தலையை பிய்த்து கொள்ள வைக்கும் டென்ஷனான நேரங்களில் கொஞ்சம் சர்க்கரை சாப்பிட்டால் டென்ஷன் பஞ்சாய் பறந்து விடும் என்கிறார்கள் அமெரிக்காவின் ஒஹியோ மாநில ஆராய்ச்சியாளர்கள்.மன உளைச்சல் அதிகம் ஏற்படும் போது உடல், மனம் மட்டுமின்றி மூளையும் களைப்படைகிறது. இதனால் வேறு எந்த வேலையைப் பற்றியும் சிந்திக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதிலிருந்து உடனடியாக வெளிவர உடனடி மருந்து சர்க்கரை தானாம். இந்த ஆராய்ச்சிக்காக அதிகப்படியான டென்ஷன் பாதிப்புக்குள்ளான சுமார் 2000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் மூளை செயல்பாடுகளை கண்காணித்தனர். இவர்களை 2 பிரிவுகளாகப் பிரித்து, முதல் பிரிவினருக்கு மன உளைச்சல் அதிகமாகும் போது சர்க்கரை அல்லது சர்க்கரை கலந்த தண்ணீரை கொடுத்தனர். இன்னொரு பிரிவினருக்கு இது கொடுக்கப்படவில்லை. இதில் சர்க்கரை கொடுக்கப்பட்டவர்கள், உடனடியாக தங்கள் கவலையில் இருந்து விடுபட்டு புத்துணர்ச்சி பெற்றது கண்டறியப்பட்டது. அமெரிக்காவின் ஒஹியோ மாநில பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், டென்ஷனை குறைக்கும் எளிய வழியை கண்டுபிடிக்க ப்ரட் புஷ்மன் தலைமையில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் வெளியாகி உள்ள தகவல் தான் இது. இது குறித்து ப்ரட் புஷ்மன் தெரிவித்தவை: YOGANANDHAN GANESAN |
உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Wednesday, December 29, 2010
அரை ஸ்பூன் சர்க்கரை போதும் டென்ஷன் பஞ்சாய் பறக்கும்
என்றும் உன் நினைவுகளோடு
என்றும் உன் நினைவுகளோடு
என் உயிரே ...!
உன் நினைவுகளோடு
உறைந்துகொள்கிறேன்
உனக்காக .........!
எரிந்துகொள்ளும் தீயில்
எரிவதாக ........
உணர்கிறேனடா
அந்நேரங்களில் ...!
கருகிப் போவதற்கு
சருகல்ல காதலனே....!
நம் காதல் ..!
இது .......
கலியுகத்திலும் வாழும்
காதல் காவியமடா..!
காலம் பிரித்ததாக....
கலங்காதே காதலா...!
பிரிவுகளில் தானடா...
உறவுகளின்
ஆழம் புரியும் ...!
ஆழக்கடல் கடந்த
நீள நினைவுகள் எல்லாம்....
கனவுக்குள் வந்து
மீளவும் உன்னோடு.....
பாலம் அமைக்குதடா..!
என் ஆசைக் காதலனே..!
உன் தலையணை
அருகே தானா................
என் நினைவுகளைப்
புதைத்து வைத்திருக்கிறாய் ...!
உன் நினைவுகளோடு
நிதமும் இருப்பதால் .......
நித்திரை கொள்வதில்
இல்லையடா......
எனக்கு நிம்மதி .!
உன் நினைவுவலி வந்து
என் நெஞ்சில்முள்ளாய்
தைக்கலாம்..கண்ணே ....!.
வலிகளிலும்........
ஒரு சுகம் இதுதானடா..!
உணவுகளில் விருப்பமற்று
கண்ணீரில் தினம் குளித்து
கண்ணே .....நீ
இருந்துவிடாதே ....!
உயிர்வாழ வேண்டுமடா ...
நம் காதல்...!
எந்நேரமும் .......
உன் மீது தானடா....
என் ஞாபக அலைகள் ....!
அது ...
தேசம் கடந்து வீசுமடா ..
தேனிலவு உனைப் பார்க்க ...!
உன் உயிர் சுமந்த
காற்று வந்து ...
என் உணர்வுகளில்
தீக்குளிக்க ......
மீண்டும் உன் முதல்பார்வை
ஆண்டு பல கழிந்து
அள்ளி முத்தமிட ....
அணைத்துக் கொள்கிறேன்
உன் நினைவுகளை....!!
காதல், சொந்தம், நட்பு.
இருந்தால் வருவேன் என்றது காதல்
பணம் இருந்தல் வருவேன் என்றது சொந்தம்
எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன்
என்றது நட்பு ...
............................................................
நீ இருக்கிறாய்
காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!
............................................................
காதலும் சுமையா?
ஒரு நொடியில்
விழிகளில் அடை மழையே.
முகம் பார்த்த கண்கள்,
உந்தன் முகம் தேடுதே..
முடியாமல் இதயமதிலே
கானல் வரி பாடுதே.
பிரிவேதுமில்லாமல் காதல்
உணர்வேது நெஞ்சமே..
பார்கின்ற பொழுதுகளில்
எந்தன் மனம் தான் தடுமாறவில்லை.
பழகிய நாட்களுமே..
உடன் கரை தான் சேரவில்லை..
மனம் கொண்ட வலிகள் அதிலே
சொல் இறகாகினாய்.
மனம் உலர்கின்ற வார்தைக்கும்
மொழி சூடி உறவானாய்
வலிகளை நினைத்தால் காதலும் சுமையா?
............................................................
உன் மௌனத்தில் அடக்கி விடுகிறாய்..
அடக்க முடியாத
என் வாழ்க்கையினை
உன் மௌனத்தில்
அடக்கி விடுகிறாய் ......
தோல்வி எனக்கு புதிதல்ல
அதனாலதான் அவனை
மறக்க வேண்டும்
என்று நினைக்கும் போது - கூட
என் மனதோடு போராடி தோற்று போகிறேன்
............................................................
அழகழகாய் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம் பெருமை
ஒத்தவரி சொல்லலையே!
எழுதவோ படிக்கவோ
ஏலாத தாயப்பத்தி
எழுதி என்ன லாபமின்னு
எழுதாமப் போனேனே!
-வைரமுத்து
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
படித்ததில் பிடித்தது
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
சிரி சிரி சிரிசிரி சிரி
ஹாய் சார், ஐ எம் கிருஷ்ணன்நான்...இத சொல்லியே ஆகனும்....
question paper அவ்வளவு கஷ்டம்....இங்க எவனும் இவ்வளவு கஷ்டமா ஒரு...
பேப்பரை பார்த்து இருக்கமாட்டாங்க.
and i think
இந்த வாட்டியும் exam ஊத்திகிச்சு
பாடல்:
முன் தினம் படித்தேனே, படித்ததும் மறந்தேனே
சலடை கண்ணாளே உள்ளமும் புண் ஆனதே.
இத்தனை நாளாக bookயே பாராமல் விளையாடி இருந்தேனோ
படிப்பும் வீணானதே !
கோழி பண்ணையை நடத்தி வந்தவர் அதனை சுற்றி பார்க்க வந்தவரிடம் தான் கோழிக்களுக்கு பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற விலை உயர்ந்த பொருட்களை தீனியாக போடுவதாக கூறினார் உங்களுக்கு நல்ல வருமானம் வருவதால் தான் கோழிகளுக்கு விலை உயர்ந்த தீனிகளை கோடுகிறீர்கள் ஆதலால் நீங்கள் அதிக வரிகட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக வரி வசூல் செய்தார் காரணம் வந்தவர் வருமான வரி அதிகாரி.
மறுநாள் வந்தவரிடம் கோழி பண்ணையில் தான் கோழிகளுக்கு விலைகுறைந்த தீனிகளை தான் போடுவதாக கூறினார். கோழிகளுக்கு தரமில்லாத தீனிகளை போடுகிறீர்கள், ஆதலால் நீங்கள் அதிக அபராதம் கட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக பணம் வசூல் செய்தார், காரணம் வந்தவர் வனவிலங்கு அதிகாரி.
