உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Saturday, January 8, 2011
பெறுமானம்
இல்லற ஞானி ஒருவர் இருந்தார்.ஒரு நாள் அவர் மனைவி கோவிலுக்குச் சென்றிருந்த பொது ஒரு பிச்சைக்காரன் வந்து பிச்சை கேட்டான்.அவர் வீட்டினுள் சென்று பார்த்ததில் உணவுப் பொருட்களோ அரிசியோ எதுவும் இல்லை.ஆனால் அவர் மனைவி ஒரு தங்க நகையை பார்வையில் படும் இடத்தில் வைத்திருந்தார்.அவர் உடனே அதை எடுத்து பிச்சைக்காரனுக்குப் போட்டு விட்டார்.அவன் மகிழ்ச்சியுடன் சென்ற சிறிது நேரம் கழித்து அவர் மனைவி வீட்டுக்கு வந்தவுடன் நடந்த விபரத்தைக் கூறினார்.அவர் மனைவி உடனே,''ஐயையோ!அது இருபது ஆயிரம் பெறுமான நகை.அதைப் போய் பிச்சைக்காரனுக்குப் போட்டிருக்கிறீர்களே!உடனே ஓடிப் போய் வாங்கி வாருங்கள்.''என்றார்.அவர் உடனே ஓட்டமாய் ஓடி அந்தப் பிச்சைக்காரனைக் கண்டு பிடித்துச் சொன்னார்,'அப்பா,நான் தெரியாமல் போட்ட அந்த நகை இருபது ஆயிரம் ரூபாய் பெறுமாம்.தயவு செய்து அந்தத் தொகைக்குக் குறைவாக யாருக்கும் விற்று விடாதே.'
No comments:
Post a Comment