ஹாய் சார், ஐ எம் கிருஷ்ணன்நான்...இத சொல்லியே ஆகனும்....
question paper அவ்வளவு கஷ்டம்....இங்க எவனும் இவ்வளவு கஷ்டமா ஒரு...
பேப்பரை பார்த்து இருக்கமாட்டாங்க.
and i think
இந்த வாட்டியும் exam ஊத்திகிச்சு
பாடல்:
முன் தினம் படித்தேனே, படித்ததும் மறந்தேனே
சலடை கண்ணாளே உள்ளமும் புண் ஆனதே.
இத்தனை நாளாக bookயே பாராமல் விளையாடி இருந்தேனோ
படிப்பும் வீணானதே !
************ ***********
கோழி பண்ணையை நடத்தி வந்தவர் அதனை சுற்றி பார்க்க வந்தவரிடம் தான் கோழிக்களுக்கு பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற விலை உயர்ந்த பொருட்களை தீனியாக போடுவதாக கூறினார் உங்களுக்கு நல்ல வருமானம் வருவதால் தான் கோழிகளுக்கு விலை உயர்ந்த தீனிகளை கோடுகிறீர்கள் ஆதலால் நீங்கள் அதிக வரிகட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக வரி வசூல் செய்தார் காரணம் வந்தவர் வருமான வரி அதிகாரி.
மறுநாள் வந்தவரிடம் கோழி பண்ணையில் தான் கோழிகளுக்கு விலைகுறைந்த தீனிகளை தான் போடுவதாக கூறினார். கோழிகளுக்கு தரமில்லாத தீனிகளை போடுகிறீர்கள், ஆதலால் நீங்கள் அதிக அபராதம் கட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக பணம் வசூல் செய்தார், காரணம் வந்தவர் வனவிலங்கு அதிகாரி.
மறு நாளும் ஒருவர் வர அவரிடம் சார் நான் ஒவ்வொரு கோழியிடமும் தினசரி ரூ. 50 கொடுத்து விடுவேன். ஒவ்வொரு கோழியும் தனக்கு பிடித்த படி சாப்பிட்டு கொள்ளும் என்றார்
************** **************
நம்ம ஓட்டல் சரக்கு மாஸ்டருக்கு தொழில் பக்தி அதிகம்...!
எப்படி?
நெற்றியில் சந்தனத்துக்கு பதிலா சாம்பாரை தடவியிருக்காரே!
எதுக்கு டீச்சர் அந்த பையனை அடிக்கறீங்க?
இந்தியாவின் தேசியப் பறவை எதுன்னு கேட்டா 'கொசு'ங்கிறான் !
மனைவி: என்னங்க நமக்கு கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆச்சு. நான் போகாத இடத்துக்கு என்ன அழைச்சுகிட்டு போறீயா?
கணவன்: சரி வா... சமையல்கட்டுக்கு போவோம்!
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு, கொய்யால சிம்பு படத்த பாத்தா அப்பவே சாவு !
******* ********
"சிட்டிசன்"
(கோர்ட் சீன்)
அஜித்: அத்திப்பட்டினு ஒரு ஊர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு?
நீதிபதி RDX: எருமையாகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உங்களுக்கு?
அஜித்: தெரியாதே...
நீதிபதி RDX: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியாப்போச்சு...
"காக்க காக்க"
ஜீவா: அவளைத் தூக்கறன்டா... உனக்கு வலிக்கும்டா... நீ அழுவடா...
சூர்யா: அவளைத் தூக்கினா உனக்குத் தாண்டா வலிக்கும்... அவ 120 கிலோ டா...
"கௌரவம்"
சிவாஜி: கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சு... அதனால பறந்து போயிடுச்சு...
பத்மினி: ரெக்கை முளைச்சா பறந்து போகாம பின்ன என்ன நீந்தியா போகமுடியும்?
"நாயகன்"
கமல்: அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன்!
டிராபிக் போலீஸ்: அவன் போறப்ப கிரீன் சிக்னல், இப்ப ரெட்!
"வல்லவன்"
சிம்பு: நீ அம்பானி பொண்ணைக் கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகணும்னு ஆசைப்படற... நான் அம்பானியாவே ஆகணும்னு ஆசைப்படறேன்!
மக்கள்: இந்தக் கொடுமையெல்லாம் கேட்க்ககூடாதுன்னு தாண்டா அம்பானி போயிட்டாரு!
"தவசி"
விஜயகாந்த் : புயல் அடிச்சுப் பொழைச்சவன் இருக்கான் ஆனா இந்த பூபதி அடிச்சுப் பொழைச்சவன் இல்லடா!!!
இளவரசு: நீங்க அடிச்சுப் பொழைச்சவன் கூட இருக்காங்களாம்... ஆனா உங்க படத்தத் தியேட்டர்ல பார்த்துப் பொழைச்சவங்க யாரும் இல்லையாம்!!
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
No comments:
Post a Comment