மறு நாளும் ஒருவர் வர அவரிடம் சார் நான் ஒவ்வொரு கோழியிடமும் தினசரி ரூ. 50 கொடுத்து விடுவேன். ஒவ்வொரு கோழியும் தனக்கு பிடித்த படி சாப்பிட்டு கொள்ளும் என்றார்
நம்ம ஓட்டல் சரக்கு மாஸ்டருக்கு தொழில் பக்தி அதிகம்...!
எப்படி?
நெற்றியில் சந்தனத்துக்கு பதிலா சாம்பாரை தடவியிருக்காரே!
எதுக்கு டீச்சர் அந்த பையனை அடிக்கறீங்க?
இந்தியாவின் தேசியப் பறவை எதுன்னு கேட்டா 'கொசு'ங்கிறான் !
மனைவி: என்னங்க நமக்கு கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆச்சு. நான் போகாத இடத்துக்கு என்ன அழைச்சுகிட்டு போறீயா?
கணவன்: சரி வா... சமையல்கட்டுக்கு போவோம்!
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு, கொய்யால சிம்பு படத்த பாத்தா அப்பவே சாவு !
"சிட்டிசன்"
(கோர்ட் சீன்)
அஜித்: அத்திப்பட்டினு ஒரு ஊர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு?
நீதிபதி RDX: எருமையாகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உங்களுக்கு?
அஜித்: தெரியாதே...
நீதிபதி RDX: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியாப்போச்சு...
"காக்க காக்க"
ஜீவா: அவளைத் தூக்கறன்டா... உனக்கு வலிக்கும்டா... நீ அழுவடா...
சூர்யா: அவளைத் தூக்கினா உனக்குத் தாண்டா வலிக்கும்... அவ 120 கிலோ டா...
"கௌரவம்"
சிவாஜி: கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சு... அதனால பறந்து போயிடுச்சு...
பத்மினி: ரெக்கை முளைச்சா பறந்து போகாம பின்ன என்ன நீந்தியா போகமுடியும்?
"நாயகன்"
கமல்: அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன்!
டிராபிக் போலீஸ்: அவன் போறப்ப கிரீன் சிக்னல், இப்ப ரெட்!
"வல்லவன்"
சிம்பு: நீ அம்பானி பொண்ணைக் கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகணும்னு ஆசைப்படற... நான் அம்பானியாவே ஆகணும்னு ஆசைப்படறேன்!
மக்கள்: இந்தக் கொடுமையெல்லாம் கேட்க்ககூடாதுன்னு தாண்டா அம்பானி போயிட்டாரு!
"தவசி"
விஜயகாந்த் : புயல் அடிச்சுப் பொழைச்சவன் இருக்கான் ஆனா இந்த பூபதி அடிச்சுப் பொழைச்சவன் இல்லடா!!!
இளவரசு: நீங்க அடிச்சுப் பொழைச்சவன் கூட இருக்காங்களாம்... ஆனா உங்க படத்தத் தியேட்டர்ல பார்த்துப் பொழைச்சவங்க யாரும் இல்லையாம்!!
--
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
Monday, December 27, 2010
சூலக்கல் மாரியம்மன்-தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு!
சுண்டைக்காய்...
காய்களும் கனிகளும் இயற்கையின் அருட் கொடைகள். மனிதனின் அன்றாட தேவையில் இதன் பயன்பாடு மிக அதிகம். மனித உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் காய்களில் நிறைந்துள்ளன. காய்களும் கனிகளும் மனித உடலுக்கு எளிதில் சேரக்கூடியவை. நம் முன்னோர்கள் காய்கனிகளுக்கு முதலிடம் கொடுத்தனர். நாம் பலவகையான காய்களை அன்றாடம் உணவில் சேர்க்கிறோம். இக்காய்கள் சுவைக்கும் பசிக்கும் மட்டும்தான் என பலர் நினைக்கின்றனர். பசியைப் போக்குவதுடன் சுவையுடன் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுப்பது இவைதான் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த இதழில் நாம் அறிந்துகொள்ள இருப்பது சுண்டைக்காய்.. சுண்டைக்காய் அனைவரும் அறிந்திருக்கும் காய்தான். பலர் வீட்டுத் தோட்டங்களில் இந்த சுண்டைச்செடி இடம்பெற்றிருக்கும். நன்கு அகன்ற இலைகள், கொத்துக்கொத்தாக வெள்ளை நிற பூக்கள், கொத்துக்கொத்தாய் சிறிய உருண்டை வடிவ காய்கள் என பார்க்க அழகாக காணப்படும் செடி இது. சுண்டைக்காயில் இருவகை உண்டு. 1. காட்டுச் சுண்டை 2. நாட்டுச் சுண்டை எனப் படும் யானைச் சுண்டை. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். இவற்றின் மருத்துவப்பயன்கள் ஒன்றே. நெஞ்சின் கபம்போம் நிறைகிருமி நோயும்போம் குணம் - ஐயம், நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள், வளிப்பெருக்கு இவை போகும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மும்முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும். சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும். சுண்டைக்காய் - 10 இவைகளை ஒன்றாகச் சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், மூலக்கிருமி, மலத்துவாரத்தில் பூச்சுக்கடி போன்றவை நீங்கும். சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காய் சூப் சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல், போன்றவை நீங்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தி, சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும். சுண்டைக்காய் வற்றல் முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும். சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல் நீங்கும். YOGANANDHAN GANESAN |
Sunday, December 26, 2010
சிரிக்கலாமா?
இப்ப மருந்து கொட்டிடுச்சி.
**********
''மேனேஜர் என் ஸ்கூட்டரை இரவல் கேட்டார்.நான் இல்லேன்னு சொன்னதும் சீட்டைக் கிழிச்சுட்டார்.''
'ஐயையோ,அப்புறம்?'
''அப்புறம் என்ன?புது சீட் வாங்கிப்போட்டு ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.''
***********
''ஒரு பெரிய பிஸ்தா ஐஸ் கிரீம் கொண்டு வா.''
'ஆறு துண்டுகளாக்கிக் கொண்டு வரவா,அல்லது எட்டு துண்டாக்கட்டுமா?'
''எட்டு துண்டா?என்னால சாப்பிட முடியாதப்பா.ஆறு துண்டாகவே வெட்டிக் கொண்டு வா.''
*************
ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.திடீரென்று ஒரு நாய் பலமாகக் குரைக்கும் சப்தம் கேட்டது.அதனால் மேற்கொண்டு நடத்த முடியாமல் அமைதியாக இருந்தார்.சிறிது நேரம் கழித்து நாய் அமைதியானது.
மாணவன் ஒருவன் சொன்னான்,''ஐயா,நாய் நிறுத்தி விட்டது.நீங்கள் ஆரம்பியுங்கள்.''
***********
போர்க்களத்தில் கை இழந்த ஒருவன் கத்தினான்,'ஐயோ,கை போச்சே,கை போச்சே.'அருகில் கிடந்த ஒருவன் எரிச்சலுடன் சொன்னான்,''யோவ்,சும்மா இருய்யா!அங்கே தலை போனவன் எல்லாம் சும்மா இருக்கான்.நீ கை போனதுக்குக் கத்துகிறாயே.''
************
''ஹலோ, 224326 தானே?''
'யாருய்யா அது டெலிபோன்ல வாய்ப்பாடெல்லாம் சொல்றது?'
***********
''உங்கள் ஆபீசில் எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள்?''
'பாதிப்பேர்தான்.'
************
வண்டியிலே என்னப்பா வேலை?
உங்க பேட்டரிக்கு புது கார் மாத்தணும் ,சார்.
************
''ரொம்ப கோபமா இருக்கீங்க,ஒரு டீ சாப்பிடுங்க முதலில்.''
'அதெல்லாம் வேண்டாம்,முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லு.'
''ரொம்ப சூடா இருக்கீங்க , கூலா ஏதாவது சாப்பிடுங்க.''
;;சரி,சரிகொடு.''
'இந்தாப்பா,அந்த டீயை ஜில்லுன்னு ஆத்திக்கொடு.'
************
லண்டன் விமானக் கம்பெனி ஒன்றின் விளம்பரம்:
''இப்போது போகலாம்,பிறகு பணம் கொடுக்கலாம்.''
அருகில் சவப்பெட்டி தயாரிக்கும் கம்பெனியின் விளம்பரம்:
இப்போது பணம் கொடுக்கலாம்.எப்போது வேண்டுமானாலும் போகலாம்.
