உன் விரல் படும் காகிதமாக பிறந்திருக்க கூடாதா ? நின் மணிக்கைகளை உரசிக் கொண்டே உயிர் வாழும் வளையலாக நானிருந்திருக்க கூடாதா? நீ... உன் முகம் பார்த்து ஒப்பனை செய்யும் கண்ணாடியாக உருவெடுத்திருக்க கூடாதா ? அதிகாலை பொழுதில் வாசலில் அலங்கரிக்கும் கோலத்தின் புள்ளியாக மாறியிருக்க கூடாதா? நின் பனிகட்டி தேகத்தில் உருண்டு விளையாடும் வியர்வைத்துளியாக அவதரித்திக்க கூடாதா ? உன் செவிகளில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும் கம்மலுக்கு திருகாணியாக ஒலிந்திருக்க கூடாதா ? நின் விழிகளை சுற்றி தீட்டியிக்கும் கண் மை யாக கரைந்திருக்க கூடாதா ? மேக நெற்றியில் மெலிந்து மிதந்து கொண்டிருக்கும் நிலவு பொட்டாக உருமாறியிருக்க கூடாதா ? உன் கழுத்து வளைவுகளை கட்டிக் கொண்டிருக்கும் பாசி மணியாக மாறியிருக்க கூடாதா ? நீ எட்டு வைத்து நடக்கும் போதெல்லாம் வாசம் வீசும் கொழுசு மணி மொட்டாக இருந்திருக்க கூடாதா ? உன் உடல் தொட்டு தன்னை அழகுபடுத்தி கொள்ளும் புடவையின் நூலாக புகுந்திருக்க கூடாதா ? நின் இருதய அறையில் தங்கி செல்லும் மூச்சுக் காற்றாக சில நிமிடம் மறைந்திருக்க கூடாதா ? பாதைகள் எல்லாம் காத்திருக்கும் உன் பாதங்களுக்கு நகமாக வளர்ந்திருக்க கூடாதா ? என்ன செய்ய நான் மனிதனாக பிறந்து விட்டேன் என்பதற்காக என்னை ! நீ... ஒரு பொம்மையாக கூட வைத்திருக்க கூடாத ? YOGANANDHAN GANESAN |
உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
No comments:
Post a Comment