உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Thursday, July 15, 2010
நல்ல முடிவு
ஒரு இளைஞனுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு ஒன்று வந்தது.அந்த வேலை மக்கள் நலனுக்கு உகந்தது அல்ல என்ற காரணத்தால் அவனுக்கு அந்த வேலையை ஏற்பதில் குழப்பம் ஏற்பட்டது.முடிவு சொல்ல ஒரு நாள் அவகாசம் கேட்டுவிட்டு தன் தாயிடம் கருத்துக் கேட்கச் சென்றான்.தாய் படிப்பு அறிவு இல்லாதவள்.அவன் சொன்ன முழு விபரங்களையும் கேட்டு விட்டு அவள் சொன்னாள்,''நீ சொன்ன விஷயங்கள் எதுவும் எனக்குப் புரியவில்லை.அனால் ஒன்று மட்டும் என்னால் சொல்ல முடியும்.ஒவ்வொரு நாள் காலையிலும் உன்னை நான் தூக்கத்திலிருந்து எழுப்ப வரும் போது நீ நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருப்பாய்.உன்னை எழுப்புவது பெரும்பாடு.அந்த நிலை தொடர வேண்டும்.நான் எழுப்ப வரும் போது நீ உறங்காமல் விழித்துக் கொண்டிருப்பதைக் காணநான் சகித்துக் கொள்ள . மாட்டேன்.இறுதி முடிவு எடுக்க வேண்டியது நீ தான்,''இதைச் சொல்லிவிட்டு தாய் அங்கிருந்து வெளியேறினாள்.இளைஞன் தனக்குள் சொல்லிக் கொண்டான்,'எனக்கு நல்ல முடிவு கிடைத்துவிட்டது.'
Wednesday, July 14, 2010
சுமை
நீங்கள் உங்கள் அன்பைக் கூட ஒரு சுமையாக மாற்றிவிட்டால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.உங்கள் காதலைக் கூட சுமையாக மாற்றிவிட்டால்,உங்கள் பிரார்த்தனையும் சுமையாகிவிடும்.உங்களுக்கு அன்பு இருந்தால் நீங்கள் எங்கே இருந்தாலும் அது சுமை இல்லை.நீங்கள் உங்கள் பிள்ளைகளை விட்டுப் பிரிந்திருந்தாலும்கூட அவர்கள் உங்கள் அன்பைப் புரிந்து கொள்வார்கள்.அவர்களை நேசிக்காமல் அவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தாலும் அதுபொய்யான விஷயம் என்பது அவர்களுக்குப் புரிந்துவிடும்.சிலர்,''நான் வாழ் நாள் முழுவதும் உழைத்துவிட்டேன்,ஆனால் ஒருவரும் நன்றியுடன் இல்லை,''என்பார்கள்.எப்படி இருப்பார்கள்?நீங்கள் அவர்களை ஒரு பாரம்போல சுமந்து வந்தீர்கள்.நீங்கள் அன்போடு செய்வதையும்,கடனுக்கு செய்வதையும் சிறு குழந்தை கூடப் புரிந்து கொள்ளும்.கடமை என்ற வார்த்தையே அசிங்கமானது.வன்முறையானது.அது உங்கள் கவலையை,அக்கறையைக் காட்டுகிறது.ஆனால் உங்கள் இயல்பை,தன்னிச்சையான தனமையைக் காட்டவில்லை.
செய்த தவறு
செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்தால் கூடப் பிரச்சினை வருமா என்ன?விடிந்தும் விடியாத அரை இருளில் அரண்மனை நந்தவனத்தில் அரசர் உலாவிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கே வந்த அமைச்சர், மன்னரின் பின்புறத்தில் ஒரு தட்டு தட்டினார்.இருளில் கூர்ந்து கவனித்து,தட்டியது அமைச்சர் என்பதை அறிந்து கொண்ட மன்னர்,''என்னையே பின்னால் தட்டும் அளவிற்கு உமக்குத் தைரியம் வந்து விட்டதா?''என்று கேட்டார்.அமைச்சர் சொன்னார்,'மன்னிக்க வேண்டும்,மன்னரே,நான் இருளில் சரியாகக் கவனிக்கவில்லை.மகாராணி தான்உலாவிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து விட்டேன்.'அமைச்சரின் கதி என்ன ஆயிற்றோ!
ஓவியன்
அவன் பெண்களை நிர்வாணமாக வரையும் ஓவியன்.ஒரு நாள் வழக்கம் போல மாடல் பெண், உடைகளைக் களைய ஆரம்பித்தபோது அவன் சொன்னான்,''இன்று எனக்குத் தலைவலி.நான் ஓவியம் வரையப் போவதில்லை.சூடாகக் காபி மட்டும் போட்டுக் கொண்டு வா.''