***********
''சார்,என்ன வேலை போட்டுக் கொடுத்தாலும்கண்ணை மூடிக்கிட்டு செய்வேன் சார் .''
'சரிப்படாதுபோ,இங்கே நைட் வாச்மேன் வேலை தான் காலியிருக்கு.'
**********
புள்ளியியல் பேராசிரியர் ஒருவர் பிறப்பு இறப்பு விகிதத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.பேசும்போது அவர் சொன்னார்,''நான் ஒவ்வொரு முறை மூச்சு விடும்போதும் ஒருவர் இறக்கிறார்.''
'எங்கள் கம்பெனியின் டூத் பேஸ்டை உபயோகித்துப் பாருங்களேன்.'என்றார் கூட்டத்திலிருந்து ஒருவர்.
*********
பொழுது போக்கு
சொந்த விஷயம்
சிரிப்பு
'பத்து ரூபாய்.'
''கொஞ்சம் சொல்லிக் கொடுங்க.''
'அதெல்லாம் ஸ்கூல்லதான் சொல்லிக் கொடுப்பாங்க.இங்க இல்லை.'
************
ஒருவன்:நீ எப்போதும் திக்குவாயா?
மற்றவன்:இல்லை,பேசும்போது மட்டும் தான்.
*************
ஒருவன்:நான் இந்த அளவுக்கு சம்பாதிப்பதற்குக் காரணம் என் மனைவி தான்.
மற்றவன்:அவர் தரும் ஊக்கமா?
முதல்வன்:இல்லை,அவள் செலவழிக்கும் செலவு.
**************
மகனுக்கு உடல் நலம் இல்லை என்று பார்க்க வந்தார் தந்தை.அவனுடைய அறையினுள் நுழைய முற்படும்போது ஒரு பெண் வெளியே வந்தாள்.
மகன் சொன்னான்,''அப்பா,காய்ச்சல் போய் விட்டது.''
அப்பா சொன்னார்,'ஆம்,நான் உள்ளே வரும் பொது அது வெளியே போனதைப் பார்த்தேன்.'
**************
ஒரு இளவரசன் பருமனாக இருந்தான்.அவன் உடல் இளைக்க ஒரு குதிரை கொண்டு வரப்பட்டது.இளவரசன் தினம் குதிரை ஏற்றம் பழகினான்.ஒரு மாதத்தில்......குதிரை இளைத்து விட்டது.
**************
''ரேஷன் கடையில என்ன போடுறாங்க?''
'சப்தம் போடுறாங்க.'
*************
ராமு:டேய்,ஒரு பாட்டுப் பாடுடா!
சோமு:சினிமாப் பாட்டா,தனிப் பாட்டா?
ராமு:சினிமா பாட்டுப் பாடேன்.
சோமு:காதல் பாட்டா,தத்துவப் பாட்டா?
ராமு:காதல் பாட்டு.
சோமு:சோலோவா,டூயட்டா?
ராமு:சோலோ.
சோமு:பழைய பாட்டா,புதுப் பாட்டா?
ராமு:உன்னைப் போய்ப் பாடச் சொன்னேனே,என் புத்தியைச் செருப்பால அடிக்கணும்.
சோமு:என் செருப்பாலா,உன் செருப்பாலா?
*************
நண்பர்:நீங்கள் காந்தியடிகளை விட ஒரு படி மேல்.
அரசியல்வாதி:ஹி,ஹி ,எப்படிச் சொல்கிறீர்கள்?
நண்பர்:காந்தி நூல் நூற்கத்தான் சொன்னார்.நீங்கள் கயிறாகவே திரிக்கிறீர்களே!
*************
ஹோஜா என்பவன் ஒரு புத்திசாலியை முட்டாளாக்க நினைத்தான்.அவரிடம் கேட்டான்,''முட்டாள்கள் சொல்லக்கூடிய இரண்டு வார்த்தைகள் என்ன,தெரியுமா?''புத்திசாலி,'எனக்குத்தெரியாது,'என்றார்.''சரியான பதிலைச் சொல்லி விட்டர்கள்,''என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான் ஹோஜா.
************
சாலையில் நடந்து கொண்டிருந்த ஒருவர் மீது ஸ்கூட்டர் ஒன்று மோதி விட்டது.
ஒருவர்:பார்த்து ஸ்கூட்டரை ஓட்டக் கூடாதா?
ஸ்கூட்டர்காரர்:நீர் தான் பார்த்து நடக்கணும்.நான் பத்து வருடமா ஸ்கூட்டர் ஓட்டுறேனாக்கும்.
ஒருவர்:சாரி ஜென்டில்மேன்,நான் நாற்பது வருடமா நடக்கிறேன்.நீர் தான் பார்த்து ஓட்டனும்.
**************
டானிக் தயாரிக்கும் கம்பெனியைப் பாராட்டி ஒரு பெண் கடிதம் எழுதினாள்,
''உங்களது தயாரிப்பு பிரமாதம்.முன்பெல்லாம் என்னால் என் குழந்தையைக் கூட அடிக்க முடியாது.இப்போது என் கணவரையே அடிக்கக் கூடிய அளவுக்கு பலம் கூடியுள்ளது.''
***************
நான் அறியவில்லை
வழிவிடு
ஷா அவனருகில் வந்து சொன்னார்,''நான் முட்டாள்களுக்கு வழி விடுவதில்லை.''
அவன் மிக மரியாதையாகச் சொன்னான்,'நான் வழி விடுவதுண்டு.'
சாப்பாடு
கழுதை வண்டி
லாயிட் ஜார்ஜ் டக்கென்று சொன்னார்,''தெரியும்.தாத்தா ஓட்டியவண்டி கூட வீட்டில் தான் இருக்கிறது.ஆனால் அதில் பூட்டியிருந்த கழுதை தான் காணாமல் போயிருந்தது.அது இப்போது தான் இங்கே இருப்பது தெரிகிறது.''
கல்வி அறிவு
நாசூக்கு
நம்மைப் பற்றி எவ்வளவு உயர்வாக நாம் நினைக்கிறோம் என்பதனையும்,பிறரைப் பற்றி எவ்வளவு மட்டமாக நாம் நினைக்கிறோம் என்பதனையும் வெளிக்காட்டாமல் மறைத்துக் கொள்வது.
--மார்க் ட்வைன்
போகும் வழி
அடுத்தவன் சொன்னான்,'இப்படியே கையை நீட்டிக்கொண்டும் போகலாம்,மடக்கிக் கொண்டும் போகலாம்.'
அஞ்சு நிமிஷம்
மனைவி:ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்கோ.
கணவன்:அதுக்குள்ளே ஆகிடுமா?
மனைவி:இல்லே,நானும் புடவையை மாத்திட்டு உங்களோட வந்திடறேன்.
தகுதியற்றவர்
சங்கடம்
எங்கும் அமைதி நிலவியது.லிங்கன் மனம் வருந்துவார் என அனைவரும் எண்ணினர்.ஆனால் லிங்கன் சங்கடப்படவில்லை.மாறாக,அவர் சபை முழுவதையும் சங்கடப்படுத்திவிட்டார்.அவர் கூறினார்,''நல்லது.என் தந்தையைப் பற்றி நினைவு படுத்தியதற்கு நன்றி.அவர் ஒரு அருமையான செருப்பு தைப்பவர்.நான் அவரளவு அருமையான ஜனாதிபதியில்லை.அவர் தைத்துத் தந்த காலணிகளை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்.அதில் ஏதேனும் கோளாறு இருப்பின் என் அப்பா இறந்துவிட்டாரே என வருந்தாமல் என்னிடம் கொண்டு வாருங்கள்.நான் ஒரு கத்துக் குட்டி தான்.ஆனால் நான் அவற்றைச் சரி செய்து தர முடியும்.''
விடாமுயற்சி
அலைகள் கரையில் மோதிச்சிதறும் காட்சி.
குருவும் அவரது சீடர்களும் காண்கிறார்கள்.
முதலாவது சீடனைப் பார்த்து குரு கேட்டார்,
''உனக்கு என்ன தெரிகிறது?''
'திரும்பத்திரும்ப வந்து மோதும் அலைகளில் விடாமுயற்சி தெரிகிறது.'
