Tuesday, September 14, 2010

இது நான் எழதியது அல்ல..


இது நான் எழதியது அல்ல..
ஒரு நிலவே எழுதி அனுப்பியது..:)

என்னவ(ள்)ன்

வெட்கப்படச் செய்பவ(ள்)ன்
வெற்றிக்கு உதவுபவ(ள்)ன்
பக்கபலமாய் என்னோடு
பவனி வருபவ(ள்)ன்

என்னை மட்டுமே
இதயத்தில் கொண்டவ(ள்)ன்
எதிர்பாலர் யாரையும்
ஏறெடுத்தும் பார்க்காதவ(ள்)ன்

சொக்கத் தங்கமாய் ஜொலிப்பவ(ள்)ன்
தன்னை எனக்காகத்
தயங்காது தருபவ(ள்)ன்
தரணியில் யார் உளர்?

வலைவீசித் தேடா விடினும்
இவ்வலையில் தேடலாமோ
தலையில் நரை காணும் முன்
இதயச் சிறையில்
அவ(ளை)னைப் பிடிக்க வேண்டும்.

கிடைப்பா(ளா)னா இந்நாளில்
இப்படி  ஆனவ(ள்)ன்?
அடிப்படை ஆசையே எனக்கிங்கு
அதிகமாகிப் போனதோ?

இதிகாச ராமனும் சீதையும்
இக்கலியில் நம்முருவில்
இனி காணல் ஐயமோ?

காதலாகிக் கசிந்து
கண்ணீர் மல்கிறேன்
யாதுமாகி நிற்பவ(ள்)ன் போல்
எனக்கொருவ(ள்)ன்
கிடைப்பா(ளோ)னோ?

     -நிலவு


 

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .


No comments:

Post a Comment