ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் இயற்கை சூழல் மாசு அதிகரித்து வருவதுதான். அதுமட்டுமின்றி, இயந்திரத்தனமான வாழ்க்கையும் ஒரு காரணம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். சுகாதாரமற்ற சூழலுக்கு சுகாதாரத்துடன் விளங்கும் ஒரு பொருள் வெளிப்படுத்தும் எதிர் விளைவே ஒவ்வாமை. ஆற்றல் மிகுந்த ஒவ்வாத பொருள் உடலுக்குள் ழையும் நிலையில், அது குறித்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தி உடனடியாக உஷார் அடைகிறது. இதன் விளைவாக தொடர் தும்மல், மூக்கு மற்றும் கண்ணில் நீர் வடிதல், தோலில் தடிப்பு என ஒவ்வொருவரின் உடல் தன்மைக்கு தகுந்தாற்போல் அறிகுறிகள் வெளிப்படுகின்றன. பரம்பரைத் தன்மை காரணமாக ஒருவருக்கு ஒவ்வாமை பிரச்சினை ஏற்படலாம். எனினும் பொதுவாக சுகாதாரமற்ற சுற்றுச்சூழல் தூண்டுதல் காரணமாகவே பெரும்பாலும் ஒவ்வாமை ஏற்படுகிறது. உதாரணமாக சிகரெட் புகை, வேதிப் பொருள்கள், குளிர் காற்று உள்பட தட்பவெப்ப நிலையில் திடீர் மாற்றம், கடுமையான துர்நாற்றம், மன அழுத்தம் என பல்வேறு காரணங்களால் `ரைனிட்டிஸ்' எனப்படும் மூக்குப் பாதை திரவ படலத்தில் வீக்கம் ஏற்பட்டு ஒவ்வாமை ஏற்படும். YOGANANDHAN GANESAN |
உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
No comments:
Post a Comment