அடுத்த சீடனைக் கேட்ட போது அவன் சொன்னான்,
'துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும் கரையைப் போல் உறுதியாக நின்றால் சிதறிப் போகும்.'
குரு சொன்னார்,
''சில நேரங்களில் அலைகளாய் இரு;
சில நேரங்களில் கரையாய் இரு.''
இலக்கு
---டாக்டர் அப்துல் கலாம்
உபயோகம்
''ஆனால் பசு மீது நீ பிரயாணம் செய்தால் பார்ப்பவர்கள் பைத்தியம் என்பார்களே?''என்று சைக்கிள்காரர் கூற,குடியானவர் சொன்னார்,'சைக்கிளில் பால் கறந்தால் மிகப் பெரிய பைத்தியம் என்றல்லவா சொல்வார்கள்!'
ஏமாற்றுக்காரன்
பேச்சுக்கலை
நண்பரின் வீட்டிற்கு ஒருவர் சென்ற போதுஅவருக்கு ஒரு தட்டில் ஜிலேபி வைத்தார் நண்பரின் மனைவி.ஜிலேபியை இரண்டாக விண்ட போது அதில் நூல் போல் வந்தது.சிரமப்பட்டு அதை சாப்பிட்டு விட்டார்.நண்பர் கேட்டார்.''ஜிலேபி எப்படி இருந்தது?''இவர் சொன்னார்,'மிக நன்றாக இருந்தது.நான் தான் இரண்டு நாள் தாமதமாக வந்து விட்டேன்.'
நண்பர் மனைவியிடம் வாழைப்பழம் கொண்டு வந்து கொடுக்கச் சொல்ல அவரும் தட்டில் கொண்டு வந்து வைத்தார்.அது சற்றுக் காயாக இருந்தது.இதையும் சிரமப்பட்டு சாப்பிட்டார் வந்தவர்.நண்பர் கேட்டார்,''வாழைப்பழம் நன்றாக இருந்ததா?''வந்தவர் சொன்னார்,'நன்றாக இருந்தது.நான் தான் இரண்டு நாள் முன்னால் வந்து விட்டேன்.'
பாவம்
'விடுங்கம்மா,பாவம்.தூக்கத்திலாவது சிரித்து விட்டுப் போகட்டும்.'
பேச்சு
கணவன்:வீட்டிலேயே என் பேச்சைக் கேட்க மாட்டாயே...கூட்டத்தில வந்தா கேட்கப்போறே?
வித்தியாசம்
ஆடு மேய்ப்பவன்:வெள்ளை ஆடுகளா,கறுப்பு ஆடுகளா?
வ.போ.;வெள்ளை ஆடுகள்
ஆ.மே; ஒரு கூடை புல் தின்னும்.
வ.போ.;அப்படியானால் கறுப்பு ஆடுகள் எவ்வளவு தின்னும்?
ஆ.மே.;அவையும் ஒரு கூடை புல் தின்னும்.
வ.போ.;ஒரு ஆடு எவ்வளவு கம்பளி தரும்?
ஆ.மே.;வெள்ளை ஆடுகளா,கறுப்பு ஆடுகளா?
வ.போ.;வெள்ளை ஆடுகள்.
ஆ.மே.;அவை வருஷம் ஒன்றுக்கு மூன்று கிலோ கம்பளி தரும்.
வ.போ.;அப்படியானால்,கறுப்பு ஆடுகள்....?
ஆ.மே.;அவையும் மூன்று கிலோ கம்பளி தரும்.
வ.போ.;(எரிச்சலுடன்)ஏன் இப்படி கறுப்பு ஆடுகளையும் வெள்ளை ஆடுகளையும் இனம் பிரித்துக் கூறுகிறாய்?
ஆ.மே.;ஏனெனில் வெள்ளை ஆடுகள் எங்கள் அப்பாவுக்குச் சொந்தமானவை.
வ.போ.;அப்படியானால் கறுப்பு ஆடுகள்....?
ஆ.மே.;அவையும் எங்க அப்பாவுக்குச் சொந்தமானவை தான்.
அதற்கு மேல் கேள்வி கேட்க வழிப்போக்கனுக்குப் பைத்தியமா பிடித்திருக்கு?
வழுக்கை
''தென்னை மரத்தில் காய்க்கும் தேங்காயில் இளமையில் வழுக்கை இருக்கும்.மனிதனுக்கு முதுமையில் தான் வழுக்கை வரும்.''என்று அழகாகப் பதில் சொன்னார் கி.வா.ஜ.
முத்து எங்கே?
சத்து
'இப்போ என் சொத்து குறைந்து போச்சு.'
எச்சரிக்கை
தலைச்சுமை
செருப்புத்தைப்பவன் சொன்னான்,''மற்றவர்களுடைய கருத்துக்களை எல்லாம் உங்கள் தலையில் சுமந்து கொண்டிருக்கும் நீங்கள்,மற்றவர்களுடைய செருப்பை உங்கள் காலில் அணியக் கூடாதா?''
இவர் முதல் முறையாக சுயமாக சிந்திக்கத் தொடங்குகிறார்.அந்தத் தொழிலாளியைப் பார்க்கிறார்...ஒரு புத்தகத்தைப் பார்ப்பது போல் அவன் கைகள் செருப்புத் தைத்துக் கொண்டிருந்தன.அவன் வார்த்தைகள் இவர் நெஞ்சைத் தைத்துக் கொண்டிருந்தன.தலைச்சுமை மெல்ல தரைக்கு வர ஆரம்பித்தது.
கேலி
"உன்னுடைய கவனம் எல்லாம் நீ செய்யும் செயலில் இருந்ததால் மற்றவர்கள் பேசியது உன் காதில் விழவில்லை.அத்துடன் செய்த காரியத்திலும் வெற்றி அடைந்திருக்கிறாய்.அப்படி இருக்கும் போதுநீ எதற்காக மற்றவர்கள் பேசுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து உன் காரியத்தை அரைகுறையாகச் செய்ய வேண்டும்?எனவே,பிறர் பேசுவதையெல்லாம் பொருட்படுத்தாது வாழ்க்கையில் முன்னேறத் தேவையான காரியங்களை முழு கவனத்தோடு செய்.அப்போது உன்னை யாரும் கேலி செய்ய மாட்டார்கள்."என்றார் முனிவர்.
அவன் தெளிவுடன் விடை பெற்றான்.
எப்போது படுப்பது?
'கையைக் கழுவி விட்டுத்தான் படுப்போம்.'
காலை மிதித்தால்
ஒருவர்:ஏங்க,நீங்க அரசியல்வாதியா?
மற்றவர்:இல்லீங்க..
முதல்வர்:நீங்க ஏதேனும் பதவியில் இருக்கிறீர்களா?
மற்றவர்:இல்லையே...
முதல்வர்:நீங்க பெரிய பணக்காரரா?
மற்றவர்:இல்லை...
முதல்வர்:ஏண்டா,என் காலை மிதிச்சிக்கிட்டிருக்கே?முதல்ல காலை எடுடா!
அனுமதி
'பகலில பேசுறதுக்கு அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் இந்த வியாதி சரியாகி விடும்.'
மூன்று சல்லடைகள்
"அவசரப்படாதே,நண்பனே!அந்தச் செய்தியை மூன்று சல்லடைகளில் சலித்துப் பார்த்தாயா?"
அவனுக்குப் புரியவில்லை."மூன்று சல்லடைகளா?"
"முதல் சல்லடை உண்மை அல்லாததைத் தடுத்து விடும்.நீ சொல்ல வந்த செய்தி உண்மையானதுதானா?"
'அது எனக்குத் தெரியாது.மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.அவ்வளவுதான்'
"இரண்டாவது சல்லடை கெட்டசெய்திகளைத் தடுத்து விடும்.நீ சொல்ல வந்தது நல்ல செய்தியா?"
'இல்லை அய்யா,'
"மூன்றாவது சல்லடை மற்றவர்களுக்குத் துன்பம் தரும் செய்திகளைத் தடுத்து விடும்.நீ சொல்ல வந்தது மற்றவர்களுக்கு நன்மை தரக் கூடிய செய்தியா?"