காபி தயாரானதும் இருவரும் அருகருகே அமர்ந்து அருந்த ஆரம்பித்தனர்.அந்த நேரம் ஓவியரின் மனைவி வரும் ஓசை கேட்டது. ஓவியன் உடனே பதட்டத்துடன்,''சரி,சரி,உடைகளைக் களைந்து விட்டு போஸ் கொடு.என் மனைவி இப்போதிருக்கும் நிலையில் நம்மைப் பார்த்தால் சந்தேகப் படுவாள்.''என்றான்.

Tuesday, July 13, 2010
கிணறா?
விஜயன் ஆபீசுக்குப் போன சிறிது நேரத்தில் வீட்டிற்கு போன் செய்தான்.வேறு பெண் குரல் கேட்டது.யார் பேசுவது என்று கேட்க புது வேலைக்காரி என்று பதில் வந்தது.
விஜயன் :சரி,சரி,அம்மா எங்கே?
வேலைக்காரி:யாரோ ஒருவர் கல்லூரி மாணவர் போல வந்தார்.அவர் தோல் மேல் கையைப் போட்டுக்கொண்டு படுக்கை அறைக்குப் போனார்கள்.
விஜயன்:ஒரு காரியம் செய் .உனக்கு லட்சம் ரூபாய் தருகிறேன்.
வேலைக்காரி:என்னங்க செய்யணும்?
விஜயன் :மேஜை டிராயரில் ஒரு துப்பாக்கி இருக்கும்.அதை எடுத்துக் கொண்டு போய் இருவரையும் குருவியைச் சுடுவது போலச்சுடு.
வேலைக்காரி: ஐயோ,எனக்கு சுடத் தெரியாதே?
விஜயன் :ரொம்ப சுலபம்.துப்பாக்கியின் கீழ் பகுதியில் ஒரு நாக்கு இருக்கும்.அதை இழு,படபடவெனக் குண்டு பாயும்.செய்வாயா?
வேலைக்காரி :சரிங்க...(சிறிது நேரம் கழித்து) ஐயா,ஐயா,சுட்டுட்டேனுங்க.இரண்டு பெரும் இறந்துட்டாங்க.இப்போ இரண்டு உடலையும் என்ன செய்வது?
\விஜயன் :சபாஷ்!நம் வீட்டின் பின் பக்கக் கிணற்றில் போட்டு விடு.
வேலைக்காரி :கிணறா?நம் வீடு நாலாவது மாடி பிளாட்டாச்சே?
விஜயன் :என்னது?இந்த வீட்டு போன் நம்பர் 847002 இல்லையா?

Sunday, July 11, 2010
குடும்ப ரகசியம்
ஆப்கானிஷ்தானத்தின் அரசன் ஒரு போருக்கு தயார் செய்து கொண்டிருந்தான்.தனக்கு மிகக் கூர்மையான கத்தி ஒன்று செய்யச் சொல்லி ஆணையிட்டான்.ஒருவன் ஒரு கத்தியைக் கொண்டு வந்து காட்டி,'வானத்தில் ஒரு முடியை எறிந்து அது இறங்கும் போது இக்கத்தியால் அதை இரண்டாக வெட்ட முடியும் என்று கூறி அதை செயல் படுத்திக் காட்டினனான்.அரசனுக்கு திருப்தி.அப்போது அங்கு அருகிலிருந்த ஒரு கண் பார்வையற்றவர்,'இது போருக்குப் பயனற்றது,'என்றார்.அரசன்,''நீயார்?இது பயனற்றது என்று உனக்கு எப்படித் தெரியும்?''என்று கேட்டான்.'இந்த கத்தி கொண்டு வரப்படும் போது தற்செயலாக என்னை உரசிச் சென்றது.உடனே இது உடையக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டேன்.'என்று பார்வையற்றவர் சொன்னார்.அரசன் அதை சோதித்துப் பார்க்கையில் அது உடைந்து விட்டது.''நல்ல வேலை என்னைக் காப்பாற்றினாய்.இந்தக் கத்தியை வைத்து நான் போரிட்டிருந்தால் நன் உயிரோடு திரும்பியிருக்க முடியாது.சரி,நீ சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாய்?''என்று அரசன் கேட்க பார்வையற்றவரும் தான் பிச்சை எடுப்பதாகக் கூறினார்.உடனே அரசன்,''நாளையிலிருந்து சாப்பாட்டு நேரத்தில் அரண்மனைக்கு வா.உனக்கு இரண்டு சப்பாத்தி கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்,''என்று கூற பார்வையற்றவரும் நன்றி கூறிச் சென்று விட்டார்.
