உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Tuesday, March 1, 2011
பறக்க முடியுமா?
கால் பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு அன்று இரவு ஒரு பெரிய ஹோட்டலின் பத்தாவது மாடியில் விருந்து நடைபெற்றது.விருந்தில் மது பரிமாறப்பட்டதால் அனைவரும் அளவுக்கு மீறிக் குடித்து போதையில் இருந்தனர்.மறுநாள் காலை அந்த அணியில் ஒருவர்,தான் உடல் முழுவதும் கட்டுக்களுடனும் மிகுத்த வலியுடனும் ஒரு மருத்துவ மனையில் இருந்ததை உணர்ந்தார்.அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.அப்போது அதே அணியில் விளையாடிய அவரது நண்பர் அவரைப் பார்க்க வந்தார்.அவரிடம் விபரம் கேட்க,அவர் சொன்னார்,''நீ அளவுக்கு மீறிய போதையில் பத்தாவது மாடியிலிருந்து கீழே பறக்கப் போவதாகச் சொல்லி குதித்துவிட்டாய்.உடனே எல்லோரும் சேர்ந்து உன்னை மருத்துவ மனைக்குக் கொண்டு வந்தோம்.''உடனே அவர் மிகுந்த வருத்தத்துடன்,''அடப் பாவி,நான் போதையில் குதிக்கப் போகிறேன் என்று சொன்னால்,நீ என்னை தடுத்து நிறுத்தியிருக்கக் கூடாதா?''என்று நண்பரைக் கேட்டார்.நண்பரும் அமைதியாகப் பதில் சொன்னார்,'நானும் போதையில் இருந்தேனா?அதனால் நீ பறந்து விடுவாய் என்று நம்பி விட்டேன்.''
No comments:
Post a Comment