'இல்லை'
"நீ என்னிடம் சொல்ல வந்த செய்தி உண்மையானது அல்ல;நல்ல செய்தியும் அல்ல;அதனால் யாருக்கும் நன்மையோ மகிழ்ச்சியோ ஏற்படப்போவதில்லை.
அப்படித்தானே?"
'ஆமாம்'
"அருமை நண்பனே!அப்படிப்பட்ட செய்தியைப் பற்றி நாம் பேசி ஏன்நமது நேரத்தையும் உழைப்பையும் வீணாக்க வேண்டும்?"
வந்தவன் வாயை மூடிக் கொண்டான்.
சேதம்
வணக்கங்கள்
கண்ணாடி தரும் பாடம்
குறைத்துக் காட்டுவதும் இல்லை.உள்ளது உள்ளபடி காட்டுகிறது.
அதே போல் உன் சகோதரனிடம்,நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ,அந்த அளவுக்குத்தான் சுட்டிக் காட்ட வேண்டும்.எதையும் மிகையாகவோ,ஜோடித்தோ,துரும்பைத் தூனாக்கவோ,மலையை கடுகாகவோ ஆக்கக்கூடாது.
2கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போதுதான் அது உன் குறையைக் காட்டுகிறது.நீ அகன்று விட்டால் கண்ணாடி மவுனமாகிவிடும்.
அதேபோல்,மற்றவர்களின் குறைகளை அவர்களிடம் நேரடியாகவே சுட்டிக் காட்ட வேண்டும்.அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது.
3ஒருவருடைய குறையைக் கண்ணாடி காட்டுவதால் அதன் மீது யாரும் கோபமோ எரிச்சலோ படுவதில்லை.
அதேபோல்,நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும்.
அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமானால் திருத்திக் கொள்ள வேண்டும்.
கருத்து: முகம்மது நபிகள்
கோபத்துக்கு உகந்தது
அன்பு செய்யவும்,சகித்துக் கொள்ளவும்,சாந்தத்தை வளர்த்துக் கொள்ளவும் உதவாத நியாயங்களால் என்ன பயன்?
என் உள்ளே கோபம் உருவாவது குறித்து எனக்குக் கவலை இல்லை.கோபம் என்ற உணர்வு இல்லாவிடில் நான் பேடியாகிவிடுவேன்.கோபமே கொள்ளாதிருக்க இந்த உலகம் அவ்வளவு யோக்கியமாக இல்லை.எனது கோபமே என்னிடம் உள்ள நல்ல குணம்.ஆனால் அதை சேமித்து வைக்காமல் விரயமாக்குவது தான் எனக்கு சம்மதமில்லை.நான் கோபமே கொள்ளாத அளவுக்கு மழுங்கிப் போவதில் எனக்கு விருப்பம் இல்லை.எனது கோபம் என்னையே வென்றுவிடுகிற அளவுக்கு நான் பலமில்லாதவன் ஆகி விடுவதுதான் எனக்கு வருத்தம் தருகிறது.
எனது கோபங்களுக்கான நியாயங்களை நான் மறுக்கப் போவதில்லை.என்னைக் கோபத்துக்கு ஆளாக்குகின்ற சூழ்நிலைகளிலிருந்தும் நான் தப்பித்துக் கொள்ளவும் போவதில்லை.கோபத்தின் பொது எனது நாவிலிருந்து வெளிப்படுகின்ற சொற்கள் பிறரைச் சுடுகின்ற வெம்மையை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.அப்போது நான் பேசுகின்ற வார்த்தையெல்லாம் ஒரு பைத்தியக் காரனின் பிதற்றல் போல் தெரிகிறது.
எனவே கோபங்களை இனி நான் சேமித்து வைக்கப் போகின்றேன்.கோபம் வரும்போது நான் மவுனமாகி விடப்போகிறேன்.செயலற்று இருந்து விடப் போகிறேன்.கோபத்துக்கு உகந்தது மவுனமே.
--ஜெயகாந்தன்.
ஒப்பீடு
வசந்த காலம் வந்து விட்டாலும்,காக்கை காக்கை தான்!குயிலும் குயில் தான்!
கருப்பாக இருப்பதால் காக்கையும் குயிலும் ஒன்று போல் தோன்றலாம்.
ஆனால் வசந்த காலத்தில்
பாடும் குயிலின் குரலோடு,கத்தும் காக்கையின் குரலை ஒப்பிட்டுப் பார்க்க நினைவும் தோன்றுமா?
அமரகோஷத் என்னும் சம்ஷ்க்ருத செய்யுளின் கருத்து.
உற்சாகம்
கிளைகளில் இலைகள் அடர்ந்து பொன்னிறக் கனிகள் ஊஞ்சலாடும் போது,
"மாரிக்காலம் எவ்வளவு நேர்த்தியானது!"என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.
கோடையில் இலைகள் எல்லாம் உதிர்ந்து மரம் மொட்டையாக இருக்கும் போது அதன் வழியே வானத்தைப் பார்த்து,"ஆகா,இந்த நட்சத்திரக் கூட்டங்கள் எவ்வளவு அற்புதமாகக் காட்சியளிக்கின்றன!"என்று ரசிக்க வேண்டும்.
எப்போதும் வாழ்வின் பிரகாசமான பகுதிகளைப் பார்த்து உற்சாகம் பெற வேண்டும்.
குதிரைக்காரன்
அவன் சொன்னான்,''ஐயா,நான் குதிரைக்காரன்.எனக்கு ஒன்றும் தெரியாது.அனால் ஒன்றே ஒன்று மட்டும் தெரியும்.நான் முப்பது குதிரை வளர்க்கிறேன்.புல்லு வைக்கப் போகும் போது ,எல்லாக் குதிரைகளும் வெளியே சென்றிருக்க ,ஒரே ஒரு குதிரை மட்டும் இருந்தாலும் ,நான் அந்தக் குதிரைக்குப் புல்லை வைத்து விட்டுத்தான் வருவேன்.''
படாரென்று அறைந்தது போல் இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக் காரனைப் பாராட்டி விட்டு,அவனுக்கு மட்டும் தன பிரசங்கத்தை ஆரம்பித்தார்.தத்துவம்,மந்திரம்,பாவம்,புண்ணியம்,சொர்க்கம்,நரகம் என்று சரமாரியாகப் பேசிப் பிரமாதப் படுத்தி விட்டார்.பிரசங்கம் முடிந்ததும்,எப்படி இருந்தது என்று அவனைப் பார்த்துப் பெருமையாகக் கேட்டார்.
''ஐயா,நான் குதிரைக்காரன்.எனக்கு ஒன்றும் தெரியாது.ஆனால் ஒன்று மட்டும் தெரியும்.நான் புல்லு வைக்கப் போன இடத்தில் ஒரே ஒரு குதிரை தான் இருந்தது என்றால்,அதற்கு மட்டும் தான் புல் வைப்பேன்.முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டி விட்டு வர மாட்டேன்,''என்றான் அவன்.
அவ்வளவு தான்!குரு அதிர்ந்து விட்டார்.
குடும்ப வன்முறை
கதவுகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் குடும்ப யுத்தத்தின் கூப்பாடு நம் தெருக்கள்,நகரங்கள் முழுவதும் எதிரொலிக்கக் கூடும்.வீடுகளுக்குக் கதவுகளையும் ஜன்னல்களையும் கண்டு பிடித்தவன் ஒரு குடும்பஸ்தனாகத் தான் இருக்க வேண்டும்.நம் வீட்டுக் கதவுகள் வெளியிலிருந்து எதுவும் நுழையாமல் பார்த்துக் கொள்வதை விடவும் உள்ளிருந்து எதுவும் வெளியே செல்லாமல் இருக்கத்தான் அதிகம் உதவுகின்றன.
--கதா விலாசம் --எஸ்.இராமகிருஷ்ணன்
Saturday, December 25, 2010
உங்கள் சிந்தனைக்கு
என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என
நினைத்தால் வலிமை படைத்தவனாக நீ ஆகிவிடுவாய்.
· அற்ப இதயமுடைய மனிதரிடமிருந்து எந்த ஒரு உருப்படியான
காரியத்தையும் எதிர்பார்க்க முடியாது. ஆகையால் நீ கடலைக் கடக்க
விரும்பினால் இரும்பைப் போன்ற மனஉறுதி உன்னிடத்தில் இருக்க வேண்டும்.