பின் போரில் அரசன் வெற்றி பெற்று வந்தான்.அந்த நாட்டிலேயே பெரிய பணக்காரனின் அழகான பெண்ணைத் திருமணம் செய்ய முடிவு செய்தான்.திருமணத்தின் போது அந்தப் பார்வையற்ற பிச்சைக்காரனையும் பார்த்தான்.அவரைத் தனியே அழைத்து,'' ,''இந்தத் திருமணம் பற்றி என்ன நினைக்கிறாய்?''என்று கேட்டான்.அவரும்,'சில நாட்களுக்கு முன் நான் அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது அங்கிருந்த காவலர்கள் என்னை விரட்டினார்கள்.ஆனால் இந்தப் பெண் என்னை தோளைப் பிடித்து அழைத்துச் சென்று எனக்கு சாப்பாடு கொடுக்க ஏற்பாடு செய்தாள்.என்னைத் தொட்டபோது அவளைப் பற்றி என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.அவள் உனக்கு நல்ல மனைவியாக இருப்பாள்.அவள் உங்களுக்கு மட்டுமே ஏற்றவள்.வேறு எந்த அரசருக்கும் ஏற்றவளாக இருக்க முடியாது.'என்றார்.அரசனும் அவன் மனைவியும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.
சில மாதங்களுக்குப் பின் அந்த பார்வையற்றவரை அழைத்து வரச் சொல்லி,அவரிடம்,''அன்று என் மனைவி எனக்கு மட்டுமே பொருத்தமானவள் என்று சொன்னாயே,அது பற்றி விபரமாகச் சொல்,''என்றான்.'தங்கள் மனைவி சிறந்த பெண்;ஆனால் அவள் பணக்கார வீட்டுப்பெண் அல்ல.அவளுடைய தந்தை ஒரு சாதாரண நெசவாளி.'என்ற பதில் வந்தது.அரசனுக்கு அதிர்ச்சி.தீவிர விசாரணையில் அவன் மனைவி ஒரு நெசவாளியின் பெண் என்பதும் பணக்காரரால் ஸ்வீகாரம் எடுக்கப்பட்டவள் என்பதும் தெரிய வந்தது.
அரசன் மீண்டும் பார்வையற்றவரை வரவழைத்து,''என் மனைவி எனக்கு மட்டுமே பொருத்தமானவள் என்றும் வேறு யாருக்கும் பொருத்தமாக மாட்டாள் என்றும் சொன்னதற்குக் காரணம் என்ன?''என்று கேட்டார்.'நீங்களும் அரச குடும்பத்தில் வந்தவரல்ல.உங்கள் தந்தை ஒரு சாதாரண வியாபாரி,''என்றார்.அரசனுக்கு மீண்டும் அதிர்ச்சி.ரகசியமாய் விசாரித்ததில் அது உண்மை என்பது தெரிந்தது.அவன் பார்வையற்றவரிடம்,''இதுவரை நீ சொன்னதெல்லாம் உன் தொடு உணர்ச்சியினால் தான்.ஆனால் என்னை இதுவரை என்னைத் தொட்டதில்லை.எப்படி என்னைப் பற்றி சரியாகச் சொன்னாய்?''என்று கேட்டார்.'நம்முடைய வார்த்தைகளும் செயல்களும் நம்மைக் காட்டிக் கொடுத்து விடும்.நான் தங்கள் உயிரைக் காப்பாற்றினேன்.அதற்கு எனக்கு என்ன பரிசு?தினமும் இரண்டு சப்பாத்தி.அரச பரம்பரையில் வந்த ஒருவரானால், உயிரைக் காப்பாற்றியதற்கு மிகப் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டிருப்பார்.அதனால் நீங்கள் அரச குடும்பத்தில் பிறந்திருக்கமுடியாது;ஒரு வியாபாரியின் பையனாகத் தான் இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்.'என்று விளக்கினார் அந்த பார்வையற்றவர்.

Saturday, July 10, 2010
தெளிவு
ஒரு நிறுவனத்தில் ஓய்வூதியத் திட்டம் ஒன்றை செயல் படுத்த நினைத்தனர்.இந்தத் திட்டத்தை செயல் படுத்த அனைத்து தொழிலாளர்களின் சம்மதமும் வேண்டும்.சம்மதம் தெரிவித்து ஜான் தவிர மற்ற அனைவரும் கையெழுத்திட்டு விட்டனர்.அது ஒரு நல்ல திட்டம்.ஆனால் ஜான் கையெழுத்து இடாததால் செயல் படுத்த முடியவில்லை.
