`டையோஸ்ஜெனின்' என்கிற பைடோ- ஈஸ்ட்ரோஜன் கூட்டுப்பொருள் வெந்தயத்துல இருக்கு. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைப் போலவே இது செயல்படுறதால, பெண்கள் சாப்பிட உகந்தது. ரத்தம் மற்றும் தாய்ப்பால் உற்பத்தியைப் பெருக்கும் ஆற்றல் இருக்குறதால, பிரசவித்த தாய்மார்களுக்கு வெந்தய உணவுகளைக் கொடுப்பாங்க. ஒரு பங்கு வெந்தயம், எட்டு பங்கு கோதுமை இரண்டையும் காயவைத்து, வறுத்து அரைத்து, அதோட போதுமான சர்க்கரை சேர்த்து லட்டு மாதிரி உருட்டி தினமும் சாப்பிட்டு வந்தா, நல்லா பசியெடுக்கும். தலையில பொடுகுத்தொல்லை இருக்குறவங்க, வெந்தயத்தை அரைச்சு, தலையில தேய்த்து ஊறவைத்து குளித்தால் பொடுகுத்தொல்லை நீங்கும். இப்படிப் பல்வேறு நோய்களுக்கும் மருந்தாக வெந்தயம் பயன்படுது. YOGANANDHAN GANESAN |
உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
No comments:
Post a Comment