மலைகளைத் துளைத்துச் செல்வதற்குப் போதுமான வலிமை உனக்கு இருந்தாக
வேண்டும்.
· ஒரு முகப்படுத்தும் ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப்
பெறலாம். இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்குரிய ஒரே வழியாகும்.
· மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீ உனது சொந்த
உறுதியான முடிவில் பிடிப்புடன் இருந்தால் பிறகு நிச்சயமாக மற்றவை
நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும்.
· உலக வரலாறு என்பது தன்னம்பிக்கையுள்ள, சில மனிதரின் வரலாறே
ஆகும். உள்ளே மறைந்து இருக்கும் தெய்வத்தன்மையை வெளிக்கொணரும் ஆற்றல்
தன்னம்பிக்கைக்கு உண்டு.
[கடி] ஜோக்ஸ்
லஞ்சம்
பணம் கிடைக்குமே என்றுமக்களே வீட்டில் எலி வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள்!
சிரி சிரி
ராமசாமி : என் மனைவிக்கு என் மீது கொள்ள பிரியம்
குப்புசாமி : பரவாயில்லை என் மனைவிக்கு என்னை கொல்ல தான் பிரியம்.
நோயாளி : டாக்டர் என் காதுக்குள் பல்லி போயிருச்சி சார்?
டாக்டர் : ஏம்பா காதுல பல்லி போகிற வரைக்கும் என்ன பண்ணிட்டிருந்தாய்?
நோயாளி : எற்கனவே கரப்பான்பூச்சி காதுக்குள்ளே போயிடுச்சி அதை பிடிச்சிட்டு பல்லி வந்துடும்னு பார்த்தேன்.
அருண் : சார் என் மனைவியை இரண்டு நாளா காணோம்.
போலிஷ் : இரண்டு நாளா என்னய்ய பண்ணிணே? எங்க திரும்பி வந்துடுவாளோன்னு பயந்து கிட்டிருந்தேன் சார்.
நபர் 1 : இந்த டாக்டர் ரொம் மோசம். என் மனைவியை பார்க்கவந்த என்னை பெட்டில் அட்மிட் பண்ணிவிட்டார்?
நபர் 2 :நீங்களாவது பரவாயில்லை, நான் போஸ்ட் மேன் போஸ்ட் டெலிவரி கொடுக்க வந்த என்னை பெட்டில் அட்மிட்ட பண்ணிவிட்டார்.
ஜோசியர் : உங்களுக்கு இருந்த தோஷமெல்லாம் உங்க கல்யாணத்துக்கப்புறம் நீங்கிடுச்சாமே?
வந்தவர் : ஆமா! கடைசியா இருந்தது சந்தோஷம் இப்ப அதுவும் நீங்கிருச்சி.
மனைவி : பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும்வரை என்ன பண்ணிட்டீருந்தீங்க?
கணவன் :: இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க!
கணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்!
டாக்டர் நீங்க கொடுத்த மருந்து மாத்திரையெல்லாம் சாப்பிட்டேன் உருண்டையா இருந்த பெரியகண்ணாடி மாத்திரைதான் முழுங்க சிரமமா இருந்தது.
டாக்டர் : அடப்பாவி பேப்பர் வெயிட்டை எடுத்துட்டு போனது நீதானா?
--
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
Friday, December 24, 2010
முருங்கை மரம்
முருங்கைக் கீரை மனித உடலுக்கு ஆரோக்கியத்தையும், தேவையான புரதச் சத்துகளையும் அளிப்பதில் காய்கறிகளும், பச்சைக் கீரைகளும் முக்கியப் பங்காற்றுகின்றன. கீரையைப் பச்சைப் பசேல் என்று அதன் நிறத்திலேயே சமைப்பதுதான் மிகவும் சிறந்தது. எந்த கீரையானாலும், அவற்றைக் கழுவிய பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது சர்க்கரையைச் சேர்த்து அதில் கீரையைப் போட்டு அரைமணி நேரம் மூடி வைத்து விடவேண்டும். பின்பு கீரையை எடுத்து உப்பு, சீரகம் மட்டும் சேர்த்து வேகவைத்து மசித்து கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் ஆகியவற்றைத் தாளித்துச் சாப்பிடவும். பருப்பு வேகவைத்து கீரையுடன் சேர்த்து மசித்துக் கொள்ள சுவைகூடும். முருங்கைக் கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். முருங்கைக் கீரையை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும், உறுதியும் கிடைக்கிறது. முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும். மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக் கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படும்போது, ஐந்து நாட்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுவலி குணமாகும். முருங்கைக் கீரை உண்பதால், தாதுபலம் பெருகுவதுடன், இரத்த அழுத்தமும் குணமாகும். கொழுப்புச் சத்து குறைவதுடன், நீரிழிவு நோயும் குணமாகிறது. முருங்கை கீரை சாப்பிடுவதால் காமாலை குறையும். கண்பார்வை தெளிவாகும்.ஆனால், மூட்டு வலி உள்ளவர்கள் முருங்கைக்கீரையை சேர்த்துக் கொள்ளக் கூடாது. சிறுகீரையுடன் சீரகம், மிளகு, சோம்பு, வெங்காயம், இஞ்சி, தக்காளி, உப்பு சேர்த்து வேக வைத்து சூப் வைத்துச் சாப்பிடலாம். கீரையைக் கடைந்து சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் சிறுகீரை சூப் தினமும் சாப்பிட்டால் கணையத்தில் இன்சுலின் இயல்பாகச் சுரக்கும். போதை மருந்து, மது அருந்துதல் பழக்கத்தை கைவிட நினைப்பவர்கள் சிறு கீரை சூப் செய்து 90 நாட்கள் தொடர்ந்து சாப்பிட நல்ல பலன் கிட்டும். காச நோய், கண் நோய்கள், நீர்க்கடுப்பு, வீக்கம், பித்த நோய்கள், உடலில் சேரும் நச்சுத்தன்மை போன்றவை சிறுகீரை உண்பதால் நீங்கும். சிறுகீரை உடலுக்கு எழில் தருவதோடு மூளை, இதயம், குடல், ரத்தம் இவற்றிற்கு வலிமையையும் தருகிறது. ஆயுர்வேத மருந்து சாப்பிடுபவர்கள் சிறுகீரையைக் கண்டிப்பாகச் சாப்பிடக்கூடாது. கூடிய வரை கீரை வகைகளைச் சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியமாக இருங்கள் முருங்கையில் தவசு முருங்கை, கொடி முருங்கை, நன்முருங்கை, காட்டு முருங்கை, கொடிக்கால் முருங்கை என்று பல வகைகள் இருக்கின்றன. இவற்றில் வீடுகளில் மரமாக இருக்கும் முருங்கையை நன்முருங்களை என்று நம் முன்னோர்கள் அழைத்து வந்துள்ளனர். முருங்கை மரத்தின் இலை, பூ, காய் ஆகியவை சிறந்த உணவாகப் பயன்படுகின்றன. இவை சிறந்த பத்திய உணவாகவும் கருதப்படுகின்றன. அதோடு முருங்கை மரத்தின் அடி முதல் முடி வரை அனைத்துப் பகுதிகளும் சிறந்த மருந்தாகவும் பயன்படுகின்றன. முற்றிய விதைகளை நட்டோ அல்லது முற்றிய கிளைகளை வெட்டி நட்டோ முருங்கை மரத்தை இனவிருத்தி சய்யலாம். முருங்கை மரம் சுமார் 9 மீட்டர் வரை வளரும். காற்றடித்தால் எளிதில் ஒடிந்துவிடும். முருங்கை மரம் வளர அதிக தண்ணீர் தேவையில்லை. முருங்கை இலையில் வைட்டமின் "ஏ", வைட்டமின் "சி", இரும்பு சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றன. முருங்கைக் கீரையை பல முறைகளில் சமைத்துச் சாப்பிடலாம். முருங்கை இலையை சாம்பாராகவும், பொரியலாகவும், துவட்டலாகவும் செய்து சாப்பிடலாம். முருங்கைப் பூவையும் பருப்புடன் சேர்த்துச் சமைத்து உண்ணலாம். அது போலவே, முருங்கைப் பிஞ்சு, காய் ஆகியவற்றையும், சாம்பாராகவும் ரசமாகவும், அவியலாகவும், பொரியலாகவும், புளிக்குழம்பாகவும் பல வகைகளில் சமைத்துச் சாப்பிடலாம். முருங்கை இலையைப் பழுப்பு நீக்கி நன்கு ஆய்ந்து பொரியல் செய்து