உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Monday, January 10, 2011
யார் காசு?
பிச்சைக்காரன் கேட்டான்,''ஏன் சாமி, முன்னாள் பத்து ரூபாய் பிச்சை போட்டுக் கொண்டிருந்தீர்கள்.அதன் பின் ஐந்து ரூபாய் பிச்சை போட்டீர்கள்.இன்று ஒரு ரூபாய் போடுகிறீர்களே?அது ஏன்?''இளைஞன் சொன்னான்,'திருமணமாகும் முன் என் விருப்பத்திற்குச் செலவு செய்தேன்.அப்போது பத்து ரூபாய் போட்டேன்.திருமணம் ஆனவுடன் செலவு அதிகம் ஆனது.ஐந்து ரூபாய் போட்டேன்.நேற்று எனக்கு ஒரு குழந்தை பிறந்தது.குடும்பம் நடத்தப் பணம் வேண்டும் இல்லையா?அது தான் ஒரு ரூபாய் போடுகிறேன்.'பிச்சைக்காரன் சொன்னான்,''ஏன் சாமி,என் காசை வைத்துக் குடும்பம் நடத்துகிறாயே,உனக்கு வெட்கமாக இல்லை?''
No comments:
Post a Comment