வேத காலத்திலேயே நாத்தீகவாதமும் இருந்துள்ளது.பூர்வ மீமாம்சையை இயற்றிய ஜைமினி சொல்கிறார்,''வேதத்தில் குறிப்பிட்டுள்ள கர்மாக்களைசெய்தால் போதும்.அதற்கான பலனை அடைந்து விடலாம்.இப்பலனை அடைய தெய்வ அருள் தேவையில்லை.நாம் ஒரு காரியத்தை ஒழுங்காகச் செய்தாலே அதன் பலன் கிடைத்துவிடும்.தெய்வத்தின் தலையீடு தேவையில்லை.தெய்வம் பற்றிய சிந்தனையே தேவையற்றது.இவ்வுலகம் எப்போதும் உள்ளது.நேற்று இருந்தது.இன்று உள்ளது.நாளையும் இருக்கும்.உலகம் ஏற்கனவே இல்லையென்றால் தானே அதை ஒருவர் உருவாக்கியிருக்க முடியும்?ஆகவே கடவுள் உலகை உருவாக்கினார் என்பது தேவையற்ற வாதம்.நீ உனது கடமையை செய்.பலனைப் பெறுவாய்.அதுவே போதும்.''
சார்வாகர் என்பவர் முழுக்க நாத்திக வாதம் பேசுகிறார்.''உடலானது இந்திரியங்கள் மூலமாக இயங்குகிறது.உலகும் அதில் உள்ள அனைத்தும் இயற்கையாய்த் தோன்றுகின்றன.அவற்றைப் படைக்க ஒரு இறைவன் தேவையில்லை.நன்றாக சாப்பிட்டு,தூங்கி முடிந்த வரை வாழ்வின் அத்தனை இன்பங்களையும் அடைந்து விடவேண்டும்.கடவுள் வழிபாடு, சடங்குகள்,ஒழுக்கங்கள் அவசியம் இல்லாதவை.தீ சுடுவதும்,நீர் குளிர்ந்திருப்பதும் இயற்கைத் தன்மையால்;கடவுளால் அல்ல.மோட்சம்,சொர்க்கம்,ஆன்மா,பரலோகம் என்பவை கட்டுக் கதைகள்.வேதங்கள்,வேள்வி கற்றவரின் வயிற்றுப்பாட்டிற்காக ஏற்பட்டவை.''
No comments:
Post a Comment