உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Saturday, March 5, 2011
கிரிக்கெட்
இரண்டு வயதானவர்கள் பொழுது போகாமல் பேசிக் கொண்டிருந்தனர்.அவர்கள் இருவரும் இளவயதில் கிரிக்கெட் விளையாடியவர்கள்.அப்போது ஒருவர் கேட்டார்,''சொர்க்கத்தில் கிரிக்கெட் விளையாடுவார்களா?''அடுத்தவருக்கு பதில் தெரியவில்லை.அப்போது யார் முதலில் இறந்தாலும்,இதுபற்றி அடுத்தவரின் கனவில் வந்து சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.சில நாட்களில் ஒருவர் இறந்து விட்டார்.அடுத்தவரின் கனவில் வந்து அவர் சொன்னார்,''ஒரு நல்ல செய்தி,இங்கு கிரிக்கெட் தினசரி விளையாடுகிறார்கள்.ஒரு கெட்டசெய்தி,நாளைய கிரிக்கெட் விளையாட்டில்உன் பெயரும் சேர்க்கப் பட்டுள்ளது.''
No comments:
Post a Comment