உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Wednesday, January 19, 2011
வீண் செலவு
மரணப் படுக்கையில் தந்தை. சுற்றிலும் அவருடைய மூன்று பையன்கள். மூத்தவன் சொன்னான்,''அப்பா இறந்ததும்,மிகப் பிரமாதமாகச் செலவு செய்து அடக்கம் செய்ய வேண்டும்,''இரண்டாம் மகன் சொன்னான்,''ரொம்ப ஆடம்பரம் வேண்டாம்.சுமாராகச் செய்யலாம்.''மூன்றாம் மகன் சொன்னான்,''அப்பாவே இறந்த பின் வீண் செலவு எதற்கு? சிக்கனமாகச் செய்யலாம்.''மரணப் படுக்கையிலிருந்த தந்தை சிரமப்பட்டுப் பேசினார்,''பிள்ளைகளே,கட்டிலுக்கு அடியில் என் கைத்தடி இருக்கிறது.அதை எடுத்துக் கொடுத்தீர்களேயானால் நான் மெது மெதுவே நடந்து சுடு காட்டிற்குச் சென்று விடுவேன்.அங்கு சென்றதும் நான் இறந்து விடுவேன்.உடனே செலவு ஏதும் இன்றி நீங்கள் அடக்கம் செய்யலாம்.''
No comments:
Post a Comment