அவனது சக நண்பர்களும்,மேற்பார்வையாளரும்,மேலாளரும் விளக்கிக் கூறியும் ஜான் ஏற்றுக் கொள்ளவில்லை.முதலாளிக்குத் தகவல் தெரிந்ததும் ஜானை அவர் அறைக்கு வரச்செய்து,''ஜான்,இதோ பேனா.ஓய்வூதியத் திட்டத்திற்கான இந்தத் தாள்களில் கையெழுத்திடு.நீ மறுத்தால் உன்னை வேலையை விட்டு நீக்க வேண்டியிருக்கும்.''என்றார்.ஜான் உடனே கையெழுத்திட்டான்.முதலாளி,ஏன் முதலில் கையெழுத்தப் போடவில்லை என்று கேட்டார்.ஜான் சொன்னான்,''இந்தத் திட்டத்தைப் பற்றி தங்களைப் போல யாரும் விளக்கமாகச் சொல்லவில்லை,முதலாளி.''என்றான்.

Friday, July 9, 2010
வேலைக்காரன்
ஆப்பிரிக்காவில் ஒரு கர்வம் மிகுந்த அரசன் இருந்தான்.ஒரு நாள் அரசவையில் அங்கிருந்த அனைவரையும் பார்த்து,''நான் தான் உலகின் அதிபதி.எல்லா மனிதரும் எனக்கு வேலைக்காரகளே,''என்றான்.'நீங்கள் சொல்வது தவறு.அனைவரும் ஒருவருக்கொருவர் வேலைக்காரர்களே,'என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.அனைவருக்கும் அதிர்ச்சி.அரசன் கோபத்தில் வெடித்தான்,''என்னையும் வேலைக்காரன் என்று சொன்னது யார்?''கம்பை ஊன்றியபடி ஒரு வயதான மனிதன் முன்னால் வந்து,'நான்தான் சொன்னேன்.'என்றான்.நீயார் என்று அரசன் கேட்க,முதியவர் சொன்னார்,'நான் ஒரு கிராமத்திலிருந்து வந்திருக்கிறேன்.எங்கள் கிராமத்தில் தண்ணீர் வசதி இல்லை.ஒரு கிணறு தோண்ட வேண்டும் என்று தங்களைக் கேட்டுக் கொள்ளவே இங்குவந்தேன்,'உடனே அரசன் ஏளனத்துடன் சொன்னான்,''அப்படியானால்,நீயே பிச்சை கேட்க வந்திருக்கிறாய்.ஆனால் என்னையும் வேலைக்காரன் என்று சொல்லும் அளவுக்கு உனக்குத் திமிர்.''கிழவன் பயம் ஏதுமின்றி மீண்டும் சொன்னான்,'நாம் ஒருவருக்கொருவர் வேலை செய்கிறோம்.அதை என்னால் இப்போதே நிரூபிக்க முடியும்.'அரசன் சொன்னான்,''நீ மட்டும் அதை நிரூபித்து விட்டால் உன் ஊரில் ஒன்றல்ல,மூன்று கிணறு தோண்ட ஏற்பாடு செய்கிறேன்.''கிழவன் அமைதியாக''எங்கள் ஊரில் ஒரு பழக்கம் இருக்கிறது.ஒருவரின் சவாலை ஏற்றுக்கொள்ளும் போது,சவால் விட்டவரின் பாதத்தைத் தொட்டு வணங்க வேண்டும்.உங்கள் பாதத்தைத் தொட அனுமதியுங்கள்.''என்று கூறி அரசன் அனுமதித்ததும்,'இந்த ஊன்றுகோலை ஒரு நிமிடம் பிடியுங்கள்,'என்று கூற அரசனும் அதை வாங்கிக் கையில் வைத்துக் கொண்டான்.அரசனின் காலை வணங்கிவிட்டு,'இப்போது ஊன்று கோலைத் திரும்பக் கொடுங்கள்,'என்று சொல்ல அரசனும் அதைத் திரும்பக் கொடுத்தான்.உடனே கிழவன்,'இதைவிட என்னநிரூபணம் வேண்டும்?'என்று கேட்டான்.''என்ன நிரூபித்தாய்?''என்று அரசன் கேட்டான்.'இந்த ஊன்று கோலைப் பிடியுங்கள் என்றேன்.உடனே பிடித்துக் கொண்டீர்கள்.திரும்பக் கொடுங்கள் என்றேன்.உடனே திரும்பக் கொடுத்து விட்டீர்கள் .நான் சொன்ன மாதிரி நல்ல மனிதர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வேலைக்காரர்களே,'என்றான் கிழவன்.அரசன் மிக்க மகிழ்ச்சியுடன் கிழவனின் ஊரில் மூன்று கிணறு தோண்ட ஆணையிட்டதோடு கிழவனையும் தன் ஆலோசகராக வைத்துக் கொண்டான்.
