உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Monday, January 10, 2011
இறந்தவன்
ஒரு மனிதன் தான் இறந்து விட்டதாகக் கருதினான்.அவனை ஒரு மனோவைத்தியரிடம் அழைத்துச்சென்றனர்.அவரும் அவன் உயிரோடு தான் இருக்கிறான் என்பதைப் பல வகையிலும் விளக்கினார்.ஆனால் அவன் ஏற்றுக்க கொள்வதாக இல்லை.தான் சொன்னதையே திரும்பச் சொன்னான்.இறுதி முயற்சியாக டாக்டர் அவனிடம் கேட்டார்,''இறந்தவனுக்கு இரத்தம் வருமா?''அவன் சொன்னான்,'கண்டிப்பாக வராது.'டாக்டருக்கு நம்பிக்கை வந்து விட்டது.ஒரு ஊசியை எடுத்து அவன் விரலில் குத்தினார்.உடனே இரத்தம் கொப்பளித்து வந்தது.டாக்டர் பெருமிதத்துடன் அவனிடம்,'' பார்,உன் விரலிலிருந்து இரத்தம் வருகிறது.இப்போது என்ன சொல்கிறாய்?''அவன் சொன்னான்,''நீங்கள் ஒரு தலை சிறந்த மனோ வைத்தியர் என்று கேள்விப்பட்டேன்.அது உண்மைதான் என்பதை இப்போது புரிந்து கொண்டேன்.நான் சொன்னதைத் தவறு என்று நிரூபித்து விட்டீர்கள்.நான் உங்களிடமிருந்து தெரிந்து கொண்டேன்,இறந்தவனுக்கும் இரத்தம் வரும் என்பதை.''டாக்டர் மயங்கி விழுந்து விட்டார்.
No comments:
Post a Comment