சாப்பிடலாம். முருங்கை இலைப் பொரியலுடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறினால் அது சத்துள்ள உணவாகும். இந்த முருங்கை இலைப் பொரியலை 40 தினங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல வலிமை பெறும். தாது புஷ்டி உண்டாகும். கண் தொடர்பான நோய்கள் நீங்கும். உடலுக்கு அழகையும் மதர்ப்பையும் கொடுக்கும். பாலூட்டும் தாய்மார்கள் முருங்கைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும். முருங்கை இலைச் சாற்றைப் பாலுடன் கலந்து கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ந்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதுடன் பிரசவமும் சுகப்பிரசவமாகும். எலும்புகள் உறுதி அடையும். இரத்தம் சுத்தமாகும். முருங்கைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வைட்டமின் "ஏ" பற்றாக்குறை தொடர்பான கண்நாய்கள் நீங்கும். கண்கள் குளிர்ச்சியடையும். பார்வை தெளிவடையும். பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகை, காமாலை போன்ற நோய்கள் குணமாகும். |
பிட்டு - 34
1. உங்க வீட்டு முகவரியைக் கண்டுபிடிக்கிறதுக்குள்ளே நாயா அலைஞ்சுட்டேன். சரி உள்ளே வாங்க, என்ன சாப்பிடறீங்க, பொறையா, பிஸ்கட்டா ? ========== 2. பள்ளிக்கூட திறப்பு விழாவுக்கு நம்ம தலைவரைக் கூப்பிட்டது ரொம்பத் தப்பா போச்சு. எதனால .. ..? வகுப்பு அறைகளைப் பார்த்துட்டு, இதென்ன ரூம், ரூமா கட்டியிருக்கு, லாட்ஜா? -னு கேட்கிறாரு ========== 3. இயக்குனர்: விஜய் துப்பாக்கி சுடும் வீரராக நடிக்கிறாப்போல ஒரு படம் எடுக்கிறேன். தயாரிப்பாளர்: பேர் என்ன? இயக்குனர்:அழகிய டுமீல் மகன்! ========== 4. நண்பர்: கார்த்திக் அஜித் ஃபேன் என்பதை நிருபிச்சுட்டாண்டா... நண்பர்2: எப்படிறா? நண்பர்1: வரலாறு ல மட்டும் பாஸ் மத்த சப்ஜெக்ட்ல எல்லாம் பெயில் ஆகிட்டான். ========== 5. இயக்குனர்: நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் கதையை வச்சு ஒரு சரித்திர படம் எடுக்கப்போறேன். தயாரிப்பாளர்:பெயர் என்ன வச்சு இருக்கிங்க... இயக்குனர்: நேதாஜி - "the bose" ========== 6. உங்க பையன் ரொம்ப அதிகப்பிரசங்கித்தனமாக பேசுறான்... அப்படி என்ன பேசினான்: வெங்காயத்தை உரிச்சா கண்ணில தண்ணீர் வரும் சொன்னிங்க, பெருங்காயத்தை உரிச்சா என்ன வரும்னு கேட்கிறான்? ========== 7. கல்லூரி னு படம் வந்துச்சு அதுக்குள்ள பழனியப்பா கல்லூரினு ஒரு படம் வருதே, ரெண்டும் ஒண்ணா? படத்துக்கு கல்லூரினு பேரு வச்சாங்க ஆனா கல்லூரிக்கு பேருக்கு வைக்க மறந்துட்டாங்களாம், அதான் பழனியப்பா கல்லூரினு பேரு வச்சு கல்லூரிய திரும்பவும் ரிலீஸ் செய்றாங்க! ========== இன்றைய மெகா ஜோக்: 8. நிதி வசூலிப்பவர்:" flood donation" நிதி கேட்டா ஒரு பாட்டில் தண்ணீர் தரிங்களே! என்னை என்ன கேணைப்பயனு நினைச்சிங்களா.... "blood donation" என்று வந்திங்க ஒரு பாட்டில் ரத்தம் கேட்டிங்க கொடுத்தேன், இப்போ "flood donation" கேட்கறிங்க அதான் சரியா ஒரு பாட்டில் தண்ணீர் கொடுத்தேன்! YOGANANDHAN GANESAN |
விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு
வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம். அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது. * சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம். * வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். * இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும். * கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது. * பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது. YOGANANDHAN GANESAN |
பருக்கள் மறைய
இயற்கை அழகே அழகு. சிலர் முகப் பொலிவு பெற வேண்டும் என்று ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை பயன் படுத்துவதால் இயற்கையான அழகு மாறி பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இக்கால கட்டத்தில் இயற்கை மூலிகை களால் ஆன அழகு சாதனப் பொருட்களைப் பயன் படுத்தி முகப் பொலிவினைப் பெறலாம். சோற்றுக்கற்றாழைச் சாறு எடுத்து அதில் கார்போக அரிசி, வெந்தயம் இரண்டையும் சேர்த்து ஊறவைத்து, ஒருமணி நேரம் கழித்து நன்கு மைபோல் அரைத்து முகத்தில் பூசி அது காய்ந்த பின் சுத்தமான நீரினைக் கொண்டு முகம் கழுவி வந்தால், முகம் பொலிவு பெறும். பருக்கள் மறைய
முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெற, முட்டையின் வெள்ளைக் கருவினை எடுத்து அதில் அரை ஸ்பூன் பயிற்றமாவு கலந்து முகத்தில் தடவவும். அது காய்ந்தபின் முகத்தைப் பால் கொண்டு கழுவி பின் நீரால் சுத்தம் செய்யவும். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் பருக்கள் மறையும். செம்பருத்திப் பூ இவற்றை எடுத்து ஒன்றாகச் சேர்த்து நீர்விடாமல் அரைத்து அதனுடன் பச்சை பயறு மாவு கலந்து குழைத்து முகத்திலும் கழுத்துப் பகுதியிலும் பூசி காய்ந்த பின் கழுவி வந்தால் கண்களைச் சுற்றிய கருவளையம், முகக்கருமை, முகப்பரு, கழுத்துப்பகுதி கருப்பு, முகத்தில் உண்டான தழும்புகள், மூக்கில் ஏற்படும் கருப்பு போன்றவை நீங்கும். பேன் பொடுகு மாற வேப்பிலை, மருதோன்றி இலை, இரண்டையும் எடுத்து அதனுடன் சிறு துண்டு வசம்பு சேர்த்து மை போல் அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால், பேன், பொடுகு நீங்கும். முடி உதிர்வது குறையும். புழுவெட்டு நீங்கும். உடல் நாற்றம் நீங்க வெட்டிவேர், காய்ந்த ரோஜா இதழ், எலுமிச்சைப் பழத்தோல் ஆகியவற்றை மெல்லிய துணியில் கட்டி தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடல் நறுமணம் உண்டாகும். நாற்றம் நீங்கும். உணவில் காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் சேர்த்துக்கொண்டால் உடல் நாற்றம் ஏற்படாது. காய்ந்த எலுமிச்சம் பழத்தோலை பொடிசெய்து அதனுடன் காய்ந்த ரோஜா இதழ் பொடி, வெட்டி வேர் (ராமிச்சம்) பொடி, இவைகளை சம அளவு எடுத்து இவற்றுடன் சிறிது சந்தனத் தூள் சேர்த்து நீரில் குழைத்து முகம் மற்றும் உடலெங்கும் பூசி குளித்து வந்தால், பித்தம் தணிந்து, பித்தச்சூடு குறைந்து வியர்வை நாற்றம் நீங்கும். YOGANANDHAN GANESAN |
கோபம் தீர
தீயவர் நடுவே
32 பற்கள் நடுவே நாக்கு இருப்பது போலத்தான் வாழ்க்கை.அந்தப் பற்கள் நம்மைக் கடிக்காமல் இருப்பது நம் வசம் உள்ளது.பற்களையும் மீறி நாக்கு வெளியே வந்து தேவையான ஐஸ் க்ரீம் சாப்பிடுவது போல நம் சூழலின் நிர்பந்தங்களை மீறி நாம் வெளியே வந்து நமக்குத் தேவையான மகிழ்ச்சிகளை அனுபவிக்கும் சாத்தியம் உண்டு.