Wednesday, July 7, 2010
வினோத ஒலி
ஒரு மனிதன் தன காரில்சென்று கொண்டிருக்கும் போது,இருட்டிவிட்டதால் அருகிலிருந்த புத்த மடாலயத்திற்கு சென்று இரவை அங்கு கழிக்கலாம் என்று கருதி,அங்கிருந்த புத்த பிக்குவை அணுகினான்.அவரும் அவனுக்கு நல்ல உணவளித்தார்.ஒரு நல்ல படுக்கை கொடுத்ததும் அவன் அலுப்பில் உடனே தூங்கி விட்டான்.நள்ளிரவில் ஒரு சப்தம் கேட்டதும் விழித்துக் கொண்டான்.அந்த சப்தம் அவனுடைய முதுகுத் தண்டை உறைய வைப்பதாக இருந்தது.சிறிது நேரம் கழித்து அந்த சப்தம் நின்று விட்டது.அதன் பின் அவனுக்கு தூக்கம் வரவில்லை.காலை எழுந்ததும்,அங்கிருந்த புத்த பிக்குகளிடம் அந்த வினோத ஒலி பற்றிக் கேட்டான்.அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.ஒருவர் சொன்னார்,''நீங்கள் ஒரு புத்த பிக்கு இல்லை.எனவேஅது பற்றி உங்களுக்கு சொல்ல முடியாது.''அந்த மனிதன் பின் அவர்களிடம் விடை பெற்றான்.சிலஆண்டுகள் கழித்து அவன் அந்தப் பக்கம் வந்த போது அதே மடாலயத்தில் தங்க முடிவு செய்தான்.புத்த பிக்குகளும் அவனுக்கு உணவளித்து,படுக்கையும் கொடுத்தனர்.அன்று இரவும் அவனுக்கு அந்த வினோத ஒலி கேட்டது.முதுகுத்தண்டு சில்லிட்டது.அவனால் தூங்க முடியவில்லை.காலை எழுந்ததும்புத்த பிக்குகளிடம் அந்த வினோத ஒலி பற்றிக் கூறக் கெஞ்சினான்.அவர்கள் இம்முறையும்,''நீங்கள் ஒரு புத்த பிக்கு இல்லை.எனவே அது பற்றி உங்களுக்குச் சொல்ல முடியாது,''என்றனர்.அவனுக்கு பைத்தியம் பிடித்து விடும் போல இருந்தது.''இந்த உண்மை தெரிய நான் புத்த பிக்குவாக வேண்டுமானால் அதற்கும் நான் தயார்.நான் என்ன செய்ய வேண்டும்?''என்று அவர்களிடம் அவன்கேட்டான்.
'' உன் உடமைகள் அனைத்தையும் துறந்து வா,''என்றனர் பிக்குகள். அவனும் அனைத்தையும் துறந்து அங்கு வர,அவனுக்குபிக்குகளுக்கானஉடையைக் கொடுத்தனர். ''இப்பொழுதாவது எனக்கு அந்த வினோத ஒலி பற்றிச் சொல்லுங்களேன்,''என்று அவர்களிடம் கேட்டான்.அவர்களும் ஒரு கதவைக் காட்டி,அதைத் திறந்து பார்த்துத் தெரிந்து கொள்ளச் சொல்லினர்.அவன் வேகமாய்ப் போய் அந்தக் கதவைத் திறந்தான்.உள்ளே ஒரு கல் கதவு இருந்தது.அதைத் திறக்க,அதனுள் இரும்புக் கதவு இருந்தது.அதையும் திறந்தால்,அதனுள் ஒரு வெள்ளிக் கதவு இருந்தது.அதையும் திறந்து உள்ளே பார்த்தபோது ஒலி எங்கிருந்து வந்தது என்பது அவனுக்குத் தெரிந்தது.அதைப் பார்த்ததும் அவனுக்குப் பயம் வந்து விட்டது.அவன் அலறி ,ஓட முயற்சி செய்த போது பயத்தில் அவனால் அங்கிருந்து நகர முடியவில்லை.'அவன் அங்கு என்ன பார்த்தான்? அந்த ஒலி எங்கிருந்து வந்தது?என்று கேட்கிறீர்களா?மன்னிக்கவும்.நீங்கள் ஒரு புத்தபிக்கு இல்லை.எனவே அது பற்றி உங்களுக்குச் சொல்ல முடியாது.'

