உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Monday, February 28, 2011
ஏற்பாடு
சந்நியாசி ஒருவரைத் தேடி இளைஞன் ஒருவன் வந்தான்.சந்நியாசி அவனைக் கேட்டார்,''இந்த வயதில் ஒரு சந்நியாசியைத் தேடி வர வேண்டிய அளவுக்கு உனக்கு என்ன பிரச்சினை அப்பா?''இளைஞன் சொன்னான்,''நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்.நாளை என் கல்லூரியில் ஒரு மாறு வேடப் போட்டி நடக்கவிருக்கிறது.அதில் சந்நியாசி வேடம் போடலாமென நினைத்து உங்கள் உடைகளை இரவல் வாங்கிச் செல்லலாம் என வந்தேன்.''சந்நியாசி உடனே சொன்னார்,''உடைகள் மட்டும் என்ன?என் தாடியையும் தருகிறேன்.''என்று சொல்லிக்கொண்டே தாடியையும் உருவினார்.அவர் வேறு யாருமல்ல.அந்த இளைஞனின் நண்பன் தான்.தான் சந்நியாசி வேடம் போட யாரிடமோ அந்த உடைகளை வாங்கிப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான்.
No comments:
Post a Comment