உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Saturday, March 5, 2011
நரகத்துக்குப்போ
ஒரு அதிகாரி கோபம் வரும் போதெல்லாம் தன கீழ் உள்ள அலுவலரை,'நரகத்துக்குப்போ,''என்று கூச்சலிடுவது வழக்கம்.அந்த அலுவலருக்கு இதைக் கேட்கும் பொழுதெல்லாம் வருத்தமாக இருக்கும். இதை தவிர்ப்பதற்கு ஒரு வழி கண்டாக வேண்டும் என்று நீண்ட நாள் யோசித்தார்.ஒரு நாள் அதிகாரி கோபத்தில்,'நரகத்துக்குப்போ,''என்று திட்டியபோது,அவர் அமைதியாகச் சொன்னார்,''ஐயா,எனக்கு உங்களிடம் வேலை பார்பதுதான் மிகவும் பிடித்திருக்கிறது.அதனால் அடுத்த முறை உங்களுக்கு நரகத்துக்கு மாறுதல் வரும்போது உங்களுடன் நானும் நரகம் வந்து விடுகிறேன்.''அதன்பின் அந்த அதிகாரி அந்த மாதிரி யாரையும் திட்டுவதில்லை.
No comments:
Post a Comment