உண்மையான பக்தி
ஒருகண் பார்வை இல்லாதவர் கோவிலுக்கு வந்தார்.பூசாரி கேட்டார்,''ஐயா,உங்களுக்குத்தான் கண் தெரியாதே?மலை ஏறி வரிசையில் நின்று இவ்வளவு சிரமப்பட்டு வந்திருக்கிறீர்களே,கடவுளை உங்களால் தரிசிக்கவா முடியும்?''பார்வை அற்றவர் சொன்னார்,''ஐயா,நான் கடவுளை தரிசிப்பதில் அவருக்கு என்ன ஆதாயம்?கடவுள் என்னைப் பார்த்தால் போதும்.என் கஷ்டங்கள் எல்லாம் ஓடிவிடும் என்று நம்பித்தான் வந்திருக்கிறேன்.''
இது தான் உண்மையான பக்தி;உண்மையான ஆர்வம்;உண்மையான நம்பிக்கை.
இது தான் உண்மையான பக்தி;உண்மையான ஆர்வம்;உண்மையான நம்பிக்கை.
Monday, July 5, 2010
மூன்று சகோதரர்கள் .
சீனாவில் மூன்று சகோதரர்கள் இருந்தனர்.மூவருக்கும் அரைகுறைப் பார்வை.ஒரு நாள் இளையவர் சொன்னார்,''மூத்த அண்ணனுக்கு பார்வை மிகவும் மோசம்.எவ்வளவு பணம் கொடுக்கிறோம்,எவ்வளவு பணம் வாங்குகிறோம் என்பது கூடத் தெரிவதில்லை.எனவே இனி நான் பணப் பொறுப்புகளைப் பார்க்கிறேன்.''இரண்டாமவர் சொன்னார்,'உனக்கு மட்டும் கண் பார்வை நன்றாக இருக்கிறதா?நம் மூவரில் எனக்குத் தான் கண் பார்வை நன்றாக இருக்கிறது.எனவே பணப் பொறுப்புகளை இனி நான் பார்ப்பது தான் சரி.' மூத்தவர் சொன்னார்,''எனக்கு உன் பார்வையில்நம்பிக்கை இல்லை.ஒன்று செய்வோம்.நம் ஊர்க் கோவிலில் இன்று இரவு ஒரு கற்பலகை வைக்கப்போகிரார்களாம்.அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை யார் சரியாகப் படிக்கிறார்களோ அவரிடம் நிதிப் பொறுப்பைக் கொடுப்போம்.''மூவரும் ஒத்துக் கொண்டனர்.
சிறிது நேரம் கழித்து மூத்தவர் பிறர் அறியாமல் கோவிலுக்கு சென்று,அங்கிருந்த ஒரு பிக்குவிடம் அன்று இரவு வைக்கப் போகும் பலகையில் என்ன எழுதப் போகிறார்கள் என்ற விபரம் கேட்டார்.பிக்கு,''எப்போதும் நேர்மையுடன் இரு என்ற கன்பூசியஸின் பொன்மொழியை எழுதப் போகிறார்கள்,''என்றார்.தன்
புத்திசாலித்தனத்தை மெச்சிக்கொண்டே அங்கிருந்து அவர் சென்ற சில நிமிடங்களில் இரண்டாமவர் கோவிலுக்கு வந்தார். அவரும் பிக்குவிடம் விபரம் கேட்க அவரும் தான் ஏற்கனவே சொன்னதையே சொன்னார்.'பலகையை சுற்றி ஏதேனும் அலங்காரம் செய்வீர்களா?'என்று அவர் கேட்க பிக்குவும் பொன்மொழியைச் சுற்றி பூக்களை வரையப் போகிறார்கள் என்றார்.மகிழ்ச்சியுடன் இரண்டாவது சகோதரர் வெளியேறினார்.அடுத்து இளையவர் அங்கு வந்து இரண்டாமவர் தெரிந்து கொண்ட விசயங்களுடன் பலகையில் அதைத்தானம் செய்பவரின் பெயரும் பொறிக்கப்படும் என்பதை தெரிந்து கொண்டார்.
