Sunday, November 28, 2010

கடி ஜோக்.

1. பளிச்சு! பளிச்சு! தம்மாத்துண்டு இஸ்டாரே!

ஆச்சர்யமாதான் கீது நா உன்ன பாக்க சொல்லொ

யெம்மா ஒசரத்துல கீற,

வானத்து மேல கீற,

சொம்மா வைரமாறி மின்னிகினு

பளிச்சு! பளிச்சு! தம்மாத்துண்டு இஸ்டாரே! 

புரியலையா? இது சென்னை செந்தமிழில் "Twinkle Twinkle Little Star!!!!"

2. ஒரு எறும்பு நினைச்சா,
ஆயிரம் யானையை கடிக்கலாம்.

ஆனால்,

ஆயிரம் யானை நினைச்சாலும்,
ஒரு எறும்பை கடிக்க முடியாது!!

3. ராமு: என் மனைவி என்ன செய்தாலும் குத்திக் காட்டுறா...

சோமு: இது எல்லார் வீட்டிலேயும் அன்றாடம் நடக்குற நிகழ்ச்சிதானே...
இதுக்குப் போய் அலுத்துக்குறீங்க!


ராமு:அட நீங்க வேற.. அவ குண்டூசியால குத்துறான்னுல்ல சொல்ல வந்தேன்...

4. ஜோ : என்னோட இ-மெயில் id : sarthaar123@yahoo.com, password: qweasd.

நண் : எதுக்கு பாஸ்வோர்டையும் சொல்றே?

ஜோ :அப்பத்தானே என்னோட லெட்டரை என்னுடைய இமெயிலில் நீ படிக்க முடியும்.

5. டாக்டர் நீங்க சொன்னீங்கனுட்டு சிகரட்ட நிறுத்தி அதுக்கு பதிலா சூயிங்கம் பழக்கத்த ஏற்படுத்திக்கிட்டேன் ஆனா பிரச்சனை என்னன்னா...

ஏன்? நல்ல விஷயம்தான? இதுல என்ன பிரச்சனை இருக்கு?

எவ்வளவு தீக்குச்சிய வ‌ச்‌சி ப‌த்த வ‌ச்சாலு‌ம் சூயிங்கம் பத்தவே மாட்டேங்குதே..



http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 


No comments:

Post a Comment