாள்

ஊரில் உள்ளவரெல்லாம்
ஓடிவந்து விசாரிக்க
துக்கம் தொண்டையடைத்து
தாழாமல் அழுகிறாளே....

பரவிய செய்தி கேட்டு
ஊர் முழுதும் சம்பாசனை
தலைகுனிந்த தந்தைமனம்
தரம் கெட்டதாய் அழுகிறது

நகரம் கண்டிராத
கிராமத்தின் தலையெழுத்து
ஒட்ட வீரர்கள்
காலத்துக்குக் காலம் ஓடுகிறார்கள்

அம்மா ஓடினாள் என்று மகளும்
அக்கா ஓடினாள் என்று தங்கையும்
அண்ணன் ஓடினான் என்று தம்பியும்
ஒட்டப்போட்டி நடக்கிறது..

காதலை வெல்வதற்காய்..
ஓடிவிட்ட உங்களைப்பார்த்து
கைகொட்டிச்சிரிக்கிறதே உலகம்
ஏனதை மறந்து விட்டீர்கள்.

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

No comments:

Post a Comment