மறு நாள் காலை மூன்று பேரும் கோவிலுக்கு சென்றார்கள். ''இதோ இங்கு தான் பலகை வைக்கப்பட்டிருக்கிறது.என்னால் அதைப் படிக்க முடிகிறது.எப்போதும் நேர்மையாய் இரு என்று எழுதப்பட்டிருக்கிறது.''என்றார்.இரண்டாமவர் சொன்னார்,'உன் பார்வை அவ்வளவு தானா?அதைசுற்றி அலங்காரமாகப் பூக்கள் வரையப்பட்டிருப்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது.'மூத்தவருக்கோ திகைப்பு.இளையவர் இப்போது பேசினார்,''பரவாயில்லை.இதில் வேறு ஏதேனும் எழுதப்பட்டிருக்கிறதா?''என்று கேட்க இரண்டாமவர் அதிர்ச்சியுடன் என்ன எழுதியிருக்கிறது என்று கேட்டார்.''இப்பலகையை வைக்க ஏற்பாடு செய்த வாங் லீயின் பெயர் கீழே ஓரத்தில் எழுதப் பட்டிருக்கிறது.'' என்று பெருமையோடு சொன்னார் இளையவர்.அப்போது முதல் நாள் மாலை அவர்கள் பார்த்த பிக்கு அங்கு வந்தார்.இவர்களைப் பார்த்தவுடன்,''ஓ,நீங்கள் பலகையைப் பார்க்க வந்தீர்களா?நேற்று இரவு இங்கு அதை வைக்க முடியவில்லை.இன்று இரவுதான் அந்த வேலை முடியும்.''என்று கூறிச் சென்றார்.

Saturday, July 3, 2010
உன்னைப்போல் ஒருவன்
முல்லாவுக்கு ஒரு பால்கன் பறவை கிடைத்தது.அது புறாவைப் போல இருக்கும்.முல்லா இதற்குமுன் இப்பறவையைப் பார்த்ததில்லை.அவருக்கு இப்பறவையின் அகண்ட தாடையும்,வளைந்த அலகும் அதிக அளவில் இருக்கும் சிறகும் ரசிக்கத் தக்கதாக இல்லை ''என்ன இருந்தாலும் புறாவின் அழகு வருமா?ஏ பறவையே,உன்னையும் புறா போல அழகாக ஆக்குகிறேன்,''என்று கூறிக்கொண்டே,அதிகமாகவுள்ள இறகுகளைப் பிய்த்தெடுத்தார்.வளைந்த அலகை ஒரு சிறு உளி கொண்டு செதுக்கி வளைவைக் குறைத்தார்.ஒரு கத்திரியை எடுத்து அதன் அகண்ட தடையின் அளவைக் குறைக்க முயன்றார்.பின் திருப்தியாக,''இப்போதுதான் நீ புறா போல அழகாக இருக்கிறாய்,''என்றார்.மனிதர்கள் அனைவரும் இப்படித்தான் இருக்கிறோம்.நம்மிடம் இருந்து யாரேனும் ஏதாவது விசயத்தில் மாறுபட்டு இருந்தால்,அது சரியா,தவாறா என்று பார்க்காமல் நம்முடைய கருத்துக்கு ஏற்றார்போல அவர்களையும் மாற்ற முயற்சிக்கிறோம்.பால்கன் பறவையின் அழகை ரசிக்கத்தவறிய முல்லா போல,நாமும் மற்றவர்களிடம் உள்ள நல்ல விசயங்களை ரசிக்கத் தவறி விடுகிறோம்.நம்மிடமிருந்து வித்தியாசமாக இருந்தால் அதை ஒரு தவறாகவே கருதுகிறோம்;அதை நம்மால் பொறுத்தக்கொள்ள முடிவதில்லை.நம் வழிக்கு அனைவரும் வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.இதனால் தான் பிரச்சினைகளே.நம் பால்கன் பறவையை பால்கனாகவே பார்ப்போமே!
Friday, July 2, 2010
வழி கிடைக்கும்
கோபால் சரியான சாப்பாட்டு ராமன்.ஏதாவது விருந்துக்குச் சென்றால் ஒரு பிடி பிடித்துவிடுவான்.அவனைப் பற்றிக் கேள்விப்பட்ட அரசர்,அவன் எவ்வளவு தான் சாப்பிடுகிறான் என்பதை அறிய ஆவல் கொண்டு ஒரு விருந்துக்கு அவனை அழைத்தார்.கோபாலும் மூன்று பேர் சாப்பிடக்கூடிய அளவு சாப்பிட்டு விட்டு ஒரு பெரிய ஏப்பம் விட்டான்.'போதுமா?'என்று அரசர் கேட்டார்.''ஒரு பருக்கை நுழையக்கூட இடம் இல்லை,மகாராஜா!''என்றான் கோபால்.அப்போது ஒரு தட்டில் அருமையான மாம்பழங்களை வெட்டி எடுத்துக் கொண்டு வந்தான் ஒரு சேவகன்.மாம்பழத்தைப் பார்த்ததும் நாக்கில் எச்சில் ஊற,வேகமாகத் தட்டைப் பிடுங்கிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.''என்ன ஆச்சரியம்!இப்போது தான் ஒரு பருக்கை கூட நுழைய இடம் இல்லை என்றாய்.ஆனால் இப்போது மூன்று மாம்பழங்களுக்கு மேல் சாப்பிட்டு விட்டாய்.இதற்கென்ன சொல்கிறாய்?''என்று கேட்டார் மன்னர்.கோபால் சொன்னான், ''இது ஒரு பெரிய விஷயம் இல்லை,மகாராஜா!மகாராஜா பிறந்த நாளன்று கோவிலுக்குப் போகும் போது,அங்கு எள் கூட விழ முடியாத அளவுக்குக் கூட்டம் இருக்கும்.ஆனாலும் தாங்கள் குதிரையில் வரும்போது,மகாராஜா வருகிறார் என்று சொல்லி கூட்டம் வழி கொடுக்கும்.அதுபோல வயிற்றில் இடம் இல்லையென்றாலும் ,பழங்களின் ராஜாவான மாம்பழம் வரும்போது வயிற்றில் இடம் கிடைக்காமலா போய்விடும்?''