பயிற்சி
பிரச்சினை என்ன?
மற்றவர் மீது சுமத்துவதாக நாம் நினைக்கும் குற்றச்சாட்டு உண்மையில் நம் மனதில் தான் பாரமாக ஏறி உட்கார்ந்து கொள்கிறது.நம் இயல்பையும் வேகத்தையும் சிதைக்கிறது
----ஞானி ஜாக்கி வாசுதேவ்
மன்னனின் மதிப்பு
மன்னர்; முல்லா!உண்மையைச் சொல்.என் மதிப்பு என்ன இருக்கும்?''
முல்லா;''பத்துப் பொற்காசுகள்,அரசே!''
மன்னர்; ''என் துண்டின் மேல் உள்ள பெல்டே பத்துப் பொற்காசுகள் பேருமே,உனக்குத் தெரியாதா?''
முல்லா; ''தெரியும் அரசே,அதனால் தான் பத்துப் பொற்காசுகள் என்றேன்!''
நீயாக இரு.
''நான் ஆக்குவதால் நீ ஆகி விட்டால் ,பிறர் அழிப்பதால்,நீ அழிந்தும் போய் விடுவாய்.என்னைக் காட்டிலும் உண்மை மிகுந்தவர்கள் இருக்கிறார்கள்.எனவே நீ நீயாகவே இரு.எவராவது உன்னை ஏதாகிலும் ஆக்கினால்,அப்படி ஆகாதே..''என்று அறிவுறுத்தினார் வினோபாஜி.
என்ன வேண்டும்?
உலகையே வெல்லப் புறப்பட்ட மகா அலெக்சாண்டர் அவர் அருகிலே வந்தார்.ஞானி அவரைக் கவனிக்க வில்லை.கால் மேல் கால் போட்டபடி சூரிய வெப்பத்தில் குளித்துக் கொண்டிருந்தார்.
''நான் அலெக்சாண்டர் வந்திருக்கிறேன்,''என்றார் அவர்.
அப்படியாவென சாதாரணமாகக் கேட்டார் ஞானி.
''ஏ ஞானியே!உனக்கு என்ன வேண்டும்?கேள்;நான் தருகிறேன்.''என்றார் அலெக்சாண்டர்.
''எனக்கு ஒரே ஒரு உதவி வேண்டும்,''என்றார் ஞானி.
''என்ன வேண்டும்?பொன் வேண்டுமா,பொருள் வேண்டுமா,மாளிகை வேண்டுமா?''என்று கேட்டார் அலெக்சாண்டர்.
''அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்.நீகொஞ்சம் தள்ளி விலகி நிற்க வேண்டும்.உன் நிழல் வெயிலை மறைக்கிறது.''என்றார் ஞானி.
அலெக்சாண்டரின் ஆணவத்தை ஞானியின் ஆணவம் தோற்கடித்தது.காரணம்,ஞானிக்குத் தேவை என்று எதுவும் இல்லை.
சவால்
குப்பத்துக்காரன்,''என் ஊருக்கு வாடா,என்ன நடக்கிறது பார்.''என குப்பத்துக்காரன் மிதித்தவன் ஊருக்கே வந்தான்.''உன் ஊருக்கே வந்து விட்டேன்.என்ன செய்யப் போகிறாய்?''என்று சவால் விட்டான்.
''என்னுடைய தெருவிற்கு வாடா,தெரியும்,''என்றான் குப்பத்துக்காரன்.மிதித்தவன் அவனுடைய தெருவிற்கும் வந்து விட்டான்.
''என் வீட்டு வாசற்படியை மிதித்தால் பிறகு தெரியும்.''
மிதித்தவன் குப்பத்துக்காரன் வீட்டு வாசற்படிக்கும் வந்தான்.
''என் வீட்ட்ற்குள் வந்தால் என்ன ஆகும் தெரியுமா?''
அவன் வீட்டிற்குள்ளும் நுழைந்து விட்டான்.குப்பத்துக்காரன் உடனே நெடுஞ்சாண் கிடையாக அவன் காலில் விழுந்தான்.''அண்ணே,வாங்க!நமக்குள் என்ன சண்டை?உட்காருங்க,காபி சாப்பிடுங்கோ!''என்று உபசரித்தான்.
அளவுக்கு மீறி தன்னைப் பற்றிப் பேசி அச்சத்தை உருவாக்குபவர்கள் அருகில் நெருங்கிச் சென்றால் தான் அத்தனையும் வெத்து வெட்டு என்பது தெளிவாகும்.
கழுதை லாயம்
சில தினங்களுக்குப் பிறகு அரசன் மேலும் சில கவிதைகளை எழுதி அமைச்சரைக் கூப்பிட்டனுப்பிக் காட்டினான்.அமைச்சர் கவிதைகளைப் படித்து விட்டு ஒன்றும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டார்.''எங்கே போகிறீர்?''என்று அரசன் கேட்டான்.''கழுதை லாயத்திற்கு''என்றார் அமைச்சர்.
முரட்டுத்தனம்
சாபம்
''இப்போது இருட்டி விட்டது.நாளை காலை வந்தால் தைத்துத் தருகிறேன்.''என்றான் அவன்.
''இப்போதே தைத்துக் கொடுக்க வேண்டும்.இல்லாவிடில் உன் வாய் அடைத்துப் போகும்படி சாபம் கொடுப்பேன்.''என்று பயமுறுத்தினார் சாமியார்.
''உமக்கு அவ்வளவு சக்தி இருந்தால் அறுந்து போன செருப்பை சாபம் போட்டு ஒட்டி வைத்துக் கொள்வது தானே?''என்று சொல்லி விட்டுப் போனான்,செருப்புத் தைப்பவன்.
பொய்சொல்வது
யாரிடம் குறை?
விற்றவன்; நீ விசிறியை எப்படி உபயோகிப்பது என்று தெரியாமல் உபயோகித்திருப்பாய்.அதனால் தான் சேதமாகி விட்டது.
வாங்கியவன்; எப்படி அதை உபயோகிக்க வேண்டும்?
விற்றவன்; விசிறியை உன் முகத்துக்கு நேரே பிடித்துக் கொண்டு உன் தலையை இப்படியும் அப்படியும் ஆட்ட வேண்டும்.அப்படி உபயோகித்தால் தான் நீண்ட காலம் என் விசிறி உழைக்கும்.என் விசிறியின் மேல் குறை இல்லை.நீ உபயோகித்த முறை தான் தவறு.
சிரமம்
''ஏன் சிரிக்கிறாய்?''என்று மிரட்டினான்.''நான் பகலில் காண முடியாத பணத்தை இரவில் கண்டு விடலாமென இவ்வளவு சிரமப்படுகிறாயே!அதை நினைத்தேன்.சிரிப்பு வந்தது.''என்றார் பால்சாக்.
தண்டனை
மரணபயம்
மரணத்தின் மகிமை
அங்கிருந்த அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை.இவற்றை ஏன்செய்யவேண்டும் என்று ஆர்வமுடனும் வருத்தத்துடனும் அவரையே கேட்க அவர் சொன்னார்,''நான் எத்தனை நாடுகளை வென்ற போதும் எத்தனை கோடி செல்வத்தை வாரி எடுத்த போதிலும்,இறந்தபின் நான் வெறுங் கையுடன் தான் போகிறேன் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள என் கைகளை வெளியே தொங்க விட வேண்டும்.மிகச்சிறந்த மருத்துவர்கள் இருந்தாலும் சாவை வெல்ல முடியாது என்பதை உணர்த்த மருத்துவர்கள் சவ ஊர்வலத்தில் செல்ல வேண்டும்.வைரங்களும் வைடூரியங்களும் இறந்த பின் மதிப்பில்லாதவை என்பதை அறிவிக்கத்தான் அவற்றை ஊர்வலத்தில் வீசச் சொன்னேன்.''