உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Saturday, January 8, 2011
வழி பிறந்தது.
ஒருவன் தான் கொடுத்த கடனை வாங்கப் பல முறை படையெடுத்தும் கடன் வாங்கியவன் கொடுக்கவில்லை.ஒரு நாள்,இன்று எப்படியும் வசூலித்து விட வேண்டும் என்ற தீர்மானத்தோடு அவன் வீட்டிற்குச் சென்றான்.கடன் வாங்கியவன்அப்போது மிக மும்மரமாக வீட்டில் மாங்கன்றுகளை நட்டுக் கொண்டிருந்தான்.இவன் கடன் பற்றிக் கேட்டவுடன் அவன் சொன்னான்,''இன்று உன் கடனை அடைக்க ஒரு வழி கண்டு பிடித்து விட்டேன்.இதோ பார்,மாங்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறேன்,பழங்கள் பழுத்ததும் விற்று முதலில் உன் கடனை அடைத்து விடுவேன்.'' கடன் கொடுத்தவன் நொந்து போய் விரக்தியில் சிரித்தான்.கடன் வாங்கினவன் சொன்னான்,''அய்யா முகத்தில் சிரிப்பைப் பார்.பின்னே,சிரிக்க மாட்டாராஎன்ன?அவர் கடன் திரும்பக் கிடைக்கத்தான் வழி பிறந்து விட்டதே!''
No comments:
Post a Comment