டிக்கெட்
மதுரை புகைவண்டி நிலையத்தில் , மூன்று இளைஞர்கள்,மூன்று டிக்கெட் வாங்கிக்கொண்டு சென்னை செல்லும் புகை வண்டியில் ஏறினர்.பின்னாலேயே வேறு மூன்று பேர் ஒரே ஒரு டிக்கெட் மட்டும் வாங்கிக்கொண்டு அவர்கள் ஏறிய அதே பெட்டியில் ஏறியதைப் பார்த்தனர்.அவர்களிடம்,'ஒரு டிக்கெட் வாங்கி,மூன்று பேர் எப்படி பயணம் செய்வீர்கள்?'என்று கேட்டனர்.''பொறுத்திருந்து பாருங்கள்,''என்று பதில் வந்தது.மூன்று டிக்கெட் வாங்கியவர்கள்,இருக்கையில் அமர்ந்தார்கள்.ஒரு டிக்கெட் மட்டும் வாங்கியவர்கள்மூவரும் கழிப்பறை யினுள் சென்று தாழிட்டனர்.சிறிது நேரத்தில் டிக்கெட் பரிசோதகர் வந்து பெட்டியிலிருந்த அனைவரிடமும் பரிசோதித்துவிட்டு,கழிப்பறையின் கதவைத் தட்டினார்.உடனே கதவு லேசாகத் திறந்தது..ஒரு கை ஒருடிக்கெட்டை வெளியே நீட்டியது.பரிசோதகர் வாங்கிப் பார்த்துவிட்டு சென்று விட்டார்.சிறிது நேரம் சென்றபின் மூவரும் கழிப்பறையிலிருந்து வெளிவந்து இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர்.
ஒரு வாரம் கழித்து அந்த மூன்று இளைஞர்களும் மதுரை திரும்ப ரயில் நிலையம் வந்தார்கள். தற்செயலாக,சென்னை வரும்போது உடன் வந்த மூன்று இளைஞர்கள் மதுரை செல்ல டிக்கெட் வாங்க நிற்பதைப் பார்த்தார்கள்.அவர்கள் இம்முறை ஒரு டிக்கெட் மட்டும் வாங்குவதைப் பார்த்தார்கள். இவர்கள் இப்போது ஒரு டிக்கெட்டும் வாங்காமலேயே புகைவண்டியில் ஏறினார்கள்.'ஒரு டிக்கெட் கூட இல்லாமல் எப்படி சமாளிப்பீர்கள்?'என்று இவர்களை அவர்கள் கேட்டார்கள்.அப்போதும்,''பொறுத்திருந்து பாருங்கள்,''என்று பதில் வந்தது.இப்போது ஒரு டிக்கெட் வாங்கிய மூவரும் வேகமாக ஒரு கழிப்பறையில் நுழைந்தனர்.டிக்கெட் ஏதும் வாங்காதவர்கள் வேறு ஒரு கழிப்பறையில் புகுந்தனர். வண்டி புறப்பட்ட சிறிது நேரத்தில் டிக்கெட் எதுவும் வாங்காத மூவருள் ஒருவர் கழிப்பறையில் இருந்து வெளியே வந்தார்.அடுத்த கழிப்பறை கதவு தட்டி,'டிக்கெட் காண்பியுங்கள்,'என்று பரிசோதகர் போலக் கேட்டார்.கதவு லேசாகத் திறந்தது.ஒரு கை ,ஒரு டிக்கெட்டுடன் வெளி வந்தது.தட்டியவர்,அந்த டிக்கெட்டை வாங்கிக்கொண்டு தன நண்பர்கள் இருந்த கழிப்பறையில் புகுந்து கொண்டார்.