இரண்டு திருடர்கள் ஒரு நாள் இரவு, ஒரு ஜவுளிக் கடைக்குள் நுழைந்து,அங்கிருந்த சேலை மற்றும் பல ரகமான துணிகளை வாரிச் சுருட்டிக் கட்ட ஆரம்பித்தனர் அப்போது ஒரு திருடன்,'ஐயோ,'என்று திடீரெனக் கத்தினான்.வசமாக மாட்டிக் கொண்டோம் என்று இன்னொரு திருடன் பயந்து,மற்றவன் அருகே சென்று விபரம் கேட்டான்..ஒரு சேலையிலிருந்த விலை அட்டையைக் காட்டியவன் சொன்னான்,''இந்த சேலை மூவாயிரம் ரூபாயாம்.எவ்வளவு கொள்ளை அடிக்கிறாங்க பார்.''
No comments:
Post a Comment